பிஎஸ்இ - நிறுவனர்கள் அடமானம் வைத்துள்ள பங்குகளின் மதிப்பு ரூ.2.57 லட்சம் கோடி
பிஎஸ்இ பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனப் பங்குகளில் நிறுவனர்கள் அடமானம் வைத்துள்ள பங்குகளின் மதிப்பு, 2018 ஏப்ரல் இறுதி நிலவரப்படி ரூ.2.57 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
இது 2018 மார்ச் மாத இறுதியில் ரூ.2.39 லட்சம் கோடியாக இருந்தது. அதாவது 7.5 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
பிஎஸ்இ பங்குச் சந்தையில் மொத்தம் 5,043 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளம. இதில், 3,142 நிறுவனங்களின் நிறுவனர்கள் அவர்கள் வசம் இருக்கும் பங்குகளை அடமானம் வைத்து கடன் வாங்கி இருக்கிறார்ள்.
சுமார் 350 நிறுவனங்களில் நிறுவனர்கள் 30 சதவிகிதம் வரை பங்குகளை அடமானம் வைத்துள்ளார்கள்.
150 நிறுவனங்களின் நிறுவனர்கள் அவர்களின் பங்குகளில் 30 முதல் 50 சதவிகிதம் அடமானம் வைத்துள்ளார்கள்.
80 நிறுவனங்களின் நிறுவனர்கள் அவர்களின் பங்குகளில் 50 முதல் 75 சதவிகிதம் அடமானம் வைத்துள்ளார்கள்.
3 நிறுவனங்களில் 90 சதவிகிதம் வரை பங்குகள் அடமானம் வைக்கப்பட்டுள்ளது.
மிக அதிகமாக பங்குகள் அடமானம் வைக்கப்பட்டிருக்கும் நிறுவனப் பங்குகளில் மிகவும் உஷாராக இருப்பது நல்லது என்கிறார்கள் பங்கு பகுப்பாய்வாளர்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக