பிடிலிட்டி இண்டஸ்ட்ரீஸ் மொத்த நிகர விற்பனை 15 வளர்ச்சி; உள்நாட்டில் விற்பனை அளவின் அடிப்படையில் 10% வளர்ச்சி
மும்பை, நவம்பர் 1, 2018: ஒட்டு பசை, மேற்பூச்சுகள் (adhesives, sealants) மற்றும் கட்டுமான ரசாயனங்கள் தயாரிப்பில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான பிடிலிட்டி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Pidilite Industries Limited), 2018 செப்டம்பர் 30 உடன் முடிந்த காலாண்டு மற்றும் அரையாண்டுக்கான நிதி நிலை முடிவுகளை இன்று அறிவித்துள்ளது.
நிதி நிலை செயல்பாடுகள்..!
ஒட்டு மொத்த செயல்பாடுகள் (Consolidated Performance)
· நிகர விற்பனை, முந்தைய ஆண்டின் இதே காலாண்டை விட 15% அதிகரித்து ரூ. 1,748 கோடியாக உள்ளது. அரையாண்டில் நிகர விற்பனை ஒப்பிட்டளவில்* ரூ. 3,566 கோடியாக உள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும் போது 20% (2017 ஜூன் மாதத்தில் பிடிலிட்டி யூஎஸ்ஏ இன்கார்ப் – ஆல் விற்பனை செய்யப்பட்ட பிடிலிட்டி யூஎஸ்ஏ இன்கார்ப் –ன் சைலோ பிரிவு இதில் அடங்காது) வளர்ச்சியாகும்.
· எபிடா (EBITDA) செயல்பாட்டு வருமானத்துக்கு முன் ரூ. 370 கோடி. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும் போது 2% குறைவாகும். அரையாண்டில் எபிடா 8% வளர்ச்சி கண்டு ரூ.754 கோடியாக உள்ளது.
· செப்டம்பர் காலாண்டில் வரிக்கு பிந்தைய லாபம் 9% குறைந்து ரூ. 231 கோடியாக உள்ளது. செப்டம்பர் உடன் முடிந்த அரையாண்டில் வரிக்கு பிந்தைய லாபம் 2% குறைந்து ரூ. 472 கோடியாக உள்ளது. வரிக்கு பிந்தைய லாபம் குறைய நிறுவனத்துக்குள்ளான டிவிடெண்ட் மற்றும் வரி கட்டியதாக இருக்கிறது.
தனிப்பட்ட செயல்பாடுகள் (Standalone Performance)
· 2018 செப்டம்பர் காலாண்டில் நிகர விற்பனை 12% அதிகரித்து ரூ. 1,509 கோடியாக உள்ளது. விற்பனை அளவின் அடிப்படையில் 10% அதிகரித்துள்ளது. அளவின் அடிப்படையில் விற்பனை 11 வளர்ச்சி & நுகர்வோர் பொருட்கள் & பஜார் பொருட்கள் மற்றும் அளவின் அடிப்படையிலான விற்பனை வளர்ச்சி & தொழில்சாலை பொருட்கள் விற்பனை வளர்ச்சி 5% ஆக உள்ளது. அரையாண்டில் நிகர விற்பனை ஒப்பிட்டளவில்* இது, கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 17% அதிகரித்து ரூ. 3,101 கோடியாக உள்ளது.
· எபிடா (EBITDA) செயல்பாட்டு வருமானத்துக்கு முன் ரூ. 349 கோடி இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும் போது 6% குறைவாகும். அரையாண்டில் எபிடா 4% வளர்ச்சி கண்டு ரூ. 708 கோடியாக உள்ளது.
· செப்டம்பர் காலாண்டில் வரிக்கு பிந்தைய லாபம் 6% குறைந்து ரூ. 245 கோடியாக உள்ளது. செப்டம்பர் உடன் முடிந்த அரையாண்டில் வரிக்கு பிந்தைய லாபம் 7% அதிகரித்து ரூ. 512 கோடியாக உள்ளது.
*ஜிஎஸ்டி கணக்கு மாற்றத்தால் ஏற்பட்ட விளைவு (உற்பத்தி வரி மற்றும் நிகர உள்ளீட்டு வரி அரையாண்டு அடிப்படையில் ஈடு கட்டப்பட்டுள்ளது).
நிர்வாக இயக்குநரின் கருத்துகள் (MD’s COMMENTS)
2018-19 ஆம் நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டு (Q2 2018-19) நிதி நிலை செயல்பாடுகள் குறித்து பிடிலிட்டி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்-ன் நிர்வாக இயக்குநர் திரு. பாரத் பூரி (Mr. Bharat Puri, Managing Director, Pidilite Industries Ltd) கூறும் போது,
“மற்றொரு காலாண்டு மற்றும் அரையாண்டில் அளவின் அடிப்படையில் இரட்டை இலக்க வளர்ச்சி கண்டுள்ளோம். அதேநேரத்தில், கச்சா எண்ணெய் விலை உயர்வால் அதிகரித்த பணவீக்கம் மற்றும் ரூபாய் மதிப்பு குறைவால் செலவை கட்டுப்படுத்துவது சவாலான சூழலாக இருந்தது. இதன் விளைவாக லாப வரம்பு குறைந்து போனது. செலவை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுத்தோம். நிலைமை சமாளிக்க சில விலை உயர்வுகளை செய்தோம். ஒட்டு மொத்தத்தில் விற்பனை வளர்ச்சிக்கான பல்வேறு உத்திகளை மேற்கொண்டோம்.”
பிடிலிட்டி பற்றி:
பிடிலிட்டி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Pidilite Industries Limited), ஒட்டு பசை மற்றும் மேற்பூச்சுகள், கட்டுமான ரசாயனங்கள், கைவினைப் பொருட்கள், நுகர்வோரே செய்யும் பொருட்கள் (DIY - Do-It-Yourself) மற்றும் பாலிமர் எமல்சன்கள் தயாரிப்பில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. இதன் தயாரிப்புகளில் வர்ண ரசாயனங்கள், வாகன ரசாயனங்கள், கலைப் பொருட்கள், துணி பராமரிப்பு, பராமரிப்பு ரசாயனங்கள், தொழில்சாலை ஒட்டுப்பசைகள் மற்றும் இயற்கை வர்ணங்கள் போன்றவை குறிப்ப்பிடதக்கவை. இதன் தயாரிப்புகளில் பொருட்கள் பெரும்பாலானவை இதன் வலிமையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு மூலம் உருவாக்கப்பட்டதாகும். ஒட்டுப் பசை பிரிவில் இதன் பிராண்ட் பெயர் ஃபெவிகால் (Fevicol) மில்லியன் கணக்கான இந்தியர்களால் உச்சரிக்கப்பட்டு வருகிறது. இது இந்தியாவின் மிகவும் நம்பகமான பிராண்ட்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இதன் முக்கிய பிராண்ட்கள் எம்-சீல், ஃபெவிவிக், ஃபெவிஸ்டிக், ரோஃப், டாக்டர்.ஃபிக்சிட் மற்றும் ஃபெவிக்ரைல் (M-Seal, Fevikwik, Fevistik, Roff, Dr.Fixit, and Fevicryl) போன்றவையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக