ரூ. 7,000 செலவில் அருமையான மாடித்தோட்டம்!
தோட்டம் அமைக்க தரையில் இடம் இல்லாத, ஆனால், சொந்த வீட்டு மாடியில் இடம் உள்ளவர்களிடம் மாடித் தோட்டம் அமைக்கும் எண்ணத்தை இயற்கை ஆர்வலர்கள் வளர்த்து வருகிறார்கள். சிலர் மாடித் தோட்டம் அமைத்துக் கொடுப்பதைத் தொழிலாகவும் செய்து வருகிறார்கள்.
அப்படி தொழிலாக செய்து வருபவர்கள், திரு. பிரேம்ராஜ் மற்றும் திரு. ஆனந்தன் என்ற இரு நண்பர்கள். மாடித் தோட்டம் அமைப்பது பற்றி அவர்கள் கூறும்போது,
”தமிழக மக்கள் மாடித்தோட்டம் அமைக்க விரும்புகிறார்கள். ஆனால், பெரும்பாலானோர் அழகுச் செடிகளை வைப்பதுதான் தோட்டம் என்று நினைக்கிறார்கள். அவர்களிடம் அழகு செடிகளை விட காய்கறிச் செடிகளை வளர்க்கலாம் என்று ஆலோசனை கூறுகிறோம். அவர்களிடம் பொறுமையாக இயற்கை மாடித் தோட்டத்தை பற்றி விளக்கிச் சொன்னால் ஏற்றுக் கொள்கிறார்கள். அவர்களிடம் தேவையான தண்ணீர் வசதி இருக்க வேண்டும்."
மாடித் தோட்டம் அமைக்க குறைந்தது, ஏழாயிரம் ரூபாய் வரை செலவாகும். இதில் தேவையான விதைகள், கோகோஃபீட், இயற்கை உரங்கள், தோட்டக் கருவிகள், நிழற்கூட அமைப்பு, அமைத்து தரும் பொறுப்புகள், தொடர்ந்து தேவைப்படும் உதவிகள் இதில் அடங்கும்.
– செழியன். ஜா
முழுமையாக படிக்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக