மொத்தப் பக்கக்காட்சிகள்

குறுகிய கால இன்கம் ஃபண்ட்களுக்கு மாறுவதற்கு சரியான நேரம்..!


குறுகிய கால இன்கம் ஃபண்ட்களுக்கு மாறுவதற்கு சரியான நேரம்..!
ரெப்போ வட்டி விகிதத்தை ஆர்பிஐ அதிகரிக்க ஆரம்பித்த சுழற்சிக்கு பிறகு, முதலீட்டாளர்கள், குறுகிய காலத்தில் அதிக வருமானம் தரக்கூடிய, குறுகிய கால வருமான ஃபண்ட்களை (short term income funds) கவனிக்க  தொடங்கி இருக்கிறார்கள்.

அது போன்ற ஒரு ஃபண்ட், யூடிஐ ஷார்ட் டேர்ம் இன்கம் ஃபண்ட் (UTI Short Term Income Fund) ஆகும். இந்த ஃபண்ட் குறைவான இடர்பாட்டை கொண்டதாகவும்  எளிதில் பணமாக்க கூடியதாகவும் நியாயமான வருமானம் ஈட்டும் நோக்கம் கொண்டதாகவும் இருக்கிறது.  இதன் முதலீட்டுக் கலவையில் (portfolio)  நிதிச் சந்தை ஆவணங்கள் இடம் பெற்றுள்ளன. இவை  உயர்தரக் குறியீடு பெற்ற கடன் பத்திரங்களாகும். இவற்றின் சராசரி முதிர்வு காலம்  4 ஆண்டுகளாக இருக்கிறது. இந்த ஃபண்ட், அதிக கடன்  தரக்குறியீட்டு தகுதி  மற்றும் பரவலான  முதலீட்டுக் கலவையை கொண்டிருக்கிறது.

யூடிஐ ஷார்ட் டேர்ம் இன்கம் ஃபண்ட்-இன் நிதி மேலாளர் சுதிர்  அக்ரவால் (Sudhir Agrawal, fund manager of UTI Short Term Income Fund)  கூறும் போது,  ''வரும் நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் நுகர்வோர் பணவீக்க விகிதம், 5 சதவிகித்தை நோக்கி அதிகரிக்கும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது. இதனை அடுத்து, ஆர்பிஐ அதன் இலக்கு நிலைக்கு பண வீக்க விகிதத்தை குறைக்க  வட்டியை அதிகரிக்கும்  அழுத்தமான சூழலுக்கு தள்ளப்படக் கூடும். மேலும், அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் வெளி மதிப்பு தொடர்ந்து குறைந்துவருவதால் இந்தியாவின் ஏற்றுமதி செலவு அதிகரிக்கும். இதனை அடுத்து, சில காலாண்டுகளில்  நுகர்வோர் பணவீக்க விகிதம் அதிகரிக்கும் இடர்பாடு இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், குறைந்த ஏற்ற இறக்கத்தில் அதிக வருமானத்தை தரக்கூடிய, ஷார்ட் டேர்ம் இன்கம் ஃபண்ட்கள் மீது முதலீட்டாளர்களின் கவனம் செல்லும்நாங்கள் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு எங்களின் ஷார்ட்டேர்ம் இன்கம்  ஃபண்டில்  ஒன்று முதல்  மூன்று ஆண்டுகள் வரையிலான இலக்கில் முதலீடு செய்ய பரிந்துரை செய்கிறோம்  ”

யூடிஐ ஷார்ட் டேர்ம் இன்கம் ஃபண்ட், அதன் பெஞ்ச்மார்க் குறியீடான க்ரைசில் ஷார்ட் டேர்ம் பாண்ட் ஃபண்ட் இண்டெக்ஸ் - விட தொடர்ந்து நன்றாக  செயல்பட்டு வருகிறது. இந்த ஃபண்ட் ஆரம்பம் முதல்  (2018  செப்டம்பர் 30 நிலவரப்படி) 8.57% வருமானத்தை தந்துள்ளது. இதே காலகட்டத்தில் அதன் பெஞ்ச்மார்க் வருமானம் 7.56% ஆக இருக்கிறது.



Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இப்போது பங்குச் சார்ந்த திட்டங்களில் எப்படி முதலீடு செய்தால் லாபம்? ச.ஶ்ரீதரன், நிதி ஆலோசகர்

இப்போது பங்குச் சார்ந்த திட்டங்களில் எப்படி முதலீடு செய்தால் லாபம்?  By திரு . ச . ஶ்ரீதரன் , நிதி ஆலோசகர் ,  https://www.walletwealth....