மொத்தப் பக்கக்காட்சிகள்

ஐசிஐசிஐ பேங்க் பங்கு முதலீட்டுக்கு பெருகும் ஆதரவு...

ஐசிஐசிஐ  பேங்க் பங்கு முதலீட்டுக்கு பெருகும் ஆதரவு...

2018, மார்ச் 31-ம் தேதியுடன் முடிந்த நான்காவது காலாண்டில் ஐசிஐசிஐ பேங்க்-ன் நிகர லாபம், 49.6% குறைந்துள்ளது.

 இதற்கு வாராக் கடன் அதிகரித்ததே  முக்கிய காரணம்.

இந்த நிலையில், ஐசிஐசிஐ  பேங்க் பங்குகள் மீது முன்னணி பங்கு தரகு நிறுவனங்கள் சாதகமான கருத்துகளை வெளியிட்டுள்ளன.

இதனால், அண்மையில் ஐசிஐசிஐ பேங்க்  பங்கின் விலை ஒரேநாளில் 7.19% உயர்ந்தது.  இது கடந்த 2017 அக்டோபர் மாதத்துக்குப் பிறகு பெரிய அதிகரிப்பு.
அந்த ஐசிஐசிஐ பேங்க்  பங்கின் மதிப்பீடுகள் கவர்ச்சிகரமாக இருக்கிறது. வருமானம்  வரும் காலாண்டுகளில்  அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாக பங்கு தரகு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

முன்னணி பங்குச் சந்தை தரகு நிறுவனமான சிஎல்எஸ்ஏ, ரூ. 430-ஐ இலக்கு விலையாக வைத்துக் கொண்டு இந்தப் பங்கில் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்யலாம் என சொல்லி இருக்கிறது.

மேலும், கோட்டக் இன்ஸ்டிட்டியூஷனல் ஈக்விட்டீஸ், மார்கன் ஸ்டேன்லி, ஹெச்எஸ்பி , மேக்கியரே, டாயிஷ் பேங்க் போன்றவையும்  ஐசிஐசிஐ பேங்க் பங்கில் முதலீடு செய்யலாம் என சொல்லி உள்ளன.

ஐசிஐசிஐ பேங்க் ன் வாராக் கடன்  2017 டிசம்பர் மாதத்தில்  7.82% ஆக இருந்தது. இது 2018 மார்ச் மாதத்தில் 8.84 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது இந்திய தனியார் வங்கிகளில் மிக அதிகம், அதன் போட்டி வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கியின் வாராக் கடனுடன் ஒப்பிடும் போது 1.3 % அதிகம்.
ரிஸ்க் எடுக்க கூடியவர்கள் மட்டுமே ஐசிஐசிஐ பேங்க் பங்கில் முதலீடு செய்யலாம். 
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அனைத்து நிதித் தேவைகளுக்கும் ஏற்ற மியூச்சுவல் ஃபண்டுகள் Mutual Fund

நாணயம் விகடன் & மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து `இலக்கு அடிப்படையிலான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு' என்ற நிகழ்ச்சியை வேலூரில...