மொத்தப் பக்கக்காட்சிகள்

மஹிந்திரா ஃபைனான்ஸ் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியை 8.75% ஆக உயர்த்தியது..!


மஹிந்திரா ஃபைனான்ஸ்
ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியை 
8.75% ஆக உயர்த்தியது..!

ஆன்லைன் மூலம் பதிவு செய்தால் வட்டி ஆண்டுக்கு 8.75%வரை, கிளையில் பதிவு செய்தால் வட்டி ஆண்டுக்கு 8.5% வரை.

மும்பை, ஜூன் 18, 2018:மஹிந்திரா ஃபைனான்ஸ் (Mahindra Finance), முன்னணி வங்கிச் சாரா நிதிச் சேவை  நிறுவனம் (Non-Banking Finance Company - NBFC). இது கிராமங்கள் மற்றும் சிறு கிராமங்களில் ஃபிக்ஸட் டெபாசிட் திரட்ட கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிறுவனம், குறித்த கால டெபாசிட்களுக்கான (term deposits) வட்டியை உயர்த்தி உள்ளது.

காகிதம் இல்லாத நிதிச் சேவையை ஊக்குவிக்கும் விதமாக இணையதளம் (online)மூலம் டெபாசிட் போடுபவர்களுக்கு மஹிந்த்ரா ஃபைனான்ஸ் நிறுவனம், 0.25% (25 அடிப்படை புள்ளிகள்) கூடுதல் வட்டி வழங்குகிறது.

வாடிக்கையாளர்கள் இப்போது இணையதளம்  மூலம் டெபாசிட் போட பதிவு செய்தால் ஆண்டுக்கு வட்டி 8.75% வரையும், கிளைகள் மூலம் (offline) பதிவு செய்தால் ஆண்டுக்கு வட்டி 8.5% வரையும் வழங்கப்படும்

.
இணையதளம்  மூலம் டெபாசிட் போட விரும்பும் வாடிக்கையாளர்கள் இந்த இணைப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.  https://fixeddeposit.mahindrafinance.com.

டெபாசிட் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டிருப்பது குறித்து மஹிந்திரா ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மைநிதி அதிகாரி திரு. வி.ரவி (Mr. V. Ravi, Executive Director and Chief Financial Officer, Mahindra Finance)  கூறும் போது, “ஃபிக்ஸட் டெபாசிட் என்பது அனைவரும்  எப்போதும் விருப்பும் ஒரு முதலீட்டு தீர்வாகும். பெரும்பாலான முதலீட்டு கலவைகளில் (investment portfolios) ஃபிக்ஸட் டெபாசிட் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. இந்த கவர்ச்சிகரமான முதலீட்டை எங்களின் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வட்டியுடன் அளித்து வருகிறோம். இணையதளம் (online) மூலம் டெபாசிட் போடும் போது கூடுதல் வட்டி வழங்கப்படுவதால், அதிகமானவர்கள் ஆன்லைன் மூலம் டெபாசிட் போடுவதோடு, அதிகம் பேரும் இவ்விதமாக டெபாசிட் போடுவார்கள் என நம்புகிறோம்" என்றார்.

Learn more about Mahindra on www.mahindra.com / Twitter and Facebook: @MahindraRise

Media Contact information:
Metabelle Lobo
General Manager, Group Communications
Mahindra & Mahindra Limited
Tel: +91 22 24975178

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

சேமிப்புக் கணக்கு: என் ஆர் ஐ மற்றும் என் ஆர் ஓ NRI

bob Masterstroke சேமிப்புக் கணக்கு என் ஆர் ஐ மற்றும் என் ஆர் ஓ விற்காக இலவச ஓபுலன்ஸ் டெபிட் கார்டு மற்றும் ஆயுட் காலத்திற்கு எடர்னா கிரெடிட்...