மொத்தப் பக்கக்காட்சிகள்

21 லட்சம் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் பேங்க் ஆஃப் பரோடா கடன்


சிறந்த சிபில் எம்எஸ்எம்இ தரக்குறியீடு (சிஎம்ஆர்)  பெற்ற எம்எஸ்எம்இ நிறுவனங்கள், குறைந்த வட்டி விகிதத்தில் பேங்க் ஆஃப் பரோடாவிலிருந்து கடன் பெறலாம்.

21 லட்சம் எம்எஸ்எம்இ நிறுவனங்கள், சிறந்த சிபில் எம்எஸ்எம்இ தரக்குறியீடு உடன் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெற தகுதி பெறுகின்றன. 

சென்னை, 5 செப்டம்பர் 2018 – முன்னோடி நடவடிக்கையாக இடர்பாடு அடிப்படையிலான. எம்எஸ்எம்இ கடன்களை (MSME loans), சிறந்த சிபில் எம்எஸ்எம்இ தரக்குறியீடு (சிஎம்ஆர்) { CIBIL MSME Rank (CMR)}  பெற்ற எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் அளிக்க உள்ளதாக பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) அறிவித்துள்ளது.  

சிஎம்ஆர் முறையில் எந்திர கற்றல் வழிமுறைகளை பயன்படுத்தி (machine learning algorithms), அடுத்த 12 மாதங்களில் ஒரு எம்எஸ்எம்இ நிறுவனத்தில் நிகர வாராக் கடன் (NPA) உருவாவதற்கான சாத்தியக்கூறு கணிக்கப்படுகிறது. சிஎம்ஆர், எம்எஸ்எம்இ நிறுவனத்துக்கு அதன் கடன் வரலாற்றின் தரவை (credit history data) அடிப்படையாகக் கொண்டு 1 முதல் 10 வரை ஒரு தரக்குறியீட்டை வழங்குகிறது. சிஎம்ஆர்-1 என்பது  குறைவான இடர்பாடு கொண்ட எம்எஸ்எம்இ நிறுவனங்க்களுக்கு அளிக்கப்படும் மிகச் சிறந்த தரக்குறியீடு ஆகும்
.குறைவான சிஎம்ஆர் என்பது எம்எஸ்எம்இ நிறுவனத்தின் குறைவான நிகர வாராக் கடன் இடபார்ட்டை குறிக்கும். 

சிஎம்ஆர் தரக்குறியீடு அடிப்படையில் எம்எஸ்எம்இ. கடன்களை நாட்டில் சிறப்பாக செயல்படும் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் பேங்க் ஆஃப் பரோடா இப்போது வழங்க உள்ளது. 
சிபில் எம்எஸ்எம்இ தரக்குறியீடு – ஒரு பார்வை 
சிஎம்ஆர்,  எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு கடன் தரக்குறியீடு ஆகும். இது, அடுத்த 12 மாதங்களில் ஒரு எம்எஸ்எம்இ நிறுவனத்தில் நிகர வாராக் கடன் உருவாவதற்கான சாத்தியக்கூறுகளை கணிக்கிறது
 சிஎம்ஆர், ரூ. 10 லட்சம் மற்றும் ரூ. 10 கோடிக்கு இடையே மொத்த வர்த்தகக் கடன் வாங்கும் நிறுவனங்களுக்கு பொருந்தும் 
சிஎம்ஆர், 7 ஆண்டுகளுக்கும் மேலாக கடன் வரலாறு சுழற்சியின் அடிப்படையில் எந்திர கற்றல் வழிமுறைகளை பயன்படுத்தி பயிற்சி அளிக்கப்பட்டது ஆகும்.
சிஎம்ஆர்,  எம்எஸ்எம்இ நிறுவனங்களின் 24 மாத கடன் வரலாறு அடிப்படையில் கணக்கிடப்படும். 
சிஎம்ஆர்  என்பது சிஎம்ஆர்  1 முதல் சிஎம்ஆர் 10 என பிரிக்கப்பட்டுள்ளது. சிஎம்ஆர்  1 என்பது குறைந்த கடன் இடர்பாடு மற்றும் குறைவான வாராக் கடன் உருவாக்கத்தை குறிக்கும். சிஎம்ஆர்  10 என்பது அதிக கடன் இடர்பாடு மற்றும் அதிக வாராக் கடன் உருவாக்கத்தை குறிக்கும்
தற்போது சுமார் 27 லட்சம் எம்எஸ்எம்இ நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் கடன் நிறுவனங்களின் சிஎம்ஆர் பலன்களை பெற தரக்குறியீடு பெற்றுள்ளன. 
எம்எஸ்எம்இ கடன் வழங்குவதற்கான முடிவுகள் 
இடர்பாடு மேலாண்மை நடைமுறைகளை தரப்படுத்துதல் 
திறமையான வணிக மற்றும் இடர்பாடு உத்திகளை நடைமுறைப்படுத்துதல்.
எம்எஸ்எம்இ கடன் வட்டியை இடர்பாடு அடிப்படையில் அளித்தல் 

இந்த நடவடிக்கை பற்றி பேங்க் ஆஃப் பரோடாவின் செயல் இயக்குநர் திருமதி. பாபியா செங்குப்தா (Smt. Papia Sengupta, Executive Director, Bank of Baroda) கூறும் போது, “பேங்க் ஆஃப் பரோடா, வங்கியின் வணிக வளர்ச்சி மற்றும் கடன் அளிப்பை  ஊக்குவிக்க புதுமை மற்றும் தொழில்நுட்பத்தை முன்னோடியாக பயன்படுத்தி வருகிறது. சிபில் புள்ளிகள் (CIBIL Score) அடிப்படையில் இடர்பாடு அறிந்து வீட்டுக் கடன் வழங்கும் இந்தியாவின் முதல் வங்கிகளிடையே நாங்களும் இருந்தோம். இப்போது நாங்கள் சிபில் எம்எஸ்எம்இ தரக்குறியீடு அடிப்படையில் எம்எஸ்எம்இ கடன்களை இடர்பாடு சார்ந்து வழங்குவதில் முன்னோடியாக உள்ளோம்.. இந்தக் கொள்கையின் அடிப்படையில், குறைவான சிஎம்ஆர் தரக்குறியீடு கொண்ட எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு ஓராண்டு எம்சிஎல்ஆர் +0.05% (MCLR +0.05%) என்பது போல் பேங்க் ஆஃப் பரோடாவின் கடனுக்கான வட்டி விகிதம் ஆரம்பிக்கும். சிஎம்ஆர் அடிப்படையிலான வட்டி, இடர்பாடுகளை சிறப்பாக நிர்வகிக்க எங்களுக்கு உதவும். மேலும், தகுதியான எம்எஸ்எம்இ  நிறுவனங்களுக்கு அதிகமாக கடன் வழங்கும் வாய்ப்புகள் உருவாகும்.” 
சமீபத்திய டிரான்ஸ்யூனியன்  சிபில் – சிட்பி எம்எஸ்எம்இ பல்ஸ் (TransUnion CIBIL- SIDBI MSME Pulse) அறிக்கையில், 2018 மார்ச் நிலவரப்படி இந்தியாவில் வர்த்தக நடவடிக்கைகளுக்கு அளிக்கப்பட்ட மொத்தக் கடன்  ரூ. 54.22 லட்சம் கோடியாக உள்ளது. இதில், நுண் மற்றும் சிறு, நடுந்தர (Micro and SME) நிறுவனங்களின் பங்களிப்பு ரூ. 12.6  லட்சம் கோடியாக உள்ளது. இது மொத்த வர்த்தக கடன் பாக்கியில் 23 சதவிகித பங்களிப்பாக உள்ளது. 2018 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிந்த ஓராண்டு காலத்தில் எம்எஸ்எம்இ  பிரிவு 16%க்கும் அதிகமான சிறப்பான வளர்ச்சி கண்டுள்ளது. டிரான்ஸ்யூனியன்  சிபில் பகுப்பாய்வின் படி, 21 லட்சம் எம்எஸ்எம்இ நிறுவனங்கள் சிஎம்ஆர் 6 அல்லது அதனை விட சிறப்பாக இந்தக் குறைந்த வட்டிக் கடன் கொள்கை மூலம் பயன் அடைவதாக உள்ளது. கீழே உள்ள வரைபடம் 1-ல் சிபில் எம்எஸ்எம்இ தரக்குறியீடு அடிப்படையில் இந்திய எம்எஸ்எம்இ நிறுவனங்கள் பிரிக்கப்பட்டிருப்பதை காணலாம். 21 லட்சம் எம்எஸ்எம்இ நிறுவனங்கள் சிஎம்ஆர் 1 முதல் 6 தரக்குறியீடுகளுடன் உள்ளன. இது நாட்டில் உள்ள மொத்த எம்எஸ்எம்இ நிறுவனங்களில் 80 சதவிகிதத்துக்கும் அதிகமாகும். 


21 லட்சம் எம்எஸ்எம்இகளுக்கு பிஓபி-ன் குறைந்த வட்டி கடன் தகுதி


எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் போது, நிறுவனங்களின் தரத்தை கண்டறிந்து பயன்படுத்துவது வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களின் மிக முக்கிய விஷயமாக உள்ளது. இந்த நடவடிக்கை பற்றி டிரான்ஸ்யூனியன் சிபில் அமைப்பின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு. சதீஷ் பிள்ளை (Mr. Satish Pillai, MD & CEO, TransUnion CIBIL)  கூறும் போது, “ இடர்பாடு அடிப்படையில் எம்எஸ்எம்இ  கடன்களுக்கான வட்டியை நிர்ணயித்து வழங்குவது பேங்க் ஆஃப் பரோடாவின் மிகவும் முற்போக்கான நடவடிக்கையாகும். சிஎம்ஆர் அடிப்படையிலான வட்டி நிர்ணயம், இடர்பாடு கட்டுப்பாட்டு மற்றும் சிறந்த சொத்து தரத்துக்கு மட்டுமே உதவும் என்று நாங்கள் நம்பவில்லை. கூடவே, தகுதி வாய்ந்த பல எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு கடன் வழங்குவது மூலம் வணிக வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்க முடியும் என நம்புகிறோம். சிஎம்ஆர், தவறான தகவல்களை தவிர்க்க உதவுகிறது. மேலும்,  இது எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு கடன் அளிக்க விரைந்து முடிவு எடுக்கவும் விரைவாக கடன் வழங்கவும் உதவுகிறது.”.


டிரான்ஸ்யூனியன்  சிபில் பற்றி

இந்தியாவின் முன்னணி கடன் தகவல் நிறுவனமாக டிரான்ஸ்யூனியன் சிபில் (TransUnion CIBIL) உள்ளது. இது உலக அளவிலான கடன் தகவல்களை மிகப் பெரிய களஞ்சியமாகக் கொண்டுள்ளது. இந்த அமைப்பில் , அனைத்து முன்னணி வங்கிகள், நிதி நிறுவனங்கள், வங்கிச் சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் வீட்டு நிதி நிறுவனங்கள் உட்பட 3000- க்கும் அதிகமான உறுப்பினர்கள்  இணைந்துள்ளனர்.  தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் 100 கோடிக்கும் (1000 மில்லியன்)  மேற்பட்ட கடன் பதிவுகளை பராமரித்து வருகிறது. 

இதன் நோக்கம் என்பது  வணிகம் விரைவாகவும், குறைந்தக் கட்டணத்தில் கடன் தகவல்களை அளித்து தகவல் தீர்வுகளை கொடுப்பதாக இருக்கிறது. இந்த அமைப்பு அதன் உறுப்பினர்களுக்கு கடன் சார்ந்த இடர்பாட்டை நிர்வகிக்க உதவுவதன் மூலம், செலவுகளைக் குறைக்கவும், லாபத்தை  கூட்டவும் சரியான வணிக உத்திகளை திரட்ட உதவுகிறது.  நுகர்வோர் மற்றும் வணிக கடனாளர்களுக்கு விரிவான, நம்பகமான தகவல்களை அளித்து, தனிநபர்களுக்கும் வணிக நிறுவனங்களும் கடன்  வழங்குவதற்கான முடிவை சுலபமாக எடுக்க உதவுகிறது. தகவல்களின் சக்தி (Power of Information) மூலம்  டிரான்ஸ்யூனியன் சிபில், அதன் உறுப்பினர்களுக்கு கடன் குறித்த தகவல்களை அளிப்பதோடு, அனைவருக்கும் நிதிச் சேவை மூலம் வலிமையான  பொருளாதாரத்தை உருவாக்க உதவுகிறது.


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இப்போது பங்குச் சார்ந்த திட்டங்களில் எப்படி முதலீடு செய்தால் லாபம்? ச.ஶ்ரீதரன், நிதி ஆலோசகர்

இப்போது பங்குச் சார்ந்த திட்டங்களில் எப்படி முதலீடு செய்தால் லாபம்?  By திரு . ச . ஶ்ரீதரன் , நிதி ஆலோசகர் ,  https://www.walletwealth....