மொத்த செலவு விகிதம் குறைப்பு: மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு எவ்வளவு லாபம்?
திரு. மீ. கண்ணன்,
மியூச்சுவல் ஃபண்ட் ஆலோசகர்,
இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையை நெறிப்படுத்தும் செபி (SEBI) அமைப்பு அண்மையில் மியூச்சுவல் ஃபண்ட்களின் மொத்த செலவு விகிதத்தை (Total Expense Ratio - TER) குறைத்துள்ளது. முன்னர் 2.5% என இருந்தது, தற்போது 1.5% ஆக குறைக்கப்பட்டு உள்ளது.
முழுமையான விவரம் அட்டவணையில்..
நிர்வகிக்கப்படும்தொகை | மொத்தசெலவுவிகிதம் (%) | ||
ரூ. கோடி | பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட்கள் | மற்ற ஃபண்ட்கள் | |
0-500 | 2.25% | 2% | |
500-750 | 2 | 1.75 | |
750-2,000 | 1.75 | 1.5 | |
2,000-5,000 | 1.6 | 1.35 | |
5,000-10,000 | 1.5 | 1.25 | |
10,000-50,000 | ஒவ்வொரு ரூ.5,000 கோடிக்கும் 0.05% குறைவு | ||
>50000 | 1.05 | 0.8 | |
மொத்த செலவு விகிதம்
ஒவ்வொரு ஃபண்ட்-க்கு அதை நிர்வகிக்க மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் (ஏஎம்சி) குறிப்பிட்ட தொகையை எடுத்து கொள்ளும். அந்த ஃபண்டை சந்தைப்படுத்துவதற்கான செலவும் இதில் அடங்கும். இந்தச் செலவு மற்ற நாடுகளைய ஒப்பீட்டால் இந்தியாவில் அதிகம் என்று செபி அமைப்பு சொல்லிக்கொண்டே இருந்தது. தற்போது இந்திய மியூச்சுவல் ஃபண்டுகளில் நிரிவகிக்கப்படும் முதலீடு ரூ. 25 லட்சம் கோடியைத் தாண்டி உள்ளது.
இந்த நிலையில் செலவினங்களை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மிக அதிக தொகையை நிர்வகிக்கும் (ஏயூஎம்) ஃபண்ட்களுக்கு இந்தச் செலவீனத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது செபி.
என்ன லாபம் ?
இதனால் முதலீட்டாளர்களுக்கு லாபம் என்று பார்க்கலாம்
உதாரணமாக, ஒரு மியூச்சுவல் ஃபண்ட்-ல் 10,000 கோடி நிர்வகிக்கப்படுகிறது என்று வைத்து கொள்வோம் தற்போது அதன் மொத்த செலவு விகிதம் 1.75% என்று இருந்தால் ரூ. 10,000 ஒருவர் முதலீடு செய்தால் ரூ.175 கழித்து கொள்ளப்படும். தற்போது அது 1.5% ஆக குறைக்கப்படும்போது 0.25% குறைகிறது. முதலீட்டாளர்கள் கணக்கில் ரூ. 25 அதிகமாக முதலீடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு தடவை முதலீடு செய்யும் போதும் ரூ. 25 அதிகமாக அவரின் கணக்கில் சேர்கிறது. இதுபோல் 20 வருட முதலீட்டில் 15% லாபம் கிடைத்தால் அதிகமாக கிடைக்கும் தொகை சுமார் ரூ. 40,000 ஆகஇருக்கும்
யாருக்கு பாதிப்பு?
செபியின் புது நடவடிக்கையால் பெரிய ஃபண்ட்களை நிர்வகித்து வரும் நிறுவனங்களின் லாபம் பாதிக்கபடும். மேலும் ஃபண்ட் நிறுவனங்கள், ஃபண்ட்களை சந்தைப்படுத்துவதற்கான செலவுகளை குறைத்துக் கொள்ளும். மேலும், ஏஜென்ட்களுக்கு கிடைக்கும் தொகை குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.
இந்த நடவடிக்கைகளால் முதலீட்டாளர்களுக்கு லாபம் என்ற நோக்கில் புதிய முதலீடுகள் வரவேண்டும் என்பதே செபியின் எதிர்பார்ப்பு.
Mr. Kannan M
Mobile - 9789692495Land line - 044 42107068
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது.
Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully.
Disclaimer
Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully. The NAVs of the schemes may go up or down depending upon the factors and forces affecting the securities market including the fluctuations in the interest rates. The past performance of the mutual funds is not necessarily indicative of future performance of the schemes.
The Mutual Fund is not guaranteeing or assuring any dividend under any of the schemes and the same is subject to the availability and adequacy of distributable surplus. Investors are requested to review the prospectus carefully and obtain expert professional advice with regard to specific legal, tax and financial implications of the investment/participation in the scheme.
While all efforts have been taken to make this web site as authentic as possible, please refer to the print versions, notified Gazette copies of Acts/Rules/Regulations for authentic version or for use before any authority. We will not be responsible for any loss to any person/entity caused by any short-coming, defect or inaccuracy inadvertently or otherwise crept in the Mutual Funds Sahi Hai web site. https://www.mutualfundssahihai.com/en/disclaimer
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக