மொத்தப் பக்கக்காட்சிகள்

டிஹெச்எஃப்எல், என்சிடி வெளியீடு மே 22, 2018 -ல் ஆரம்பம் - முதலீட்டு காலம் 3, 5, 7 மற்றும் 10 ஆண்டுகள், வட்டி ஆண்டுக்கு 9.10%.


டிஹெச்எஃப்எல், என்சிடி வெளியீடு மே 22, 2018 -ல் ஆரம்பம்
        முதலீட்டு காலம் 3, 5, 7 மற்றும் 10 ஆண்டுகள், கவர்ச்சிகரமான வட்டி விகிதம் ஆண்டுக்கு 9.10%.
        கவர்ச்சிகரமான ஒரு முறை கூடுதல் ஊக்கத் தொகை 1 சதவிகிதம் வரை, வகை  III   மற்றும் IV முதலீட்டாளர்களுக்கு முதிர்வின் போது, என்சிடி சீரிஸ் III, சீரிஸ் IV மற்றும் சீரிஸ் VI-க்கு அளிக்கப்படும்.  
        மூத்த குடிமக்களுக்கு ஆரம்ப சந்தா தொகையில் 0.10% கூடுதல் வட்டி
        மாறுபடும் வட்டி விகிதம், என்சிடிக்கு தரவரிசை ஒப்பீடு ஓவர் நைட் மிபார் ஆகும்.
        ட்ரிப்பிள் A தரக்குறியீடு: கேர் நிறுவனத்தின் CARE AAA (டிரிபிள் A; எதிர்பார்ப்பு: நிலையானது); BWR AAA (பிடபியூஆர் டிரிபிள் ஏ என உச்சரிக்க வேண்டும்), பிரிக்வொர்க் நிறுவனத்தின் எதிர்பார்ப்பு: நிலையானது
         அனைத்து பிரிவுகளுக்கும் குறைந்தபட்ச முதலீடு ரூ. 10,000.
        முதலில் வருபவர்களுக்கு, முன்னுரிமை என்கிற  அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும்.
        முதலீட்டாளர்கள் டீமேட்   அல்லது காகித வடிவில் என்சிடிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.  
        டிமேட் வடிவில் என்சிடிகளுக்கு விண்ணப்ப்பம் செய்பவர்களுக்கு வரிப் பிடித்தம் (TDS) இல்லை.
        பி.எஸ்.இ. மற்றும் என்.எஸ்.இ. -இல் இந்த என்சிடி பட்டியலிடப்படும்.

சென்னை, மே 21, 2018: தனியார் துறையை சேர்ந்த இந்தியாவின் முன்னணி வீட்டு வசதி நிறுவனங்களில் ஒன்றாக  திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (Dewan Housing Finance Corporation Limited - DHFL), திகழ்கிறது. இது தேசிய வீட்டு வசதி வங்கியில்   National Housing Bank -NHB) பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகும். இந்த நிறுவனம், பொதுமக்களுக்கு பங்குகளாக மாறாத, திரும்ப பெறக்கூடிய பாதுகாப்பான கடன் பத்திரங்களை (secured redeemable Non-Convertible Debentures - NCD) 2018,  மே 22 அன்று வெளியிடுகிறது. என்சிடி ஒன்றின் முக மதிப்பு ரூ. 1,000. மொத்தம் 12 கோடி என்சிடிகள் வெளியிடப்படுகிறது. அடிப்படை வெளியீடு ரூ. 3,000 கோடி, கூடுதல் ஆதரவு மூலம் ரூ. 9,000 கோடி ஆக மொத்தம் ரூ. 12,000 கோடிக்கு என்சிடி வெளியிடப்படுகிறது. இந்தப் பகுதி 1 வெளியீடு (Tranche 1 Issue) குறித்த விவரங்கள், நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் மே 14, 2018 அன்று இந்த நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த விவரங்கள், மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் உள்ள  நிறுவனங்களின் பதிவாளர் (Registrar of Companies, Maharashtra, Mumbai ROC), மற்றும் இந்திய பங்குச் சந்தைகள் மற்றும் நிதி ஆவண கழகத்திற்கு   (Stock Exchanges and Securities and Exchange Board of India -SEBI). அளிக்கப்பட்டுள்ளது. இந்த என்சிடி வெளியீடு ஜூன் 4, 2018-ல் நிறைவு பெறுகிறது. வெளியீட்டை முன்னதாக நிறைவு செய்வது அல்லது நீடிப்பது குறித்து, நிறுவனத்தின் என்சிடி வெளியீடு குழு முடிவு செய்யும்.

ட்ரிப்பிள் A தரக்குறியீடு (Triple AAA Rating)

வெளியிடப்பட உள்ள என்சிடி, கேர் தரக்குறியீடு நிறுவனத்தின் "CARE AAA" ; நிலையானது (டிரிபிள் A; எதிர்பார்ப்பு: நிலையானது); ரூ.15,000 கோடி மதிப்புக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விவரம் அந்த நிறுவனம், ஏப்ரல் 27, 2018-ல் வெளியிட்டுள்ள தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. அதேபோல், "BWR AAA (பிடபியூஆர் டிரிபிள் ஏ என உச்சரிக்க வேண்டும்), பிரிக்வொர்க் நிறுவனத்தின் எதிர்பார்ப்பு: நிலையானது என்கிற தரக்குறியீடு ரூ.15,000 கோடி மதிப்புக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விவரம் பிரிக்வொர்க் ரேட்டிங் இந்தியா பிரைவேட் நிறுவனம், ஏப்ரல் 27, 2018-ல் வெளியிட்டுள்ள தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.      

கேர் தரக்குறியீடு நிறுவனத்தின் "CARE AAA"; நிலையானது  மற்றும் பிரிக்வொர்க் நிறுவனத்தின் எதிர்பார்ப்பு: நிலையானது என்கிற தரக்குறியீடுகளை கொண்டிருக்கும் நிதி ஆவணங்கள், நிதி சார்ந்த கடமைகளை சரியான நேரத்தில் பராமரிப்பதைப் பொறுத்தவரை மிக உயர்ந்த அளவு பாதுகாப்பைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது.



திரு. சந்தோஷ் சர்மா, தலைமை நிதி அதிகாரி, டிஹெச்எஃப்எல்   (Mr. Santosh Sharma, Chief Financial Officer, DHFL), கூறும் போது, கடந்த சில ஆண்டுகளில், டிஹெச்எப்எல் அதிகரித்துவரும் போட்டி நிலையிலும் அதிக வளர்ச்சி கண்டு வருகிறது. இது டிஹெச்எப்எல்- க்கு உற்சாகமான காலமாகும். காரணம், இந்தியா முழுவதும் அனைவருக்கும் நிதிச் சேவையை தீவிரமாக அளிக்க மத்திய அரசு உறுதிப்பாடு எடுக்கப்பட்டிருப்பதாகும். இது 2022 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் சொந்த வீடு (Housing for All by 2022) என்கிற மத்திய அரசாங்கத்தின் மேலதிக உத்வேகத்திற்கு உதவுவதாக உள்ளது.  டிஹெச்எப்எல் மூன்றாவது என்சிடி பொது வெளியீடு, நிறுவனத்தை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அழைத்து செல்வதாக உள்ளது. இது எங்களின் கடன் திரட்டும் பிரிவை பல்வகைப்படுத்தவும் எங்களுக்கு உதவுகிறது.

இதையொட்டி, டிஹெச்எஃப்எல் எப்போதும் அதன் பங்குதாரர்களுக்கு மதிப்பு கூட்டு சேவையை வழங்குவதற்கான முயற்சிகளுக்கு இணங்க, மாறுபடும் வட்டி விகித என்சிடி-ஐ (floater rate NCD) அறிமுகப்படுத்தியுள்ளது இதன் தரவரிசை (benchmarked) ஒப்பீடு, ஓவர்நைட் மிபார் (Overnight MIBOR) ஆக உள்ளது. மிபார் உடன் தொடர்புடைய என்சிடிகளில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்களுக்கு ஓவர்நைட் மிபார் வட்டி விகிதம் அளிக்கப்படும். இந்த வட்டி விகிதம், ஃபைனான்ஸியல் பெஞ்ச்மார்க்  இந்தியா பிரைவேட் லிமிடெட்(Financial Benchmark India Private Ltd -FBIL) நிறுவனத்தால் தினசரி கணக்கிடப்பட்டு ஆண்டுக்கு ஒரு முறை அளிக்கப்படும். நாங்கள் கவர்ச்சிகரமான வட்டி ஆண்டுக்கு 9.10 சத விகிதம் அளிக்கிறோம். ஆரம்ப சந்தாதாரர்களுக்கு (initial subscribers) கவர்ச்சிகரமான ஒரு முறை கூடுதல் ஊக்கத் தொகை 1 சதவிகிதம் வரை என்சிடி முதிர்வின் போது அளிக்கப்படுகிறது. மேலும், மூத்த குடிமக்களுக்கு ஆரம்ப சந்தா தொகையில் ஆண்டுக்கு 0.10% கூடுதல் வட்டி அளிக்கப்படும். பங்குதாரர்களின் வலுவான நம்பிக்கை மற்றும் வாங்கக் கூடிய விலையில் உள்ள வீடுகளை (affordable housing) பெற உறுதி அளிப்பது மூலம் மீண்டும் ஒரு முறை எங்களின் என்சிடி வெளியீடு சிறப்பான வெற்றியை பெறும். இது நிறுவனத்தின்  அதன் லட்சிய வளர்ச்சி திட்டங்களை அடைய உதவும்.” என்றார்

 அனைத்து பிரிவு என்சிடிகளுக்கும் குறைந்தபட்ச முதலீடு ரூ.10,000. மற்றும் அதன் மடங்குகளில் விண்ணப்பிக்க வேண்டும். முதலில் விண்ணப்பம் செய்பவர்களுக்கு முன்னுரிமை என்கிற அடிப்படையில் என்டிசிகள் ஒதுக்கீடு செய்து அளிக்கப்படும். (அதேநேரத்தில், திட்டமிட்டதை விட அதிக விண்ணப்பங்கள் வரும்பட்சத்தில், விண்ணப்ப விகிதாச்சாரத்துக்கு ஏற்ப ஒதுக்கீடு செய்யப்படும்). முதலீட்டாளர்கள் என்சிடிகளுக்கு டீமேட் அல்லது காகித வடிவில் (dematerialized or in physical form) விண்ணப்பிக்கலாம்.   

வெளியீடு அமைப்பு (Issue Structure): 

         சீரிஸ் I (Series I) - ல், முதலீட்டுக் காலம் 3 ஆண்டுகள், வட்டி ஆண்டுக்கு ஒரு முறை அளிக்கப்படும். வகை I (Category I),வகை II, வகை III மற்றும் வகை IV - களுக்கு கூப்பன் விகிதம் 8.90% (coupon rate) ஆக இருக்கும். அனைத்து வகைகளுக்கும் 8.90% வட்டி வருமானம் கிடைக்கும்.
         சீரிஸ் II (Series II) - ல், முதலீட்டுக் காலம் 5 ஆண்டுகள், வட்டி ஆண்டுக்கு ஒரு முறை அளிக்கப்படும். வகை I  & வகை II- களுக்கு கூப்பன் விகிதம் 8.90% ஆக இருக்கும். வகை III  & வகை  IV-களுக்கு கூப்பன் விகிதம் 9.00% ஆக இருக்கும். வகை I  & வகை II- களுக்கு 8.90%, வகை III  & வகை  IV-களுக்கு 9.00% வட்டி வருமானம் கிடைக்கும்.                                                                         
         சீரிஸ் III (Series III) - ல், முதலீட்டுக் காலம் 7 ஆண்டுகள், வட்டி ஆண்டுக்கு ஒரு முறை அளிக்கப்படும். வகை I  & வகை II- களுக்கு கூப்பன் விகிதம் 8.90% ஆக இருக்கும். வகை III  & வகை  IV-களுக்கு கூப்பன் விகிதம் 9.00% ஆக இருக்கும்.  வகை I  & வகை II- களுக்கு 8.90%, வகை III  & வகை  IV-களுக்கு 9.00% வட்டி வருமானம் கிடைக்கும்.                                                                                                                                                                                               
         சீரிஸ் IV (Series IV) - ல், முதலீட்டுக் காலம் 10 ஆண்டுகள், வட்டி ஆண்டுக்கு ஒரு முறை அளிக்கப்படும். வகை I  & வகை II- களுக்கு கூப்பன் விகிதம் 8.90% ஆக இருக்கும். வகை III க்கு கூப்பன் விகிதம் 9.00% ஆக இருக்கும். வகை  IV-க்கு கூப்பன் விகிதம் 9.10% ஆக இருக்கும் வகை I  & வகை II-களுக்கு 8.90%, வகை IIIக்கு 9.00% & வகை  IV-க்கு 9.10% வட்டி வருமானம் கிடைக்கும். 
         சீரிஸ் V (Series V) - ல், முதலீட்டுக் காலம் 3 ஆண்டுகள், வட்டி மாதம் ஒரு முறை அளிக்கப்படும். வகை I, வகை II, வகை III மற்றும் வகை IV - களுக்கு கூப்பன் விகிதம் 8.56% ஆக இருக்கும். அனைத்து வகைகளுக்கும் 8.90% வட்டி வருமானம் கிடைக்கும்.
         சீரிஸ் IV (Series IV) - ல், முதலீட்டுக் காலம் 5 ஆண்டுகள், வட்டி மாதம் ஒரு முறை அளிக்கப்படும். வகை I  & வகை II- களுக்கு கூப்பன் விகிதம் 8.56% ஆக இருக்கும். வகை III, வகை  IV களுக்கு கூப்பன் விகிதம் 8.65% ஆக இருக்கும். வகை I  & வகை II-களுக்கு 8.90%, வகை III க்கு 9.00% & வகை  IV-க்கு 9.00% வட்டி வருமானம் கிடைக்கும். 

மாறுபடும் வட்டி விகித என்சிடி (Floating Interest Rate NCD)

சீரிஸ் VII (Series VII) - ல், முதலீட்டுக் காலம் 3 ஆண்டுகள் மற்றும் கூப்பன் விகிதம் பெஞ்ச்மார்க் மிபார் உடன் கூடுதலாக 2.16% அளிக்கப்படும். ஓவர்நைட் மிபார் வட்டி விகிதம் ஆண்டு கணக்கில் கணக்கிடப்பட்டு, எஃப்பிஐஎல் அமைப்பால் வெளியிடப்படும். மாறுபடும் வட்டி விகிதம், ஆண்டு இறுதியில் பெஞ்ச்மார்க் மிபார் மற்றும் கூடுதலாக 2.16% அளிக்கப்படும். உதாரணமாக, ஓவர்நைட் மிபார் வட்டி விகிதம் ஆண்டு கணக்கில் 6.19% ஆக உள்ளது. இது மீண்டும் வட்டி விகிதம் கணக்கிடும் முதல், இரண்டாம், மூன்றாம் நிதி வழங்கு தேதிகளுக்கு ஏற்ப கணக்கிடப்படும்.

மூத்தக் குடிமக்களுக்கு சலுகைகள் (Benefits to senior citizens)

வகை III, வகை  IV  முதலீட்டாளர்களுக்கு, திட்டமிடப்பட்டுள்ள பகுதி 1 வெளியீடில் கூடுதலாக ஆண்டுக்கு 0.10% வட்டி, தொடர்புடயை பதிவு தேதிக்கு (relevant Record Date) ஏற்ப அளிக்கப்படும். இந்த வட்டிச் சலுகை கணக்கிட எடுத்துக் கொள்ளப்படும் தொகை, ஆரம்ப முதலீட்டு தொகையை விட மிகாமல் இருக்கும்.

கூடுதல் ஊக்கத் தொகை (Additional Incentive)

வகை III, வகை  IV  முதலீட்டாளர்களுக்கு, திட்டமிடப்பட்டுள்ள பகுதி  1 வெளியீடில் கூடுதலாக ஒரு முறை, 0.50%, 0.70%, 1.00% மற்றும் 0.50%   வட்டி முறையே சீரிஸ் II, சீரிஸ் III, சீரிஸ் IV, மற்றும் சீரிஸ் VI-களுக்கு கடைசியாக வட்டி வழங்கும் போது சேர்த்து அளிக்கப்படும். வகை III, வகை  IV  முதலீட்டாளர்களுக்கு, சீரிஸ் II, சீரிஸ் III, சீரிஸ் IV, மற்றும் சீரிஸ் VI-களுக்கு தொடர்புடயை பதிவு தேதிக்கு ஏற்ப இந்த ஒரு முறை கூடுதல் ஊக்கத் தொகை, மொத்த வட்டியுடன் சேர்த்து அளிக்கப்படும். இந்த வட்டிச் சலுகை கணக்கிட எடுத்துக் கொள்ளப்படும் தொகை, ஆரம்ப முதலீட்டு தொகையை விட மிகாமல் இருக்கும்.
[வகை  IV  முதலீட்டாளர்கள் (சிறு தனிப்பட்ட முதலீட்டாளர்கள் ( இந்தியக் குடிமக்கள் மற்றும் இந்துக் கூட்டுக் குடும்பம்) அதிகபட்சம் ரூ. 10 லட்சத்துக்கு விண்ணப்பிக்கலாம். இது இந்த என்சிடி வெளியீட்டின் அனைத்து சிரீஸ்களுக்கும் சேர்ந்த மொத்த தொகையாகும். வகை III  முதலீட்டாளர்கள் (உயர் மதிப்பு தனிநபர்கள்-HNIs) என்பவர்கள் ரூ. 10 லட்சத்துக்கு அதிகமாக என்சிடிகளுக்கு விண்ணப்பிக்கும் இந்தியக் குடிமக்கள் மற்றும் இந்துக் கூட்டுக் குடும்பத்தினர்கள் ஆவர். இது இந்த என்சிடி வெளியீட்டின் அனைத்து சிரீஸ்களுக்கும் சேர்ந்த மொத்த தொகையாகும். இந்த இரு பிரிவு முதலீட்டாளர்களிலும் இந்துக் கூட்டுக் குடும்பத்தில் கர்த்தா (Karta) என்கிற குடும்பத்தின் தலைவர் மூலமே விண்ணப்பிக்க வேண்டும்]   

என்சிடி மூலம் திரட்டப்படும் நிதியில் குறைந்தபட்சம் 75%, கடன் வழங்குதல், நிதி உதவி அளித்தல், ஏற்கெனவே வாங்கி இருக்கும் கடனுக்கான அசல் மற்றும் வட்டியை திரும்பச் செலுத்துதல் போன்றவற்றுக்கு பயன்படுத்திக் கொள்ளப்படும். அதிகபட்சம் 25% தொகை நிறுவனத்தின் பொது பயன்பாட்டுக்கு பயன்படுத்திக் கொள்ளப்படும். இந்த என்சிடிகள், இந்திய தேசிய பங்குச் சந்தை (National Stock Exchange of India Limited (“NSE) மற்றும் பிஎஸ்இ -ல் பட்டியலிடப்படும். இதில் பிஎஸ்இ, நியமிக்கப்பட்ட பங்குச் சந்தையாகும்.
இந்த என்சிடி-ன் முன்னணி மேலாளர்களாக யெஸ் செக்யூரிட்டீஸ் (இந்தியா) லிமிடெட், எடில்வைஸ் ஃபைனான்ஸியல் சர்வீசஸ் லிமிடெட், ஏ.கே கேப்பிட்டல் சர்வீசஸ் லிமிடெட், ஆக்சிஸ் பேங்க் லிமிடெட், கிரீன் பிரிட்ஜ் கேட்பிட்டல் அட்வைசரி பிரைவேட் லிமிடெட், ஐசிஐசிஐ பேங்க் லிமிடெட், ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் லிமிடெட், ஐஐஎஃப்எல் ஹோல்டிங்ஸ் லிமிடெட், இண்டஸ் இண்ட் பேங்க் லிமிடெட், எஸ்பிஐ. கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் லிமிடெட் மற்றும் டிரஸ்ட் இன்வெஸ்ட்மென்ட் அட்வைசர்ஸ் பிரைவேட் லிமிடெட் போன்றவை உள்ளன.
டிஹெச்எஃப்எல் பற்றி..
டிஹெச்எஃப்எல் (DHFL) கடந்த 1984 ஆம் ஆண்டு, அமரர் திரு. ராஜேஷ் குமார் வாத்வான் என்பவரால், சிறுநகரங்கள் மற்றும் கிராமப்புறத்தை சேர்ந்த கீழ்மட்ட மற்றும் நடுத்தர வருமான பிரிவினருக்கு நிதி உதவி அளிக்கும் நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டது.
டிஹெச்எஃப்எல்-ன் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. கபில் வாத்வான்-ன் தலைமையின் கீழ் டிஹெச்எஃப்எல், இந்தியாவின் முன்னணி வீட்டு வசதி நிறுவனங்களில் ஒன்றாக திகழந்து வருகிறது. லட்சக்கணக்கான கீழ்மட்ட மற்றும் நடுத்தர வருமான பிரிவினருக்கு நாடு முழுக்க வீட்டுக் கடன் வழங்கி  வருகிறது. இந்த நிறுவனத்துக்கு கேர் நிறுவனம் CARE AAA (Triple A), பிரிக்ஒர்க்ஸ் நிறுவனம் BWR AAA தரக்குறியீடுகளை வழங்கி உள்ளன.
கடந்த 34 ஆண்டுகளுக்கு மேலாக வாடிக்கையாளர்களுக்கு டிஹெச்எஃப்எல் பல்வேறு வகையான வீட்டு வசதிக் கடன்களை வழங்கி வருகிறது. வீட்டுக் கடன், மனைக் கடன், சொத்து அடமானக் கடன், வர்த்தக கட்டிடங்கள் கட்ட கடன், ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு திட்டக் கடன்கள் ஆகியவற்றை வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்களின் தேவை அறிந்து நாடு முழுக்க சிறுநகரங்களில் உள்ள கீழ்மட்ட மற்றும் நடுத்தர வருமான பிரிவினருக்கு வீட்டுக் கடன் வழங்கி வருகிறது. வலுவான வணிக அடிப்படை, துறை சார்ந்த நிபுணத்துவம் மூலம் இந்தியாவில் நிதிச் சேவை அளிப்பதில் மிகவும் நம்பகமான நிறுவனமாக திகழ்கிறது. டிஹெச்எஃப்எல்-ன் நிறுவன சமூக பொறுப்பின்  (CSR) ஒரு பகுதியாக நிதிக் கல்வி, திறமை மேம்பாடு, வறுமை ஒழிப்பு மற்றும் கல்வி மேம்பாட்டின் மூலம் கிராமப் புற மேம்பாடு போன்றவற்றை மேற்கொண்டு வருகிறது. டிஹெச்எஃப்எல் துபாய், லண்டன் மற்றும் ஐக்கிய அரபு நாட்டில் பிரதிநிதி அலுவலங்களை (representative offices)  கொண்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு பார்வையிடவும் www.dhfl.com
Disclaimer: Dewan Housing Finance Corporation Limited, subject to market conditions and other considerations, is proposing a public issue of secured redeemable non-convertible debentures (“NCDs”) and has filed the Shelf Prospectus dated May 14, 2018 and Tranche 1 Prospectus dated May 14, 2018 with the Registrar of Companies, Maharashtra, Mumbai, National Stock Exchange of India Limited, BSE Limited and SEBI. The Shelf Prospectus dated May 14, 2018 and Tranche 1 Prospectus dated May 14, 2018 are available on our website at www.dhfl.com, on the website of the stock exchanges at www.nseindia.com and www.bseindia.com and the respective websites of the lead managers at www.yesinvest.in, www.edelweissfin.com, www.akgroup.co.in, www.axisbank.com, www.greenbridge.in, www.icicibank.com, www.icicisecurities.com, www.iiflcap.com, www.indusind.com, www.sbicaps.com and www.trustgroup.in. Investors proposing to participate in the Issue should invest only on the basis of information contained in the Shelf Prospectus dated May 14, 2018 and Tranche 1 Prospectus dated May 14, 2018.  Investors should note that investment in NCDs involves a high degree of risk and for details relating to the same, please refer to the Shelf Prospectus dated  May 14, 2018, including the section ‘Risk Factors’ beginning on page 11 of the Shelf Prospectus dated May 14, 2018.

For more information, contact:
DHFL: Ms. Priyanka Rawlani (Mobile: 09833210451)
Adfactors PR: Mr. Nikhil Mansukhani (Mobile: 09833552171, 09820531932)

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற . - பஜாஜ் ஃபின்சர்வ் ELSS வரி சேமிப்பு ஃபண்ட் .!

திரு .  எஸ் .  கார்த்திகேயன் ,  நிறுவனர் ,  https://winworthwealth.com/ மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு   ஏற்ற . ...