யூடிஐ மாஸ்டர் யூனிட் ஸ்கீம் – 30 பத்தாண்டுகளாக செல்வம் உருவாக்கம்
(UTI Mastershare Unit Scheme – 3 decades of history in Wealth Creation)
ஃபண்ட் ஆரம்பிக்கப்பட்ட போது செய்யப்பட்ட ரூ. 10 லட்சம் முதலீடு, 2018 ஜூன் 30 –ல் ரூ. 8.01 கோடியாக உயர்வு
யூடிஐ மாஸ்டர்ஷேர் யூனிட் ஸ்கீம் (UTI Mastershare Unit Scheme), இந்தியாவின் முதல் பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட் (equity oriented fund) ஆகும். இது கடந்த 1986 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகமானது. 30 ஆண்டு காலத்துக்கு மேலாக செல்வம் உருவாக்கத்தில் ஈடுபட்டு வருகிறது. யூடிஐ மாஸ்டர்ஷேர் யூனிட் ஸ்கீம், நீண்ட கால வரலாற்றை கொண்டுள்ளது. இது அனைத்து பங்குச் சந்தை சுழற்சிகளிலும் அதாவது கரடிச் சந்தை அல்லது காளைச் சந்தைகளில் இடைவிடாது தொடர்ந்து ஆண்டு தோறும் முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் வழங்கி வருகிறது.
யூடிஐ மாஸ்டர்ஷேர் யூனிட் ஸ்கீம், ஓப்பன் எண்டட் ஈக்விட்டி (open ended equity) ஃபண்ட் ஆகும். இதில், திரட்டப்படும் நிதியில் பெரும்பாலும், அதிகப் பங்குச் சந்தை மதிப்பு கொண்ட - லார்ஜ் கேப் நிறுவனப் பங்குகளில் (large cap stocks) முதலீடு செய்யப்படுகிறது.
நியாயமான விலையில் வளர்ச்சி (Growth at Reasonable Price -GARP)) என்ற முதலீட்டு பாணியில் முதலீட்டுக்கான பங்குகள் தேர்வு செய்யப்படுகின்றன. ஜிஏஆர்பி உத்தி என்பது வளர்ச்சி மற்றும் மதிப்பு முதலீடு (growth and value investing) இரண்டும் இணைந்த முறையில் அமைந்ததாகும். இதில் நிறுவனத்தின் பங்கு விலை, முதலீடு செய்யும் போது நியாயமான மதிப்பீட்டில் (reasonable valuation) வர்த்தகமாகி கொண்டிருக்கும். எதிர்காலத்தில் வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள , கவர்ச்சிகரமான மதிப்பீட்டை கொண்ட நிறுவனப் பங்குகளில் இந்த ஃபண்டில் முதலீடு செய்யப்படுகிறது.
இந்த ஃபண்டின் முதலீட்டு உத்தி (portfolio strategy) 3 முக்கிய விஷயங்களை கொண்டிருக்கிறது.
முதலாவதாக, நிறுவனத்தின் வளர்ச்சி திறன் மீது, நீண்ட காலத்தில் பங்குச் சந்தை, குறைத்து மதிப்பீடு செய்திருக்கும். அது போன்ற நிறுவனப் பங்குகளை அலசி ஆராய்ந்து முதலீடு செய்யப்படுகிறது.
இரண்டாவதாக, சாதகமான தேவை வளர்ச்சி சுழற்சி, ஒருங்கிணைப்பு, நெறிப்படுத்தும் அமைப்புகளின் தடைகள் நீக்குதல் அல்லது நிறுவனம் சார்ந்த காரணிகளான குறைந்த செலவில் உற்பத்தி, துணிகர விரிவாக்க திட்டம் போன்றவை மூலம் வளர்ச்சி போக்கு மேம்படும் நிறுவனப் பங்குகளை கண்டறிந்து முதலீடு செய்யப்படுகிறது.
கடைசியாக, தொழிலை தொடங்க, வணிக மூலதனம் அதிகமாக தேவைப்படும் நிலையிலும், கவனமாக முதலீடு செய்து, துறை சார்ந்த நிறுவனங்களிளேயே சிறப்பாக செயல்படும் நிறுவனகளின் பங்குகளை கண்டறிந்து முதலீடு செய்வதாகும். .
இந்த ஃபண்டின் மூலம் ஜுன் 30, 2018 நிலவரப்படி, ரூ. 5,191 கோடி நிர்வகிக்கப்படுகிறது. 5.33 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இந்த ஃபண்டில் முதலீடு செய்திருக்கிறார்கள். இந்த ஃபண்ட் நீண்ட காலத்தில், மூலதன அதிகரிப்பை இலக்காக கொண்டு அல்லது வருமான அளிப்பை கொண்டதாக இருக்கிறது. மேலே குறிப்பிட்டது போல், தொடர்ந்து ஆண்டு தோறும் இடைவெளி விடாமல் டிவிடெண்ட் வழங்கி வருகிறது. யூடிஐ மாஸ்டர்ஷேர் யூனிட் ஸ்கீம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து, தற்போது வரை ரூ. 3,000 கோடிக்கு மேல் முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் தந்திருக்கிறது.
யூடிஐ மாஸ்டர்ஷேர் யூனிட் ஸ்கீம் ஃபண்ட்-ல் திரட்டப்படும் நிதி பெரும்பாலும் லார்ஜ் கேப் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது. இது லார்ஜ் கேப் ஃபண்ட் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. சிறப்பான நிர்வாகம் கொண்ட, பிரபலமான நிறுவனப் பங்குகளான ஹெச்டிஎஃப்சி பேங்க், இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டென்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), ஐசிஐசிஐ பேங்க், கோட்டக் மஹிந்திரா பேங்க், இண்டஸ் இந்த பேங்க், மாருதி சுசூகி இந்தியா, ஐசிசி லிமிடெட், டெக் மஹிந்திரா, லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட் (எல் அண்ட் டி) அதிகம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் போர்ட்ஃபோலியோவில் இந்தப் பங்குகளின் பங்களிப்பு 47 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்கிறது. .
இந்தத் திட்டம், தொடர்ந்து ஒழுங்கான முதலீட்டு பாணி மூலம் துறை / பங்குகளில் முதலீடு செய்து வருகிறது. இந்தத் திட்டத்தில் தற்போது சில்லறை வணிகம் சார்ந்த தனியார் துறை வங்கிகள், கிராமபுறங்களில் கூடுதல் கவனம் செலுத்தும் வங்கிச் சாரா நிதிச் சேவை நிறுவனங்கள் (NBFC) தகவல் தொழில்நுட்பம், தொழில் உற்பத்தி போன்ற துறை சார்ந்த நிறுவனப் பங்குகளில் அதிக முதலீட்டை மேற்கொண்டுள்ளது. அதேநேரத்தில், எரி சக்தி, நுகர்வோர், மற்றும் உலோகங்கள் போன்ற துறை சார்ந்த நிறுவனப் பங்குகளில் குறைவான முதலீட்டை மேற்கொண்டுள்ளது. இந்தத் திட்டம் குறைவான ஏற்ற இறக்கத்தில் (lower volatility) நிலையாக செயல்பட்டு வருகிறது.
யூடிஐ மாஸ்டர்ஷேர் யூனிட் ஸ்கீம், ஆரம்பம் முதல், 2018 ஜூன் 30 வரையில் ஆண்டுக்கு சராசரியாக (CAGR)) 14.82% வருமானம் கொடுத்திருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் அதன் பெஞ்ச்மார்க் இண்டெக்ஸ் ஆன எஸ்&பி பிஎஸ்இ 100 (S&P BSE 100), மொத்த வருமான குறியீடு ( Total Return Index – TRI) முறையில் ரூ. 7.02 கோடி வருமானத்தைக் கொடுத்திருக்கிறது. இந்த ஃபண்ட் கடந்த 32 வருட காலத்தில் 80 மடங்கு வருமானத்தைக் கொடுத்திருக்கிறது.
யூடிஐ மாஸ்டர்ஷேர் யூனிட் ஸ்கீம், பங்கு மூலதன போர்ட்ஃபோலியோ உருவாக்க விரும்பும் பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டாளர்களுக்கு ஏற்றது. கூடவே நிலையான மற்றும் தொடர்ந்த வருமான வளர்ச்சியை லார்ஜ் கேப் போர்ட்ஃபோலியோ மூலம் விரும்புகிறவர்கள் மற்றும் நீண்ட காலத்தில் மூலதன வளர்ச்சி, தொடர்ச்சியான டிவிடெண்ட் போன்றவற்றை விரும்புபவர்களுக்கும் ஏற்றதாக இருக்கிறது.