ஐசிஐசிஐ பேங்க், டெபாசிட் வட்டி 0.25% உயர்வு.
· 2 ஆண்டுகளுக்கு மேல் 3 ஆண்டுகள் வரையிலான குறித்த கால டெபாசிட்களுக்கு 7.50% சலுகை வட்டி
மும்பை: ஐசிஐசிஐ பேங்க் (ICICI Bank) இன்று ரூ. 1 கோடிக்கு குறைவான குறித்த கால டெபாசிட்களுக்கு (term-deposits) வட்டியை 25 அடிப்படை புள்ளிகள் (basis points), அதாவது 0.25% அதிகரித்தது. இந்த வட்டி உயர்வு, அனைத்து குறித்த கால உள்நாட்டு டெபாசிட்களுக்கு நவம்பர் 15, 2018 முதல் அமல்படுத்தப்படுகிறது. இது என்ஆர்ஓ (Non Resident Ordinary - NRO) மற்றும் என்ஆர்இ (Non Resident External - NRE) குறித்த கால டெபாசிட்களுக்கும் பொருந்தும்.
இந்த வட்டி அதிகரிப்பை அடுத்து, இந்த வட்டி மிக அதிகமாக, 2 ஆண்டுகளுக்கு மேல் 3 ஆண்டுகள் வரையிலான குறித்த கால டெபாசிட்களுக்கு 7.50% வட்டி வழங்குகிறது.
பிரணவ் மிஸ்ரா, மூத்த பொது மேலாளர் & தலைவர் - சில்லறை பொறுப்புகள் குழு (Pranav Mishra, Senior General Manager & Head – Retail Liabilities Group) கூறும் போது,''நிதிச் சந்தையில் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. வாடிக்கையாளர்கள் ஃபிக்ஸட் டெபாசிட்களில் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்காக, உறுதியான அதிக வருமானம் கிடைக்கும் விதமாக வட்டியை அதிகரித்துள்ளோம். 2 முதல் 3 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு குறித்த கால டெபாசிட்களுக்கு ஆண்டுக்கு 7.50% அதிக வட்டி (மூத்தக் குடிமக்களுக்கு ஆண்டுக்கு 8.00%) கிடைக்கும். துணிச்சலான சொத்து ஒதுக்கீடு உத்தியாக (asset allocation strategy), வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பை நிச்சயமாக பயன்படுத்திக் கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்"
ஐசிஐசிஐ பேங்க், பல்வேறு முதிர்வு காலம் குறிப்பாக 7 நாள்கள் முதல் 10 ஆன்டுகள் வரைக்கும் குறித்த கால டெபாசிட்களை அளித்து வருகிறது. அனைத்து குறித்த கால டெபாசிட்களுக்கும் அனைத்து முதிர்வு காலத்துக்கும் மூத்தக் குடிமக்களுக்கு கூடுதலாக 50 அடிப்படை புள்ளைகள் அதாவது 0.5% கூடுதல் வட்டி வழங்குகிறது.
வாடிக்கையாளர்கள் வங்கியின் எந்தக் கிளையிலும் குறித்த கால டெபாசிட் தொடங்கலாம். இது தவிர வாடிக்கையாளர்கள் அவர்களின் வசதிக்கு ஏற்ப அவர்களின் வீடு / அலுவலகம், வங்கி இணைய தளம் மற்றும் மொபைல் வங்கி சேவை, ஏடிஎம் மையங்கள் மூலமும் முதலீடு செய்யலாம்.
2018, நவம்பர் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய குறித்த கால டெபாசிட் வட்டி விகிதம் வருமாறு:
முதிர்வு காலம் | வட்டி விகிதம் (ஆண்டுக்கு) | |
ரூ. 1 கோடிக்கு குறைவான குறித்த கால டெபாசிட்கள் | ||
புதிய வட்டி விகிதம் நவ. 15 முதல் | அதிகரிக்கப்பட்ட அடிப்படை புள்ளிகள் | |
7 நாள்கள் முதல் 14 நாள்கள் | 4.00% | - |
15 நாள்கள் முதல் 29 நாள்கள் | 4.25% | - |
30 நாள்கள் முதல் 45 நாள்கள் | 5.50% | - |
46 நாள்கள் முதல் 60 நாள்கள் | 6.00% | 25 அடிப்படை புள்ளிகள் |
61 நாள்கள் முதல் 90 நாள்கள் | 6.25% | 25 அடிப்படை புள்ளிகள் |
91 நாள்கள் முதல் 120 நாள்கள் | 6.25% | 25 அடிப்படை புள்ளிகள் |
121 நாள்கள் முதல் 184 நாள்கள் | 6.25% | 25 அடிப்படை புள்ளிகள் |
185 நாள்கள் முதல் 289 நாள்கள் | 6.50% | - |
290 நாள்கள் முதல் ஓராண்டுக்குள் | 6.75% | - |
ஓராண்டு முதல் 389 நாள்கள் | 6.90% | 15 அடிப்படை புள்ளிகள் |
390 நாள்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை | 7.10% | 10 அடிப்படை புள்ளிகள் |
இரண்டு ஆண்டுகள் 1 நாள் முதல் மூன்று ஆண்டுகள் வரை | 7.50% | 25 அடிப்படை புள்ளிகள் |
மூன்று ஆண்டுகள் 1 நாள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை | 7.25% | - |
ஐந்து ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை | 7.00% | - |
ஐந்து ஆண்டுகள் (80சி எஃப்டி) | 7.25% | - |
* என்ஆர்இ விகிதங்கள் ஓராண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட முதிர்வு காலங்களுக்கு மட்டும்.
செய்திகள் மற்றும் புதிய விஷயங்களுக்கு பார்வையிடவும் மற்றும் பின் தொடரவும் Twitter at 11053637174663441056955156886515105157273222www.twitter.com/ICICIBank
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக