மொத்தப் பக்கக்காட்சிகள்

லஷ்மி விலாஸ் பேங்க் - 2018, மார்ச் 31 உடன் முடிந்த நிதி ஆண்டுக்கான நிதி நிலை முடிவுகள்



லஷ்மி விலாஸ் பேங்க் - 2018,  மார்ச் 31 உடன் முடிந்த  நிதி ஆண்டுக்கான  நிதி நிலை முடிவுகள்

தனியார் துறையை லஷ்மி விலாஸ் பேங்க்  (Lakshmi Vilas Bank - LVB), அதன் நான்காவது மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை அறிவித்துள்ளது. சவாலான சூழ்நிலையில் நிதி நிலை முடிவுகள் உள்ளன.

முக்கிய நிதி நிலை முடிவுகள் :

± வங்கியின் மொத்த வணிகம் 2018, மார்ச் 31 ம் தேதி நிலவரப்படி ரூ. `60314.02 கோடியாக உள்ளது. இது 10.64% அதிகரிப்பு.

± வழங்கப்பட்ட மொத்தக் கடன் ரூ. 23,958.46 கோடியிலிருந்து  ரூ. 27,004.53 கோடியாக அதிகரித்துள்ளது. இது  27.99% உயர்வு

± திரட்டப்பட்ட மொத்த டெபாசிட் 2017 மார்ச் 31 ம் தேதி நிலவரப்படி ரூ. 30,553.35 கோடியாக இருந்தது. இது 2018, மார்ச் 31 ம் தேதி நிலவரப்படி ரூ.33,309.48  கோடியாக உயர்ந்துள்ளது. இது 9.02% உயர்வாகும்.

± காசா ரூ. 5,838.98 கோடியிலிருந்து ரூ. 7,015.03 கோடியாக உயர்ந்துள்ளது.  இது, 20.14% அதிகரிப்பாகும்.

± மொத்த டெபாசிட்டில் காசாவின் பங்களிப்பு 19.11%% லிருந்து 21.06% ஆக  உள்ளது.

±  நிகர வட்டி வருமானம் (Net Interest Income -NII), ரூ. 782.65 கோடியிலிருந்து   ரூ. 790.60 கோடியாக அதிகரித்துள்ளது. இது 1.01% அதிகரிப்பு.

± வங்கியின் நிகர வட்டி வரம்பு (Net Interest Margin - NIM)), 2018 மார்ச்   31 ம்தேதி நிலவரப்படி 2.38% ஆக உள்ளது. இது 2017 மார்ச் 31 ம் தேதி நிலவரப்படி 2.85% ஆக இருந்தது.

±  வங்கியின் செலவு மற்றும் வருமானத்துக்கான விகிதம் ( Cost to Income ratio) 68.76% ஆக மேம்பட்டுள்ளது. (முந்தைய ஆண்டு 50.67%)

2018 மார்ச்   31 ம்தேதி உடன் முடிந்த நிதி ஆண்டில் வங்கியின் நிகர இழப்பு  ரூ. 584.87 கோடியாக உள்ளது. முந்தைய 2017 மார்ச்   31 ம்தேதி உடன் முடிந்த நிதி ஆண்டில் வங்கியின் 
நிகர  லாபம்  ரூ. 256.07 கோடியாக இருந்தது.

மார்ச் காலாண்டு நிதி நிலை முக்கிய முடிவுகள்

மார்ச் காலாண்டில் மொத்த வருமானம் ரூ. 740.90  கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ரூ. 864.99  கோடியாக இருந்தது. இது -14.3% இழப்பாகும்.

நிகர வட்டி வருமானம், மார்ச் காலாண்டில் ரூ. 120.47 கோடி குறைந்துள்ளது.  47% குறைவாகும்.  முந்தைய நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ. 227.81  கோடியாக இருந்தது.

 நிகர வட்டி வரம்பு, 2018  மார்ச் 31ம் தேதியுடன் முடிந்த காலாண்டில் 1.34%  ஆக உள்ளது. இது 2017  மார்ச் காலாண்டில் 3.10% ஆக இருந்தது.

மூலதன தன்னிறைவு விகிதம்:

வங்கியின் மொத்த மூலதன தன்னிறைவு விகிதம் (Capital Adequacy Ratio -CAR), பேசல் விதிமுறைகளின் படி (Basel III guidelines) 2018  மார்ச் 31ம் தேதி நிலவரப்படி 9.81%  ஆக உள்ளது. இது 2018  மார்ச் 31ம் தேதி நிலவரப்படி 10.38%  ஆக இருந்தது. 

நிகர வாராக் கடன்

மொத்த வாராக் கடன் (Gross NPA stood )9.98% ஆகவும் நிகர வாராக் கடன் (Net NPA) 5.66% ஆகவும் உள்ளது.  வாராக் கடன் ஒதுக்கீடு கவரேஜ் விகிதம்  55.07 ஆகஉள்ளது இது 2017 டிசம்பரில் 46.75%  ஆக இருந்தது.  ஆர்பிஐ விதிமுறைகளின் படி, கடன்கள் மறுசீரமைக்கப்பட்டதால், புதிய வாராக் கடன் அதிகரிப்பு பகுதி கூடியுள்ளது. திவால் சட்டத்தின் (NCLT) கீழ் ரூ. 584.33 கோடி, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் கடன் சுமார் ரூ.30  கோடி உள்ளது.

புதிய முயற்சிகள்

வங்கி அதன் கடன் வழங்கும் நடைமுறைகளி கூடுதல் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறது. பெரிய நிறுவனங்கள் (corporate) மற்றும் சிறு, குறு நடுத்தர நிறுவனங்களுக்கு (MSME ) கடன் வழங்கும் நடைமுறையை வங்கியின் வர்த்தக செயல்பாட்டு குழு (Commercial Banking Operations Group) கையில் எடுத்துள்ளது.

இந்த வங்கி ஏழு சிறப்பு வர்த்தக கிளைகள் (Commercial Banking Branches -CBB) மூலம் பெரிய நிறுவனங்கள் (corporate) மற்றும் சிறு, குறு நடுத்தர நிறுவனங்களுக்கு சேவை அளித்து வருகிறது.

இந்த வங்கி சென்னை மற்றும் பெங்களூருவில் சிறப்பு தனிநபர் வங்கி கிளைகளை கொண்டுள்ளது.  மேலும், சென்னை மற்றும் பெங்களூருவில் சில்லறை சொத்து மையங்களை ( Retail Assets Centres) கொண்டுள்ளது.

2018  மார்ச் 31 நிலவரப்படி வங்கிக்கு  17 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 548 கிளைகள், 7  விரிவாக்க மையங்கள், 1020 ஏடிஎம்கள் கொண்டுள்ளன.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

சேமிப்புக் கணக்கு: என் ஆர் ஐ மற்றும் என் ஆர் ஓ NRI

bob Masterstroke சேமிப்புக் கணக்கு என் ஆர் ஐ மற்றும் என் ஆர் ஓ விற்காக இலவச ஓபுலன்ஸ் டெபிட் கார்டு மற்றும் ஆயுட் காலத்திற்கு எடர்னா கிரெடிட்...