மொத்தப் பக்கக்காட்சிகள்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இழப்பு என்பது செயல்பாடுகள் மூலம் வந்தது அல்ல. வாராக் கடனுக்கான ஒதுக்கீடு மூலம் வந்தது.


இந்தியன் ஓவர்சீஸ் வங்கி


வங்கியின் இழப்பு என்பது செயல்பாடுகள் மூலம் வந்தது அல்ல. வாராக் கடனுக்கான ஒதுக்கீடு மூலம் வந்தது.

மார்ச் 31, 2018 உடன் முடிந்த காலாண்டின் நிதி நிலை செயல்பாடுகள்..!

              வங்கியின் மொத்த வணிகம், மார்ச் 31, 2018 நிலவரப்படி ரூ.3,67,831 கோடியாக உள்ளது. இது, மார்ச் 31, 2017 நிலவரப்படி ரூ. 3,68,119  கோடியாக இருந்தது.                                                                                                              
               மொத்த டெபாசிட்கள்மார்ச் 31, 2018 நிலவரப்படி ரூ.  2,16,832  கோடியாக அதிகரித்துள்ளது. இது, மார்ச் 31, 2017 நிலவரப்படி ரூ. 2,11,343 கோடியாக இருந்தது. வங்கி மொத்த டெபாசிட் திரட்டுவதில் கவனத்தை குறைத்து சில்லறை டேர்ம் டெபாபாசிட்கள் திரட்டுவதில் கவனத்தை கூட்டியது. இதன் மூலம் டெபாசிட்கள் நிலையாக வர ஆரம்பித்து, நிதித் திரட்டும் செலவு குறைந்துள்ளது.

           வங்கியின் காசா (CASA) விகிதம் மார்ச் 31, 2018 நிலவரப்படி 36.75% ஆக உள்ளதுஇது, மார்ச் 31, 2017 நிலவரப்படி 36.09% ஆக இருந்ததுஅதேநேரத்தில், மொத்த காசா டெபாசிட் இதே காலக் கட்டத்தில் ரூ. 76,269 கோடியிலிருந்து ரூ. 79,678 கோடியாக அதிகரித்துள்ளது. சேமிப்பு கணக்குகளின் எண்ணிக்கை, மார்ச் 31, 2017 உடன் ஒப்பிடும் போது, மார்ச் 31, 2018 -ல் 5.35% வளர்ச்சிக் கண்டுள்ளது.                                                                             
           மொத்தம் வழங்கப்பட்ட கடன்கள் , மார்ச் 31, 2018 நிலவரப்படி ரூ.1,50,999 கோடியாக உள்ளது. இது, மார்ச் 31, 2017 நிலவரப்படி ரூ. 1,56,776 கோடியாக இருந்தது.  இந்த வங்கியானது, சிறு கடன், விவசாயக் கடன்சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள்  (Retail, Agri and MSME) கடன்களை மாற்றி அமைந்தது. இதனால், மொத்த உள்நாட்டு கடனில்,  இவற்றின் பங்களிப்பு மார்ச் 2017-ல் 58.74%  ஆக இருந்தது. இது 2018 மார்ச் மாதத்தில் 64.82% ஆக அதிகரித்துள்ளது.                                                                                               
          எம்எஸ்எம்இ பிரிவு கடன்  வளர்ச்சி, 2018 மார்ச் காலாண்டில் முந்தையை 2017 மார்ச் காலாண்டை விட  6.71% அதிகரித்துள்ளது.
             சிறு கடன் பிரிவு கடன்  வளர்ச்சி  2018 மார்ச் காலாண்டில் முந்தையை 2017 மார்ச் காலாண்டை விட 17.98% அதிகரித்துள்ளது.

             முக்கிய சில்லறை கடன்கள் (வீட்டு வசதிக் கடன்கள், வாகன கடன்கள், தனிநபர் கடன்கள் (Clean Loans) கல்விக் கடன்கள், அடமானக் கடன்கள்26.26% அதிகரித்துள்ளது.

             முதன்மை துறை கடன் 31.03.2018 நிலவரப்படி, ஏஎன்பிசி (ANBC) -ல் 47.47% ஆக உள்ளது. ஆர்பிஐ-ன் விதிமுறைப்படி இது 40% ஆக இருந்தால் போதும். ஏஎன்பிசி -ல் விவசாயக் கடன் 31.03.2018 நிலவரப்படி, 20.23% ஆக உள்ளது. விதிமுறைப்படி இது 18% ஆக இருந்தால் போதும்.

              2018, மார்ச் 31ம் தேதியுடன் முடிந்த  காலாண்டில் செயல்பாட்டு லாபம் (Operating Profit) ரூ. 1,129.15  கோடியாக உள்ளது. இது 2017, மார்ச் 31ம் தேதியுடன் முடிந்த காலாண்டில் ரூ.1,040.98  கோடியாக இருந்தது. இது, 8.47% வளர்ச்சியாகும்.

             நிகர லாபம்: 2018, மார்ச் 31ம் தேதியுடன் முடிந்த காலாண்டில் நிகர இழப்பு (Net Loss) ரூ. 3,606.73  கோடியாக உள்ளது. இது, 2017, மார்ச் 31ம் தேதியுடன் முடிந்த காலாண்டில் நிகர இழப்பு ரூ. 646.66  கோடியாக இருந்தது. ஆர்பிஐ-ன் விதிமுறைகளின்படி, வாராக் கடனுக்கு அதிக தொகை ஒதுக்கீடு செய்ய வேண்டியிருந்ததே, இதற்கு காரணமாகும். நடப்பு காலாண்டில் இந்த விஷயத்துக்காக ரூ. 799.37 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
          வங்கியின் மொத்த வருமானம்  2018, மார்ச் 31ம் தேதியுடன் முடிந்த காலாண்டில் ரூ. 5,814 கோடியாக அதிகரித்துள்ளது. இது, மார்ச் 31, 2017 நிலவரப்படி ரூ. 5662  கோடியாக இருந்தது. இது 2.68% வளர்ச்சியாகும்.                                                                                                           
          வட்டி வருமானம், 2018 மார்ச்  31ம் தேதியுடன் முடிந்த காலாண்டில் ரூ4,828  கோடியாக அதிகரித்துள்ளதுஇது, மார்ச் 31, 2017 நிலவரப்படி ரூ4,630   கோடியாக இருந்தது. இது 4.28% வளர்ச்சியாகும்.
               வட்டி சாரா வருமானம்,  2018 மார்ச்  31ம் தேதியுடன் முடிந்த காலாண்டில் ரூ987  கோடியாக உள்ளதுஇது, மார்ச் 31, 2017 நிலவரப்படி ரூ1,032  கோடியாக இருந்தது.

            மொத்தச் செலவு, 2017 மார்ச் காலாண்டில் ரூ. 4,621 கோடியாக இருந்தது. இது 2018 மார்ச் காலாண்டில் ரூ.4,685 கோடியாக  அதிகரித்து உள்ளது.

நிகர மொத்த வாராக் கடன் மேலாண்மைமொத்த  வாராக் கடன்  2018 மார்ச்  31 நிலவரப்படி   ரூ38,180  கோடியாக  (விகிதம் 25.28%) உள்ளது.  2017 மார்ச்  31 நிலவரப்படி   ரூ. 34,502.13 கோடியாக  (22.39%) இருந்தது.  மாற்றி அமைக்கப்பட்ட விதிமுறைகளின்படி (IRAC norms), புதிதாக வாராக் கடன் உருவாவது குறைந்து, ரூ. 3,629 கோடியாக குறைந்துளளது.

மொத்த வாராக் கடன் வசூல், 2018 மார்ச்  31 உடன் முடிந்த காலாண்டில்  ரூ5,726 கோடியாக உள்ளது  இது 2017 மார்ச்  31 உடன் முடிந்த காலாண்டில்   ரூ. 2,729 கோடியாக  இருந்தது. அதேநேரத்தில், புதிய வாராக் கடன், 2018 மார்ச்  31 உடன் முடிந்த காலாண்டில்  ரூ9,868 கோடியாக  உள்ளது. இதற்கு மாற்றி அமைக்கப்பட்ட விதிமுறைகளே காரணம்.  

             நிகர வாராக் கடன்  2018 மார்ச்  31 நிலவரப்படி   ரூ20,400 கோடியாக  (15.33%) உள்ளது.  2017 மார்ச்  31 நிலவரப்படி   ரூ. 19,749 கோடியாக  (13.99%) இருந்தது.

             வாராக் கடன் ஒதுக்கீட்டு விகிதம் (Provision Coverage Ratio) 2018, மார்ச் 31ம் தேதி நிலவரப்படி 59.45% ஆக அதிகரித்துள்ளது. இது, மார்ச் 31, 2017 நிலவரப்படி 53.63% ஆக  இருந்தது

மார்ச் 31, 2018 உடன் முடிந்த காலாண்டின் நிதி நிலை செயல்பாடுகள் (முந்தைய டிசம்பர் 2017 காலாண்டு உடன் ஒப்பீடு)

(1) வங்கியின் மொத்த வணிகம்  2018, மார்ச் 31ம் தேதி நிலவரப்படி ரூ. 3,67,831 கோடியாக உள்ளது. இது, 2017 டிசம்பர் 31 நிலவரப்படி ரூ. 3,68,128 கோடியாக இருந்தது.

              மொத்த டெபாசிட்கள் மார்ச் 31, 2018 நிலவரப்படி ரூ.  2,16,832  கோடியாக அதிகரித்துள்ளது. இது, டிசம்பர் 31, 2017 நிலவரப்படி ரூ. 2,16,592  கோடியாக இருந்தது.

              வங்கியின் காசா (CASA) மார்ச் 31, 2018 நிலவரப்படி  36.75% ஆக அதிகரித்து உள்ளதுஇது, டிசம்பர் 31, 2017 நிலவரப்படி 35.33% ஆக இருந்தது                               

             மொத்தம் வழங்கப்பட்ட கடன்கள் , மார்ச் 31, 2018 நிலவரப்படி ரூ.1,50,999 கோடியாக உள்ளது. இது, டிசம்பர் 31, 2017 நிலவரப்படி ரூ. 1,51,536 கோடியாக இருந்தது. 
              2018, மார்ச் 31ம் தேதியுடன் முடிந்த  காலாண்டில் செயல்பாட்டு லாபம் ரூ. 1,129.15 கோடியாக உள்ளது. இது 2017, டிசம்பர் 31ம் தேதியுடன் முடிந்த காலாண்டில் ரூ.684.77  கோடியாக இருந்தது. இது, 65.90% வளர்ச்சியாகும்.

             நிகர லாபம்: 2018, மார்ச் 31ம் தேதியுடன் முடிந்த காலாண்டில் நிகர இழப்பு (Net Loss) ரூ. 3,606.73  கோடியாக உள்ளது. இது, 2017, டிசம்பர் 31ம் தேதியுடன் முடிந்த காலாண்டில் நிகர இழப்பு ரூ. 971.17  கோடியாக இருந்தது. நிகர வாராக் கடனுக்கு கூடுதலாக ரூ. 3,155.20 கோடி ஒதுக்கப்பட்டதே முக்கிய காரணம். ஆர்பிஐ-ன் விதிமுறைகளின்படி (IRAC norms), வாராக் கடனுக்கு அதிக தொகை ஒதுக்கீடு செய்ய வேண்டியிருந்ததே, இதற்கு காரணமாகும். நடப்பு காலாண்டில் இந்த விஷயத்துக்காக ரூ. 799.37 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

          (7) வங்கியின் மொத்த வருமானம்  2018, மார்ச் 31ம் தேதியுடன் முடிந்த காலாண்டில் ரூ. 5,814 கோடியாக அதிகரித்துள்ளது. இது, டிசம்பர் 31, 2017 நிலவரப்படி ரூ. 5,062  கோடியாக இருந்தது. இது 4.86% வளர்ச்சியாகும்

(8) வட்டி வருமானம், 2018 மார்ச்  31ம் தேதியுடன் முடிந்த காலாண்டில் ரூ4,828  கோடியாக அதிகரித்துள்ளதுஇது, டிசம்பர் 31, 2017 நிலவரப்படி ரூ4,255   கோடியாக இருந்தது. இது 13.46% வளர்ச்சியாகும்.            

(9)   வட்டி சாரா வருமானம்,  2018 மார்ச்  31ம் தேதியுடன் முடிந்த காலாண்டில் ரூ987  கோடியாக உள்ளதுஇது, 2017 டிசம்பர் 31 உடன் காலாண்டில் ரூ808  கோடியாக இருந்தது. இது 22.18% வளர்ச்சியாகும். 

(10) நிகர மொத்த வாராக் கடன் மேலாண்மைமொத்த  வாராக் கடன்  (Gross NPA) 2018 மார்ச்  31 நிலவரப்படி   ரூ38,180  கோடியாக  (விகிதம் 25.28%) உள்ளது.  2017 டிசம்பர்  31 நிலவரப்படி   ரூ. 33,267 கோடியாக  (விகிதம்21.95%) இருந்தது. 

(11) மொத்த வாராக் கடன் வசூல், 2018 மார்ச்  31 உடன் முடிந்த காலாண்டில்  ரூ5,726 கோடியாக உள்ளது  இது 2017 டிசம்பர்  31 உடன் முடிந்த காலாண்டில்   ரூ. 3,021 கோடியாக  இருந்தது. அதேநேரத்தில், புதிய வாராக் கடன், 2018 மார்ச்  31 உடன் முடிந்த காலாண்டில்  ரூ9868 கோடியாக  உள்ளது. இது இது 2017 டிசம்பர்  31 உடன் முடிந்த காலாண்டில்   ரூ. 1,432 கோடியாக  இருந்தது. இதற்கு மாற்றி அமைக்கப்பட்ட விதிமுறைகளே காரணம்.

             நிகர வாராக் கடன் (Net NPA)  2018 மார்ச்  31 நிலவரப்படி   ரூ20,400 கோடியாக  (விகிதம்15.33%) உள்ளது.  2017 டிசம்பர்  31 நிலவரப்படி   ரூ. 17761 கோடியாக  (விகிதம்13.08%) இருந்தது.

             வாராக் கடன் ஒதுக்கீட்டு விகிதம் (Provision Coverage Ratio)   2018, மார்ச் 31ம் தேதி நிலவரப்படி 59.45% ஆக அதிகரித்துள்ளது. இது, டிசம்பர் 31, 2017 நிலவரப்படி 57.83% ஆக இருந்தது


மார்ச் 31, 2018 உடன் முடிந்த நிதி ஆண்டில் நிதி நிலை செயல்பாடுகள்

               செயல்பாட்டு லாபம் (Operating Profit), 2018, மார்ச் 31ம் தேதியுடன் முடிந்த  நிதி ஆண்டில்  ரூ. 3,628.08 கோடியாக உள்ளது. இது 2017, மார்ச் 31ம் தேதியுடன் முடிந்த நிதி ஆண்டில் ரூ.3,650.20  கோடியாக இருந்தது.
       நிகர லாபம்: 2018, மார்ச் 31ம் தேதியுடன் முடிந்த நிதி ஆண்டில் நிகர இழப்பு (Net Loss) ரூ. 6,299.49  கோடியாக உள்ளது. இது, 2017, மார்ச் 31ம் தேதியுடன் முடிந்த நிதி ஆண்டில் நிகர இழப்பு ரூ. 3,416.74  கோடியாக இருந்தது. நிகர இழப்பு அதிகரிக்க வாராக் கடனுக்கான ஒதுக்கீடு ரூ. 2,937 கோடி அதிகரித்ததே.

மொத்த வருமானம்  2018, மார்ச் 31ம் தேதியுடன் முடிந்த நிதி ஆண்டில்  ரூ. 21,662 கோடியாக அதிகரித்துள்ளது. இது, மார்ச் 31, 2017 நிலவரப்படி ரூ. 23,091 கோடியாக இருந்தது. கருவூல வருமானம் குறைந்தது மற்றும் கடன் வளர்ச்சி குறைந்தது  (less treasury income and contraction of credit) இதற்கு முக்கிய காரணமாகும்.

        வட்டி வருமானம், 2018 மார்ச்  31ம் தேதியுடன் முடிந்த நிதி ஆண்டில் ரூ17,915  கோடியாக அதிகரித்துள்ளதுஇது, மார்ச் 31, 2017 நிலவரப்படி ரூ19,719  கோடியாக இருந்தது. வட்டி வருமானம் குறைந்தற்கு புதிய வாராக் கடன் உருவானதாகும்.
                 
               வட்டி சாரா வருமானம் (Non Interest Income:),  2018 மார்ச்  31ம் தேதியுடன் முடிந்த நிதி ஆண்டில்  ரூ3746   கோடியாக உள்ளதுஇது, 2017 மார்ச் 31 உடன் முடிந்த நிதி ஆண்டில்  ரூ3373  கோடியாக இருந்தது. இது 11.08% வளர்ச்சியாகும். 

        மொத்த செலவு (Total Expenditure)  2018 மார்ச்  31ம் தேதியுடன் முடிந்த நிதி ஆண்டில், ரூ18,033 கோடியாக உள்ளது. இது 2017 மார்ச்  31ம் தேதியுடன் முடிந்த நிதி ஆண்டில், ரூ19,441 கோடியாக உள்ளது. ஆக மொத்தம், மொத்த செலவு 7.24% குறைந்துள்ளது.
                                                                                                           
நிகர வாராக் கடன் (Net NPA)  வசூல்.  2018 மார்ச்  31 உடன் முடிந்த நிதி ஆண்டில் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்து ரூ15496 கோடியாக உள்ளது.  2017 மார்ச்  31  உடன் முடிந்த நிதி ஆண்டில்   ரூ. 8,710 கோடியாக  இருந்தது.

    மூலதன தன்னிறைவு விகிதம் (CAPITAL ADEQUACY RATIO -CAR):

விவரம் 
பேசல் III
வழக்கமான தேவை
CET 1
6.39%
5.50%
CCB in CET1
0.89%
1.875%
Tier I
7.17%
7.00%
Tier II
2.09%
2.00%
Total                                            
9.25%
9.00%
CCB in CRAR
0.25%
1.875%


       முக்கிய  நிதி நிலை விகிதங்கள் (KEY FINANCIAL RATIOS)

             கடன் டெபாசிட் விகிதம்,2018 மார்ச்  31 நிலவரப்படி 69.64% ஆக உள்ளது.

             டெபாசிட்  திரட்டுவதற்கான சராசரி செலவு: 2018 மார்ச் உடன் முடிந்த நிதி ஆண்டில் 5.49% ஆக உள்ளது. இது 2017 மார்ச்  31 உடன் முடிந்த நிதி ஆண்டில் 6.17% ஆக இருந்தது. 

             கடன்கள் மீதான சராசரி வருமானம் (Average Yield on Advances) 2018 மார்ச் உடன் முடிந்த நிதி ஆண்டில் 7.50% ஆக உள்ளது.

             செலவு, வருமான விகிதம் (Cost to Income Ratio) 2018 மார்ச் உடன் முடிந்த நிதி ஆண்டில் 60.61% ஆக உள்ளது.

             நிகர வட்டி வரம்பு (Net Interest Margin) 2018 மார்ச் உடன் முடிந்த காலாண்டில் 2.73% ஆக உள்ளது. இது 2018 மார்ச் உடன் முடிந்த நிதி ஆண்டில் 2.19% ஆக இருந்தது. இந்த உயர்வுக்கு இதர வட்டி வருமானம் அதிகரித்ததே.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

சேமிப்புக் கணக்கு: என் ஆர் ஐ மற்றும் என் ஆர் ஓ NRI

bob Masterstroke சேமிப்புக் கணக்கு என் ஆர் ஐ மற்றும் என் ஆர் ஓ விற்காக இலவச ஓபுலன்ஸ் டெபிட் கார்டு மற்றும் ஆயுட் காலத்திற்கு எடர்னா கிரெடிட்...