டிசிபி பேங்க், 2018-19 முதல் காலாண்டு நிதி நிலை முடிவுகள் அறிவிப்பு
ஜூலை 14, 2018, மும்பை: டிசிபி பேங்க் லிமிடெட் ((BSE: 532772; NSE: DCB) –ன் இயக்குநர் குழு கூட்டம் மும்பையில் நடந்தது. அதில், 2018-19 முதல் காலாண்டு (Q1 FY 2019) நிதி நிலை முடிவுகள் ஆய்வு செய்யப்பட்டது.
2018-19 முதல் காலாண்டு நிதி நிலை முக்கிய முடிவுகள்
a) 2018-19 முதல் காலாண்டில் வங்கியின் வரிக்கு பிந்தைய லாபம் (Profit After Tax - நிகர லாபம்) ரூ.70 கோடி. இது 2017-18 முதல் காலாண்டில் ரூ. 65 கோடியாக இருந்தது.
b) 2018-19 முதல் காலாண்டில் வங்கியின் வரிக்கு முந்தைய லாபம் (Profit Before Tax ) ரூ. 108 கோடி. இது 2017-18 முதல் காலாண்டில் ரூ. 101 கோடியாக இருந்தது.
c) செயல்பாட்டு லாபம் ரூ. 141 கோடி, இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ.136 கோடியாக இருந்தது.
d) வங்கியின் நிகர வட்டி வருவாய்ரூ. 273 கோடி. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ. 233 கோடியாக இருந்தது.
e) வட்டி வருமானம் ரூ.83 கோடி. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ. 86 கோடியாக இருந்தது2018-19 முதல் காலாண்டின் வட்டி வருமானத்தில் ஒரு முறை கரூவூல வருமானம் ரூ. 10 கோடியும் அடங்கும். இது, இது 2017-18 முதல் காலாண்டில் ரூ. 21 கோடியாக இருந்தது.
f) வழங்கப்பட்ட நிகர கடன்கள் (Net Advances), 2018 ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி ரூ. 21,243 கோடியாக அதிகரித்துள்ளது. இது, 2017 ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி ரூ. 16,266 கோடியாக இருந்தது. இது 31% வளர்ச்சியாகும்.
g) 2018 ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி வங்கியின் டெபாசிட்கள் 31% வளர்ச்சிக் கண்டு ரூ. 25,032 கோடியாக உள்ளது. சில்லறை காசா மற்றும் சில்லறை குறித்த டெபாசிட்கள் தொடர்ந்து வங்கியின் நிலையான நிதி ஆதாரமாக இருக்கிறது. வங்கியின் மொத்த டெபாசிட்டில் சில்லறை டெபாசிட்கள் (வேளாண் மற்றும் அனைவருக்கும் வங்கி் சேவை சேர்த்து) 75% ஆக உள்ளது.
h) காசா விகிதம், 2018 ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி24.63% ஆக உள்ளது. இது, 2017 ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி 26.85% ஆக இருந்தது . சேமிப்பு கணக்குகளின் வளர்ச்சி 32% ஆகும்.
i) நிகர வட்டி வரம்பு, 2018-19 முதல் காலாண்டில் 3.90% ஆக உள்ளது. இது 2017-19 முதல் காலாண்டில்4.23%, இது 2017-19 நான்காம் காலாண்டில் 4.09% ஆக இருந்தது.
j) மொத்த வாராக் கடன் விகிதம், ஜூன் 30, 2018 நிலவரப்படி 1.86% ஆக இருக்கிறது. இது, ஜூன் 30, 2017 நிலவரப்படி 1.74% ஆக இருந்தது. .
k) நிகர வாராக் கடன் விகிதம், ஜூன் 30, 2018 நிலவரப்படி 0.72% ஆக உள்ளது. இது, ஜூன் 30, 2017 நிலவரப்படி 0.92% ஆக இருந்தது.
l) மூலதன தன்னிறைவு விகிதம் (CAR), ஜூன் 30, 2018 நிலவரப்படி 15.55% ஆக உள்ளது. மேலும், பேசல் III விதிமுறைகள்படி டயர் I - 12.02% மற்றும் டயர் II - 3.53% ஆக உள்ளது.
n) வங்கியின் கிளைகள் எண்ணிக்கை, 2018 ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி 323 ஆக அதிகரித்துள்ளது.
செயல்பாடு குறித்து வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திரு. முரளி எம். நடராஜன் (Mr. Murali M. Natrajan, Managing Director & CEO) கூறும் போது, " கிளை விரிவாக்க திட்டம் மூலம் எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சியை அடைய முடிந்தது. அடமானக் கடன் மற்றும் கார்ப்பரேட் கடன்களில் லாப வரம்பு அழுத்தத்தில் உள்ளன. நங்கள் தொடர்ந்து நிகர வாராக் கடன்களை கவனித்துக் கொண்டிருக்கிறோம்.”
2018 ஜூன் உடன் முடிந்த காலாண்டில் டிசிபி பேங்க்-ன் தணிக்கை செய்யப்படாத நிதி நிலை முடிவுகள்
| | | ரூ. கோடி | Q1 FY | Q1 FY | Inc / Dec | | Q4 FY | | FY | | |||||||||||||||
| | | 2018-19 | | | 2017-18 | % | | 2017-18 | | 2017-18 | | ||||||||||||||
| | | | | | | | | | |||||||||||||||||
| | | வட்டி வருமானம் | 701 | | | 566 | 24% | | 649 | | 2,413 | | |||||||||||||
| | | வட்டிச் செலவு | (428) | | | (333) | (29%) | | (385) | | (1,418) | | |||||||||||||
| | | நிகர வட்டி வருமானம் | 273 | | | 233 | 17% | | 264 | | 995 | | |||||||||||||
| | | வட்டி சாரா வருமானம் | 83 | | | 86 | (3%) | | 85 | | 310 | | |||||||||||||
| | | மொத்த வருமானம் | 356 | | | 319 | 12% | | 349 | | 1,306 | | |||||||||||||
| | | செயல்பாட்டு செலவுகள் | (215) | | | (183) | (18%) | | (207) | | (781) | | |||||||||||||
| | | செயல்பாட்டு லாபம் | 141 | | | 136 | 4% | | 142 | | 525 | | |||||||||||||
| | | | | | | | | | | | | | | | |||||||||||
| | | வரி தவிர்த்த இதர ஒதுக்கீடுகள் | (33) | | | (35) | 6% | | (39) | | (139) | | |||||||||||||
| | | | | | | | | | | | | | | ||||||||||||
| | | வரிக்கு முந்தையை நிகர லாபம் | 108 | | | 101 | 7% | | 103 | | 386 | | |||||||||||||
| | | | | | | | | | | | | | | | |||||||||||
| | | வரி | (38) | | | (36) | (8%) | | (39) | | (141) | | |||||||||||||
| | | | | | | | | | | | | | | | |||||||||||
| | | வரிக்கு பிந்தைய நிகர லாபம் | 70 | | | 65 | 7% | | 64 | | 245 | | |||||||||||||
| | | | | | | | | | | | | | | | |||||||||||
| | | ஐந்தொகை (Balance Sheet) முக்கிய விவரங்கள் | | | | | | | | | |||||||||||||||
| | | | | | | | | | | | |||||||||||||||
| ரூ. கோடி | | ஜூன் 30, | | மார்ச் 31, | டிச.31, | செப். 30, | ஜூன் 30, | ||||||||||||||||||
| | 2018 | | 2018 | 2017 | 2017 | 2017 | |||||||||||||||||||
| | | | | | |||||||||||||||||||||
| மொத்த சொத்துகள் | | 31,178 | | | 30,222 | 27,151 | 25,908 | 24,345 | |||||||||||||||||
| டெபாசிட்கள் | | 25,032 | | | 24,007 | 21,296 | 20,567 | 19,155 | |||||||||||||||||
| நிகர வழங்கப்பட்ட கடன்கள் | | 21,243 | | | 20,337 | 18,595 | 17,395 | 16,266 | |||||||||||||||||
| முதலீடுகள் | | 7,053 | | | 6,219 | 5,714 | 5,711 | 5,584 | |||||||||||||||||
| பங்கு முதலீட்டாளர்களின் மூலதனம் | | 2,854 | | | 2,808 | 2,743 | 2,685 | 2,625 | |||||||||||||||||
| மொத்த நிகர வாராக் கடன் விகிதம் | | 1.86% | | | 1.79% | 1.89% | 1.80% | 1.74% | |||||||||||||||||
| நிகர வாராக் கடன் விகிதம் | | 0.72% | | | 0.72% | 0.87% | 0.90% | 0.92% | |||||||||||||||||
| ஒதுக்கீட்டு விகிதம் | | 76.09% | | | 75.72% | 73.36% | 71.96% | 71.83% | |||||||||||||||||
| காசா விகிதம் | | 24.63% | | | 24.33% | 25.67% | 25.88% | 26.85% | |||||||||||||||||
| கடன், டெபாசிட் விகிதம் | | 84.86% | | | 84.71% | 87.32% | 84.58% | 84.92% | |||||||||||||||||
| | | | | | | | | | | | | | | | |||||||||||
டிசிபி பேங்க் பற்றி
டிசிபி பேங்க் லிமிடெட் என்பது நவீன புதிய தலைமுறை தனியார் துறை வங்கி. இந்தியாவில் 19 மாநிலங்கள்,3 யூனியன் பிரதேசங்களில் 323 கிளைகளுடன் இயங்கி வருகிறது. வர்த்தக வங்கியான இதனை ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா ஒழுங்குப்படுத்தி வருகிறது. இந்தவங்கி திறமையான நிபுணர்களால் நிர்வகிக்கப்பட்டும் கண்காணிக்கப்பட்டும் வருகிறது. டிசிபி பேங்க், நவீன தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுடன் பேங்கிங் உள்ளிட்ட வசதிகளுடன் இயங்கி வருகிறது. இந்தியாவில் ஆதார் எண் மற்றும் கைரேகை அடிப்படையிலான பயோ மெட்ரிக் ஏடிஎம் மையங்களை நிரூவி உள்ளது.
ரீடெய்ல் (சிறு வணிகம்), நுண் எஸ்எம்இகள் (சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்), எஸ்எம்இகள், நடுத்தர அளவு கார்ப்பரேட் நிறுவனங்கள், நுண் கடன் நிறுவனங்கள், வேளாண், கமாடிட்டி, அரசு, பொது துறை, இந்திய வங்கிகள், கூட்டுறவு வங்கி மற்றும்வங்கிச் சாரா நிதி நிறுவனங்கள் போன்றவற்றில் இந்த வங்கியின் வணிகம் இருக்கிறது. டிசிபி பேங்க்-க்கு சுமார் 6,00,000 -க்கும் மேற்பட்ட துடிப்பான வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.
Kindly direct your enquiries to:
Gaurav Mehta, Marketing & PR | Jyothi Goswami | |||
DCB Bank Limited | Adfactors PR | |||
Cell phone: +91 9870432101 | Cell phone: +91 9702488388 | |||
Landline: +91 22 66187000 | Landline: +91 22 67574325 | |||
Email: gauravm@dcbbank.com | Email: jyothi@adfactorspr.com | |||
| | | | |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக