கடன் பத்திர ஃபண்டுகளில் முதலீடு, கூடுதல் கவனம் தேவை..!
சந்தையில்சரிவு
கடன் பத்திர சந்தையில் கலக்கம்
கடன் பத்திர ஃபண்டுகளில் பாதிப்பு
கடன் பத்திரங்களில் ரிஸ்க்
கடன் பத்திர வருமானம் ஏறுமுகம், பத்திர விலை இறங்கு முகம்
கொசுறு செய்தி
சந்தையில்சரிவு
அண்மைக் காலத்தி இந்தியப் பங்குச் சந்தை அதிக ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் புள்ளிகள் 38090 (14/09/2018). 38896-{28/08/2018}ல் இருந்து குறைந்து புள்ளிகள் 36227 ஆனது (28/09/2018). ஏறத்தாழ 5%சதவிகிதம் குறைந்தது.
இந்த பங்குச் சந்தை சரிவால் முதலீட்டாளரக்கள் கவலைக்கு உள்ளாவது சகஜம்தானே.
பங்கு முதலீடு மற்றும் பங்குச் சார்ந்த ஃபண்ட் மட்டும் பாதிப்பு அடைந்துள்ளது என்று என்ன வேண்டாம்.
கடந்த 6 மாதங்கள் அல்லது ஒரு வருடத்தில் கடன் சார்ந்த ஃபண்ட் திட்டங்களின் என்ஏவி மதிப்பும் குறைந்து வந்துள்ளது. அதன் லாப விகிதமும்குறைந்துள்ளது.
கடன் பத்திர சந்தையில் கலக்கம்
பொதுவாக சந்தை என்றால் நாம் மும்பை (Sensex) மற்றும் தேசிய பங்கு சந்தை மட்டும் (NSE) என்று எண்ணுகிறோம்.
அதேபோல் கடன் திட்டங்களை விற்கவும் வாங்கவும் கடன் பத்திரங்கள் சந்தையும் உள்ளது - Debt Market. கடன் பத்திர சந்தையும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.
உதாரணமாக டி.எஸ்.பி மியூச்சுவல் ஃபண்ட் (DSP Mutual funds) நிறுவனம் தங்களது டி.ஹெச்.எஃப்.எல் கடன் பத்திரங்களை (DHFL) மிக குறைந்த விலையில் இந்தச் சந்தையில் விற்ற காரணத்தால் டி.ஹெச்.எஃப்.எல் பங்கு விலையும் குறைந்து, சந்தையின் வீழ்ச்சிக்கு வழி வகுத்தது.
சந்தையின் வீழ்ச்சிக்கு முக்கிய ஆரம்ப காரணியும் இந்த நிகழ்வே.
அதன் பின்னர் தற்போது நடந்து வருவது ஒரு சரித்திரமாக பார்க்கப்படுக்கிறது.
எல்லா நிதி சம்பந்தப்பட்ட நிறுவன பங்கு விலையும், பெரும்பாலும் அவர்களது கடன் பத்திர விலையும் குறைந்துள்ளது.
இதனால் கடன் பத்திர ஃபண்டுகளுக்கும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.
கடந்த ஒரு வருட லாபம் பல கடன் திட்ட ஃபண்டுகளுக்குகுறைவாக உள்ளது.
அட்டவணை பார்க்கவும். இறங்குமுகத்தில் உள்ளது தெளிவு.
கடன் பத்திர ஃபண்டுகளின் கடந்த 1 வருட லாப விகிதம்% - 27/09/2018
Morningstar Category | Category Average | Top Performer | Bottom Performer |
10 yr Government Bond | 1.57 | 3.82 | -2.45 |
Banking & PSU | 4.04 | 5.8 | 2.92 |
Corporate Bond | 3.18 | 6.13 | -1.19 |
Credit Risk | 3.99 | 5.92 | -0.65 |
Dynamic Bond | 1.38 | 7.2 | -1 |
Floating Rate | 5.54 | 6.15 | 3.35 |
Government Bond | -0.4 | 2.35 | -5.3 |
Long Duration | -0.35 | -0.32 | -0.38 |
Low Duration | 5.85 | 6.81 | 4.63 |
Medium Duration | 3.33 | 6.76 | 1.63 |
Medium to Long Duration | 0.08 | 2.33 | -1.25 |
Money Market | 6.59 | 7.24 | 5.15 |
Short Duration | 4.04 | 6.19 | 0.88 |
Ultra Short Duration | 5.86 | 7.41 | -0.94 |
கடன் பத்திர ஃபண்டுகளில் பாதிப்பு
ஃபண்டுகளில் ஏற்ற இறக்கம் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இதே போல் ஏற்ற இறக்கம் கடன் பத்திர பண்டுகளிலும் ஏற்படும் என்பது பலர் அறியாதது.
கடன் பத்திர ஏன்.ஏ.வி (NAV) ஏறும் அல்லது இறங்கும், அதற்கான வாய்ப்புகள் உள்ளது.உதாரணமாக ஓரிரு வருடங்களில் தொடர் இடைவெளியில் கடன் பத்திர ஃபண்டு முதலீட்டாளர்களுக்கு சில நிறுவனங்கள் அதிர்ச்சி வைத்தியம் தந்து கொண்டே இருக்கின்றது.
ஆம்டெக் ஆட்டோ (Omtek auto) தொடங்கி, தற்போதய ஐ.எல்.எஃப்.எஸ் வரை(IL&FS). எங்கோ பெயர்களெல்லாம் கேட்ட ஞாபகம் உள்ளதா?
உள்ளது எனில் உங்களுக்கு கடன்பத்திர ரிஸ்க் பற்றி தெரிந்துள்ளது.
இல்லையெனில் இப்போது நன்கு தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
கடன் பத்திரங்களில் ரிஸ்க்
கடன் பத்திரங்களில்ரிஸ்க் பொதுவாக இரண்டு அல்லது மூன்று வகையில் இருக்கக் கூடும்.
1. கிரெடிட் ரிஸ்க் (Credit Risk)
2. வட்டி வகித ரிஸ்க் (Interest Rate Risk)
3. லிக்விடிட்டி ரிஸ்க் (Liquidity Risk).
தற்போது கடன் பத்திர முதலீடுகள் இந்த மூன்று வகையிலுமே பாதிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
1) கிரெடிட்ரிஸ்க்என்பதுகடன்வாங்கியநிறுவனங்கள்அந்தக்கடன்தொகையைதிருப்பிதரமுடியாமல்போவது.
2) வட்டி வகித ரிஸ்க் என்பதே மத்திய அரசும் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித ஏற்ற இறக்கங்கள் வருவது.
3) லிக்விடிட்டி ரிஸ்க் என்பது வேண்டிய நேரத்தில் வேண்டிய அளவில் கடன் பத்திரங்களை வாங்க / விற்க நிறுவனங்கள் கஷ்டப்படுவது.
இதில் வட்டி வகித ரிஸ்க்கைவிட கிரெடிட் ரிஸ்க் நஷ்டம் அதிகம் தரவல்லது. எனவே நிறுவனம், தான் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் போகும்போது, கடன் கொடுத்தவர்களுக்குநஷ்டம் அதிகம். சில சமயங்களில் அசலே கிடைப்பதில்லைஅல்லது நிறுவனம் வாங்கிய கடனுக்கு வட்டி கொடுக்காதபோது அதன் நம்பகத்தன்மை அளவீடு குறைகின்றது (Credit rating).இதனால் கடன் பத்திரங்களின்விலையும்குறைகின்றது.
கடன் பத்திர வருமானம் ஏறுமுகம், பத்திர விலை இறங்கு முகம்
மேலும் 10 ஆண்டு அரசாங்க கடன் பத்திர யீல்ட் தற்சமயம் ஏறி வருகிறது. முன்னர் இருந்ததை (6.8%) விட தற்போது (8.05%) ஏறி வருகிறது.
இந்த வட்டி விகிதம் ஏறும்போது கடன் பத்திர விலை குறைந்ததால்என்.ஏ.வி பாதிக்கப்படுகிறது.
தற்போது இது போல பல காரணங்களால் கடன் பத்திர முதலீடு பல வகையில் பாதிக்கபடுகிறது.
நிறைவாக
எனவே தான் கடன் பத்திர ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு முன் கவனமாக இருக்கவேண்டும்.
செபி அமைப்பின் ஃபண்டு பிரிவின் படி கிரெட் ஃபண்டு / கார்பரேட் ஃபண்டு வகைகளில் முதலீடு செய்வதற்கு முன் யோசித்து செயல்படவேண்டும். தற்சமயம் இருக்கும் சூழ்நிலையில் மிகக் குறைந்த கால ஃபண்டுகளில் முதலீடு செய்வது நல்லது.
கொசுறு செய்தி
தற்போது என்.சி.டி (NCD) எனப்படும் நிதி முதலீடுகளில் முதலீடு செய்ய வாய்ப்புகள் உருவாகி வருகிறது. டி.ஹெச்.எஃப்.எல் நன்றாக செயல்படும் என்று நம்புபவர்கள், அவர்களின் என்.சி.டி பத்திரங்களை சந்தையில் வாங்கினாள் அதிக லாபம் கிடைக்கிறது.
1000 ரூபாய் முக மதிப்பு பத்திரங்கள் (FV = 1000), 900 வாகில் விற்று வருகின்றது (MP = 900 -950).அல்லது நிதி நிறுவன முதலீடுகள் வேண்டாம் என்று நினைப்பவர்கள் இதை தவிர்த்து விடலாம்.
Mobile – 9789692495; Email - meenakshisundaram.kannan@yahoo.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக