மொத்தப் பக்கக்காட்சிகள்

இந்தியப் பெண் தொழில்முனைவோர்கள். வியாபாரம் செய்யும் போது, அவர்கள் வியாபாரத்தை அர்த்தப்படுத்துகிறார்கள்..!


. இந்தியப் பெண் தொழில்முனைவோர்கள். வியாபாரம் செய்யும் போது, அவர்கள் வியாபாரத்தை அர்த்தப்படுத்தி இருக்கிறார்கள்
பெண் தொழில்முனைவோர்கள்திட்டம் 25x25
யாருடைய நேரம் வந்துவிட்டது என ஒரு யோசனை

இன்றைய பெண்கள், தடைகளை உடைத்து வணிகம் மற்றும் தொழில்துறைகளில் புதிய எல்லைகளைத் தாண்டி, வணிக மையங்களை மாற்றுவதோடு, புதிய நிறுவனங்களை (start –ups) உருவாக்கி , இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத் துறையில் புதிய யோசனைகளைக் கொண்டு வருகின்றனர். பொறியியல், தொழில்நுட்பம், வடிவமைப்பு, கைவினைப் பொருட்கள், நெசவு, காலணி தயாரித்தல் (shoe making), விவசாயம், இயற்கை வேளாண்மை (organic farming), பிற கலாச்சார மற்றும்  படைப்புத் தொழில்கள் (creative industries) ஆகியவற்றில், இந்தப் புதுமையானகண்டுபிடிப்புகள் தீவிரமாக மறுவடிவமைக்கின்றன. திருமணத்தின் மூலம் தன் வீட்டை விட்டு வெளியேறிய பெண்கள், மற்றொரு வீட்டின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்ட பெண்கள், கூட்டு குடும்பத்தில் வாழும் பெண்கள் ஆகியோர் மாநிலங்கள் மற்றும் கலாச்சாரங்களை தாண்டி  உள்ளுணர்வுடன் தொழில்முனைவோராக இணைந்திருக்கிறார்கள்.
டாவோஸ் நகரில் சமீபத்தில் நடந்த  உலகப் பொருளாதார மன்ற கூட்டத்தில் (World Economic Forum), புதிய தலைமுறை பெண் தொழில்முனைவோர்களை தொழிலாளர் சக்தியில் சம எண்ணிக்கையில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பெண்கள் இப்படி சம எண்ணிக்கையில் பணிபுரிய வரும் போது, வளரும் நாடுகள் மற்றும் வளர்ந்து வரும் நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product) அதிகரிக்கும். அந்த நிலையில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 27% அதிகரிக்க கூடும். இந்தியப் பெண் தொழில்முனைவோர்கள். வியாபாரம் செய்யும் போது, அவர்கள் வியாபாரத்தை அர்த்தப்படுத்தி இருக்கிறார்கள் (when women do business, they mean business)
தொழில்முறை தொழில்முனைவோராக, பெண்கள் உண்மையிலேயே தங்கள் கனவுகளில் வாழ்கின்றனர். பல முற்போக்கான முயற்சிகளால், நாட்டில் புதுமை மற்றும் தொழில்முனைவோர் கலாச்சாரத்தை ஊக்குவிக்க அரசாங்கத்தால்  எடுக்கப்படும் நடவடிக்கைகள் மூலம் உத்வேகமான தொழில்முனைவோர்களை இந்தியா உருவாக்கியுள்ளது. இன்று, 20,000 க்கும் அதிகமான புதிய நிறுவனங்களுடன் (startups), உலக அளவில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இது ஆண்டுக்கு 10-12% வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சுலபமாக வணிகம் செய்யும் தரப்பட்டியலில் (Ease of Doing Business ranking), இந்தியா 50 இடங்களுக்கு முன்னேற உதவி இருக்கிறது. மற்றும் இது பெண்கள் இந்தியாவில் தலைமை தாங்கி தொழில்துறையை முன்னேற்றுவார்கள் என்பதற்கு மற்றொரு காரணமாக இருக்கிறது.
நாட்டின் மக்கள் தொகையில் 48%-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளடங்கியுள்ள நிலையில், பெண்கள் இல்லாமல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைப் பற்றி சிந்திக்க இயலாது. பெண்களை தொழில் துறையில் இணைக்கும்பட்சத்தில் வரும் 2025 ஆம் ஆண்டுக்குள், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 16% கூடுதல் வளர்ச்சி பெறும். எட்டாவது, உலக தொழில்முனைவோர் உச்சி மாநாட்டின் (Global Entrepreneurship Summit)  முக்கியக் கருத்து, 'பெண்கள் முதலில், அனைவருக்கும் செழிப்பு' (‘Women first, Prosperity for all’) என்பதாக உள்ளது. இது, பெண்கள் சிறப்பாக செயல்பட்டால், நாடுகளும் சிறப்பாக செயல்படும் என்பதை உயர்த்தி காட்டுகிறது. ஆமாம், எங்களுக்கு ஒரு திட்டம் உள்ளது. ஆமாம், நாங்கள் உந்துதல் மற்றும் சமமான சமூக-பொருளாதார வளர்ச்சியை (socio-economic growth) அடைய முயற்சிக்கிறோம் மற்றும் அதற்காக, நாட்டில் 25% பெண் தொழில்முனைவோர்கள் 2025 ஆம் ஆண்டுக்குள் உருவாவதை உறுதி செய்ய வேண்டும்.
தேசிய மாதிரி ஆய்வு அமைப்பின் (National Sample Survey Organisation -NSSO) ஆறாவது பொருளாதார மக்கள் தொகை (Sixth Economic Census) கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 14% வணிகம் மட்டுமே பெண்களால் நடத்தப்படுகின்றன. பெண்கள் தலைமையிலான புதிய நிறுவனங்கள் (startups)  குறைவான எண்ணிக்கையில் நிதி திரட்டுகின்றன. அவற்றில், 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட பெண் தொழில்முனைவோர்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் தவிர்த்த இதர முறைசாரா வழிகள் (informal channels) மூலமே நிதி திரட்டுகிறர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஏனென்றால், அவர்களால் தங்கள் நிறுவனங்களுக்கான நிதி ஆதாரங்களை வழக்கமான முறையில், பிணையம் இல்லாமல் மற்றும் வெளிப்படை தன்மையுடன் திரட்ட முடியவில்லை. இது, மகளிர் தொழில்முனைவோர் மாஸ்டர் கார்ட் இண்டெக்ஸ் (Master card Index of Women Entrepreneurs 2018 -MIWE)) மேலும் சரிபார்க்கப்பட்டது. இது, இந்திய பெண் தொழில்முனைவோர்கள், தங்களின்  நிதித் தேவைகளை அடைய முக்கிய தடைகள் இருப்பவை பற்றி கண்டறிந்துள்ளது. எனவே, பாலின வேறுபாட்டை களைதல் மற்றும் தொழிலாளர் வளர்ச்சியை மேம்படுத்துவது ஓர் அவசர  அவசியம் தேவையாக இருக்கிறது. இது, முற்போக்கான கொள்கைகளால் பெண்கள், தொழில்முனைவோர் ஆசைகளை  தொடர உதவுவதாக இருக்க வேண்டும்.
உலக அளவில் சுமார் 25 கோடி (250 மில்லியன்) பெண் தொழில்முனைவோர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, சமூக-பொருளாதார வளர்ச்சியை புதிய நிறுவனங்களின் சுற்றுச்சூழல் (startup ecosystem) வளர்ச்சி இயக்கியாக உருவாக்கி இருக்கிறது. 2025 ஆம் ஆண்டுக்குள், முழுமையாக பெண்கள் தொழில்துறையில் ஈடுபடுவது, உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Global GDP) 28 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை (US$ 28 trillion) சேர்க்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய நிறுவனங்கள் (startup), 80 லட்சத்துக்கும் (8 மில்லியன்) அதிகமான பெண் தொழில்முனைவோர்களுடன் இந்தியாவின் வளர்ச்சியை மேம்படுத்துவதாக உள்ளது.
பல பெண்களுக்கு, தொழில்முனைவோராவது மற்றும் தொழில் நிறுவனத்தை நிறுவுவது அவசியமாக இருக்கிறது. மற்றவர்களுக்கு, தனிப்பட்ட செல்வத்தைத் உருவாக்குவது, அவர்களின் ஆசைகளை பூர்த்தி செய்வதாக உள்ளது. நாட்டைப் பொறுத்தவரையில், அதன் பெண்களுக்கு கண்ணியமான வாழ்க்கை மற்றும்  மரியாதையை திரும்ப வழங்குவதற்கான ஒரு வாய்ப்பாக தொழில்முனைவு உள்ளது. இது மட்டுமே அவர்களுக்கு, முழுமையான நிதி சுதந்திரம் (complete financial independence) மற்றும் தன்னம்பிக்கை அளிக்கும். அதுதான் உண்மையான உள்ளாட்சி  (Swaraj).
கடந்த சில ஆண்டுகளில், இந்தியாவில் பெண்கள் தொழில்முனைவுகள் சாதனை வளர்ச்சியை கண்டிருக்கிறது. மத்திய அரசாங்கத்தின் முற்போக்கான கொள்கை முயற்சிகளான, ஸ்டாண்ட்-அப் இந்தியா (Stand-Up India), முத்ரா (MUDRA), மற்றும் நிதி ஆயோக்கின் ((NITI Aayog)) சமீபத்திய மகளிர் தொழில் முனைவோர் தளம் (Women Entrepreneurship Platform- WEP), ஆகியவை அடுத்த தலைமுறை பெண் தொழில்முனைவோர்கள் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும் விதமாக சரியான திசையில் எடுத்து வருகிறது.
கிராமப்புற பெண் தொழில்முனைவோர்களின் திறமையை வளர்க்கும் விதமாக ஸ்டார்ட்அப் இந்தியா யாத்ரா (Startup India Yatra) மூலம் 4 மாதங்களில் 12 கிராமங்களில் எடுக்கப்பட்ட முன் முயற்சிகள் மிகவும் ஊக்கமளிக்கின்றன. பெண்கள் தலைமையிலான பல தலைமை மற்றும் வழிகாட்டல் திட்டங்கள் குறிப்பாக, எம்பவர் (empower), சஹா நிதி (SAHA Fund) மற்றும் சொன்டர் கனெக்ட் (Sonder Connect) ஆகியவை மூலம் தொழில்துறையில் பெண்களை சேர்ப்பதற்கு பெருநிறுவனங்களும் தொழில்நுட்ப நிறுவனங்களும் தீவிரமாக இந்தியாவில் ஊக்கமளித்து வருகின்றன.
தேவையான உள்கட்டமைப்பை நிறுவுவதில் நாம் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, மகளிரை மையப்படுத்தப்படுத்திய தொழில் முனைவோர் உருவாக்க மையங்கள் ஏற்படுத்த வேண்டும்,  வழிகாட்டல் நடைமுறைகளை உருவாக்க வேண்டும். மேலும்,  முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். கல்வித் திட்டங்களை மறுசீரமைத்தல் மற்றும் திறனாய்வு முயற்சிகள் ஆகியவை மூலம் அவற்றை இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றதாக மாற்ற வேண்டும்.
பெண் தொழில்முனைவோர்களுக்கு புதிய தலைமுறைமாற்று நிதி உதவிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். குறிப்பாக, பெண்கள்  சார்ந்த  துணிகர நிதிகள் (women specific venture funds) மற்றும் கூட்டு நிதி உதவி (crowd funding) போன்றவை அவர்களின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் முக்கிய விஷயமாக இருக்கின்றன. மேலும் மற்ற பெண்கள் தலைமையிலான நிறுவனங்களில் பெண்கள் முதலீடு செய்வதை ஊக்குவிக்க வேண்டும். பாலின சமத்துவமின்மையை களைய வேண்டும். மேலும், பெண் தொழில்முனைவோர்கள் வெற்றி பெற, அறிவுரை வழங்கி ஊக்குவித்தல் மற்றும் நெட்வொர்க்கிங் தளங்களை இணைந்து உருவாக்க வேண்டும்.
இறுதியாக, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களான ஹாஸ்கிராப் (hashgraph), பிளாக்செயின் (blockchain), செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence- A.I), ஆழ்ந்து கற்றல் மற்றும் இணையம் சார்ந்த விஷயங்களை அறிவது போன்றவை தற்போதைய சந்தைச்சூழலில் பெண் தொழில்முனைவோர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள முக்கிய விஷயங்களாக உள்ளன. பெண்கள் தொழில்முனைவோர் மத்தியில் இந்த புதிய வளர்ச்சி, புதிய நிறுவனங்களின் பொருளாதாரம் (start-up economy), உலக பொருளாதார உற்பத்தியை அதிகரிக்கும் ஊக்கச் சக்தியாக இருக்கிறது.
இந்த எதிர்கால வளர்ச்சிக்கு, அரசு மற்றும் துறைகள் வலிமையாக ஒன்று சேர்வது அவசியம். தொழில்முனைவில் பெண்களுக்குஅதிகாரம் கொடுப்பது பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும். குறிப்பாக, தொழில் துறையில் பெண் தலைவர்கள் உருவார்கள், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மேலும் பல பெண்கள் பங்கேற்பார்கள், தொழில் தொடர்பாக அவர்களின் கருத்துகள் (ideas) நடைமுறைக்கு வரும். இந்திய நாட்டின் பெண்கள் தங்களை வெளிப்படுத்துக் கொள்வதற்கு பொருத்தமான நேரமாககைது இருக்கிறது. இப்போது நாம் எடுக்கும் இந்தச் சிறிய முயற்சி, இந்தியாவின் மிகப் பெரிய இலக்கை அடைவதற்கான எங்களின் திட்டமான 25x25 ( Agenda 25x25)  அதாவது, 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 25 சதவிகித பெண் தொழில் முனைவோர்களை உருவாக்கும் இலக்கை நெருங்கி வருவதாக உள்ளது.  

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற . - பஜாஜ் ஃபின்சர்வ் ELSS வரி சேமிப்பு ஃபண்ட் .!

திரு .  எஸ் .  கார்த்திகேயன் ,  நிறுவனர் ,  https://winworthwealth.com/ மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு   ஏற்ற . ...