மொத்தப் பக்கக்காட்சிகள்

மணப்புரம் ஃபைனான்ஸ் லிமிடெட் என்சிடி வட்டி விகிதம் ஆண்டுக்கு 10.40%



மணப்புரம் ஃபைனான்ஸ் லிமிடெட்

மணப்புரம் ஃபைனான்ஸ் லிமிடெட், என்சிடி பகுதி – 1 வெளியீடு, அக்டோபர் 24, 2018 அன்று ஆரம்பம்

வட்டி விகிதம் ஆண்டுக்கு 10.40% வரை*

                    தரக்குறியீடுகள் - “பிடபிள்யூஆர் ஏஏ+/நிலையானதுபிரிக்வொர்க்  ரேட்டிங்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (பிரிக்வொர்க்) மற்றும் கேர் ஏஏ+/நிலையானதுகேர்  ரேட்டிங்ஸ் லிமிடெட்(கேர்)
                   400 நாள்கள் முதல் 2,557 நாள்கள் வரை அனைத்து பிரிவுகளுக்கும் குறைந்தபட்ச முதலீடு ரூ. 10,000.
                   முதலில் வருபவர்களுக்கு, முன்னுரிமை என்கிற  அடிப்படையில் என்சிடிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.^

மும்பை, அக்டோபர் 24, 2018: மணப்புரம் ஃபைனான்ஸ் லிமிடெட் (Manappuram Finance Limited ( “நிறுவனம்”), இந்தியாவில் தங்க அடமானக் கடன்  வழங்கும் வணிகத்தில் (gold finance business) ஈடுபட்டுள்ள முக்கியமான வங்கிச் சாரா நிதிச் சேவை நிறுவனங்களில் (NBFC) ஒன்றாகும். (ஆதாரம்: க்ரைசில் அறிக்கை). இந்த நிறுவனம், சிறு வாடிக்கையாளளுக்கு தங்க ஆபரண அடமானத்தின் பெயரில் குறுகிய கால கடன்களை தனிநபர்கள் மற்றும் வணிக தங்க கடன்களை (“தங்க கடன்கள்”)முதன்மையாக அளித்து வருகிறது.  

இந்த நிறுவனம், பங்குகளாக மாறாத திரும்ப பெறக்கூடிய பாதுகாப்பான கடன் பத்திரங்களை (secured redeemable Non-Convertible Debentures -NCD) அக்டோபர் 24, 2018 முதல் வெளியிடுகிறது.  இந்த என்சிடி ஒன்றின் முக மதிப்பு ரூ. 1,000.  மொத்தம் ரூ.10,000 மில்லியன் என்சிடிகள் வெளியிடப்படுகிறது. அடிப்படை வெளியீடு பகுதி - 1 மூலம் ரூ. 2,000 மில்லியன், கூடுதல் ஆதரவு மூலம் ரூ. 8,000  மில்லியன்  (பகுதி 1 வெளியீடு அளவு) வெளியிடப்படுகிறது.
இந்த பகுதி 1 என்சிடி வெளியீடு  நவம்பர் 22, 2018-ல் நிறைவு பெறுகிறது. வெளியீட்டை முன்னதாக நிறைவு செய்வது அல்லது நீடிப்பது குறித்து நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு அல்லது என்சிடி வெளியீடு குழு முடிவு செய்யும்


தரக்குறியீடுகள்: கேர் ரேடிங்க்ஸ்  & பிரிக் ஒர்க் ரேட்டிங்ஸ் இந்தியா: எதிர்பார்ப்பு: நிலையானது.

வெளியிடப்பட உள்ள என்சிடி பகுதி - 1, கேர் தரக்குறியீடு "கேர் ஏஏ/  நிலையானது; ரூ. 10,000 பில்லியன் மதிப்புக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விவரம் அந்த நிறுவனம்,  ஆகஸ்ட் 20, 2018-ல் வெளியிட்டுள்ள தகவல் அறிக்கையில் (பார்வை எண் CARE/CRO/RL/2018- 19/1239) இடம் பெற்றுள்ளது. மேலும் செப்டம்பர் 17, 2018 அன்று மறு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது அக்டோபர் 8, 2018 அன்று மீண்டும் மறுமதிப்பீடு செய்யப்பட்டு அறிக்கை (வெளியிடப்பட்டுள்ளது.



வெளியிடப்பட உள்ள என்சிடிக்கு, பிரிக்வொர்க் ரேட்டிங்ஸ் இந்தியா பிரைவேட் நிறுவனம், பிடபியூஆர்  ஏஏ/  நிலையானது; ரூ. 10,000 பில்லியன் மதிப்புக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விவரம் அந்த நிறுவனம்,  ஆகஸ்ட் 29, 2018-ல் வெளியிட்டுள்ள தகவல் அறிக்கையில் (பார்வை எண் BWR/NCD/HO/ERC/VS/0351/2018-19) இடம் பெற்றுள்ளது. மேலும் இது அக்டோபர் 11, 2018 அன்று மறுமதிப்பீடு செய்யப்பட்டு அறிக்கை (பார்வை எண் BWR/NCD/HO/ERC/VS/0458/2018-19) வெளியிடப்பட்டுள்ளது.


இந்த என்சிடிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கேர் தரக்குறியீடு  மற்றும் பிரிக்வொர்க்  தரக்குறியீடு நிதிச் சார்ந்த கடமைகளை சரியாக அளிப்பதையும் மிக உயர்ந்த அளவு பாதுகாப்பைக்  கொண்டிருப்பதையும் சுட்டிக் காட்டுகிறது.  கருதப்படுகிறது. கேர் மற்றும்  மற்றும் பிரிக்வொர்க் தரக்குறியீடு நிறுவனங்கள் அளித்துள்ள தரக்குறியீடுகளை எப்போது வேண்டுமானாலும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க அல்லது மாற்றி அமைக்க அல்லது திரும்ப பெறக்கூடும். மேலும், மதிப்பீடு செய்து தனிப்பட்ட முறையில் வேறு தரக்குறியீடு வழங்க கூடும்.


இந்த தரக்குறியீடுகள் இந்த என்சிடிகளை வாங்க அல்லது விற்க அல்லது தொடர்ந்து வைத்துக் கொள்ளும் பரிந்துரை அல்ல. முதலீட்டாளர்கள் அவர்களாக சொந்தமாக முடிவு எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த என்சிடி வெளியீடு பகுதி 1-ன் இணைப்பு (Annexure) ஏ மற்றும் பி – ஐ பார்க்கவும்.


அனைத்து பிரிவு என்சிடிகளுக்கும் குறைந்தபட்ச முதலீடு ரூ.10,000. என்சிடி ஒன்றின் முக மதிப்பு ரூ. 1,000. இதன் ஒரு மடங்குகளில் விண்ணப்பிக்க வேண்டும். ^முதலில் விண்ணப்பம் செய்பவர்களுக்கு முன்னுரிமை என்கிற அடிப்படையில் என்டிசிகள் ஒதுக்கீடு செய்து அளிக்கப்படும். (அதேநேரத்தில், திட்டமிட்டதை விட அதிக விண்ணப்பங்கள் வரும்பட்சத்தில், விண்ணப்ப விகிதாச்சாரத்துக்கு ஏற்ப ஒதுக்கீடு செய்யப்படும்). 

வெளியீடு அமைப்பு(Issue Structure):  

சீரிஸ் I (Series I): நிலையான வட்டி, வட்டி வழங்கும் காலம் (Frequency): கூட்டு வட்டி (Cumulative), முதலீட்டு காலம் (Tenor): 400  நாள்கள், 9.70%, திரும்பக் கிடைக்கும் தொகை (Redemption Amount):  ரூ.1106.83.

சீரிஸ் II: நிலையான வட்டி, வட்டி வழங்கும் காலம்: மாதம் தோறும்,  முதலீட்டு காலம் :  36 மாதங்கள், கூப்பன் விகிதம்: 9.70%,:  மொத்த வட்டி வருமானம் (Effective yield) 10.02%.

சீரிஸ் III: நிலையான வட்டி, வட்டி வழங்கும் காலம்: மாதம் தோறும்,  முதலீட்டு காலம் :  60 மாதங்கள், கூப்பன் விகிதம்: 10.00%,:  மொத்த வட்டி வருமானம் 10.46%.

சீரிஸ் IV: நிலையான வட்டி, வட்டி வழங்கும் காலம்:  ஆண்டுக்கு ஒரு முறை,  முதலீட்டு காலம் :  24 மாதங்கள், கூப்பன் விகிதம்: 9.85%,:  மொத்த வட்டி வருமானம் 9.85%.

சீரிஸ் V: நிலையான வட்டி, வட்டி வழங்கும் காலம்:  ஆண்டுக்கு ஒரு முறை,  முதலீட்டு காலம் :  36 மாதங்கள், கூப்பன் விகிதம்: 10.00%,:  மொத்த வட்டி வருமானம் 9.99%.

சீரிஸ் VI: நிலையான வட்டி, வட்டி வழங்கும் காலம்:  ஆண்டுக்கு ஒரு முறை,  முதலீட்டு காலம் : 60 மாதங்கள், கூப்பன் விகிதம்: 10.40%,:  மொத்த வட்டி வருமானம் 10.39%.


சீரிஸ் VII: நிலையான வட்டி, வட்டி வழங்கும் காலம்: கூட்டு வட்டி,  முதலீட்டு காலம் : 24 மாதங்கள், திரும்ப கிடைக்கும் தொகை ரூ. 1,206.81.

சீரிஸ் VIII: நிலையான வட்டி, வட்டி வழங்கும் காலம்: கூட்டு வட்டி,  முதலீட்டு காலம் : 36 மாதங்கள், திரும்ப கிடைக்கும் தொகை ரூ. 1,331.52


சீரிஸ் IX: நிலையான வட்டி, வட்டி வழங்கும் காலம்: கூட்டு வட்டி,  முதலீட்டு காலம் : 60 மாதங்கள், திரும்ப கிடைக்கும் தொகை ரூ. 1,640.82.



சீரிஸ் X : நிலையான வட்டி, வட்டி வழங்கும் காலம்: கூட்டு வட்டி,  முதலீட்டு காலம் : 2557 நாள்கள், திரும்ப கிடைக்கும் தொகை ரூ.2,000.00.


வகை  IV  முதலீட்டாளர்கள் [Category V]),  சிறு தனிப்பட்ட முதலீட்டாளர்கள் (Retail Individual Investors))  ஆவார்கள்.இவர்கள், இந்தியக் குடிமக்கள் மற்றும் இந்துக் கூட்டுக் குடும்பத்தினர் (Hindu Undivided Families) ஆவர். இவர்கள்  அதிகபட்சம் 10,00,000 ரூபாய்க்கு விண்ணப்பிக்கலாம்
இது இந்த பகுதி  1- என்சிடி வெளியீட்டின் அனைத்து  விருப்பத் தேர்வுகளுக்கும் சேர்ந்த மொத்த தொகையாகும்.  இந்துக் கூட்டுக் குடும்பத்தில் கர்த்தா (Karta) என்கிற குடும்பத்தின் தலைவர் மூலமே விண்ணப்பிக்க வேண்டும் 

பொது மக்களுக்கு வெளியிடப்படும் இந்த என்சிடிகள் மூலம் திரட்டப்படும் நிதியில் குறைந்தபடம் 75% கடன் வழங்குவது, ஏற்கெனவே இந்த நிறுவனத்துக்கு உள்ள கடனுக்கான வட்டி மற்றும் அசலை அடைப்பது போன்றவற்றுக்கு பயன்படுத்திக் கொள்ளப்படும். அதிகபட்சம் 25% பொதுப் பயன்பாட்டுக்கு பயன்படுத்திக் கொள்ளப்படும்.

இந்த என்சிடிகள், 2018 அக்டோபர் 16 தேதியிட்ட, விவரக் குறிப்புகள் (Shelf Prospectus) மற்றும் பகுதி 1 விவரக் குறிப்புகள் மூலம் வெளியிட்டப்படுகின்றன.  இந்த என்சிடிகள் பிஎஸ்இ ((BSE)) பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும்.

இந்த என்சிடிகள் வெளியீட்டின் முன்னணி மேலாளர்களாக (Lead Managers)  ஏ.கே. கேப்பிட்டல் சர்வீசஸ் லிமிடெட் மற்றும் எடில்வைஸ் ஃபைனான்ஸியல் சர்வீசஸ் லிமிடெட் உள்ளன.

மணப்புரம் ஃபைனான்ஸ் லிமிடெட் பற்றி..

மணப்புரம் ஃபைனான்ஸ் லிமிடெட் (Manappuram Finance Limited (Manappuram), இந்தியாவில் தங்க அடமானக் கடன் வழங்கும் வணிகத்தில் (gold finance business) ஈடுபட்டுள்ள முக்கியமான வங்கிச் சாரா நிதிச் சேவை நிறுவனங்களில் (NBFC) ஒன்றாகும். (ஆதாரம்: க்ரைசில் அறிக்கை). இந்த நிறுவனம், சிறு வாடிக்கையாளளுக்கு தங்க ஆபரண அடமானத்தின் பெயரில் குறுகிய கால தனிநபர் மற்றும் வணிக தங்க கடன்களை (“தங்க கடன்கள்”)முதன்மையாக அளித்து வருகிறது. அதுவும் அவர்களின் அவசரத் தேவைக்கு விரைந்து அளித்து வருகிறது. அவர்கள் மற்ற வழிகளில் கடன் தேவையை நிறைவேற்றிக் கொள்ள இயலாத நிலையில் இந்தக் கடன் மிகவும் உதவியாக இருக்கிறது.

இதன் தங்கக் கடன் போர்ஃட்போலியோவுக்கு 2018 மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி 2.25 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். மொத்தம் ரூ. 117,349.82 மில்லியன் தங்க கடன் வழங்கி உள்ளது. இது இந்த நிறுவனம் வழங்கி உள்ள மொத்த கடனில் 76.21%  ஆகும். 2018 ஜூன் 30 நிலவரப்படி, மணப்புரம் 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 3,331 கிளைகள் மூலம் தங்க கடன்களை வழங்கி வருகிறது. இதில் 2,236 கிளைகள் தென் மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ளன.

மணப்புரம் நிறுவனத்தின் தலைமையகம் (headquarter) தென் இந்நிய மாநிலமான கேரளாவில் உள்ளது. ஆரம்பத்தில் கேரளாவின் வலப்பாடு, திரூச்சூர் பகுதிகளில் சிறிய அளவில் தங்க அடமானக் கடன் வழங்க ஆரம்பித்தது. தங்க கடன் வழங்கும் வணிகத்தில் இந்த நிறுவனம் 1999 முதல் ஈடுபட்டு வருகிறது. மணப்புரம் சொத்து அடமானக் கடன், பணப் பரிமாற்றம், தங்க நாணயங்கள் விற்பனை போன்றவற்றிலும் ஈடுபட்டுள்ளது.

தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் மணப்புரம் முன்னணியில் இருக்கிறது. இதற்காக, அது அதன் பணியாளர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறது.

மணப்புரம், பல்வேறு கடன் திட்டங்களை அளித்து வருகிறது. Swarna Shakthi (GL-SX), Express Gold Loan Plus (GL-XG+), Super Loan Plus (GL-SG+), Samadhan Plus (GL-SA+), Privilege Loan (GL-PL), Business Loan (GL-BL), GL DS, GL SY,GL B1-N, GL B1+N, GL B2+, GL-H3 and GL B4+ போன்றவை அதன் கடன் திட்டங்களாகும்.

இந்த நிறுவனம், கிராமங்கள், சிறு நகரங்கள் மற்றும் பெரிய நகரங்களாக மும்பை, டெல்லி, சென்னை மற்றும் பெங்களூருவை சேர்ந்த தனிநபர்களாக உள்ளனர். குறிப்பாக, இவர்கள் அவசரத் தேவை, விவசாய தேவை, சிறிய வணிகத் தேவை மற்றும் நுகர்வு தேவைக்கு தங்க அடமானக் கடன் அளித்து வருகிறது.

*  60 மாதங்கள் – ஆண்டு தேர்வு சீரிஸ். 

Disclaimer: Manappuram Finance Limited, subject to market conditions and other considerations, is proposing a public issue of secured redeemable non-convertible debentures (“NCDs”) and has filed the Shelf Prospectus dated October 16, 2018 and Tranche 1 Prospectus dated October 16, 2018 with the Registrar of Companies, Kerala and Lakshadweep at Ernakulam, the BSE Limited and SEBI. The Shelf Prospectus dated October 16, 2018 and Tranche 1 Prospectus dated October 16, 2018 are available on the websites of the Company at www.manappuram.com, on the website of the BSE Limited at www.bseindia.com and the respective websites of the lead managers at www.akgroup.co.in and www.edelweissfin.com. Investors proposing to participate in the Issue should invest only on the basis of information contained in the Shelf Prospectus dated October 16, 2018 and Tranche 1 Prospectus dated October 16, 2018. Investors should note that investment in NCDs involves a high degree of risk and for details relating to the same, please refer to the Shelf Prospectus dated October 16, 2018, including the section ‘Risk Factors’ beginning on page 13 of the Shelf Prospectus dated October 16, 2018.

For more information, please contact:
Purvi Shah, Adfactors PR
purvi.shah@adfactorspr.com
9833431331 / 9820531932

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற . - பஜாஜ் ஃபின்சர்வ் ELSS வரி சேமிப்பு ஃபண்ட் .!

திரு .  எஸ் .  கார்த்திகேயன் ,  நிறுவனர் ,  https://winworthwealth.com/ மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு   ஏற்ற . ...