ஷார்ட் டேர்ம் இன்கம் ஃபண்ட்களுக்கு மாறுவதற்கு சிறந்த நேரம்..!
ரெப்போ விகிதத்தை ஆர்பிஐ அண்மையில் அதிகரித்த பிறகு, முதலீட்டாளர்கள் குறுகிய கால இன்கம் ஃபண்ட்களை (short term income funds) கவனிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த ஃபண்ட்கள் குறுகிய காலத்தில் அதிக வருமானத்தை தருவதாக இருக்கும்.
இது போன்ற ஒரு ஃபண்ட்தான் யூடிஐ ஷார்ட் டேர்ம் இன்கம் ஃபண்ட் (UTI Short Term Income Fund). இந்த ஃபண்ட் குறைவான இடர்பாடு மற்றும் எளிதில் பணமாக்க கூடிய, (low risk and high liquidity) நியாயமான வருமானம் ஈட்டும் நோக்கம் கொண்டது. இந்த ஃபண்டில் திரட்டப்படும் நிதி, நிதிச் சந்தை ஆவணங்கள் (money market securities) மற்றும் உயர்தரக்குறியீடு பெற்ற கடன் பத்திரங்களை (high quality of debt) கொண்ட முதலீட்டுக் கலவையாக (portfolio) இருக்கும். இந்தக் கடன் பத்திரங்களின் சராசரி முதிர்வு காலம் என்பது 4 ஆண்டுகளாக இருக்கும். இந்த ஃபண்ட், அதிக கடன் தகுதி (high credit quality) மற்றும் பரவலாக்கப்பட்ட முதலீட்டுக் கலவையை (portfolio diversification) கொண்டிருக்கும்.
யூடிஐ ஷார்ட் டேர்ம் இன்கம் ஃபண்ட்-ன் நிதி மேலாளர் சுதிர் அகர்வால் (Sudhir Agrawal, fund manager of UTI Short Term Income Fund) கூறும் போது, ''அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டில் நுகர்வோர் பணவீக்க விகிதம் (CPI inflation), 5 சதவிகித்தை நோக்கி நகரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதனால், ஆர்பிஐ வட்டியை அதிகரிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படும். அதன் விளைவாக பண வீக்க விகிதம் ஆர்பிஐ-ன் இலக்கு அளவுக்கு குறைக்கப்படும். மேலும், அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துவருவது, ஏற்றுமதி செலவை அதிகரிக்கும். இதனை அடுத்து, வருமானம் மாதங்களில் நுகர்வோர் பணவீக்க விகிதம் அதிகரிக்கும் இடர்பாடு இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், குறைவான ஏற்ற இறக்கத்தில் அதிக வருமானத்தை அளிக்க கூடிய ஷார்ட் டேர்ம் இன்கம் ஃபண்ட்களுக்கு முதலீட்டாளர்களின் கவனம் மாறத் தொடங்கும். நாங்கள் எங்களின் ஷார்ட் டேர்ம் இன்கம் ஃபண்டில் 1 முதல் 3 ஆண்டுகள் வரை முதலீடு செய்ய முதலீட்டாளர்களுக்கு பரிந்துரை செய்கிறோம் ”
யூடிஐ ஷார்ட் டேர்ம் இன்கம் ஃபண்ட், அதன் பெஞ்ச்மார்க் குறியீடான க்ரைசில் ஷார்ட் டேர்ம் பாண்ட் ஃபண்ட் இண்டெக்ஸ் (CRISIL Short-Term Bond Fund Index) - ஐ விட தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ஃபண்ட் ஆரம்பம் முதல் (2018 ஆகஸ்ட் 31 நிலவரப்படி) 8.64 சதவிகித வருமானம் தந்துள்ளது. இதே காலகட்டத்தில் பெஞ்ச்மார்க் வருமானம் 7.63 சதவிகிதமாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக