மொத்தப் பக்கக்காட்சிகள்

எஸ்ஸார் ஆயில் யூகே, 2017-18 நிதி ஆண்டில் சிறப்பான நிதி நிலை செயல்பாடு, எபிட்டா 300 மில்லியன் டாலர், நிகர லாபம் 161 மில்லியன் டாலர்


                                                                                               
எஸ்ஸார் ஆயில் யூகே, 2017-18 நிதி ஆண்டில் சிறப்பான நிதி நிலை செயல்பாடு, எபிட்டா 300 மில்லியன் டாலர், நிகர லாபம் 161  மில்லியன் டாலர்   
இது வரைக்கும் இல்லாத மிகப் பெரிய 258 மில்லியன் டாலர் புதுப்பித்தலின் மூலம் நம்பகத்தன்மையையும் லாபமும் மேலும் அதிகரிக்கும்.
2017-18 நிதி ஆண்டு நிதி நிலை செயல்பாடு  முக்கிய அம்சங்கள் (9 மாதங்கள் மட்டுமே உற்பத்தி காலம்)
       2017-18 -ல் வருவாய் $ 5.4 பில்லியன், 2016-17 -ல் வருவாய் $ 4.9 பில்லியன் [10.2%]
       எபிட்டா 300 மில்லியன் டாலர் - தொடர்ந்து மூன்றாவது ஆண்டு
       வரிக்கு பிந்தைய லாபம் (நிகர லாபம்) 161  மில்லியன் டாலர் (மேம்பாட்டு பணிகளுக்காக பணிநிறுத்தம் செய்யப்பட்டு,  நிதி ஆண்டில் ஒன்பது மாதங்கள் மட்டும் செயல்பட்ட நிலையிலும்)  
       மொத்த சுத்திகரிப்பு லாப வரம்பு (CP GRM) 2017-18 -ல் $ 9.4/bbl, 2016-17 -ல் US $ 8.4/bbl [+11.9%]
       டைகர் கியூப் (Tiger Cub) மற்றும் ஸ்டான்லா (Stanlow) திட்டங்கள் நிறைவு பெற்றுள்ளதால், உயர் மதிப்பு பொருட்களின் மேம்பட்ட லாபம் உயரும், கச்சா செலவுகள் குறைக்கவும், வருவாய் வளர்ச்சி காணும்.
       நிதி ஆண்டில் 258 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது
       டைகர் கியூப் திட்டம் நிறைவு பெற்ற பிறகு, நிறுவனத்தின் ஆண்டு உற்பத்தி திறன் 68 மில்லியன் பீப்பாயிலிருந்து (barrel)  75 மில்லியன் பீப்பாய்களாக அதிகரித்துள்ளது
       விமான எரிபொருளின் நேரடி விநியோகத்திற்காக பல புதிய ஒப்பந்தங்கள் போடப்பட்டு, விமான வர்த்தகம்   பாதுகாக்கப்பட்டுள்ளது.
       மார்ச் 2018 ஆம் ஆண்டின் இறுதியில், இங்கிலாந்தில் (UK) 50 சில்லறை நிலையங்கள் நெட் ஒர்க் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
       மும்பை / லண்டன் ஜூலை 4, 2018: எஸ்ஸார் ஆயில் யூகே நிறுவனம் (Essar Oil (UK) Limited), ஸ்டான்லா கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தை சொந்தமாக கொண்டுள்ளது. 2018 மார்ச் உடன் முடிந்த நிதி ஆண்டில் இதன் நிதி நிலை மிகவும் மேம்பட்டுள்ளது.
செயல்பாடு மற்றும் நிதி நிலை மேம்பாடு: முக்கிய குறிகாட்டிகள்   (1 அமெரிக்க டாலர்  =  ரூ. 64.394)
மார்ச் உடன் முடிந்த
2017-18
2016-17
மாற்றம்
சுத்திகரிப்பு  (in MMT)
7.19
9.09
(20.9%)
மொத்த வருவாய் (in US $m)
5,427
(ரூ. 34,947 கோடி)
4,924
(ரூ.  32,975 கோடி)
+10.2%
மொத்த சுத்திகரிப்பு லாப வரம்பு  (US $/bbl)
9.4
8.4
+11.9%
எபிட்டா (in US $m)
300
(ரூ. 1,932 கோடி)
311
(ரூ. 2,083 கோடி)
(3.5%)
நிகர லாபம்  (in US $m)
161
(ரூ. 1,037 கோடி)
168
(ரூ. 1,125 கோடி)
(4.2%)

இந்தச் சுத்திகரிப்பு ஒரு முக்கிய தேசிய சொத்து ஆகும், இது இங்கிலாந்தின் சாலை போக்குவரத்து எரிபொருள் தேவையில் 16%- ஐ  உற்பத்தி செய்கிறது. சுத்திகரிப்பு  2017-18 -ல் 7.19 MMT ஆக உள்ளது உள்ளது. இது 2016-17  உடன் ஒப்பிடும் போது 20.9% குறைவாகும். 2012-ல் பெஞ்ச் மார்ச் லாப வரம்பு US $1.00/bbl ஆக இருந்தது. இது இப்போது US $4.00/bbl ஆக உள்ளது. ஆனால், லாப வரம்பு அதிகரிப்பு நடவடிக்கையின் மூலம் எஸ்ஸார் நிறுவனத்தின் சுத்திகரிப்பு லாப வரம்பு அதிகரித்துள்ளது.
அனைத்து சுத்திகரிப்பு திட்ட மேம்படுத்தல் பணிகளும்  நிறைவடைந்துள்ளது. இதன் காரணமாக, சந்தை மேம்பாட்டு மூலம் சுத்திகரிப்பு லாபம் 75 மில்லியன் அமெரிக்க டாலர்களிருந்து 80 மில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்ஸார் ஆயில் யூகே சேர்மன் பிரசாந்த் ரூயா (Essar Oil UK Chairman, Prashant Ruia) கூறும் போது ஸ்டான்லா ஐரோப்பாவில் ஒரு மேல் அடுக்கு சுத்திகரிப்பு நிறுவனமாக விளங்குகிறது, இது இங்கிலாந்தில் 16% சந்தை பங்களிப்பை கொண்டுள்ளது. மேலும்  இதன் வளர்ச்சி சில்லறை மற்றும் விமான துறைகளில் அதிகரித்து வருகிறது. விரைவாக மாறி வரும் உலகளாவிய எரிசக்தி  சந்தையில் போட்டியிடக்கூடிய ஒரு நிலையான வணிகத்தை உருவாக்க தொழில்நுட்பத்தில் தொடர்ந்து முதலீடு செய்து வருவோம்.
எஸ்ஸார் ஆயில் யூகே தலைமை செயல் அதிகாரி எஸ். தங்கப்பாண்டியன் (Essar Oil UK Chief Executive Officer, S. Thangapandian) கூறும் போது, “ஒட்டுமொத்தமாக, இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் சாதனை படைத்ததைத் தொடர்ந்து இது ஒரு வலுவான செயல்திறனாகும். முக்கிய டர்ன் அரவுண்ட் காலம், சிக்கலான மற்றும் சவாலை நிரூபித்தது மற்றும் சவாலான காலம் மற்றும் எதிர்காலத்திற்கான அனைத்து அறிதல்களும் நன்றாக  புரிந்துகொள்ளப்பட்டு செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வோம்.  டைகர் கியூப் திட்டப் பணி முடித்தது ஒரு பெரிய சாதக அம்சமாக உள்ளது. மற்றும் ஏற்கனவே சில திட்டங்களில் நம் செயல்பாடுகள் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகமாகவே நிறைவேற்றப்பட்டுள்ளன. முன்னோக்கி செல்லும் அதே வேளையில், சந்தை அதிகரிப்பை அதிகரிக்க மற்றும் அதிக அளவு கச்சா சுத்திகரிப்பு வரம்பை அதிகரிக்க, லாப வரம்பு அதிகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.” 
எஸ்ஸார் ஆயில் யூகே தலைமை நிதி அதிகாரி சம்பத் பி (Essar Oil UK Chief Financial Officer, Sampath P), கூறும் போது,:  குறிப்பிடத்தக்க உற்பத்தி திறனுக்கான முதலீடு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகள் காரணமாக செயல்திறன் / உற்பத்தி குறைக்க திட்டமிடப்பட்ட போதிலும், இந்த நிறுவனம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக எபிட்டா (EBITDA) 300 மில்லியன் டாலர் மற்றும் வரிக்குப் பிந்தைய லாபம் (PAT) 161 மில்லியன் டாலர் ஆக உள்ளது. நிதி ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டு நடவடிக்கைகளால் உற்பத்தி அதிகரித்திருப்பதோடு, கச்சா எண்ணெய் செலவுகள் குறைந்திருக்கிறது. மேலும் உயர் மதிப்பு பொருட்கள் மூலமான லாபம் அதிகரித்துள்ளது.

எஸ்ஸார் தொடர்ந்து ஸ்டான்லா டெலிவரி வழங்கும்..
ஜூலை 2011-ல் எஸ்ஸார் நிறுவனம், ஸ்டான்லாவை கையக்கப்படுத்தியது, 2017-18 ஆம் நிதி ஆண்டு உள்பட இது வரைக்கு மேற்கொள்ளப்பட்ட முதலீடு எல்லாம் சேர்த்து, மொத்தம் 850 மில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது, வியாபாரத்தை லாபத்துக்கு திருப்புவதற்கும், லாபம் அதிகரிக்கவும் உதவி உள்ளது.
இங்கிலாந்திலும் அதை தாண்டியும் தொடர்ச்சியான வணிக வளர்ச்சி மற்றும் லாப வளர்ச்சி மூலம் நிறுவனத்தின் நிதிச் செயல் திறனை மேம்படுத்துவதற்கான ஓர் உத்தியை இயக்குநர் குழு கவனத்தில் கொண்டுள்ளது.
முதல் முறையாக, பெட்ரோல் (gasoline) ஏற்றுமதி சந்தையை பூர்த்தி செய்யும் பொருட்டு, இந்த நிறுவனம் ரோட்டர்டாம் (Rotterdam) -ல்  குத்தகைக்கு சேமிப்பு கிடங்கை பெற்றுள்ளது.
முன்னணி விமான நிறுவனங்களுக்கு, விமான எரிபொருள் நேரடி விநியோகம் செய்யும் சந்தையை மேம்படுத்த முன்னுரிமை கொடுப்பது அதிகரித்துள்ளது. இதையொட்டி இங்கிலாந்திலுள்ள பல விமான நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இங்கிலாந்து விமான நிலையங்களுக்கு ஜெட் A-1, மொத்த விநியோகத்தில் எஸ்ஸார் ஒரு முக்கிய  நிறுவனமாக உள்ளது.
இங்கிலாந்து சில்லறை சந்தையில் நுழைந்ததிலிருந்து 50 க்கும் மேற்பட்ட நிலையங்களில் வளர்ந்துள்ளது. இதற்கான எஸ்ஸார் நெட்வொர்க் விருது பெற்றுள்ளது.
ஸ்டான்லோ சுத்திகரிப்புக்கு எதிரே  சொந்தமாக சுத்திகரிப்பு ஆலையை இந்த ஆண்டின் இறுதியில் திறக்க உள்ள முதல் நிறுவனம் இதுவாகும்.
பாதுகாப்பு செயல்திறன் ஒரு முக்கிய விஷயமாக இப்போதும் உள்ளது. உடல்நலம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் (HSE) ஆகியவற்றில் தொடர்ச்சியான முதலீடுகளைத் மேற்கொண்டு மேம்படுத்துதல் மற்றும் ஆபத்தை குறைத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எஸ்ஸார் ஆயில் யுகே, மூலதன வசதிகளை கொண்டுள்ளது. மேலும் மற்றும் நீண்ட கால கடன்கள் இல்லை.
நிறைவு
எஸ்ஸார் ஆயில் யூகே பற்றி
எஸ்ஸார் ஆயில் (UK) லிமிடெட் (Essar Oil (UK)) என்பது எஸ்ஸார் எனர்ஜி  லிமிட்டெட் ( Essar Energy Limited) நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இதற்கு லிவர்பூலுக்கு (Liverpool) அருகே மெர்சி அஸ்தாவரியின் (MerseyEstuary) தெற்குப் பகுதியில் ஸ்டான்லோ சுத்திகரிப்பு நிறுவனம் சொந்தமாக உள்ளது.
ஸ்டான்லோ, இங்கிலாந்தின் சாலை போக்குவரத்து எரிபொருள்களில் 16 சதவிகிதத்தை உற்பத்தி செய்கிறது, இதில், ஆண்டுக்கு 3 பில்லியன் லிட்டர் பெட்ரோல், 4.4 பில்லியன் லிட்டர் டீசல் மற்றும் 2.1 பில்லியன் லிட்டர் விமான எரி பொருள் (ஜெட் எரி பொருள்) அடங்கும்.
Media contact: 
Ian Cotton, Head of Communications, on 0151 350 4583 or 07805 854169

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

உடனடி கடன் = வாழ்நாள் முழுவதும் தொல்லை? Instant Loan

உடனடி கடன் = வாழ்நாள் முழுவதும் தொல்லை? எந்த ஒரு ஆவணமோ அல்லது கிரெடிட் சரிபார்த்தல் இல்லாமல் பெறும் கடன்கள் உங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத...