மொத்தப் பக்கக்காட்சிகள்

யூடிஐ கிரெடிட் ரிஸ்க் ஃபண்ட்

யூடிஐ கிரெடிட் ரிஸ்க் ஃபண்ட்

யூடிஐ கிரெடிட் ரிஸ்க் ஃபண்ட் (UTI Credit Risk Fund – முந்தைய பெயர் யூடிஐ இன்கம் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட்), அதிக வருமானம் சேர்க்கும் நிதி ஆணவங்களில் (high income accruing securities) முதலீடு செய்வது மூலம் நியாயமான வருமானத்தை முதலீட்டாளர்களுக்கு அளிக்க முயற்சி செய்து வருகிறது. மேலும், செயல் போர்ட்ஃபோலியோ மேலாண்மை (active portfolio management) மூலம் கடன் / வட்டி விகித மாற்றத்திலிருந்து மூலதனத்தை அதிகரிக்கும் வாய்ப்புகளை மேற்கொண்டு வருகிறது.. இந்த மியூச்சுவல் ஃபண்ட் இரண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்கு முதிர்வு காலத்தை கொண்ட உயர் வருமானம் தரக்கூடிய முதலீட்டுக் கலவையை (portfolio ) கொண்டிருக்கிறது.  இது ஒப்பீட்டளவில் உயர்ந்த இடர்பாடு ஈடுகட்டப்பட்ட  வருவாயை உருவாக்குவதற்கான திறனைக் கொண்டுள்ளது.

திரு. அமன்தீப் சோப்ரா, ஹெட் - ஃபிக்ஸட் இன்கம், யூ.டிஐ ஏஎம்சி (Mr. Amandeep Chopra, Head of Fixed Income, UTI AMC) கூறும் போது,  “2018 ஜூன் மாதத்தில் நடந்த கடன் மற்றும் நிதிக் கொள்கை (Monetary Policy) கூட்டத்தில் ஆர்பிஐ வட்டியை உயர்த்தியதை நாம் ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். கடன் சந்தை ஏற்கனவே வட்டி விகித உயர்வுக்கு காரணமாக உள்ளது. ஆனால், மற்ற ஒழுங்குமுறை மாற்றங்கள் கடன் பத்திர வருவாயில் (bond yields) ஓர் உயர்ந்த அழுத்தத்தை கொடுக்கின்றன. மேலும், பல்வேறு உலக அளவிலான மற்றும் உள்நாட்டு காரணிகள் கடன் பத்திர வருமானத்தை குறைந்து வருகின்றன. உலகளவில், கச்சா எண்ணெய் விலை ஏற்றம், அமெரிக்கா – சீனா வர்த்தக போர்கள், அமெரிக்க கருவூல ரசீதுகளின் வருமான போக்கு மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு மாற்றம் கடன் சந்தையை பாதிக்கிறது

அதேநேரத்தில், இந்தியாவில் பருவ மழையின் தாக்கம், வேளாண் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிக்கப்பட்டதால் உயரும் பண வீக்கத்தின் தாக்கம், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மாற்றம் மற்றும் நிதிப் பற்றாக்குறை கவலைகள் ஆகியன  கடன் பத்திர வருமானம் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய காரணிகளாக உள்ளன. பெரிய பொருளாதார காரணிகள் (macro economic factors) மோசமாகி விடவில்லை என்பதால் ஆர்பிஐ அடுத்த 12 மாதங்களில் மொத்தம் மூன்று முறைக்கு மேல் வட்டி விகிதத்தை அதிகரிக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு கடன் பத்திரங்களின் வருமானம் (g-sec yields) குறைந்து கொண்டு வருகிறது.
 மற்றும் கடன் சந்தையை சுற்றி நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. இந்நிலையில் அதிக வருமானம் ஈட்டுதல் மற்றும் குறுகிய காலம் முதல் நடுத்தர கால கால அளவைக் கொண்ட யூடிஐ கிரெடிட் ரிஸ்க் ஃபண்ட் போன்றவை முதலீட்டாளர்களுக்கு நல்ல முதலீட்டு வாய்ப்பாகும்.”.
இந்த ஃபண்ட்  மூலம், ஒரு முதலீட்டாளர்,  கடன் சார்ந்த முதலீட்டு ஒதுக்கீட்டின்  பகுதியாக ஒரு சமநிலையான  முதலீட்டு கலவையை உருவாக்க முடியும். இந்த ஃபண்ட் அதன் பெஞ்ச்மார்க் ஆன க்ரைசில் காம்போசைட் பாண்ட் ஃபண்ட் இண்டெக்ஸ் (CRISIL Composite Bond Fund Index) விட அனைத்து காலக் கட்டத்திலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.  இந்த ஃபண்ட் 2018 ஜூன் 30 ம் தேதி நிலவரப்படி, ஆரம்பம் முதல் 8.62% வருமானத்தை கொடுத்துள்ளது. இந்தக் கால கட்டத்தில் பெஞ்ச்மார்க் வருமானம் 8.25 சதவிகிதமாக உள்ளது.


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இப்போது பங்குச் சார்ந்த திட்டங்களில் எப்படி முதலீடு செய்தால் லாபம்? ச.ஶ்ரீதரன், நிதி ஆலோசகர்

இப்போது பங்குச் சார்ந்த திட்டங்களில் எப்படி முதலீடு செய்தால் லாபம்?  By திரு . ச . ஶ்ரீதரன் , நிதி ஆலோசகர் ,  https://www.walletwealth....