யூடிஐ வேல்யூ ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் - சந்தை குறைத்து மதிப்பிட்ட மதிப்பை கண்டுபிடித்தல்..!
நிதி நிபுணர்கள், பரந்துபட்ட ஃபண்ட்களில் (diversified funds) முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய வேண்டும் என அடிக்கடி பரிந்துரை செய்கிறார்கள். முதலீட்டாளர்களை லார்ஜ் கேப் ஃபண்ட்கள் கவர்ந்திழுக்க ஆரம்பித்திருக்கிறது. காரணம், பங்குச் சந்தையின் மதிப்பில் (market capitalization) அவற்றின் மதிப்பு 80-85 சதவிகிதம் இருக்கிறது. லார்ஜ் கேப் பங்குகள், பரந்த பங்குச் சந்தை / குறியீடுகளை குறிப்பதாக இருக்கிறது. இந்த லார்ஜ் கேப் ஃபண்ட்களை முதலீட்டாளர்கள் அங்கீகரிக்க வேண்டும். இந்த லார்ஜ் கேப் பங்குகளில் பல்வேறு முதலீட்டு அணுகு முறைகள் (வளர்ச்சி வெர்சஸ் மதிப்பு) அல்லது ஒட்டு மொத்த சந்தையில் சில சுழற்சிகளில் வாய்ப்புகள் உள்ளன. இவை நிதி மேலாளர்களுக்கு பங்குச் சந்தை மதிப்பின் அடிப்படையில் பிரத்யேக முதலீட்டு வாய்ப்புகளை அளிக்கிறது. இந்த முதலீட்டு பாணி, முதலீட்டுக் கலவையின் இடர்பாட்டை (Risk) குறைக்கிறது.
இது போன்ற ஃபண்ட்களில் ஒன்றுதான், யூடிஐ வேல்யூ ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் (UTI Value Opportunities Fund). இந்த வகை ஃபண்ட்கள், பல்வேறு பங்குச் சந்தை மதிப்பை கொண்டுள்ள, குறிப்பிட நிறுவனப் பங்குகளில் உள்ளார்ந்த மதிப்பின் (intrinsic value) அடிப்படையில் முதலீட்டு வாய்ப்புகளை கண்டறிகின்றன. இதன் அர்த்தம், ''மதிப்பு'' பாணி (“Value” style) முதலீடாக இருக்கிறது. இதனை மல்டி கேப் ஃபண்ட் (Multi-cap Fund) என நாம் அழைக்கிறோம். இங்கே, ''மதிப்பு'' என்பது ஒரு நிறுவனப் பங்கை அதன் உள்ளார்ந்த மதிப்பை விட குறைந்த விலைக்கு வாங்குவதாகும். உள்ளார்ந்த மதிப்பு என்பதை, ஒரு நிறுவனம் அதன் முதலீட்டாளர்களுக்காக பல்வேறு காலக் கட்டத்தில் உருவாக்கி உள்ள பண வரத்தின் (cash flows) தற்போதைய மதிப்பு என எளிமையாக குறிப்பிடலாம்.
குறைத்து மதிப்பிடப்பட வணிகங்களை, இரு முறைகளில் கண்டுபிடிக்க முடியும். முதல் முறை என்பது நிறுவனத்தின் போட்டித் தன்மையின் நிலைத்தன்மையை சந்தை அங்கீகரிக்காமல் இருக்கும் நிலையாகும். இரண்டாவது முறை என்பது, நிறுவனம் நீண்ட காலத்தில் வளர்ச்சிப் பாதையில் செல்வதாக இருக்கும். வணிக சுழற்சி காரணங்களால் இந்த நிறுவனங்கள் சவால்களை சந்தித்து வரும். கடந்த காலங்களில் இந்தச் சவால்களை நிறுவனங்கள் சமாளித்து வந்தவையாக இருக்கும். அதேநேரத்தில், நிறுவனத்தின் முக்கிய வணிகம் ஆரோக்கியமானதாக இருப்பதோடு, சிறப்பான எதிர்காலம் (பண வரத்து, வருமான விகிதங்கள்) இருக்கும். இந்த நிலையில், குறைத்து மதிப்பிடப்பட்டிருக்கும் இந்தப் பங்குகளில் முதலீடு செய்வதற்கு சரியான நேரமாக இருக்கும். இந்த முறைகளிலும் மலிவான விலையில் பங்குகளை வாங்க வாய்ப்பு இருக்கிறது.
யூடிஐ வேல்யூ ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட், அதிக உள்ளார்ந்த மதிப்பு மற்றும் நீண்ட காலத்தில் அதிக பண வரத்தை உருவாக்க கூடிய நிறுவனப் பங்குகளில் கவனம் செலுத்தி வருகிறது.
யூடிஐ வேல்யூ ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட், கடந்த 2005 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 2018 ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி, 5,12,000 யூனிட்களுடன் 4,610 கோடி ரூபாய் இந்த ஃபண்டின் மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஃபண்ட்-க்கான பங்குகள் தேர்ந்தெடுக்க நிறுவனத்தின் சந்தை மதிப்பு நெகிழ்வு தன்மையுடன் (flexibility) கையாளப்படுகிறது. முதலீட்டுக் கலவையில், லார்ஜ் கேப் பங்குகள் அதிகமாக இருந்தாலும், மாறுபடும் மதிப்பீட்டின் அடிப்படையில் மிட் கேப் பங்குகளும் இடம் பெறுகின்றன. 2018 ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி, இந்த ஃபண்டில் சுமார் 71 சதவிகித தொகை லார்ஜ் கேப் பங்குகளிலும் மீதி மிட் & ஸ்மால் கேப் பங்குகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.
இந்தத் திட்டத்தின் முதலீட்டுக் கலவையில், ஹெச்.டி.எஃப்.சி பேங்க், இண்டஸ் இந்த் பேங்க், இன்ஃபோசிஸ், மாருதி சுசுகி இந்தியா லிமிடெட், ஐசிஐசிஐ பேங்க் லிமிடெட், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஃபைனான்ஷியல் சர்வீசஸ் லிமிடெட், டிசிஎஸ், கெயில் இந்தியா, ஐடிசி லிமிடெட் மற்றும் டெக் மஹிந்த்ரா போன்ற நிறுவனப் பங்குகள் 51%க்கும் அதிகமாக இடம் பெற்றுள்ளன.
யூடிஐ வேல்யூ ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட், தங்களின் ஈக்விட்டி போர்ட்போலியோவை வலுவானதாக உருவாக்க விரும்பும் மற்றும் நீண்ட காலத்தில் மூலதன வளர்ச்சியை எதிர்பார்க்கும் பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாக உள்ளது. இதில், நடுத்தரக் காலம் முதல் நீண்ட காலம் வரையில் நியாயமனா வருமானம் எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கும் ஏற்றதாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக