லஷ்மி விலாஸ் பேங்க் - 2018, செப்டம்பர் 30 காலாண்டு வணிகம் ரூ. 55,162 கோடி
லஷ்மி விலாஸ் பேங்க் - 2018, செப்டம்பர் 30 உடன் முடிந்த காலாண்டுக்கான நிதி நிலை முடிவுகள்
✓ வங்கியின் வணிகம் ரூ. 2,775 கோடி (5.30%) அதிகரித்து ரூ. .52,387 கோடியிலிருந்து ரூ. 55,162 கோடியாக உயர்ந்துள்ளது.
✓ காசா(CASA) ரூ. 772 கோடி அதிகரித்து ரூ. 6,118 கோடியிலிருந்து ரூ. 6,890 கோடியாக உயர்ந்துள்ளது. 2018, செப்டம்பர் 30 -ல் காசா 22.18% ஆக உள்ளது. 2017, செப்டம்பர் 30 -ல் 20.97% ஆக இருந்தது.
✓2018, செப்டம்பர் 30 உடன் முடிந்த காலாண்டில் நிகர வட்டி வருமானம் (NII) ரூ. 21கோடி அதிகரித்து, ரூ. 151 கோடியாக உள்ளது. இது2017, செப்டம்பர் 30 -ல் ரூ. 130 கோடியாக இருந்தது.
✓ வங்கியின் நிகர வட்டி வரம்பு (NIM), 2018 செப்டம்பர் 30-ல் 1.74% ஆக உள்ளது. இது 2017 செப்டம்பர் 30 -ல் 1.48% ஆக இருந்தது.
✓ செயல்பாட்டு லாபம் காலாண்டில் ரூ. 27.57 கோடியாக அதிகரித்துள்ளது. இது 2018, ஜூன் 30 உடன் முடிந்த காலாண்டில் ரூ. 6.76 கோடியாக இருந்தது.
✓ மூலதன தன்னிறைவு விகிதம் பேசல் III படி, 9.45% லிருந்து 9.67% ஆக உயர்ந்துள்ளது.
தென் மாநிலத்தை சேர்ந்த தனியார் துறை வங்கியான லஷ்மி விலாஸ் பேங்க் (Lakshmi Vilas Bank - LVB), நடப்பு2018-19 -ம் நிதி ஆண்டில் 2018, செப்டம்பர் 30 உடன் முடிந்த இரண்டாம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
முக்கிய நிதி நிலை முடிவுகள் :
* வங்கியின் மொத்த வணிகம் 2018, செப்டம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி ரூ. 55,162 கோடியாக உள்ளது. இது 30% அதிகரிப்பு.
* வழங்கப்பட்ட மொத்தக் கடன் ரூ. 23,216 கோடியிலிருந்து ரூ. 24,092 கோடியாக அதிகரித்துள்ளது. இது 3.77%. உயர்வு
* மொத்த டெபாசிட் 2017, செபடம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி ரூ. 29,171 கோடியாக இருந்தது. இது 2018, செப்டம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி ரூ. 31,071 கோடியாக உயர்துள்ளது. இது 6.51% உயர்வாகும்.
*காசா (CASA) ரூ. 6, 118 கோடி அதிகரித்து ரூ. 6,890 கோடியாக உயர்ந்துள்ளது. இது, 12.62% அதிகரிப்பாகும். மொத்த டெபாசிட்டில் காசாவின் பங்களிப்பு 20.97%லிருந்து 22.18% ஆக அதிகரித்துள்ளது.
*இந்த வங்கி அதன் மொத்த டெபாசிட்களை ரூ. 1,800 கோடி குறைத்துள்ளது. இதனால், டெபாசிட்களுக்கு வழங்கப்பட்ட வட்டி செலவு முதல் காலாண்டுடன் ஒப்பிடும் போது ரூ. 22 கோடி குறைந்துள்ளது. இதனை அடுத்து நிகர வட்டி வருமானம் (NII) 2018-19 ஆம் நிதி ஆண்டு இரண்டாம் காலாண்டில் ரூ. 150.95 கோடியாக அதிகரித்துள்ளது. இது, 2018-19 ஆம் நிதி ஆண்டு முதல் காலாண்டில் ரூ. 130.20 கோடியாக இருந்தது.
* செலவு வருமான விகிதம், முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது 96.46% லிருந்து 87.59% ஆக குறைந்துள்ளது.
* வங்கியின் நிகர இழப்பு, 2018 செப்டம்பர் 30 உடன் முடிந்த காலாண்டில் ரூ. 132.31 கோடியாக உள்ளது. இது 2018 ஜூன் 30 உடன் முடிந்த காலாண்டில் ரூ. 123.87 கோடியாக இருந்தது.
* வங்கியின் வணிகம் தொடர்ந்து பரவலாக இருக்கிறது.
மூலதன தன்னிறைவு விகிதம்:
இந்த வங்கியின் மூலதன தன்னிறைவு விகிதம் ((CAR)) பேசல் விதிமுறை III-ன் படி, 2018 ஜூன் 30 -ல் 9.45% ஆக இருந்தது. இது 2018 செப்டம்பர் 30-ல் 9.67% ஆக உயர்ந்துள்ளது.
வாராக் கடன்
2018 செப்டம்பர் 30 நிலவரப்படி, வங்கியின் மொத்த வாராக் கடன் 12.31% ஆக உள்ளது. இது 2017 செப்டம்பர் 30-ல் 5.50% ஆக இருந்தது.
2017-18 இரண்டாம் காலாண்டில் வங்கியின் ஒதுக்கீட்டு கவரேஜ் விகிதம் ( Provision Coverage Ratio) 55.39% ஆக உள்ளது. இது 2017 செப்டம்பர் 30-ல் 46.27% ஆக இருந்தது. 2018 ஜூன் 30-ல் 55.80% ஆக உள்ளது.
சென்னையில் 2018, அக்டோபர் 24 அன்று நநடந்த லஷ்மி விலாஸ் வங்கியின் இயக்குநர் குழு கூட்டத்தில் 2018 செப்டம்பர் 30 உடன் முடிந்த காலாண்டு நிதி நிலை விவரங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக