மொத்தப் பக்கக்காட்சிகள்

டாடா கேப்பிட்டல் ஃபைனான்ஷியல் சர்வீசஸ், என்சிடிகள் வெளியீடு 2018 செப்டம்பர் 10-ல் ஆரம்பம்


டாடா கேப்பிட்டல் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் லிமிடெட், என்சிடிகள் வெளியீடு 2018 செப்டம்பர் 10-ல் ஆரம்பம்

வட்டி விகிதம் ஆண்டுக்கு 9.10% வரை *

·         தரக்குறியீடுகள் - கிரிசில் ஏஏஏ/நிலையானது கிரிசில் (CRISIL) மற்றும் கேர் ஏஏஏ/நிலையானது கேர் ரேட்டிங்ஸ் (CARE Ratings) - இவை மிக உயர்ந்த பாதுகாப்பு அம்சத்தை குறிக்கிறது, நிதிக் கடமைகளை சரியான நேரத்தில் அளிப்பதாக இருக்கிறது.  

·         3 முதல் 10 ஆண்டுகளுக்கான அனைத்து விருப்பத் தேர்வுகளுக்கும் குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ. 10,000

·         முதலில் வருபவர்களுக்கு முதலில் சேவை என்கிற முறையில் என்சிடிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

டாடா கேப்பிட்டல் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் லிமிடெட் {Tata Capital Financial Services Limited}, டெபாசிட் திரட்டாத, வங்கிச் சாரா நிதிச் சேவை அளிக்கும் முக்கிய நிதி நிறுவனம். இது பல்வேறு பிரிவினரின் கடன் தேவைகளுக்கு ஏற்ப பொருத்தமான நிதி உதவி திட்டங்களை அளித்து வருகிறது. 

இந்த நிறுவனம், ரூ. 1,000 முக மதிப்பு (face value) கொண்ட, பாதுகாப்பான, பங்குகளாக மாறாத, திரும்பப் பெறக்கூடிய கடன் பத்திரங்களை {Secured, Redeemable, Non-Convertible Debentures (“Secured NCDs”)} வெளியிடுகிறது. இந்த என்சிடிகள் வெளியீடு, 2018 செப்டம்பர் 10-ல் ஆரம்பிக்கிறது.  ரூ. 1,000 முக மதிப்பு கொண்ட பாதுகாப்பான என்சிடிகள் - ரூ.6,00,000  லட்சம் மற்றும் ரூ. 1,000 முக மதிப்பு கொண்ட பாதுகாப்பற்ற பங்குகளாக மாறாத கடன் பத்திரங்கள் - ரூ. 1,50,000  லட்சம் ஆக மொத்தம் ரூ. 7,50,000 லட்சம் (பகுதி I வெளியீடு).  அடிப்படை வெளியீடு பகுதி 1 வெளியீடு ரூ. 200,000 லட்சம் உடன், என்சிடிகள் வெளியீட்டுக்கு அதிக ஆதரவு இருக்கும்பட்சத்தில் மேலும் ரூ. 750,000  லட்சம் திரட்டப்படும்.(Shelf Limit). 

இந்த என்சிடிகள் வெளியீடு, செப்டம்பர் 21, 2018-ல் நிறைவு பெறுகிறது. வெளியீட்டை முன்னதாக நிறைவு செய்வது அல்லது நீடிப்பது குறித்து, நிறுவனத்தின்  இயக்குநர் குழு அல்லது இயக்குநர் குழுவின் செயற்குழு முடிவு செய்யும்

கிரிசில் மற்றும் கேர் தரக்குறியீடுகள், அதிகபட்சம் பாதுகாப்பை குறிக்கிறது.

வெளியிடப்பட உள்ள பகுதி I என்சிடிகள், கிரிசில் தரக்குறியீடு நிறுவனத்தின் CRISIL AAA ; நிலையானது ரூ.750,000 லட்சம் மதிப்புக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விவரம் அந்த நிறுவனம்,  ஆகஸ்ட்  15, 2018-ல் வெளியிட்டுள்ள தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. இது ஆகஸ்ட்  27, 2018-ல் மறுசரிபார்ப்பு செய்யப்பட்டுள்ளது.

மற்றும் கேர் தரக்குறியீடு நிறுவனத்தின் CARE AAA ; நிலையானது ரூ.750,000 லட்சம் மதிப்புக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விவரம் அந்த நிறுவனம்,  ஆகஸ்ட்  14, 2018-ல் வெளியிட்டுள்ள தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. இது ஆகஸ்ட்  27, 2018-ல் மறுசரிபார்ப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த என்சிடி வெளியீட்டுக்கு கிரிசில் அளித்துள்ள தரக்குறியீடு, மிக உயர்ந்த பாதுகாப்பு அம்சத்தை குறிப்பதோடு, நிதிக் கடமைகளை சரியான நேரத்தில் அளிப்பதாகவும் இருக்கிறது. .

டாடா கேப்பிட்டல் பைனான்ஷியல் சர்வீசஸ் லிமிடெட்-ன் நிர்வாகம் சாராத செயல் இயக்குநர் திரு. ராஜீவ் சபர்வால் (Mr. Rajiv Sabharwal, Non – Executive Director, Tata Capital Financial Services Limited), கூறும் போது,டாடா கேப்பிட்டல் பைனான்ஷியல் சர்வீசஸ், சில்லறை, சிறு, நடுத்தர நிறுவனங்கள், மற்றும் வர்த்தக நிதி உதவி (Retails, SME & Commercial Finance) ஆகிய பிரிவுகளில் பரந்துபட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் வங்கிச் சாரா நிதிச் சேவைகளில் (NBFC) ஏஏஏ தரக்குறியீட்டை பெற்றிருப்பதுடன், பரந்து விரிந்த விநியோக நெட் ஒர்க் மற்றும் வலுவான தொழில்நுட்ப தளத்துடன் இந்தப் பிரிவின் வளர்ச்சி வாய்ப்புகளை சாதகமாக பயன்படுத்தி வருகிறது. எதிர்காலத்தில் எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய  டிஜிட்டல் தளத்தை அதிகரிக்க உள்ளோம்

அனைத்து விருப்பத் தேர்வுகளிலும் (Options) குறைந்தபட்ச முதலீட்டு தொகை ரூ. 10,000 (பத்தாயிரம் ரூபாய் மட்டுமே). இதன் பிறகான கூடுதல் முதலீடு அனைத்து விருப்பத் தேர்வுகளிலும் ரூ. 1-ன் மடங்காக உள்ளது. குறைந்தபட்ச முதலீட்டுக்கு பிறகு ஒவ்வொரு முதலீட்டின் முகமதிப்பும் ரூ. 1,000 ஆக உள்ளது.

என்சிடிகள் ஒதுக்கீடு, முதலில் வருபவர்களுக்கு முதலில் சேவை (first-come-first-serve) என்கிற முறையில் செய்யப்படும். ((அதேநேரத்தில், திட்டமிட்டதை விட அதிக விண்ணப்பங்கள் வரும்பட்சத்தில், விண்ணப்ப விகிதாச்சாரத்துக்கு ஏற்ப என்சிடிகள் ஒதுக்கீடு செய்யப்படும்). 

வெளியீடு அமைப்பு (Issue Structure):

விருப்பத் தேர்வு Iஎன்சிடிகள் (Option I NCDs), பிரிவு I (Category I) மற்றும் பிரிவு II முதலீட்டாளர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை 8.70%, வட்டி வருமானம் அளிக்கப்படும்.  பிரிவு III  மற்றும் பிரிவு IV முதலீட்டாளர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை 8.80% வட்டி வருமானம் அளிக்கப்படும்.

பிரிவு I மற்றும் பிரிவு II முதலீட்டாளர்களுக்கு ஆண்டுக்கு 8.70% வட்டி வருமானம் (Effective yield) கிடைக்கும். பிரிவு III மற்றும் பிரிவு IV முதலீட்டாளர்களுக்கு ஆண்டுக்கு 8.80% வட்டி வருமானம்  கிடைக்கும்.

விருப்பத் தேர்வு IIஎன்சிடிகள் (Option II NCDs), ஆண்டுக்கு ஒரு முறை, பிரிவு I மற்றும் பிரிவு II முதலீட்டாளர்களுக்கு வட்டி 8.80%, அளிக்கப்படும். பிரிவு III  மற்றும் பிரிவு IV முதலீட்டாளர்களுக்கு, ஆண்டுக்கு ஒரு முறை 8.90% வட்டி அளிக்கப்படும்.

பிரிவு I மற்றும் பிரிவு II முதலீட்டாளர்களுக்கு ஆண்டுக்கு 8.80% வட்டி வருமானம் கிடைக்கும். பிரிவு III மற்றும் பிரிவு IV முதலீட்டாளர்களுக்கு ஆண்டுக்கு 8.90% வட்டி வருமானம்  கிடைக்கும்.


விருப்பத் தேர்வு IIIஎன்சிடிகள் (Option III NCDs), ஆண்டுக்கு ஒரு முறை, பிரிவு I  மற்றும் பிரிவு II முதலீட்டாளர்களுக்கு வட்டி 9.00%, அளிக்கப்படும். பிரிவு III  மற்றும் பிரிவு IV முதலீட்டாளர்களுக்கு, ஆண்டுக்கு ஒரு முறை 9.10% வட்டி அளிக்கப்படும்.

பிரிவு I மற்றும் பிரிவு II முதலீட்டாளர்களுக்கு ஆண்டுக்கு 9.00% வட்டி வருமானம் கிடைக்கும். பிரிவு III மற்றும் பிரிவு IV முதலீட்டாளர்களுக்கு ஆண்டுக்கு 9.10% வட்டி வருமானம்  கிடைக்கும்.

வகை  IV  முதலீட்டாளர்கள்,  சிறு தனிப்பட்ட முதலீட்டாளர்கள்  ஆவார்கள். இவர்கள், இந்தியக் குடிமக்கள் மற்றும் இந்துக் கூட்டுக் குடும்பத்தினர் ஆவர். இவர்கள்  அதிகபட்சம் 10,00,000 ரூபாய்க்கு விண்ணப்பிக்கலாம். இது இந்த பகுதி  I என்சிடி வெளியீட்டின் அனைத்து  விருப்பத் தேர்வுகளுக்கும் சேர்ந்த மொத்த தொகையாகும்இந்துக் கூட்டுக் குடும்பத்தில் கர்த்தா (Karta) என்கிற குடும்பத்தின் தலைவர் மூலமே விண்ணப்பிக்க வேண்டும் 

பொது மக்களுக்கு வெளியிடப்படும் இந்த என்சிடிகள் மூலம் திரட்டப்படும் நிதியில் குறைந்தபடம் 75%, வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குவது, ஏற்கெனவே இந்த நிறுவனத்துக்கு உள்ள கடனுக்கான வட்டி மற்றும் அசலை அடைப்பது போன்றவற்றுக்கு பயன்படுத்திக் கொள்ளப்படும். அதிகபட்சம் 25% பொதுப் பயன்பாட்டுக்கு பயன்படுத்திக் கொள்ளப்படும்.

இந்த என்சிடிகள், 2018 ஆகஸ்ட் 29 தேதியிட்ட, ஷெல்ஃப் விவரக் குறிப்புகள் (Shelf Prospectus) மற்றும் பகுதி I  விவரக் குறிப்புகள் மூலம் வெளியிட்டப்படுகின்றன.  இந்த என்சிடிகள் பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும்.



இந்த என்சிடிகள் வெளியீட்டின் முன்னணி மேலாளர்களாக (Lead Managers) எடில்வைஸ் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் லிமிடெட், ஏ.கே. கேப்பிட்டல் சர்வீசஸ் லிமிடெட் மற்றும் ஆக்ஸிஸ் பேங்க் லிமிடெட்  உள்ளன.  

டாடா கேப்பிட்டல் பைனான்ஷியல் சர்வீசஸ் லிமிடெட் பற்றி..!

டாடா கேப்பிட்டல் பைனான்ஷியல் சர்வீசஸ் லிமிடெட் {Tata Capital Financial Services Limited –TCFSL} டெபாசிட் திரட்டாத, வங்கிச் சேவை சாரா முக்கிய நிதி நிறுவனம். இது பல்வேறு பிரிவினரின் தேவைக்கு ஏற்ப பொருத்தமான நிதி உதவி திட்டங்களை அளித்து வருகிறது

டிசிஎஃப்எஸ்எல்-ன் முக்கிய நிதி உதவித் திட்டங்கள் வருமாறு:

பெருநிறுவன கடன்கள் (Corporate finance): இந்த நிறுவனத்தின் பெருநிறுவன கடன் பிரிவு (Corporate Finance Division -CFD), குறித்த கால  கடன்கள், மூலதன குறித்த கால கடன்கள், சேனல் கடன் உதவி, பில் தள்ளுபடி கடன்,  கட்டுமான உபகரணங்கள் கடன், குத்தகை தீர்வுகளுக்கு கடன், குத்தகை வாடகை தள்ளுபடி கடன், நிறுவனர்கள் கடன் மற்றும் கட்டமைக்கப்பட்ட திட்ட நிதி உதவி (term loans, working capital term loans, channel finance, bill discounting, construction equipment finance, leasing solutions, lease rental discounting, promoter finance and structured products) போன்ற வர்த்தக நடவடிக்கைகளுக்கான கடன்களை அளித்து வருகிறது.  

இவை தவிர, கூடுதலாக சிறப்பு சொத்து மேலாண்மை குழு (Special Assets Management Group -SAMG) அமைக்கப்பட்டு, திட்டங்களுக்கான கடன் உதவிகள் (project finance) அளிக்கப்படுகிறது.  இது இந்த நிறுவனத்தின் முந்தைய உள்கட்டைப்பு நிதி உதவி பிரிவாக (infrastructure finance division) இருந்தது.

நுகர்வோர் கடன்கள் (Consumer finance): நுகர்வோர் கடன் மற்றும் ஆலோசனை வர்த்தக பிரிவு (Consumer Finance and Advisory Business Division - CFABD) மூலம் பல்வேறு வகையான நுகர்வோர் கடன்கள் குறிப்பாக, கார் மற்றும் இரு சக்கர வாகன கடன்கள், வர்த்தக வாகன கடன்கள், டிராக்டர் கடன்கள், வணிக கடன்கள், சொத்துகளுக்கு இணையான கடன்கள், தனிநபர் கடன்கள், நுகர்வோர் பொருள் கடன்கள் மற்றும் நிதி ஆவணங்களுக்கு இணையான கடன்கள் (car and two wheeler loans, commercial vehicle loans, tractor loans, business loans, loans against property, personal loans, consumer durable loans and loans against securities) போன்ற கடன்களை அளித்து வருகிறது.  


டிசிஎஃப்எஸ்எல்  என்பது டாட்டா கேப்பிட்டல் நிறுவனத்தால் (Tata Capital Limited -TCL), உருவாக்கப்பட்டு, அதன் துணை நிறுவனமாக உள்ளது. டாட்டா கேப்பிட்டல் நிறுவனம், பரந்துபட்ட நிதி உதவியை அதன் துணை நிறுவனங்கள் மூலம் சிறு வாடிக்கையாளர்கள், பெரு நிறுவன வாடிக்கையாளர்கள், அமைப்பு சார்ந்த நிறுவன வாடிக்கையாளர்களுக்கு (retail, corporate and institutional clients) அளித்து வருகிறது. 

டிசிஎல் என்பது டாட்டா குழுமத்தின் (Tata group) நிதிச் சேவைகள் அளிக்கும் (financial services) பிரிவாக உள்ளது. டாட்டா குழுமம், பரந்துபட்ட சர்வதேச வணிக குழுமமாக  உருக்கு, வாகனங்கள், மின்சாரம், வேதிப் பொருட்கள், தொலைத் தொடர்பு மற்றும் விருந்தோமல் (steel, motors, power, chemicals, telecommunications and hospitality) போன்ற துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

·         விருப்பத்தேர்வு III, 10 ஆண்டுகள்   ஆண்டு விருப்பத்தேர்வு

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இப்போது பங்குச் சார்ந்த திட்டங்களில் எப்படி முதலீடு செய்தால் லாபம்? ச.ஶ்ரீதரன், நிதி ஆலோசகர்

இப்போது பங்குச் சார்ந்த திட்டங்களில் எப்படி முதலீடு செய்தால் லாபம்?  By திரு . ச . ஶ்ரீதரன் , நிதி ஆலோசகர் ,  https://www.walletwealth....