மொத்தப் பக்கக்காட்சிகள்

யூடிஐ மூன்றின் சக்தி


யூடிஐ மூன்றின் சக்தி
(UTI Power of Three)
இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை அண்மைக் காலத்தில் வகைப்படுத்தலின் செயல்முறை மற்றும் அதன் திட்டங்களின் பகுப்பாய்வில் (process of categorization and rationalization of its products)அதிக மாற்றங்களை சந்தித்துள்ளது. இதன் மூலம் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் எளிமையாகவும், ஒரே சீராகவும் (simplicity and uniformity)  மாறி உள்ளன.  இந்த முயற்சியின் போது, மியூச்சுவல் ஃபண்ட் துறை ஒருவிதமான சிக்கலை கண்டது. அந்தச் சிக்கல் தீர்க்கப்பட்டுள்ளதால், அடுத்து வரும் ஆண்டுகளில் மியூச்சுவல் ஃபண்ட் துறையின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
இதனை, யூடிஐ மியூச்சுவல் ஃபண்ட் (UTI Mutual Fund) தெளிவான மற்றும் தனித்துவமான திட்டங்களை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்கான ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டிருக்கிறது.
யூடிஐ மூன்றின் சக்தி (UTI Power of Three) மூலம் முக்கியமான பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டுக் கலவையை ( equity portfolio) 3 தனித்துவமான முதலீட்டு பாணிகள் (investment styles) மூலம் உருவாக்கி உள்ளது.
இந்த மூன்றின் சக்தியில் யூடிஐ மாஸ்டர்ஷேர் யூனிட் ஸ்கீம்  (UTI Mastershare Unit Scheme), யூடிஐ ஈக்விட்டி ஃபண்ட் (UTI Equity Fund), யூடிஐ வேல்யூ ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் (UTI Value Opportunities Fund) ஆகிய 3 ஃபண்ட்கள் இடம் பெற்றுள்ளன
முதல் ஃபண்ட் ஆன, யூடிஐ மாஸ்டர்ஷேர் யூனிட் ஸ்கீம் என்பது லார்ஜ் கேப் ஃபண்ட் (Large Cap Fund) ஆகும். இது எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யும் மற்றும் எப்போது வேண்டுமானாலும் யூனிட்களை விற்று பணமாக்கும் ஓப்பன் எண்டட் (open ended) பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட் ஆகும். நியாயமான விலையில் வளர்ச்சி (Growth at Reasonable Price - GARP) என்கிற முதலீட்டு பாணியில் அமைந்த பெரிய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும் ஈக்விட்டி ஃபண்ட் (equity scheme) இது.
இரண்டாம் ஃபண்ட் ஆன, யூடிஐ ஈக்விட்டி ஃபண்ட், மல்டி கேப் ஃபண்ட் ஆகும். இது ஓப்பன் எண்டட் ஈக்விட்டி ஃபண்ட் ஆகும். மேலும், இது, பெரிய நிறுவனப் பங்குகள், நடுத்தர நிறுவனப் பங்குகள், சிறிய நிறுவனப் பங்குகளில் கலந்து முதலீடு செய்யும் மல்டி கேப் ஃபண்ட் (Multi Cap Fund) மற்றும் வளர்ச்சி பாணி ஈக்விட்டி ஃபண்ட் ஆகும்.
மூன்றாம் ஃபண்ட் ஆன, யூடிஐ வேல்யூ ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட், மதிப்பு அடிப்படையில் முதலீடு (value investment strategy) செய்யும் ஓப்பன் எண்டட் ஈக்விட்டி ஃபண்ட் ஆகும்.
இந்த மூன்று தனித்துவமான முதலீட்டு பாணிகளை கொண்ட ஃபண்ட்களும் ஒருவரின் முதலீட்டுக் கலவையில் ஒரு சேர இடம் பெற்றால், நன்கு சமநிலையான ஒரு போர்ட்ஃபோலியோ (balanced portfolio) உருவாகும் என யூடிஐ மியூச்சுவல் ஃபண்ட் நம்புகிறது.
முதலீட்டு தொகையில், எவ்வளவு தொகையை எந்த ஃபண்டுகளுக்கு ஒதுக்கீடு செய்வது என்பது முதலீட்டாளரின் ரிஸ்க் எடுக்கும் திறன் அல்லது அவர் ஃபண்டுகளுக்கு அளிக்கும் முன்னுரிமை அடிப்படையை (risk profile or preference) சார்ந்து இருக்கும்.
இந்த மூன்று ஃபண்ட்களின் முக்கிய அம்சங்கள் மற்றும் அவற்றின் முதலீட்டு பாணிகள் பின் வருமாறு:

யூடிஐ மாஸ்டர்ஷேர் யூனிட் ஸ்கீம் (UTI Mastershare Unit Scheme):

இந்தியாவின் முதல் பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட் (equity oriented fund)  ஆன இது  1986 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகமானது.
 இது ஒரு லார்ஜ் கேப் ஈக்விட்டி ஃபண்ட் ஆகும். நியாயமான விலையில் வளர்ச்சி என்ற முதலீட்டு பாணியில் அமைந்தது. இந்த ஃபண்ட்டில் திரட்டப்படும் நிதி, வளர்ச்சி வாய்ப்புள்ள கவர்ச்சிகரமான மதிப்பீட்டை கொண்ட நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்படும்.
இந்த ஃபண்டின் முதலீட்டு உத்தி கீழ் காணும் 3 முக்கிய விஷயங்களை கொண்டிருக்கும்.
1.     நிறுவனத்தின் வளர்ச்சி திறன் மீது நீண்ட காலத்தில் பங்குச் சந்தை, குறைத்து மதிப்பீடு செய்திருக்கும். அது போன்ற நிறுவனப் பங்குகளை அலசி ஆராய்ந்து அவற்றில் முதலீடு செய்யப்படுகிறது.
2.     சாதகமான தேவைப்பாடு சுழற்சி, ஒருங்கிணைப்பு, கட்டுப்பாட்டு அமைப்புகளின் தடைகள் நீக்குதல் அல்லது நிறுவனம் சார்ந்த காரணிகளான குறைவான செலவில் உற்பத்தி, துணிகர விரிவாக்க திட்டம் போன்றவை மூலம் வளர்ச்சி போக்கு மேம்படுகிறது.
3. இந்தத் தொழிலை தொடங்க, வணிக மூலதனம் அதிகமாக தேவைப்படும். ஆனால், இந்த நிறுவனங்கள் கவனமாக முதலீடு செய்து, துறை சார்ந்த நிறுவனங்களிளேயே சிறப்பாக செயல்படும்.

யூடிஐ ஈக்விட்டி ஃபண்ட் (UTI Equity Scheme):

இது ஒரு மல்டி கேப் ஃபண்ட் ஆகும். இதில், திரட்டப்பட்ட நிதி வளர்ச்சிக்கு வாய்ப்பு உள்ள அனைத்து சந்தை மதிப்பு கொண்ட  (market capitalization) நிறுவனப் பங்குகளில் பிரித்து முதலீடு செய்யப்படும். இந்த ஃபண்டின் முதலீட்டுக் கலவையில் இடம் பெறும் நிறுவனங்கள் அதிக தரமான வணிகத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என கவனம் செலுத்தப்படும். மேலும், நீண்ட காலத்தில் வலிமையான வளர்ச்சிக்கு தகுதி உள்ளதாக இருக்க வேண்டும். நிறுவனத்தின்மூலதனம் மீதான வருமானம் (Return on capital employed - RoCEs)) அல்லது பங்கு மூலதனம் மூலமான வருமானம் ( Return on Equity - RoEs)) நீண்ட காலத்தில் நன்றாக இருக்க வேண்டும்.  
 உண்மையில் உயர் தரமான வணிகங்கள், அதிக ஆர்ஓசிஇ-க்கள் மற்றும் ஆர்ஓஇ-க்களை அளிக்கும். மேலும், கஷ்டமான கால கட்டங்களில் கூட இந்த துறை அல்லது நிறுவனங்கள் சிறப்பாக செயல்படும். அதிக ஆர்ஓசிஇ-க்கள், ஆர்ஓஇ-க்களை கொண்டிருக்கும் வணிகம், அதிக பண வரத்தை கொண்டிருப்பதோடு, பொருளாதார மதிப்பையும் உருவாக்கும். இந்த ஃபண்டில், முதலீட்டுக்காக பங்குகள் 'பாட்டம் அப்' (bottom up) முறையில் தேர்வு செய்யப்படும். இந்த முறையில், சுலபமாக அதிக பண வரத்து, மூலதனத்தை சிறப்பாக பயன்படுத்துதல், கூட்டு வருமான வளர்ச்சி காணும் நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றின் பங்குகளில் முதலீடு செய்யப்படும்.

யூடிஐ வேல்யூ ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் (UTI Value Opportunities Fund):

மதிப்பு மிக்க, வாய்ப்பு உள்ள அனைத்து சந்தை மதிப்பு கொண்ட  (market capitalization) நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்படும். இந்த ஃபண்டின் முதலீட்டுக் கலவையில் இடம் பெறும் நிறுவனப் பங்குகள், 'மதிப்பு' பாணியில் (Value style of investment) அமைந்துள்ளது. இங்கே 'மதிப்பு' பாணி பங்கு முதலீடு என்பது ஒரு பங்கை அதன் உள்ளார்ந்த மதிப்பை (intrinsic value) விட குறைந்த விலையில் பங்குகளை வாங்குவதை குறிக்கும். உள்ளார்ந்த மதிப்பு என்பது, நீண்ட காலத்தில் அந்த நிறுவனம் அதன் பங்குதாரர்களுக்கு உருவாக்கிய பண வரத்தின் (cash flows) தற்போதைய மதிப்பாகும். குறைத்து மதிப்பிடப்பட்ட வணிகங்கள் கீழ்க் கண்ட இரு முறைக்களில் அடையாளம் காணப்படுகிறது.
1. போட்டித் தன்மை மற்றும்  நிலைத் தன்மைகளின்  நன்மைகள் மற்றும் நிறுவனத்தின் நீண்ட நாளைய வளர்ச்சியை  பாராட்டும் விதமாக சந்தை செயல்படக்கூடும். இந்த நிறுவனங்கள் சுழற்சியின் நெறிமுறையை மீறி சிறப்பாக செயல்படுகின்றன.
  2. இதற்கு மாறாக சில நிறுவனங்கள், சுழற்சி காரணங்களுக்கு அவற்றின் அனுபவத்தின் அடிப்படையில் சவால்விட்டு வெற்றி வெறும், தங்களின் செயல்கள் மூலம் சூழலை மாற்றி அமைக்கும். அதேநேரத்தில், அதன் பிரதான தொழில் வலிமையானதாக இருப்பத்தோடு, சிறப்பான எதிர்கால வளர்ச்சி பாதையையும் (சிறப்பான பண வரத்து, அதிக வருமான விகிதங்கள்)கொண்டிருக்கும். இது அதன் கவர்ச்சிகரமான குறைத்து மதிப்பிடப்பட்ட மதிப்பில் தெரியும்.
இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் எதிர்பார்ப்பை ஒட்டி மலிவான விலையில் பங்குகளை வாங்கும் வாய்ப்பு உருவாகும். யூடிஐ வேல்யூ ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட்-ல் அதிக உள்ளார்ந்த மதிப்பு மற்றும் நீண்ட காலத்தில் சிறப்பான பண வரத்தை உருவாக்க கூடிய நிறுவனப் பங்குகள் தேடி கண்டறிந்து முதலீடு செய்யப்படுகிறது.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

சேமிப்புக் கணக்கு: என் ஆர் ஐ மற்றும் என் ஆர் ஓ NRI

bob Masterstroke சேமிப்புக் கணக்கு என் ஆர் ஐ மற்றும் என் ஆர் ஓ விற்காக இலவச ஓபுலன்ஸ் டெபிட் கார்டு மற்றும் ஆயுட் காலத்திற்கு எடர்னா கிரெடிட்...