மொத்தப் பக்கக்காட்சிகள்

குறுகிய கால இன்கம் ஃபண்ட்களுக்கு மாறுவதற்கு சிறந்த நேரம்

 குறுகிய கால இன்கம் ஃபண்ட்களுக்கு மாறுவதற்கு சிறந்த நேரம்

( Ideal time to shift to accrual oriented funds)

வட்டி விகிதம், சுழற்சி இருக்கும் போது (rate cut cycle), முதலீட்டாளர்கள் குறுகிய காலத்தில் அதிக வருமானம்  பெற குறுகிய கால இன்கம் ஃபண்ட்களை (short term income funds) விரும்புவார்கள்.

அது போன்ற ஒரு ஃபண்ட்தான் யூடிஐ ஷார்ட் டேர்ம் இன்கம் ஃபண்ட் (UTI Short Term Income Fund). இந்த ஃபண்ட் குறைவான இடர்பாடு மற்றும் எளிதில் பணமாக்க கூடிய, (low risk and high liquidity) நியாயமான வருவாய் ஈட்டும் நோக்கம் கொண்டது. இந்த ஃபண்டில் திரட்டப்படும் நிதி, நிதிச் சந்தை ஆவணங்கள் (money market securities) மற்றும் உயர்தர கடன் பத்திரங்களை (high quality of debt) கொண்ட முதலீட்டுக் கலவையாக (portfolio) இருக்கும்.  இந்த நிதி ஆவணங்களின் சராசரி முதிர்வு காலம் நான்கு ஆண்டுகளாக இருக்கும். இந்த ஃபண்ட், அதிக கிரெடிட் தகுதி (high credit quality) மற்றும் பரவலாக்கப்பட்ட போர்ட்ஃபோலியோவை (portfolio diversification) கொண்டிருக்கும்.

யூடிஐ ஷார்ட் டேர்ம் இன்கம் ஃபண்ட்-ன் நிதி மேலாளர் சுதிர்  அகர்வால் (Sudhir Agrawal, fund manager of UTI Short Term Income Fund)  கூறும் போது, “அடுத்த 6 முதல் 12 மாதங்களில் நுகர்வோர் பணவீக்க விகிதம், ரிசர்வ் வங்கியின் (RBI) இலக்கான 4%க்கும் மேலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சமீப கால விலைவாசி உயர்வு மற்றும் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிக்கப்படும் சூழ்நிலையில் 2018-19 ஆம் நிதி ஆண்டின் இரண்டாம் அரையாண்டில் நுகர்வோர் பணவீக்க விகிதம் மேலும் அதிகரிக்க கூடும். இது போன்ற சூழ்நிலையில், குறைவான ஏற்ற இறக்கத்தில் (lower volatility), வருமானத்தை அதிகரிக்கும் (high accrual), குறுகிய கால இன்கம் ஃபண்ட்களில் (short term income funds) முதலீட்டாளர்கள் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். நாங்கள் குறுகிய கால இன்கம் ஃபண்ட்களில் 1 முதல் 3 ஆண்டுகள் வரை முதலீடு செய்ய முதலீட்டாளர்களுக்கு பரிந்துரை செய்கிறோம்.”என்றார்

யூடிஐ ஷார்ட் டேர்ம் இன்கம் ஃபண்ட், அதன் பெஞ்ச்மார்க் குறியீடான க்ரைசில் ஷார்ட் டேர்ம் பாண்ட் ஃபண்ட் இண்டெக்ஸ் (CRISIL Short-Term Bond Fund Index) -ஐ விட தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ஃபண்ட் ஆரம்பம் முதல் (2018 மார்ச் 31 நிலவரப்படி, 8.81 சதவிகித வருமானம் தந்துள்ளது. இதே காலகட்டத்தில் பெஞ்ச்மார்க் வருமானம் 7.78 சதவிகிதமாக உள்ளது.


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற . - பஜாஜ் ஃபின்சர்வ் ELSS வரி சேமிப்பு ஃபண்ட் .!

திரு .  எஸ் .  கார்த்திகேயன் ,  நிறுவனர் ,  https://winworthwealth.com/ மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு   ஏற்ற . ...