மொத்தப் பக்கக்காட்சிகள்

ஹெச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட் 51 லட்சம் முதலீட்டாளர்கள்…!



ஹெச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட் 51 லட்சம் முதலீட்டாளர்கள்…!

ஹெச்டிஎஃப்சி அஸெட் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட்.

செப்டம்பர் 30, 2018 உடன் முடிந்த காலத்துக்கான நிதி நிலை முடிவுகள் அறிவிப்பு.

செப்டம்பர் 30, 2018 –ல் மொத்த நிர்வகிக்கும் தொகை 9% அதிகரிப்பு

பங்குச் சார்ந்த நிர்வகிக்கும் தொகை செப்டம்பர் 30 2018 நிலவரப்படி, 20% வளர்ச்சி கண்டுள்ளது.

செப்டம்பர் 30 2018 நிலவரப்படி, தனி நபர்  வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 24 சதவிகிதம், பிரத்யேக வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 27% அதிகரித்துள்ளது.  

சமீபத்தில் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர் மூலம் 450 மில்லியன் டாலர் பங்கு மூலதனம் கிடைத்திருக்கிறது.

செப்டம்பர் 30 2018  உடன் முடிந்த அரையாண்டில் வரிக்கு பிந்தைய லாபம் 19% அதிகரித்துள்ளது.

செயல்பாட்டு லாப வளர்ச்சி, செப்டம்பர் 30 2018  உடன் முடிந்த அரையாண்டில் 19 சதவிகிதமாக உள்ளது.

முக்கிய நிதி நிலை முடிவுகள்:

 மொத்த நிர்வகிக்கும் தொகை, செப்டம்பர் 30 2018 நிலவரப்படி,  ரூ. 2,926  பில்லியனாக (ரூ. 2,92,600 கோடி) உள்ளது. இது 2017  செப்டம்பர் 30 2017 நிலவரப்படி, ரூ. 2681  பில்லியனாக இருந்தது. இது 9% வளர்ச்சியாகும். இதே கால கட்டத்தில் இதன் சந்தைப் பங்களிப்பு மொத்த மியூச்சுவல் ஃபண்ட் துறையில் (market share) 13.3% ஆக அதிகரித்துள்ளது.  

2018  செப்டம்பர் 30 2018 நிலவரப்படி, ஆர்பிட்ரேஜ் ஃபண்ட்கள் மற்றும் இண்டக்ஸ் ஃபண்ட்கள் தவிர்த்த,  பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி ஃபண்ட்கள் மூலம் நிர்வகிக்கும் தொகை (equity oriented total AUM) ரூ.1476 பில்லியனாக அதிகரித்துள்ளது., செப்டம்பர் 30 2017 நிலவரப்படி, இது  ரூ. 1227 பில்லியனாக இருந்தது. இது 20%-க்கும் மேற்பட் வளர்ச்சியாகும். இதே கால கட்டத்தில் இதன் சந்தைப் பங்களிப்பு ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் பிரிவில் 16 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதனை அடுத்து, நாட்டின் மிகப் பெரிய ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமாக இருக்கிறது.

இந்த நிறுவனத்தின் ஈக்விட்டி சார்ந்த சொத்துகள் மற்றும் ஈக்விட்டி சாராத சொத்துகள் இடையேயான விகிதாச்சாரம் 52:48 ஆக உள்ளது. இது இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில் சராசரியாக 44:56 ஆக உள்ளது.  

செயல்பாட்டில் உள்ள தனிநபர் மியூச்சுவல் ஃபண்ட் கணக்குகள் செப்டம்பர் 30 2017 நிலவரப்படி,6.96  மில்லியனாக இருந்தது. இது 24%  அதிகரித்து  செப்டம்பர் 30 2018-ல், 8.62 மில்லியனாக உள்ளது.  இதே கால கட்டத்தில் தனிநபர்களின் சராசரி மாத மொத்த முதலீட்டு தொகை 28%  அதிகரித்துள்ளது. இந்த நிறுவனம், தற்போது மொத்தம் 8.7 மில்லியன் செயல்பாட்டிலுள்ள கணக்குகளுக்கு சேவை அளித்து வருகிறது.


செப்டம்பர் 30 2018 நிலவரப்படி, நிறுவனத்தின் சராசரி மாத மொத்த முதலீட்டு தொகையில் தனிநபர்களின்  பங்களிப்பு 64% ஆக உள்ளது. இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையின் சராசரி 53% என உள்ளது.

தனிநபர்களின் சராசரி மாத மொத்த முதலீட்டு தொகையில்  இந்த நிறுவனத்தின் சந்தைப் பங்களிப்பு  15.1%  ஆக உள்ளது. இதன்படி பார்த்தால், தனிநபர்கள் மிகவும் விருப்பம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமாக ஹெச்டிஎஃப்சி ஏஎம்சி உள்ளது.

பான் எண் அல்லது பான் எண் தவிர்த்த கேஒய்சி பார்வை எண் (PAN or PEKRN) அடிப்படையில் பிரத்யேக வாடிக்கையாளர்கள் (Unique customers) ஹெச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட்க்கு செப்டம்பர் 30 2018 நிலவரப்படி, 5.1 மில்லியனாக உள்ளது. இந்த எண்ணிக்கை இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில் 18.4 மில்லியனாக உள்ளது. இந்த பிரத்யேக வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கடந்த ஓராண்டு காலத்தில் ஹெச்டிஎஃப்சி நிறுவனத்தில் 27% வளர்ச்சி கண்டுள்ளது. இது இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில் 25% வளர்ச்சி கண்டிருக்கிறது.

செப்டம்பர் 30 2018 –ல் 3.23 மில்லியன் முறை சார்ந்த பரிமாற்றங்கள் (systematic transactions) மூலம் ரூ.11.47 பில்லியன் மதிப்புள்ள பரிமாற்றம் நடந்திருக்கிறது.
மொத்தம் 210 கிளைகள் மூலம் தனிபட்ட நிதி ஆலோசகர்கள் (IFAs), தேசிய அளவிலான விநியோகஸ்தர்கள், வங்கிகள் மூலம் 65,000 –க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் மூலம் சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், 134 கிளைகள் பி-30 நகரங்களில் உள்ளன. இந்த பி-30 நகரங்களில் ஹெச்டிஎஃப்சி ஏஎம்சி-ன் மாத சராசரி நிர்வகிக்கப்படும் தொகை பங்களிப்பு 16.4% ஆக உள்ளது..  

சமீபத்தில் முன்னணி வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர் (foreign portfolio investor) மூலம் சட்டப்படியான 450 மில்லியன் டாலர் பங்கு மூலதனம் கிடைத்திருக்கிறது. இது அண்மையில் இந்த நிறுவனத்துக்கு கிடைத்திருக்கும் நிதியில் மூன்றில் ஒரு பகுதியாகும்,

செப்டம்பர் 30 2018 உடன் முடிந்த அரையாண்டில், செயல்பாட்டு லாப வரம்பு 0.34% ஆக உள்ளது.  அதிகரித்துள்ளது. செப்டம்பர் 30 2017 உடன் முடிந்த அரையாண்டில், இது 0.33% ஆக  இருந்தது.

செப்டம்பர் 30 2018 அரையாண்டு நிதி நிலை முக்கிய விவரங்கள்.

செப்டம்பர் 30 2018 உடன் முடிந்த அரையாண்டில், மொத்த வருவாய் ரூ.10,164  மில்லியனாக இருக்கிறது. இது செப்டம்பர் 30 2017 உடன் முடிந்த அரையாண்டில், ரூ.8,746  மில்லியனாக இருந்தது. இது 16% அதிகரிப்பு.  

செப்டம்பர் 30 2018 உடன் முடிந்த அரையாண்டில், செயல்பாடு மூலமான வருமானம் 16%  வளர்ச்சி அடைந்து ரூ.9,516 மில்லியனாக இருக்கிறது. இது செப்டம்பர் 30 2017 உடன் முடிந்த அரையாண்டில்,ரூ. 8,204  மில்லியனாக இருந்தது.


செப்டம்பர் 30 2018 உடன் முடிந்த அரையாண்டில், செயல்பாட்டு லாபம் ரூ.5,271 மில்லியனாக உள்ளது. செப்டம்பர் 30 2017 உடன் முடிந்த அரையாண்டில், ரூ. 4,419 மில்லியனாக  இருந்தது. இது 19% அதிகரிப்பு.

வரிக்கு முந்தைய லாபம், செப்டம்பர் 30 2018 உடன் முடிந்த அரையாண்டில், ரூ.5,919 மில்லியனாக உள்ளது. இது, செப்டம்பர் 30 2017 உடன் முடிந்த அரையாண்டில்,  ரூ.4,961 மில்லியனாக  இருந்தது. இது 19% உயர்வாகும்.  

நிகர லாபம் (வரிக்கு பிந்தைய லாபம்) செப்டம்பர் 30 2018 உடன் முடிந்த அரையாண்டில், 19%  அதிகரித்து ரூ. 4,112 மில்லியனாக  உள்ளது. இது செப்டம்பர் 30 2017 உடன் முடிந்த அரையாண்டில், ரூ.3,444 மில்லியனாக இருந்தது.

செப்டம்பர் 30 2018 உடன் முடிந்த இரண்டாம் காலாண்டு (Q2FY19)

செப்டம்பர் 30 2018 உடன் முடிந்த காலாண்டில், மொத்த வருவாய் ரூ.5,153  மில்லியனாக இருக்கிறது. இது செப்டம்பர் 30 2017 உடன் முடிந்த காலாண்டில், ரூ. 4,576  மில்லியனாக இருந்தது. இது 13% அதிகரிப்பு.  

செப்டம்பர் 30 2018 உடன் முடிந்த காலாண்டில், செயல்பாடு மூலமான வருமானம் 12%  வளர்ச்சி அடைந்து ரூ. 4,804 மில்லியனாக இருக்கிறது. இது செப்டம்பர் 30 2017 உடன் முடிந்த காலாண்டில்,ரூ. 4,300  மில்லியனாக இருந்தது.

செப்டம்பர் 30 2018 உடன் முடிந்த காலாண்டில், செயல்பாட்டு லாபம் ரூ. 2,623 மில்லியனாக உள்ளது. செப்டம்பர் 30 2017 உடன் முடிந்த காலாண்டில், ரூ. 2,366 மில்லியனாக  இருந்தது. இது 11% அதிகரிப்பு.

வரிக்கு முந்தைய லாபம், செப்டம்பர் 30 2018 உடன் முடிந்த காலாண்டில், ரூ. 2,972 மில்லியனாக உள்ளது. இது, செப்டம்பர் 30 2017 உடன் முடிந்த காலாண்டில்,  ரூ.2,642 மில்லியனாக  இருந்தது. இது 12% உயர்வாகும்.  

நிகர லாபம் (வரிக்கு பிந்தைய லாபம்) செப்டம்பர் 30 2018 உடன் முடிந்த காலாண்டில்,15%  அதிகரித்து ரூ. 2,059 மில்லியனாக  உள்ளது. இது செப்டம்பர் 30 2017 உடன் முடிந்த காலாண்டில், ரூ. 1,798 மில்லியனாக இருந்தது.


ஹெச்டிஎஃப்சி  ஏஎம்சி பற்றி:
இந்தியாவின் முன்னணி சொத்து மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றானஹெச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதலீட்டு மேலாளராக
ஹெச்டிஎஃப்சி அஸெட் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட் (HDFC Asset Management Company Limited -HDFC AMC) இருக்கிறது. இது நிறுவனச் சட்டம் 1956 படி, , on 10 டிசம்பர்1999 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஹெச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் சொத்து மேலாண்மை நிறுவனமாக செயல்பட செபி அமைப்பின் ஒப்புதலை 2000, ஜூலை 3 ஆம் தேதி பெற்றது.  ஹெச்டிஎஃப்சி  ஏஎம்சி, பங்குச் சந்தை சார்ந்தது, ஃபிக்ஸட் இன்கம் மற்ற சொத்துகளை பரவலாக நிர்வகித்து வருகிறது. நாடு முழுக்க இதற்கு கிளைகள் உள்ளன. இது வங்கிகள், தனிப்பட்ட நிதி ஆலோசகர்கள் மற்றும் தேசிய அளவிலான விநியோகஸ்தர்கள் மூலம் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை விநியோகம் செய்து வருகிறது.

For any media queries, contact:
Mr. Naveen Gogia, Head – Public Relations, HDFC AMC
Email: naveeng@hdfcfund.com

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

உடனடி கடன் = வாழ்நாள் முழுவதும் தொல்லை? Instant Loan

உடனடி கடன் = வாழ்நாள் முழுவதும் தொல்லை? எந்த ஒரு ஆவணமோ அல்லது கிரெடிட் சரிபார்த்தல் இல்லாமல் பெறும் கடன்கள் உங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத...