மொத்தப் பக்கக்காட்சிகள்

யூடிஐ டைனமிக் பாண்ட் ஃபண்ட் ஆரம்பம் முதல் 8.83% வருமானம்

யூடிஐ டைனமிக் பாண்ட் ஃபண்ட் ஆரம்பம் முதல் 8.83% வருமானம்

 யூடிஐ டைனமிக் பாண்ட் ஃபண்ட்

 யூடிஐ டைனமிக் பாண்ட் ஃபண்ட் (UTI Dynamic Bond Fund) அனைத்து காலத்துக்கும் ஏற்ற நெகிழ்ச்சி தன்மையுடன் கூடிய அதேநேரத்தில் தீவிரமாக நிர்வகிக்கப்படும் (actively managing) மியூச்சுவல் ஃபண்ட் ஆகும்.

இந்த ஃபண்டின் முதலீட்டுக் கலவை (portfolio) வட்டி விகித சூழலுக்கு ஏற்ப சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. வட்டி விகித உயர்வு மற்றும் குறைவுக்கு ஏற்ப போர்ட்ஃபோலியோவில் இடம் பெறும் நிதி ஆவணங்களின் சராசரி முதிர்வு காலம் கூட்டவோ அல்லது குறைக்கவோ செய்யப்படும். அதாவது, வட்டி விகிதம் அதிகரிக்கும் போது, இந்த ஃபண்டின் முதலீட்டுக் கலவையில், முதலீட்டு ஆவணங்களின் முதிர்வு காலம் குறைக்கப்படும். இதன் மூலம் மூலதனம் பாதுகாக்கப்படும்.

 வட்டி விகிதம் குறையும் போது, ஒரு இன்கம் ஃபண்ட்-ன் மூலம் கிடைக்கும் கவர்ச்சிகரமான வருமானம் இந்த ஃபண்டின் மூலம் கிடைப்பதாக இருக்கிறது. 

திரு. அமன்தீப் சோப்ரா, ஹெட் - ஃபிக்ஸட் இன்கம், யூ.டிஐ ஏஎம்சி (Mr. Amandeep Chopra, Head of Fixed Income, UTI AMC) கூறும் போது,'' அண்மைக் காலத்தில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பது மற்றும் ஆர்பிஐ-ன் பொது சந்தை செயல்பாடு (OMO) அறிவிப்பு, கடன் சந்தைக்கு சாதகமாக இருக்கிறது. கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் சுமார் 86 டாலர் அளவுக்கு இருந்த நிலையில் 72-74 டாலர் அளவுக்கு குறைந்திருக்கிறது. இதன் மூலம் ரூபாய் மதிப்பு குறைவதன் அழுத்தம் குறைந்திருக்கிறது. நவம்பர் மாதத்தில் ரூ. 40,000 கோடி மதிப்புள்ள அரசு கடன் பத்திரங்களை பொதுச் சந்தையிலிருந்து ஆர்பிஐ வாங்குகிறது. தேவை மற்றும் அளிப்பை (demand-supply) பொறுத்து அரசு கடன் பத்திரங்களை பொதுச் சந்தையிலிருந்து வாங்குவதை ஆர்பிஐ தொடரும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். மேலும், குறையும் ரூபாய் மதிப்பு மற்றும் அதிகரிக்கும் நிதிப் பற்றாக்குறை போன்றவை கடன் ஃபண்ட்களின் வருமானத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பணவீக்கம், ரூபாய் - டாலர் மதிப்பு மாற்றும், வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களின் முதலீடு போன்றவை சந்தையின் போக்கை தீர்மானிப்பதாக இருக்கிறது. இந்த நிலையில், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் இந்த வருமான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும், குறிப்பாக யூடிஐ டைனமிக் பாண்ட் ஃபண்ட் போன்றவை முதலீட்டாளர்களுக்கு லாபகரமாக இருக்கும்." என்றார்.

 இந்த ஃபண்ட், முதலீட்டாளரின் சமச்சீர் முதலீட்டுக் கலவையில் (balanced portfolio) கடன் சார்ந்த சொத்து ஒதுக்கீட்டின் (debt allocation) ஒரு பகுதியாக இருக்க கூடும். இந்த ஃபண்ட் அதன் பெஞ்ச்மார்க் ஆன கிரிசில் டைனமிக் டெப்ட் இண்டெக்ஸ் (CRISIL Dynamic Debt Index) - ஐ விட அனைத்து காலத்திலும் சிறப்பாக செயல்பட்டுள்ளது.

2018, அக்டோபர் 31 ம் தேதி நிலவரப்படி, ஆரம்பம் முதல், இந்த ஃபண்ட் 8.83% வருமானம் கொடுத்துள்ளது. இதே கால கட்டத்தில் இதன் பெஞ்ச் மார்க் கொடுத்திருக்கும் வருமானம் 8.03% ஆக உள்ளது.
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

உடனடி கடன் = வாழ்நாள் முழுவதும் தொல்லை? Instant Loan

உடனடி கடன் = வாழ்நாள் முழுவதும் தொல்லை? எந்த ஒரு ஆவணமோ அல்லது கிரெடிட் சரிபார்த்தல் இல்லாமல் பெறும் கடன்கள் உங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத...