மொத்தப் பக்கக்காட்சிகள்

இந்தியாவின் கிராமப்புற வளர்ச்சி மூலம் லாபம் பார்க்க - மஹிந்திரா ரூரல் பாரத் அண்ட் கன்சம்ஷன் யோஜனா மியூச்சுவல் ஃபண்ட்

மஹிந்திரா மியூச்சுவல் ஃபண்ட்

புதிய பங்குச் சார்ந்த  ஃபண்ட் ‘மஹிந்திரா ரூரல் பாரத் அண்ட் கன்சம்ஷன் யோஜனா’ அறிமுகம்

நீண்ட காலத்தில் மூலதன அதிகரிப்பை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்காக 


விவசாய பண்ணை, ஊரக உள்கட்டமைப்பு, நுகர்வு மற்றும் நிதிச் சேவைகள் அடங்கிய கிராமப்புற இந்தியாவை சேர்ந்த துறைகளில் முதலீடு செய்யப்படுகிறது.

புதிய ஃபண்ட் வெளியீடு அக்டோபர் 19, 2018 தொடங்கி நவம்பர் 02, 2018 நிறைவு பெறுகிறது.

சென்னை, அக்டோபர் , 2018

  மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஃபைனான்ஸியல் சர்வீசஸ் லிமிடெட் (Mahindra and Mahindra Financial Services Limited -MMFSL) -ன் முழுமையான துணை நிறுவனம் மஹிந்திரா மியூச்சுவல் ஃபண்ட்  (Mahindra Mutual Fund). இந்த நிறுவனம், . மஹிந்திரா ரூரல் பாரத் அண்ட் கன்சம்ஷன் யோஜனா (Mahindra Rural Bharat and Consumption Yojana,) என்கிற புதிய பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்  திட்டத்தை அறிமுகம் செய்கிறது.  இது நீண்ட காலத்தில் மூலதன ஆதாயத்தை  எதிர்ப்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு ஏற்றது என்பதோடு எப்போது வேண்டுமானலும் முதலீடு செய்யும் மற்றும் யூனிட்களை விற்று பணமாக்கும் வசதியை கொண்ட  ஓப்பன் எண்டெட்  திட்டம் (open ended scheme) ஆகும். இதில் திரட்டப்படும் நிதி, கிராமபுற நுகர்வை சார்ந்த அதிக வளர்ச்சி காண வாய்ப்புள்ள  நிறுவனப் பங்குகள் மற்றும் அது சார்ந்த ஆவணங்களில் முதலீடு செய்யப்படும்.

மஹிந்திரா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதன்மை சந்தைப்படுத்துதல் அதிகாரி திரு. ஜதிந்தர் பால் சிங் (Mr. Jatinder Pal Singh, CMO, Mahindra Mutual Fund) கூறும் போது, ‘’கிராமப்புற வளர்ச்சியை அடிப்படையாக கொண்ட வணிக நிறுவனங்களின் பங்குகளில் இந்தத் திட்டத்தில் திரப்பட்டும் நிதி முதலீடு செய்யப்படும். அந்த நிறுவனங்களின் வளர்ச்சியின் அடிப்படையில் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக மூலதன ஆதாயம் கிடைக்கும்.  கிராமப்புற வருமானம் மற்றும் நுகர்வு அதிகரிப்பதால் பல துறைகள் தொடர்ந்து லாபம் அடையும். பல்வேறு கட்டமைப்பு சீர்திருத்தங்கள் குறிப்பாக, மண் அட்டை, பயிர் காப்பீடு, அதிக அதிகபட்ச ஆதரவு விலை. மின்னணு சந்தை மற்றும் விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக அதிகரிக்க நடவடிக்கை போன்றவற்றால் கிராமபுறத்தினரின் செலவிடும் வருமானம் அதிகரித்து வருகிறது.

புதிய ஃபண்ட் வெளியீடு அக்டோபர் 19, 2018 தொடங்கி, நவம்பர் 02, 2018 நிறைவு பெறுகிறது. இந்தத் திட்டத்தின் மறு விற்பனை, யூனிட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஐந்து வணிக தினங்களுக்குள் தொடங்கும்.

மஹிந்திரா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திரு. அஷுடொஷ் பிஸ்னோய் (Mr Ashutosh Bishnoi, MD & CEO, Mahindra Mutual Fund) கூறும் போது,’’ கிராமப்புற இந்தியாவின் நுகர்வு மேம்பாட்டால் இந்தியாவின் உள் நாட்டு மொத்த உற்பத்தி (GDP) அதிகரிக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். மஹிந்திரா ரூரல் பாரத் அண்ட் கன்சம்ஷன் யோஜனா திட்டம், முதலீட்டாளர்கள் இந்தியாவின் வளர்ச்சியில் குறிப்பாக கிராமப்புற இந்தியாவின் வளர்ச்சியில் பங்கேற்கும் ஒரு வாய்ப்பை அளிக்கிறது. அதாவது, அடிப்படையில் வலுவான மற்றும் முன்னணி நிறுவனப் பங்குகள் இடம் பெறும் பரவலாக பங்குச் சந்தை முதலீட்டுக் கலவையில் முதலீடு செய்வது மூலம் அளிக்கிறது. இந்தத் திட்டம், கவர்ச்சிகரமான நீண்ட கால முதலீட்டு வாய்ப்பை அளிக்கிறது. மஹிந்திரா ரூரல் பாரத் அண்ட் கன்சம்ஷன் யோஜனா திட்டத்தில் முதலீடு செய்வது மூலம் முதலீட்டாளர்கள் அதிக மூலதன அதிகரிப்பை எதிர்பார்க்கலாம்”
Mr. Ashutosh Bishnoi, MD and CEO, Mahindra Mutual Fund, Mahindra, Rural Bharat and Consumption Yojana, addressing a press conference

மஹிந்திரா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதன்மை ஈக்விட்டி வல்லுநர் திரு. வெங்கடராமன் பாலசுப்பிரமணியன் (Mr. Venkataraman Balasubramanian, Chief Equity Strategist, Mahindra Mutual Fund)  கூறும் போது, ‘’மஹிந்திரா ரூரல் பாரத் அண்ட் கன்சம்ஷன் யோஜனா, இந்தியாவின் வளர்ந்து வரும் ஜிடிபி-ல் முக்கிய பங்காற்றும் பிரிவில் முதலீடு செய்யும் வாய்ப்பை முதலீட்டாளர்களுக்கு அளிக்கிறது. பண மதிப்பு மாற்றம் போன்ற சர்வதேச ஏற்ற இறக்கத்திலிருந்து பாதுகாக்கும் விதமாக கிராமப் புறங்களில் பயன்படுத்தப்படாத வாய்ப்புகளை கண்டறிந்து அது போன்ற நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்படும்.

இந்தத் திட்டத்தில் திரட்டப்பட்ட நிதியில் 80% வரை, கிராமப் புற நுகர்வை சார்ந்திருக்கும் நிறுவனப் பங்குகள் மற்றும் பங்குச் சார்ந்த நிதி ஆவணங்களில் முதலீடு செய்யப்படும். 20% வரை தொகை கிராமப்புற பொருளாதாரத்தை சாராத இதர நிறுவனங்களின் பங்குகள் மற்றும் பங்குச் சார்ந்த ஆவணங்களில் முதலீடு செய்யப்படும்.இந்தத் திட்டத்தில் 20% வரை கடன் மற்றும் நிதிச் சந்தை ஆவணங்களில் முதலீடு செய்யப்படும். 10% வரை REITs & InvIT களின் யூனிட்களில் முதலீடு செய்யப்படும். 
 
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு. பங்குச் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது, முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும். 

(Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully.)

மஹிந்திரா மியூச்சுவல் ஃபண்ட் பற்றி..!

மஹிந்திரா அஸெட் மேனேஜ்மென்ட் கம்பெனி பிரைவேட் லிமிடெட் (Mahindra Asset Management Company Private Limited), என்பது கம்பெனிகள் சட்டம் 1956–ன் கீழ் ஆரம்பிக்கப்பட்டது. இது, மஹிந்த்ரா மியூச்சுவல் ஃபண்ட்-ன் முதலீட்டு பிரிவு. மஹிந்த்ரா மியூச்சுவல் ஃபண்ட் என்பது  மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஃபைனான்ஸியல் சர்வீசஸ் லிமிடெட் (Mahindra and Mahindra Financial Services Limited -MMFSL)) -ன் முழுமையான துணை நிறுவனம் ஆகும். மஹிந்திரா மியூச்சுவல் ஃபண்ட், இந்தியா முழுக்க பல்வேறு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை விநியோகித்து வருகிறது. குறிப்பாக, கிராமப்புறம் மற்றும் சிறிய நகர்ப்புற பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.

சட்டப்பூர்வ விவரங்கள்: மஹிந்திரா மியூச்சுவல் ஃபண்ட், இந்திய டிரஸ்ட்கள் சட்டம், 1882 –ன் கீழ் அறக்கட்டளையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்பான்சர்: மஹிந்திரா & மஹிந்திரா ஃபைனான்ஸியல் சர்வீசஸ் லிமிடெட் (ஸ்பான்சரின் பொறுப்பு ரூ. 1,00,000/-) அறங்காவலர் (Trustee): மஹிந்திரா டிரஸ்டீ கம்பெனி பிரைவேட் லிமிடெட். முதலீட்டு மேலாளர் (Investment Manager): மஹிந்திரா அஸெட் மேனேஜ்மென்ட் கம்பெனி பிரைவேட் லிமிடெட். ஸ்பான்சர், டிரஸ்டி மற்றும் முதலீட்டு மேலாளர் நிறுவனங்கள் சட்டம், 1956 இன் கீழ் இணைக்கப்பட்டுள்ளன.

 மஹிந்திரா & மஹிந்திரா ஃபைனான்ஸியல் சர்வீசஸ் லிமிடெட் பற்றி..!

 மஹிந்திரா & மஹிந்திரா ஃபைனான்ஸியல் சர்வீசஸ் லிமிடெட் (மஹிந்திரா ஃபைனான்ஸ்), என்பது இந்தியாவின் முன்னணி வங்கிச் சாரா நிதிச் சேவை நிறுவனங்களில் ஒன்றான  மஹிந்திரா குழுமத்தின் ஓர் அங்கம். கிராமப்புறம் மற்றும் சிறிய நகர்ப்புறங்களில் கவனம் செலுத்தி வரும், மஹிந்திரா ஃபைனான்ஸ் 55 லட்சம் (5.5 Million) மேலான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளதோடு 850 கோடி டாலருக்கு (USD 8.5 Billion ) மேலான நிதிச் சொத்துகளை  நிர்வகித்து வருகிறது. மஹிந்திரா ஃபைனான்ஸ், வாகனம் மற்றும் டிராக்டர் வாங்க கடன் அளிக்கும் முன்னணி நிறுவனம். சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SMEs) நிலையான வைப்புகளும் கடன்களும் வழங்குகிறது. இதற்கு நாடு முழுவதும் 1,291 அலுவலகங்கள் உள்ளன. இதன் மூலம் நாடு முழுக்க 7,000 நகரங்கள் மற்றும் 3,50,000 கிராமங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவை அளித்து வருகிறது. மஹிந்திரா ஃபைனான்ஸ், டவ் ஜோன்ஸ் நிலைத்தன்மை குறியீட்டில் (Dow Jones Sustainability Index), வளர்ந்து வரும் பங்குச் சந்தைகள் பிரிவில் (Emerging Market Category) இடம் பிடிக்க போகும் இந்தியாவைச் சேர்ந்த ஒரே வங்கிச் சாரா நிதி நிறுவனமாக இருக்கும்.

2018 ஆம் ஆண்டுக்கான, இந்தியாவில் பணிபுரிய மிகச் சிறந்த இடம் (Great Place to Work® Institute India) என்பதில் 14வது இடத்தை மஹிந்திரா ஃபைனான்ஸ் பிடித்துள்ளது. ஏஆன் சிறந்த பணியாளர் 2017 (Aon Best Employer 2017) விருதும் கிடைத்திருக்கிறது.

மேலும், த எகனாமிக் டைம்ஸ் (The Economic Times) -ன் வங்கி மற்றும் நிதிச் சேவை நிறுவனங்களில் சிறந்த பிராண்ட்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

இந்த நிறுவனத்தின், இன்சூரன்ஸ் தரகு துணை நிறுவனம், மஹிந்திரா இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ் லிமிடெட் (Mahindra Insurance Brokers Limited -MIBL) ஆகும். நேரடி மற்றும் மறுகாப்பீட்டு பரிமாற்ற சேவைகள் வழங்கும் உரிமம் பெற்றது.

மஹிந்திரா ஃபைனான்ஸின் துணை நிறுவனமான மஹிந்திரா ரூரல் ஹவுஸிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (Mahindra Rural Housing Finance Limited - MRHFL) நாட்டிலுள்ள கிராமப்புறம் மற்றும் சிறிய நகர்ப்புற பகுதிகளில் உள்ள தனிநபர்களுக்கு வீடு வாங்க, வீட்டை புதுப்பிக்க, வீடு கட்ட கடன் வழங்கி வருகிறது.

மஹிந்திரா ஃபைனான்ஸின் முழுமையான துணை நிறுவனம், மஹிந்திரா அஸெட் மேனேஜ்மெண்ட் கம்பெனி பிரைவேட் லிமிடெட் (Mahindra Asset Management Company Private Limited - MAMCPL),  மஹிந்திரா மியூச்சுவல் ஃபண்டின் முதலீட்டு மேலாளராக  செயல்படுகிறது.

இந்த நிறுவனம், அமெரிக்காவில் மஹிந்திரா ஃபைனான்ஸ் யுஎஸ்ஏ எல்எல.சி (Mahindra Finance USA LLC) என்கிற பெயரில் கூட்டு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.  இது அமெரிக்காவில் டிராக்டர் கடன் வழங்க, ரபோ வங்கியின் (Rabo Bank) துணை நிறுவனமான டி லாஜ் லான்டன் (De Lage Landen) கூட்டு சேர்ந்து செயல்பட்டு வருகிறது

மஹிந்திரா பற்றி..!

மஹிந்திரா குழுமம், 2,070 கோடி டாலர் (USD 20.7 billion) மதிப்பு கொண்டது. இது, கிராமப்புற வளர்ச்சி, சிறிய நகரங்களின் வளர்ச்சி, புதிய வணிகம் போன்றவற்றில் நாட்டு மக்களுக்கு உதவி செய்து வருகிறது. மேலும் பயன்பாட்டு வாகனங்கள், தகவல் தொழில்நுட்பம், நிதிச் சேவைகள், விடுமுறைக் கால இல்லங்கள் போன்ற துறைகளில் ஈடுபட்டு வருகிறது. உற்பத்தி எண்ணிக்கையில் உலகின் மிகப் பெரிய டிராக்டர் நிறுவனம். வேளாண் வணிகம், வாகன உதிரிப் பாகங்கள், வர்த்தக வாகனங்கள், வேகப் படகுகள், ஆலோசனை சேவைகள், எரிசக்தி, தொழில்சாலை கருவிகள், சரக்கு போக்குவரத்து, ரியல் எஸ்டேட், உருக்கு, விமானம், ராணுவம், இரு சக்கர வாகனம் என பல்துறை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவை தலைமையிடமாக கொண்ட இந்தக் குழுமத்தில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 2.40 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்,

மஹிந்திரா பற்றி கூடுதலாக அறிந்துகொள்ள 
www.mahindra.com / Twitter and Facebook: @MahindraRise

பத்திரிகை தொடர்புக்கு: 
Metabelle Lobo Biren Shah,
General Manager, Group Communications Communication & Marketing
Mahindra Group Mahindra Asset Management Company Pvt Ltd
Contact: +91 9833076076
Email: lobo.metabelle@mahindra.com Email: shah.biren3@mahindra.com


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற . - பஜாஜ் ஃபின்சர்வ் ELSS வரி சேமிப்பு ஃபண்ட் .!

திரு .  எஸ் .  கார்த்திகேயன் ,  நிறுவனர் ,  https://winworthwealth.com/ மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு   ஏற்ற . ...