மொத்தப் பக்கக்காட்சிகள்

தமிழகத்தில் சுய உதவி குழு மூலம் ஐசிஐசிஐ வங்கி 17 லட்சம் பெண்களுக்கு உதவி

தமிழகத்தில் சுய உதவி குழு-வங்கி இணைப்பு திட்டத்தின்  மூலம் ஐசிஐசிஐ வங்கி 17 லட்சம் பெண்களுக்கு உதவி செய்து புதிய மைல்கல்லை கடந்துள்ளது

*       இந்த திட்டத்தின் மூலம் ஐசிஐசிஐ வங்கி 1.3 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.4,300 கோடியை கடனாக வழங்கியுள்ளது
*       சுய உதவி குழு-வங்கி இணைப்பு திட்டத்தின்  மூலம் சிறப்பாக செயல்பட்டதற்காக,   தனியார் துறை வர்த்தக வங்கிகளில்  ஐசிஐசிஐ வங்கிக்கு முதல் பரிசை நபார்ட் வழங்கியுள்ளது
*       2020- ம் ஆண்டு  இறுதிக்குள்  25 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் பயனாளிகளுக்கு ஒட்டுமொத்த கடனாக ரூ 7,000 கோடியை வழங்க ஐசிஐசிஐ வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது.

சென்னை: ஒருங்கிணைக்கப்பட்ட சொத்துகளின் மதிப்பின்படி இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ,  இன்றைய  தினம் வசதியற்ற பெண்களை மேம்படுத்தும்   சுய உதவி குழு-வங்கி இணைப்பு திட்டத்தின்  (Self Help Group-Bank Linkage Programme  - SBLP) மூலம் தங்களால் பயனடைந்த பெண் பயனாளிகளின் எண்ணிக்கை 17 லட்சத்தை கடந்துள்ளதாக அறிவித்துள்ளது. வங்கிச் சேவைகள் அதிகம் கிடைக்காத கிராமத்து மக்களின் மேம்பாட்டுக்காக நிதி உதவி மற்றும் சேவைகளை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். 2011-ம் ஆண்டு இத்திட்டம்  ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து இதன் ஒரு பகுதியாக செயல்பட்டு  1.3 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.4,300 கோடி கடனை ஐசிஐசிஐ வங்கி வழங்கியுள்ளது.

சுய உதவி குழு-வங்கி இணைப்பு திட்டத்தில் (SBLP)  ஐசிஐசிஐ வங்கியின் தொடர்ந்த முயற்சிகளை அங்கீகரிப்பதற்காக இவ்வங்கிக்கு தனியார் துறை வர்த்தக வங்கிகளில் முதல் பரிசை நபார்ட் (NABARD) வழங்கியது. இத்திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஐசிஐசிஐ வங்கி 3-வது ஆண்டாக தொடர்ந்து இப்பரிசை வெல்கிறது.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஐசிஐசிஐ வங்கியின் ரூரல் மற்றும் இன்குளூசிவ் பாங்கிங் குரூப் பிரிவின் மூத்த பொது மேலாளர் திரு.அவ்ஜித் சாஹா (Mr. Avijit Saha, Senior General Manager & Head, Rural & Inclusive Banking Group, ICICI Bank),  ஒவ்வொரு வீட்டுக்கும் பெண்கள்தான் முதுகெலும்பு என்று  ஐசிஐசிஐ வங்கி நம்புகிறது. தமிழகத்தில் கிராமிய மற்றும் சிறு நகர்ப்புற இடங்களில் வசிக்கும் பெண்கள், தொழில் முனைவோர் ஆவதற்காக சிறந்த முறையில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவர்களுக்கு நிதியுதவி  செய்வதன் மூலம் நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு அவர்களின் பங்களிப்பை அதிகரிக்க முடியும் என்ற எங்களின் நம்பிக்கையை இது மேலும் அதிகப்படுத்தியுள்ளது. வயல்கள் மற்றும் வயல்களைச் சார்ந்து வாழ்வாதாரங்களை உருவாக்கும் சுய உதவிக் குழுக்களுக்கு நிதியுதவி வழங்குவதில் நாங்கள் கூடுதல் கவனம் செலுத்துவோம்.  அவர்களின் தொழிலை மேம்படுத்த பொருளாதார உதவிகளை வழங்குவோம்.  சுய உதவிக் குழுக்கள் மூலம் ஐசிஐசிஐ வங்கி 17 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் பயனாளிகளின் குடும்பங்களுக்கு உதவியுள்ளோம் என்பதிலும், அவர்களுக்கு இதுநாள் வரை ரூ.4,300 கோடி கடன் வழங்கியுள்ளோம் என்பதிலும் நான் மகிழ்ச்சியடைகிறேன். பயனாளிகள் வங்கிக் கிளைகளைத் தேடி வருவதை விட,  சுய உதவிக் குழுக்களை தேடிச் சென்று நிதி உதவிகளை அறிமுகப்படுத்துவதில்  இவ்வங்கி ஒரு முன்னோடியாக விளங்குகிறது.  இதன்மூலம் வங்கிக் கிளைகளுக்கு செல்லும் பயணச் செலவு இல்லாததால்,  பயனாளிகள் கடன் பெறுவதற்கான கட்டணம் மேலும் குறைகிறது. 2020-ம் ஆண்டுக்குள் 25 லட்சம் பெண் பயனாளிகளை அணுகி, அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்த கடனை ரூ.7 ஆயிரம் கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம்என்றார்.

சுய உதவிக் குழுக்கள் என்பது கிராமம் மற்றும் சிறு நகரப் பகுதிகளில் 10 முதல் 20 வசதி குறைந்த பெண்கள் வரை இணைந்து  தங்கள் நிதி ஆதாரங்களையும் வளங்களையும் திரட்டி அதை வைத்து தொழில்களைச் செய்வதாகும். இந்த முறையில்  விவசாயம், ஊதுபத்தி தயாரித்தல், சேலை மற்றும் கைத்தறி துணிகளை நெய்தல், அப்பளம், பொம்மைகள் தயாரித்தல், கோயில் வாசல்களில் பூக்கடைகள் வைத்தல், செயற்கை நகைகளை விற்பனை செய்தல், தையல், பழ மற்றும் காய்கறி வியாபாரம் என பல்வேறு தொழில்களை சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்கள் செய்கிறார்கள்.

ஐசிஐசிஐ வங்கி தங்களிடம் உள்ள மனித வளத்தின் மூலம், சுய உதவிக் குழுக்களை தேடிச் சென்று வங்கிச் சேவைகளை வழங்குகிறது. இதன் மூலம் அக்குழுக்களின் உறுப்பினர்கள் அனைவரும் வங்கியைத் தேடிச் செல்லவேண்டிய தேவையை அகற்றுகிறது. வங்கிகளின் பிரதிநிதிகள், கடனுக்கான விண்ணப்பங்களையும் சுய உதவிக் குழுக்களைப் பற்றிய விவரங்களையும் காகிதங்களின் உதவி இல்லாமல் டேப்லட்களிலேயே (tablet) பதிவு செய்து வங்கிக்கு அனுப்பி வைக்கிறார்கள்.  இதனால் தேவையற்ற கால விரயம் தவிர்க்கப்படுகிறது.   உறுப்பினர்கள் அனைவரும் வங்கிக்கு சென்று வருவதற்கான பயணச் செலவுகளையும், பரிவர்த்தனைக் கட்டணத்தையும் இது குறைக்கிறது.
சுய உதவிக் குழுக்களின் வெற்றியைப் பார்த்து, சுய உதவி குழு-வங்கி இணைப்பு திட்டத்தின்  மூலம் இதற்கு ஐசிஐசிஐ வங்கி ஆற்றும் சேவைகளுக்காக ராமநாதபுரம், கடலூர், மதுரை, கன்னியாகுமரி, விழுப்புரம், அரியலூர், தருமபுரி, நாமக்கல், தூத்துக்குடி, திருச்சி, திருவண்ணாமலை, திருநெல்வேலி ஆகிய 12 மாவட்டங்களின் ஆட்சியாளர்கள் இதற்கு விருதுகளை வழங்கியுள்ளனர்.

தமிழகத்தின் 32 மாவட்டங்களில் உள்ள சுய உதவிக் குழுக்களுக்கு ஐசிஐசிஐ வங்கி உதவிகளை செய்து வருகிறது. இந்த வங்கி  480 கிளைகள் மற்றும்  1,500 ஏடிஎம்களைக் கொண்ட தனது வலுவான நெட்வொர்க் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறது.

செய்திகள் மற்றும் விவரங்களுக்கு www.icicibank.com என்ற இணையதளத்தைப் பார்க்கலாம். ட்விட்டரில் பின்தொடர   www.twitter.com/ICICIBank.
ஐசிஐசிஐ வங்கி 4,867 கிளைகள் மற்றும்  14,367 ஏடிஎம் மையங்கள், போன் பேங்கிங், இண்டர்னெட் பேங்கிங்,   (www.icicibank.com), ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் மூலம் பேங்கிங் மற்றும்  PocketsbyICICIBankமூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கி வருகிறது. மொபைல் போனில் இந்தியாவின் முதல் மொபைல் போனில் இந்தியாவின் முதல் டிஜிட்டல் வங்கி என்ற பெயரைப் பெற்றுள்ளது.
  

ஐசிஐசிஐ வங்கியைப்   (NYSE:IBN) பற்றி:  ஒருங்கிணைக்கப்பட்ட சொத்துகளின் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியாக ஐசிஐசிஐ விளங்குகிறது. 2018-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிப்படி இந்த வங்கியின் ஒருங்கிணைக்கப்பட்ட சொத்து மதிப்பு 172.5 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான  ஐசிஐசிஐ தனியார் காப்பீட்டு நிறுவனம், சொத்து மேலாண்மை மற்றும்   பத்திரங்கள் தரகு நிறுவனங்கள், தனியார் பங்கு நிறுவனங்கள் ஆகியவை இதன் கிளை நிறுவனங்களாகும். இந்தியா உட்பட 17 நாடுகளில் ஐசிஐசிஐ செயல்பட்டு வருகிறது.
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

உடனடி கடன் = வாழ்நாள் முழுவதும் தொல்லை? Instant Loan

உடனடி கடன் = வாழ்நாள் முழுவதும் தொல்லை? எந்த ஒரு ஆவணமோ அல்லது கிரெடிட் சரிபார்த்தல் இல்லாமல் பெறும் கடன்கள் உங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத...