மொத்தப் பக்கக்காட்சிகள்

வட்டி விகிதம் குறையும் போது அதிக லாபம் தரும் யூடிஐ கார்ப்பரேட் பாண்ட் ஃபண்ட்


யூடிஐ கார்ப்பரேட் பாண்ட் ஃபண்ட்

 யூடிஐ கார்ப்பரேட் பாண்ட் ஃபண்ட் (UTI Corporate Bond Fund),  முதலீடு செய் மற்றும் தக்கவை’ (‘buy and hold’) என்கிற முதலீட்டு பாணியில் முதலீட்டு மீதான வருமானத்தை பெருக்க முயற்சி செய்து வருகிறது. இந்தத் திட்டத்தில் திரட்டப்பட்ட நிதி, அதிக தரக்குறியீடு பெற்ற ( குறைந்தபட்சம் 80%  தொகை AAA & AA+  தரக்குறியீடு பெற்றவைகளில்) 3 முதல் 4 ஆண்டுகள் முதிர்வு கொண்ட ஆவணங்களில் முதலீடு செய்யப்படுகிறது..

யூடிஐ ஏ.எம்.சியின் தலைவர் (ஃபிக்ஸட் இன்கம்) திரு. அமன்தீப் சோப்ரா (Mr.Amandeep Chopra, Head-Fixed Income, UTI AMC) கூறும் போது,  ஆர்பிஐ அதன் நிதிக் கொள்கையில் நாட்டில் நிலவும் பணவீக்க விகித அளவுக்கான எல்லையை குறைத்துள்ளது. மேலும், பணவீக்கம் அதிகரிக்கவில்லை என்றால் சரியான வட்டி விகித நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது. அதாவது, தற்போதைய நிலையில் குறுகிய காலத்தில் வட்டி விகித குறைப்புக்கு வாய்ப்பு இல்லை என சுட்டிக் காட்டி உள்ளது. மேலும், அதன் பொதுச் சந்தை நடவடிக்கைகள் தொடரும் என்றும் தேவைப்பட்டால் மார்ச் 19 வரை  அரசு கடன் பத்திரங்களை பல பிரிவுகளாக பொதுச் சந்தையிலிருந்து வாங்கும். இது சந்தையில் சாதகமான விளைவை ஏற்படுத்தும். குறுகிய காலத்தில் ஆர்பிஐ வட்டியை அதிகரிக்காது என நாங்கள் நம்புகிறோம். சூழலை கண்காணித்து அடுத்த நிதிக் கொள்கை கூட்டத்தில், ஆர்பிஐ அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அதேநேரத்தில், கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் ஓபெக் நாடுகளின் (OPEC) உற்பத்தி குறைப்பு, மாநில தேர்தல்கள் மற்றும்  மெகா பொருளாதாரக் காரணிகள் போன்றவற்றை ஆர்பிஐ கூர்ந்து தொடர்ந்து கண்காணித்து வரும். சந்தைப் பங்களிப்பாளர்கள் வட்டி விகிதம் குறைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என நம்புகிறார்கள்.

இது போன்ற சூழ்நிலையில், யூடிஐ கார்ப்பரேட் பாண்ட் ஃபண்ட் போன்ற மியூச்சுவல் ஃபண்ட்கள் முதலீட்டுக்கு சிறந்த வாய்ப்பாககவும் அதிக வருமானம் தருவதாகவும் இருக்கும்.என்றார்.

முதலீட்டாளர்கள் தங்களின் பிரதான கடன் சார்ந்த முதலீட்டுக் கலவையை (debt portfolio) மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலத்துக்கு உருவாக்க விரும்பினால், இந்த ஃபண்டை முதலீட்டுக்கு கவனிக்கலாம்.
 
***



Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

சேமிப்புக் கணக்கு: என் ஆர் ஐ மற்றும் என் ஆர் ஓ NRI

bob Masterstroke சேமிப்புக் கணக்கு என் ஆர் ஐ மற்றும் என் ஆர் ஓ விற்காக இலவச ஓபுலன்ஸ் டெபிட் கார்டு மற்றும் ஆயுட் காலத்திற்கு எடர்னா கிரெடிட்...