மொத்தப் பக்கக்காட்சிகள்

செலவு, சேமிப்பு, செல்வம்: ஆண்களைவிட பெண்களுக்கு அதிக ஆசைகள்..!


ஆண்களைவிட பெண்கள் அதிக ஆசைகளுடன் உள்ளனர்

பேங்க்  பஜார்  ஆய்வில்  தகவல்
 


இந்தியாவின் நிதிச் சந்தையில் முக்கிய நிறுவனமான பேங்க் பஜார் நிறுவனம் 10-வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் முதல் முறையாக “இந்திய இளைஞர்களின் ஆர்வம் மற்றும் இலக்குகள் தொடர்பான அட்டவணைக் குறியீட்டு பட்டியல்” ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சந்தை ஆய்வு மற்றும் நுகர்வோர் ஆலோசனை நிறுவனமான கந்தார் ஐஎம்ஆர்பி நிறுவனத்தின் மூலம் பேங்க் பஜார் நிறுவனம் இந்த ஆய்வை மேற்கொண்டது. நிதி தொடர்பான இந்திய இளைஞர்களின் பார்வைகள் மற்றும் அவர்களின் சொந்த ஆசைகள் குறித்து இதில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த வகையில் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பெரிய ஆய்வு இதுவே ஆகும். இளைஞர்களின் ஆர்வம் மற்றும் ஆசைகள் தொடர்பான அட்டவணைக் குறியீட்டு ஆய்வு, சொத்து (வளம்). புகழ், பெயர், உறவுகள், சொந்த வளர்ச்சி மற்றும் உடல் நலம் ஆகிய 6 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில் 87.43 சதவீத இந்திய இளைஞர்கள் முக்கிய ஆர்வங்கள் மற்றும் தனிப்பட்ட இலக்குகள், ஆசைகளுடன் இருப்பது தெரிய வந்துள்ளது. தேசிய சராசரியை விட தென் இந்திய இளைஞர்கள் அதிக அளவில் – அதாவது 88.5 சதவீதம் பேர் அதிக வாழ்க்கையில் முக்கிய நோக்கங்களுடன் இருப்பது இந்த அட்டவணைக் குறியீட்டு ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

88.8 சதவீதத்துடன் தென் இந்தியாவில் சென்னை முதலிடம் வகிக்கிறது. வட இந்தியா 87.7 சதவீதத்துடனும், கிழக்கு இந்தியா 86.6 சதவீதத்துடனும், மேற்கு இந்தியா 86 சதவீதத்துடனும் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.

நகரங்களை வகைப்படுத்தும்போது சென்னை முதலிடம் பெற்றது பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகர இளைஞர்கள் 88.5 சதவீதத்துடன் இந்த குறியீட்டு அட்டவணை ஆய்வில் இரண்டாவது இடத்தைப் பெற்றது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. மெட்ரோ நகரம் அல்லாத நகரங்களில் உள்ள இளைஞர்களும் தங்களது கனவுகள், ஆர்வம் மற்றும் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டு அவற்றை நனவாக்கிக் கொள்ள எந்த அளவு முனைப்புடன் உள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதாக இது அமைந்துள்ளது.

வளர்ச்சிக்கான வாய்ப்புகள், நிதி சுதந்திரம், சமூக அமைப்பில் உயர்வு உள்ளிட்டவை பெண்களை பெரிய அளவில் கனவு காண வைக்கின்றன. மொத்தத்தில் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் இலக்குகளை அடைவதில் ஆர்வம் மற்றும் ஆசைகள் உடையவர்களாக உள்ளனர். பேங்க் பஜார் இணையதளத்தில் அதிக அளவில் பெண்கள் வந்து செல்வது தொடர்ந்து அதிகரிப்பது இந்த ஆய்வை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

குறைவான வருமான வரி..! ஃப்ராங்க்ளின் இந்தியா லாங் டியூரேஷன் ஃப்ண்ட் Franklin India Long Duration Fund

குறைவான வருமான வரி..! ஃப்ராங்க்ளின் இந்தியா லாங் டியூரேஷன் ஃப்ண்ட் (Franklin India Long Duration Fund)   ஃப்ராங்க்ளின் இந்தியா மிய...