மொத்தப் பக்கக்காட்சிகள்

பயிற்சி பெற்ற 1, 74, 651 காப்பீடு நிபுணர்களுடன் எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸ்



பயிற்சி பெற்ற 1, 74, 651 காப்பீடு நிபுணர்களுடன்  எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸ்

எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் புதிய வணிக பிரீமிய வசூல் 2018 டிசம்பர் உடன் முடிந்த ஒன்பது மாத காலத்தில், கடந்த ஆண்டின் இதே காலத்தை விட ஆரோக்கியமாக 32% அதிகரித்து ரூ. 9,470 கோடியாக உயர்ந்துள்ளது.

நாட்டின் முன்னணி ஆயுள் காப்பீடு நிறுவனங்களில் ஒன்று  எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸ் (SBI Life Insurance). இதன் புதிய வணிக பிரீமிய வசூல் 2018 டிசம்பர் உடன் முடிந்த ஒன்பது மாத காலத்தில் 32% அதிகரித்து ரூ. 9,470 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்தில் இது ரூ. 7,200 கோடியாக இருந்தது.

இந்த நிறுவனம், பாதுகாப்பு பாலிசிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், பாதுகாப்பு பாலிசிகள் மூலமான புதிய வணிக பிரீமிய வசூல், 2018 டிசம்பர் உடன் முடிந்த ஒன்பது மாத காலத்தில் ரூ.1,060 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட இது 170% அதிகமாகும். அந்தக் காலத்தில் இது ரூ. 390 கோடியாக இருந்தது. தனிநபர் புதிய வணிக பிரீமிய வசூல் 14% அதிகரித்து ரூ. 6,600 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்தில் இது ரூ. 5,790 கோடியாக இருந்தது.

எஸ்.பி.ஐ லைஃப்  நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம் (நிகர லாபம்), 2018 டிசம்பர் உடன் முடிந்த ஒன்பது மாத காலத்தில் 13% உயர்ந்து ரூ. 860 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலக் கட்டத்தில் இது ரூ. 770 கோடியாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் சால்வன்ஸி விகிதம் (solvency ratio) 2018 டிசம்பர் உடன் முடிந்த ஒன்பது மாத காலத்தில் தொடர்ந்து  2.33 ஆக சிறப்பாக உள்ளது. சட்டப்படி இந்த விகிதம் 1.50 ஆக இருந்தால் போதுமானது

எஸ்.பி.ஐ லைஃப்  நிறுவனம், நிர்வகிக்கும் தொகை (AUM) தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இது 2018 டிசம்பரில் 20.2% அதிகரித்து ரூ. 1,34,150 கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ. 1,11,630 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் கடன்:பங்கு மூலதன விகிதம் ( debt-equity mix) 78:22 ஆக உள்ளது. இந்த நிறுவனத்தின் 90%  கடன் பத்திர முதலீடுகள் AAA  தரக்குறியீடு மற்றும் சாவரின் ஆவணங்களாக (Sovereign instruments) உள்ளன.

இந்த நிறுவனம், பரந்துபட்ட விநியோக நெட் ஒர்க்-ஐ கொண்டு உள்ளது. 1, 74, 651 பயிற்சி பெற்ற காப்பீடு நிபுணர்களுடன் நாடு முழுக்க 859  அலுவலகங்களை கொண்டுள்ளது. மேலும், வங்கிகள் மூலம் பாலிசி விநியோகம்  (bancassurance channel), முகவர்கள் மூலம் விநியோகம், தரகர்கள், நுண்  முகவர்கள், பொது சேவை மையங்கள், இணைய தளங்கள், இன்ஷுரன்ஸ் சந்தைப்படுத்தும் அமைப்புகள், நேரடி வணிகம் என பல வகைகளில் பாலிசியை விநியோகம் செய்து வருகிறது.


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பா.ஜெயவேல் - இரவுக்குறி நூல் வெளியீட்டு விழா Book

  பா.ஜெயவேல் - இரவுக்குறி நூல் வெளியீட்டு விழா   பா.ஜெயவேல் எழுதிய   இரவுக்குறி நூல் வெளியீட்டு விழா   இடம்: படைப்பு அரங்கம், ...