மொத்தப் பக்கக்காட்சிகள்

டிஎஸ்பி பிளாக்ராக்: 20 லட்சம் தனிப்பட்ட முதலீட்டாளர்கள், நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ. 1,10,000 கோடி


  
டிஎஸ்பி பிளாக்ராக்:  20 லட்சம் தனிப்பட்ட முதலீட்டாளர்கள், நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ. 1,10,000 கோடி

சந்தைகள் அதிக ஆர்வ மூட்டுகிற திருப்பு முனையில் இன்றைக்கு இருக்கின்றன.

ஒரு புறத்தில், இந்தக் காலாண்டில் கார்ப்பரேட் பெரு நிறுவனங்களது நிதிச் சார் முடிவுகள் வழியாக ஊக்கப்படுத்துகிறவாறு தேவைப்பாடு உயர்ந்துவரும் போக்குகளை நாம் பார்க்கிறோம்.

டிஜிட்டல் செயல் திட்டங்களை அதிகரித்திருப்பதன் மூலம் ஐடி துறை பங்குகள், கிராமப்புற பகுதிகளில் நுகர்வோர்களின் தேவைப்பாடு மேம்பட்டிருப்பதை சுட்டிக்காட்டுகிற FMCG  நிறுவனங்கள் சிமெண்ட் நிறுவனங்களின் பங்குகள், எதிர்பார்த்ததைவிட சிறப்பான செயல்திறன் மற்றும் லாபத்தைப் பெற்றிருக்கும் போக்குகள் மற்றும் ரீடெய்ல் தனியார் வங்கிகள், கடன் வழங்கலில் வலுவான வளர்ச்சியை கண்டிருப்பது ஆகியவை இந்த முக்கியமான போக்குகளில் உள்ளடங்கும். எனினும், ஒரு தொகுப்பாக மொத்தத்தில் பார்க்கையில் குறிப்பிட்ட நிறுவனங்களின் தொகுப்பானது (கார்பரேட் வங்கிகள் மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள்), ஒட்டுமொத்த எண்ணிக்கையை சரிவடையச் செய்திருக்கின்றன.

மற்றொரு பக்கத்தில்,அதிகரித்துவரும் நடப்பு கணக்கு பற்றாக்குறை, கச்சா எண்ணெய் விலை, கடன் பத்திரங்களின் மீது நாட்டம், பணவீக்கம் மற்றும் சரிவடைந்துவரும் ரூபாயின் மதிப்பு போன்ற பலவீனமான மேக்ரோ (பேரளவு) போக்குகளையும் நாம் காண்கிறோம்.

எனினும், இந்த மேக்ரோ போக்குகள் எப்போதும் மோசமானவையாக இருப்பதில்லை. 2014 ஆம் ஆண்டில் திரு. நரேந்திர மோதி பிரதமராக பொறுப்பேற்றதற்குப் பிறகு, குறைவான நடப்பு கணக்கு பற்றாக்குறை, கட்டுப்படுத்தப்பட்ட நிதி பற்றாக்குறை, குறைவான பண வீக்கம், நிலையான  அதிகரித்துவரும் இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை உட்பட பல அம்சங்கள், 50% சென்செக்ஸ் உயர்வதற்கும் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டு குறியீட்டெண்கள்(small and mid-cap indices) இந்திய ரூபாய் வரையறைகளில் 110% அதிகரிப்பதற்கு உதவின. எனினும், 2018 ஆம் ஆண்டில் இதுவரை சந்தையானது, ஓர் ஏற்ற-இறக்க விசை போலவே இருந்து வந்திருக்கிறது.

2018 ஜனவரி மாதத்தில் 36200 என்ற உச்சநிலையை எட்டிய சென்செக்ஸ், அடுத்த இரு மாதங்கள் காலஅளவில் 10% குறைந்தது அதற்குப் பிறகு, 6-7% அதிகரித்தாலும் அது மீண்டும் சரிவடைந்தது.

சிறு மற்றும் நடுத்தர முதலீட்டு நிறுவனங்களின் குறியீட்டெண்கள் அவைகளது உச்சநிலையிலிருந்து 15-20% இறங்கியிருக்கும் நிலையில் தனிப்பட்ட பங்குகள், சில நேர்வுகளில் 30%  அல்லது அதற்கும் அதிகமாக சரிவை சந்தித்திருக்கின்றன.

ஒட்டுமொத்த சந்தை மதிப்பீடுகள் மீது, 2007-08 உச்ச நிலை அளவுகளோடு தற்போதைய மதிப்பீடுகளை ஒருவர் ஒப்பிடுவாரென்றால், 12மாத  ஃபார்வேர்டு பி/இ (PE), 12 மாத ஃபார்பேர்டு பிரைஸ் டு புக், சந்தை முதலாக்கம் / ஜிடிபி (உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தி) அல்லது ஜிடிபி -க்கு கார்ப்பரேட் நிறுவனங்களது லாபங்கள் போன்ற முக்கியமான அளவீடுகளில் நிச்சயமாக புதுமையானதாக இல்லை. தொடர்புடைய PB அடிப்படையில், சிறு மற்றும் நடுத்தர முதலீட்டு நிறுவனங்களது பங்குகளைவிட பெரிய நிறுவனங்களது பங்குகள் அதிக கவர்ச்சிகரமானதாக தோன்றுகின்றன@ ஆகவே, சிறிய மற்றும் நடுத்தர முதலீடு கொண்ட நிறுவனங்களது வகையினத்தில் முதலீடு செய்வதற்கான வழிமுறையாக  எஸ்ஐபி (SIP) க்களை பயன்படுத்துமாறு முதலீட்டாளர்களுக்கு  ஆலோசனை வழங்குகிறோம்.


வரையறுக்கப்பட்ட வருவாய் சந்தையைப் பொறுத்தவரை இந்த விகிதங்களில் எந்தவொரு அதிகரிப்பும் முதலீட்டாளர்களுக்கு வரவேற்கக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது.

இந்த விகித அதிகரிப்புகள் உண்மையில் இந்த வருவாய் விகிதங்களின் வீச்சுப்பாதையை தீர்மானிக்கின்றன மற்றும் சேமிப்பாளர்களுக்கு இந்த வீச்சுப்பாதையானது உயர்வை நோக்கி மாற்றம் பெற்றிருக்கிறது. நிர்ணயிக்கப்பட்ட வருவாய் முதலீட்டின் மீதான விகிதங்கள், வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதற்காக பணத்திற்கான தேவைப்பாடு மற்றும் வழங்கல் அம்சங்களால் தீர்மானிக்கப்படுகின்றன. பண மதிப்பு நீக்கலின் கட்டமைப்பு சார்ந்த மாற்றங்கள் மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பிறகு பொருளாதார வளர்ச்சி வேகம் எடுத்திருப்பதால் அது கடனுக்கான அதிக தேவையினை தூண்டியிருக்கிறது. கடன் வழங்கல் அதிகரித்திருப்பது அரசு மட்டுமல்லாது வங்கிகளிடமிருந்தும் அதிக தேவையை முடுக்கியிருப்பதால், அரசு கடன் பத்திரங்கள் மீதும் மற்றும் டெபாசிட் (வைப்புத் தொகை) விகிதங்கள் மீதும் அதிக ஈட்டம் கிடைப்பதற்கு வழிவகுத்திருக்கிறது. இந்த வளர்ச்சி விவேகமானது அதிகரிக்கும் என்றே நாங்கள் எதிர்பார்க்கிறோம். அரசு மற்றும் வங்கிகளிடமிருந்து பணத்திற்கான அதிகரித்திருக்கும் உயர் தேவையையே இது உணர்த்தும்.

பொருளாதாரத்தில் கடன் வளர்ச்சி என்பது 13% என கணிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் வைப்புத் தொகை வளர்ச்சி 8% ஆக மதிப்பிடப்பட்டிருப்பது, கடன் வழங்குவதை ஏதுவாக்குவதற்கு வைப்புத் தொகைகளுக்கான உயர்வான தேவையையே உணர்த்துகிறது என்று காணமுடிகிறது.

இங்கு, உயர்வான வட்டி விகிதங்கள் என்ற கடந்த கால சுழற்சியைவிட வைப்புத் தொகை வட்டி விகிதங்கள் மற்றும் பண வீக்கத்திற்கு இடையே உள்ள பரவல் சற்றே அதிகமாகவுள்ளதால் அதிகரித்துள்ள வட்டி விகிதங்களினால் குறிப்பாக, வட்டி சுழற்சியின் நடப்பு காலகட்டத்தில் சேமிப்பாளர்கள் ஆதாயம் பெறுவார்கள்.

ஃபண்டுகளில் குறைவான காலஅளவை பேணுவதால் கடன் பத்திரங்களில் நாங்கள் தொடர்ந்து குறைவான பங்கினையே கொண்டிருக்கிறோம். நிர்ணயிக்கப்பட்ட வருவாய் முதலீடுகள், திறந்தமுனை மற்றும் மூடிய முனையுள்ள ஃபண்டுகளில் பகிர்ந்து முதலீடு செய்யப்பட வேண்டும் என்றே நாங்கள் தொடர்ந்து பரிந்துரைக்கிறோம். அதிக வருவாய் ஈட்டப்படுவதற்கு இது உதவுவது மட்டுமன்றி (நிர்ணயிக்கப்பட்ட காலஅளவு முதிர்ச்சி திட்டம்) திறந்தமுனை ஃபண்டுகளில் குறைந்த காலஅளவிற்கு ஒதுக்கீடு செய்வதன் மூலம் முதிர்ச்சியின் ரோல் டவுனிலிருந்து ஆதாயத்தை வழங்குவதாக அமையும்.

டிஎஸ்பி பிளாக்ராக் இன்வெஸ்ட்மெண்ட் மேனேஜர்ஸ் பிரைவேட் லிமிடெட்-ன் பிளாக்ராக்-ன் 40% பங்கை டிஎஸ்பி குரூப் சமீபத்தில் வாங்கியது. சொத்து மேலாண்மை, பிசினஸில் தனது செயல் இருப்பை குறைக்க டிஎஸ்பி குழுமம் விரும்பாததே இதற்கான காரணமாகும். ஒரு உலகளவில் ஒருங்கிணைக்கப்பட்ட தொழில்நுட்பத்தையும் மற்றும் இயக்க மாதிரியையும் கொண்டிருப்பதே பிளாக்ராக்-ன் அணுகுமுறையாகும்

ஆகவே,இந்நிறுவனத்தில் கட்டுப்படுத்துகின்ற அளவுக்கு அதிக பங்கினை கொண்டிருக்கின்ற விருப்பத்தை அவர்கள் வெளிப்படுத்தியிருக்கின்றன. னுளுP குழுமத்தின் 152 ஆண்டுகள் என்ற மிகப்பெரிய பாரம்பரியத்தையும் மற்றும் கட்டுப்படுத்துகின்ற அளவுக்கு பங்கினை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற அவர்கள் விருப்பத்தையும் பிளாக்ராக் மதித்திருக்கிறது

டிஎஸ்பி பிளாக்ராக்,சம பங்குகள், நிர்ணயிக்கப்பட்ட வருவாய் மற்றும் மாற்று வழிமுறைகள் ஆகியவற்றில் (2018 ஏப்ரல் 30ம் தேதியன்று) 20 லட்சத்துக்கும் (2 மில்லியன்) அதிகமான தனிப்பட்ட முதலீட்டாளர்களின் வழியாக 1,10,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான வாய்ப்புள்ள சொத்துக்களை மேலாண்மை செய்கிறது.




Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இப்போது பங்குச் சார்ந்த திட்டங்களில் எப்படி முதலீடு செய்தால் லாபம்? ச.ஶ்ரீதரன், நிதி ஆலோசகர்

இப்போது பங்குச் சார்ந்த திட்டங்களில் எப்படி முதலீடு செய்தால் லாபம்?  By திரு . ச . ஶ்ரீதரன் , நிதி ஆலோசகர் ,  https://www.walletwealth....