மொத்தப் பக்கக்காட்சிகள்

கோவை நாணயம் விகடன் 2018 வணிகம் மற்றும் நிதி, முதலீடு திருவிழா

கோவை நாணயம் விகடன் 2018 வணிகம் மற்றும் நிதி, முதலீடு திருவிழா 

 ஃபைனான்ஸ் அண்ட் பிசினஸ் கான்க்ளேவ்!

விஷன் 2025 என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு நிபுணர்கள் பலர் இந்த இரண்டு நாள் கருத்தரங்கில் உங்கள் மத்தியில் உரையாட இருக்கிறார்கள். இந்த கான்க்ளேவின் முதல் நாளன்று பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், சர்வதேச மற்றும் இந்தியப் பொருளாதார நிலை குறித்து பல்வேறு நிபுணர்கள் பேசவிருக்கிறார்கள்.

கான்க்ளேவ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் க்ளிக் செய்க....
உலகம் முழுக்க உள்ள தமிழர்களுக்கு நிதி தொடர்பான விஷயங்களில் நல்வழி காட்டிவரும் நாணயம் விகடன், கடந்த இரண்டு வருடங்களாக ஃபைனான்ஸ் அண்ட் பிசினஸ் கான்க்ளேவ்களை சென்னையில் வெற்றிகரமாக நடத்திவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே... இதுபோன்ற கருத்தரங்குகளின் பலன் தமிழகத்தில் உள்ள மற்ற நகரங்களில் இருப்பவர்களுக்கும் கிடைக்க வேண்டும் எனும் நோக்கத்தில், கோவை மண்டல வாசகர்களின் விருப்பத்தை ஏற்று வருகிற ஆகஸ்ட் 18, 19 தேதிகளில் கோவையில், இரண்டு நாள் ஃபைனான்ஸ் அண்ட் பிசினஸ் கான்க்ளேவினை நாணயம் விகடன் நடத்தவிருக்கிறது.

முதல் நாளன்று பங்குச் சந்தை நிபுணர் செளரப் முகர்ஜி, பங்குச் சந்தையின் போக்கு இனி எப்படி இருக்கும் என்பது பற்றி பேசவிருக்கிறார். பங்குச் சந்தை நிபுணரான ஏ.கே.பிரபாகர் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசவிருக்கிறார். நாணயம் விகடனில் இவர் எழுதிய போர்ட்ஃபோலியோ மிகவும் புகழ்பெற்ற பகுதியாகும். இந்தக் கருத்தரங்கில் யூனிஃபை நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஜி.மாறனும் பேசவிருக்கிறார். புதிய ஆண்டில் நமது முதலீடுகளை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து நாணயம் விகடனின் புத்தாண்டு இதழில் இவர் எழுதும் கட்டுரை பலராலும் தேடிப் படிக்கப்படுவதாகும்.

கான்க்ளேவ்

பங்குச் சந்தை நிபுணர்கள் தவிர, சுந்தரம் அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனியின் எம்.டி சுனில் சுப்பிரமணியம், இன்கவர்ன் ரிசர்ச் நிறுவனத்தின் நிறுவனரும், எம்.டி.யுமான ஶ்ரீராம் சுப்பிரமணியன், சர்வதேசப் பொருளாதார நிபுணர் டாக்டர் வி.அனந்த நாகேஸ்வரன் ஆகியோர் பேசுகின்றனர்.


இந்தக் கருத்தரங்கின் இரண்டாம் நாளன்று பிசினஸ் தொடர்பான பல்வேறு பிரச்னைகள் பற்றி விவாதிக்கப்படும். அன்றைய தினம், தமிழ்நாடு சி.ஐ.ஐ. அமைப்பின் தலைவர் எம்.பொன்னுசுவாமி பேசுகிறார். ஆரஞ்ச்ஸ்கேப் நிறுவனத்தின் நிறுவனரும், கிஸ்ஃப்ளோ நிறுவனத்தின் சி.இ.ஓ.வான சுரேஷ் சம்பந்தம் பேசுகிறார். சிறுதொழில் நிபுணர்களுக்கு வழிகாட்டும் ஆஸ்ஃபைர் நிறுவனத்தின் நிறுவனரும், எம்.டி.யுமான ரமாஸ் கிருஷ்ணன் இந்தக் கருத்தரங்கில் பேசவிருக்கிறார்.
 

இந்த கான்க்ளேவ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புகிற பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர்கள், மாணவர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள், கார்ப்பரேட் மேனேஜர்கள்
https://www.vikatan.com/nanayamvikatan/2018-aug-05/announcement/142950-finance-business-conclave-vision-2025.htmlஎன்கிற லிங்கினை உடனே க்ளிக் செய்து, கட்டணம் செலுத்தித் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம். ஆகஸ்ட் 5-ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்பவர்களுக்கு  தள்ளுபடி உண்டு!

https://www.vikatan.com/nanayamvikatan/2018-aug-05/announcement/142950-finance-business-conclave-vision-2025.html
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

உடனடி கடன் = வாழ்நாள் முழுவதும் தொல்லை? Instant Loan

உடனடி கடன் = வாழ்நாள் முழுவதும் தொல்லை? எந்த ஒரு ஆவணமோ அல்லது கிரெடிட் சரிபார்த்தல் இல்லாமல் பெறும் கடன்கள் உங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத...