மொத்தப் பக்கக்காட்சிகள்

இனி கம்பெனிகள் கடன் வாங்கி விட்டு கம்பி நீட்ட முடியாது..!


 Inter creditor Agreement Signed By Banks In India
இனி கம்பெனிகள் கடன் வாங்கி விட்டு கம்பி நீட்ட முடியாது..!

கடந்தவாரம்எஸ்பி்ஐ வங்கிமற்றும் பிறமுன்னணி வங்கிகளுக்கும் இடையேகடன்ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டன. (Inter creditor Agreement Signed By Banks)

வங்கிகளுக்கு இடையேகடன்ஒப்பந்தங்கள்  என்றால் என்ன?

வாராக் கடனை வசூலிக்கும் வழிமுறை

சமீபகாலமாகஇந்தியாவில் அதிகரித்து வரும்வாராக்கடன்(என்பிஏ) சிக்கலைச் சமாளிப்பதற்காக வங்கிகள் பலநடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன அவற்றுள் ஒன்றுதான் இது.

இந்தியாவில் வங்கிகளால் கொடுக்கப்பட்டு வசூலிக்க இயலாமல் உள்ளமொத்தக் கடன்தொகைரூ. 10 லட்சம்கோடியைத் தாண்டியுள்ளது.

இந்தியவங்கித் துறையில் முன்எப்போதும் இல்லாதவகையில் வராக்கடன் பிரச்னை தலைதூக்கியுள்ளது.

இந்தியஅரசாங்கம் கொண்டுவந்தஷாசாக்ட் திட்டம் (The Sashakt) இந்தப் பிரச்னைக்குச் சில தீர்வுகளை முன்வைத்திருக்கிறது.


எஸ்.பி.. தலைமையில் 25 கடன்வழங்கும் நிறுவனங்கள்  ஒப்பந்தத்தில்கையெழுத்திட்டுள்ளன. இதில், பஞ்சாப் நேசனல்வங்கியும் அடங்கும்
இந்தியா போஸ்ட்பேமென்ட் பேங்க்உட்பட22 பொதுத்துறைவங்கிகள், 19 தனியார் வங்கிகள் மற்றும் 32 வெளிநாட்டு வங்கிகள் ஆகியஅனைத்தும் கடன்கொடுப்பவர்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தில் (ICA) இணைகின்றன.

இந்தியஆயுள்காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி), பவர்ஃபைனாஸ் கார்ப்பரேசன், ரூரல்எலக்ட்ரிஃபிகேசன் கார்ப்பரேஷன் (ஆர்இசி) போன்ற12 நிதிநிறுவனங்களும் இந்தஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

ஒப்பந்த தன்மைகள்:

கடன்கொடுப்பவர்களுக்கு இடையேயான ஓப்பந்தம்  என்பது இந்திய அரசாங்கம் கொண்டுவந்தஷாசாக்ட் திட்டத்தின்  மூலம் கொண்டு வரப்பட்ட தீர்மானம்.

திரு. சுனில் மேத்தாதலைமையிலான குழுவினரால் உருவாக்கப்பட்ட இந்தஒப்பந்தத்தின் திட்டவரைவுகீழ்க்கண்ட முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது.

தலைமை நிதி நிறுவனம்

1.   இந்தஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள கடன்கொடுக்கும் நிதிநிறுவனங்கள் தங்களுக்குள் ஒருதலைமையாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

2.   இந்தத்தலைமைநிதிநிறுவனம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள பிறநிறுவனங்களின் சார்பாகச் செயல்படும். தலைமைநிறுவனம் வாராக்கடன்தொடர்பான தீர்மானங்களை முன்னெடுக்கும்.

3.   இந்த நிறுவனம் கொண்டுவரும்தீர்மானத்திற்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிறுவனங்களுள் மூன்றில் இரண்டுபங்குநிறுவனங்கள் ஆதரவுதெரிவித்தால், கடனைஒழுங்காகக் கட்டாதநிறுவனங்களின் கணக்குகளின் மீதுமுடிவெடுக்கும் அதிகாரம் தலைமைநிறுவனத்திற்குக் கிடைக்கும்.

தலைமை நிறுவனத்தின் பொறுப்புகள்:
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிதிநிறுவனங்களுக்குத் தலைமையேற்கும் நிறுவனத்திற்குப் பலபொறுப்புகள் உள்ளன.

1. செயல்படாத சொத்துக்கள் (NPA) மீது தீர்மானம் கொண்டுவந்துஅதனைமேற்பார்வைக் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்தியவங்கிகள் சங்கம்(IBA) ஒருமாதத்திற்குள் மேற்பார்வைக் குழுவை(overseeing committee) அமைக்கும்.

2. கொண்டு வரப்படும் ஒவ்வொரு தீர்மானமும் இந்தியரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலுக்கும், நெறிமுறைகளுக்கும், சட்டவிதிமுறைகளுக்கும் உட்பட்டும் இருக்கவேண்டும்.

3. செயல்படாத சொத்துகளோடு தொடர்புடைய தாக்குப்பிடிக்கக் கூடியகடன்(sustainable debt) குறித்தும் முடிவெடுக்க வேண்டும்.

4. தீர்மானத்தின் மூலம்முன்வைக்கப்படும் திட்டங்களை 180 நாட்களுக்குள் செயல்படுத்தும் அதிகாரத்தை இந்தஒப்பந்தம் தலைமைநிதிநிறுவனத்திற்கு வழங்குகிறது.

கவனிக்க வேண்டியவை..!
1.   தலைமைநிதிநிறுவனம் தன்னுடைய சேவைகளுக்காக ஒருகுறிப்பிட்ட அளவுக்கட்டணம் பெற்றுக் கொள்ளலாம்.

2.   கடன்கொடுக்கும் நிதிநிறுவனங்களின் ஒப்பந்தத்தின் படி(ICA) முதல்சீராய்வுக் கூட்டம் மூன்றுமாதஇடைவெளிக்குப் பின்னர் நடைபெறும்.

3.   ரிசர்வ் வங்கியின் நேரடித் தலையீட்டு, கடன்கொடுக்கும் நிதிநிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தை ரத்துசெய்யமுடியும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

உடனடி கடன் = வாழ்நாள் முழுவதும் தொல்லை? Instant Loan

உடனடி கடன் = வாழ்நாள் முழுவதும் தொல்லை? எந்த ஒரு ஆவணமோ அல்லது கிரெடிட் சரிபார்த்தல் இல்லாமல் பெறும் கடன்கள் உங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத...