மொத்தப் பக்கக்காட்சிகள்

அனைத்து தரப்பு முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது, ஆதித்ய பிர்லா சன் லைஃப் நிஃப்டி நெக்ஸ்ட் 50 இடிஎஃப்


ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ஆதித்ய பிர்லா சன் லைஃப் நிஃப்டி நெக்ஸ்ட் 50 இடிஎஃப்  அறிமுகம்
(நிஃப்டி நெக்ஸ்ட் 50 குறியீட்டை பின்பற்றும் ஓப்பன் எண்டெட் திட்டம்)

 முக்கிய அம்சங்கள்

·         ஃபண்ட் வெளியீடு டிசம்பர் 11, 2018 அன்று ஆரம்பிக்கிறது, டிசம்பர் 17, 2018 அன்று நிறைவடைகிறது
·         நிஃப்டி 50 க்கு அடுத்து  கீழே உள்ள 50 நிறுவனப் பங்குகளில்   முதலீடு  செய்யும் வாய்ப்பு
·         திட்டத்தின் அலகுகள் என்எஸ்இ மற்றும் பிஎஸ் இ- ல் பட்டியலிடப்படும்
·         இந்தக்  குறியீடு பரந்த அளவிலான துறைகளை சேர்ந்தது என்பதால் முதலீடு  பரவலாகிறது
·          நுழைவு  மற்றும்  வெளியேறும் கட்டணம் இல்லை

சென்னை, டிசம்பர் 10, 2018: ஆதித்ய பிர்லா கேப்பிட்டல் லிமிடெட் (முந்தைய பெயர் ஆதித்ய பிர்லா ஃபைனான்ஷியல் சர்வீசஸ் லிமிடெட்) – ன் துணை நிறுவனம் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் (Aditya Birla Sun Life Mutual Fund - ABSLMF) முதலீட்டு நிறுவனமான  ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஏஎம்சி (Aditya Birla Sun Life AMC Limited  - முந்தைய பெயர் ஆதித்ய பிர்லா சன் லைஃப் அஸெட் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட்), ஆதித்ய பிர்லா சன் லைஃப் நிஃப்டி நெக்ஸ்ட் 50 இடிஎஃப் -(Aditya Birla Sun Life Nifty Next 50 ETF) ஐ அறிமுகம் செய்துள்ளது. இது எப்போது வேண்டுமானலும் முதலீடு செய்யும், எப்போது வேண்டுமானலும் முதலீட்டை வெளியே எடுக்கும் வசதி கொண்ட ஓப்பன் எண்டெட் திட்டம் ( open ended scheme) ஆகும். இது நிஃப்டி நெக்ஸ்ட் 50 குறியீட்டை ( Nifty Next 50 Index) பின்பற்றும் பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் ஃபண்ட் (Exchange Traded Fund - ETF) ஆகும். இந்த இடிஎஃப், முதலீட்டாளர்களுக்கு நிஃப்டி50 க்கு அடுத்து  கீழே உள்ள50 நிறுவனப் பங்குகளில்   முதலீடுசெய்யும் வாய்ப்பை அளிக்கிறது. நிஃப்டி நெக்ஸ்ட் 50 குறியீட்டில் இடம் பெற்றிருக்கும் 50 பங்குகளின் அதே விகிதாச்சாரத்தின் அடிப்படையில் அதே பங்குகளில் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும்.

இந்த புதிய ஃபண்ட் வெளியீடு (New Fund Offer -NFO) டிசம்பர்11, 2018 அன்று ஆரம்பிக்கிறது.  டிசம்பர்17, 2018 அன்று  வணிக நேர முடிவில் நிறைவடைகிறது. இந்த இடிஎஃப் விற்பனை மற்றும் மறுமுதலீட்டுக்காக (sale and repurchase), முதலீட்டாளர்களுக்கு அலகுகள் (Units) ஒதுக்கீடு செய்யப்பட்ட ஐந்து வணிக தினங்களுக்குள் ஆரம்பிக்கிறது. இந்தத் திட்டத்தின் முதலீட்டு நோக்கம், நிஃப்டி நெக்ஸ்ட் 50 குறியீடு அளிக்கும் மொத்த வருமானத்தை ஒட்டி அளிப்பதாக இருக்கிறது. குறியீட்டை பின்பற்றும் போது ஏற்படும் டிராக்கிங் எரர் (tracking errors) –ஐ பொறுத்து வருமானம் சற்று மாறுபடக் கூடும்.

இந்தத் திட்டம் அறிமுகம் குறித்து ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஏஎம்சி லிமிடெட்-ன் தலைமை செயல் அதிகாரி திரு. ஏ.பாலசுப்பிரமணியன்
(Mr. A. Balasubramanian, CEO, Aditya Birla Sun Life AMC Limited) கூறும் போது: “பங்குகளின் மதிப்பின் அடிப்படையில் மிகப் பெரிய நிறுவனப் பங்குகளில் ((large-cap)) நிஃப்டி 50 மற்றும் நிஃப்டி நெக்ஸ்ட் 50 குறியீட்டில் இடம் பெற்றிருக்கும் பங்குகள் மிகவும் எளிதில் பணமாக்க கூடிய (liquid stocks) பங்குகளாக இருக்கின்றன. நிஃப்டி நெக்ஸ்ட் 50 குறியீட்டில் இடம் பெற்றுள்ள பங்குகள், அதிக வளர்ச்சிக்கு வாய்ப்புள்ளவையாகவும், முன்னணிக்கு செல்லும் திறன் கொண்டவையாகவும் இருக்கின்றன.  எனவே, இந்தியாவின் வளர்ச்சியில் இந்த நிறுவனப் பங்குகள் பங்கேற்பவையாக இருக்கின்றன.

மேலும் விளக்கி கூறும் போது திரு. பாலசுப்பிரமணியன், நீண்ட காலத்தில் நிஃப்டி நெக்ஸ்ட் 50 குறியீட்டில் இடம் பெற்றுள்ள நிறுவனங்கள், பிரதான குறியீட்டில் இடம் பெற்றிருக்கும் நிறுவனங்களை விட மிகவும் சிறப்பாக செயல்படும் என கணித்திருக்கிறோம்.

இடிஎஃப்கள் என்பது பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட்கள் ஆகும். இவை, நிறுவனப் பங்குகள் போல் பங்குச் சந்தையில் வர்த்தகமாகும். இதன் பிரத்யேக அமைப்பின்படி, அனைத்து வகை முதலீட்டாளர்கள் குறிப்பாக சிறு முதலீட்டாளர்கள் அல்லது நிறுவன முதலீட்டாளர்கள் இதில் நீண்ட காலம் அல்லது குறுகிய காலத்துக்கு முதலீடு செய்யலாம். முதலீட்டாளர்கள் தங்களின் முக்கிய பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டுக் கலவையில் (Equity Portfolio) இந்த வகையான நிதி ஆவணங்களை சேர்த்துக்கொள்ளலாம்.

நிஃப்டி நெக்ஸ்ட் 50 குறியீட்டில் இடம் பெற்றுள்ள 50 நிறுவனங்களின் பங்குகள் பல்வேறு துறைகளை சேர்ந்தவையாகும். எந்த ஒரு துறையிலும் அதிக விகிதாச்சாரத்தை கொண்டிருக்கவில்லை. உதாரணத்துக்கு, நிஃப்டி நெக்ஸ்ட் 50 குறியீட்டில் இடம் பெற்றிருக்கும் முதல் 5 துறைகளின் பங்களிப்பு  76% ஆக உள்ளது. இதுவே நிஃப்டி 50 குறியீட்டில்  84%  ஆக உள்ளது,”  என திரு. ஏ. பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்த ஃபண்டில் நுழைவு மற்றும் வெளியேறும் கட்டணம் கிடையாது. புதிய ஃபண்ட் வெளியீட்டுக்கு பிறகு பங்குச் சந்தைகள் மூலம் பங்குச் சந்தையின் வர்த்தக நேரத்தில் வாங்கவும் விற்கவும் செய்யலாம்.

புதிய ஃபண்ட் வெளியீட்டின் போது, குறைந்தபட்ச முதலீட்டு ரூ. 5,000 மற்றும் அதன் பிறகு ரூ.1,000 மடங்குகளில் இருக்கிறது.   

ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிதி மேலாளர் லோவிலிஷ் சோலங்கி (Lovelish Solanki, Fund Manager, Aditya Birla Sun Life Mutual Fund) ஆதித்ய பிர்லா சன் லைஃப் நிஃப்டி நெக்ஸ்ட் 50 இடிஎஃப் -ஐ, நிர்வகிப்பார்.


Media Queries –

 

Amrita Panja
Chief Manager - Corporate Communications
Email: Amrita.Panja@adityabirlacapital.com



Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற . - பஜாஜ் ஃபின்சர்வ் ELSS வரி சேமிப்பு ஃபண்ட் .!

திரு .  எஸ் .  கார்த்திகேயன் ,  நிறுவனர் ,  https://winworthwealth.com/ மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு   ஏற்ற . ...