மொத்தப் பக்கக்காட்சிகள்

எல்&டி ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ் ஒட்டு மொத்த நிகர லாபம் 2017-18-ல் ரூ. 1459 கோடி – ஆண்டு கணக்கில் 40% வளர்ச்சி

எல்&டி ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ் 
மார்ச் 31, 2018 உடன் முடிந்த காலாண்டு மற்றும் நிதி ண்டுக்கான நிதி நிலை செயல்பாடுகள்

ஒட்டு மொத்த நிகர லாபம் 2017-18-ல் ரூ. 1459 கோடிஆண்டு கணக்கில் 40% வளர்ச்சி

ஒட்டு மொத்த நிகர லாபம் 2017-18, 4-ம் காலாண்டில் ரூ.406 கோடிஆண்டு கணக்கில் 28% வளர்ச்சி

பங்கு மூலதனம் மீதான வளர்ச்சி 2017-18-ல் 15.03% மற்றும் 2017-18, 4-ம் காலாண்டில்15.06%



நிதி நிலை முடிவுகள் – முக்கிய அம்சங்கள்:

எல்&டி ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் (L&T Finance Holdings Ltd. -LTFH), 2017-18 ம் நிதி ஆண்டில் மொத்த நிகர லாபமாக ரூ.1,459 கோடி சம்பாதித்துள்ளது. இது40% வளர்ச்சி. 2017-18 ம் நிதி ஆண்டில் மொத்த நிகர லாபமாக ரூ.1,042 கோடியாக இருந்தது. 2017-18 ம் நிதி ஆண்டில் நான்காம் காலாண்டில் (Q4FY18),எல்டிஎஃப்ஹெச், மொத்த நிகர லாபமாக ரூ.. 406 கோடி ஈட்டி உள்ளது. இது ஆண்டு கணக்கில் 28% வளர்ச்சியாகும். 2016-17 ம் நிதி ஆண்டில் நான்காம் காலாண்டில் (Q4FY17) இது ரூ. 316 கோடியாக இருந்தது.

பங்கு மூலதனம் மீதான வருமானம் (RoE) 2017-18 ம் நிதி ஆண்டில்15.03% ஆக இருந்தது. இது 2016-17 ம் நிதி ஆண்டில்12.31% இருந்தது. இது 2.72% வளர்ச்சியாகும்.பங்கு மூலதனம் மீதான வருமானம், 2017-18 ம் நிதி ஆண்டில் நான்காம் காலாண்டில்15.06% ஆக உள்ளது. 2018 மார்ச் மாதத்தில் லார்சன் & டூப்ரோ நிறுவனம் மற்றும் (Larsen & Toubro Limited) தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கு (QIP) முன்னுரிமை பங்குகள் ஒதுக்கீடு (Preferential Allotment) செய்து கொடுத்து பெற்ற ரூ. 3,000 கோடி மூலம் சாதிக்கப்பட்டுள்ளது..

நிகர லாப அதிகரிப்புக்கு கீழ்க்காணும் விஷயங்கள் காரணங்களாக அமைகின்றன.

  • வணிகத்தில் வளர்ச்சி: இந்த நிறுவனம் அதன் கடன் உதவி அளிக்கும் வணிகத்தில் (lending businesses), குறிப்பாக கிராமப் புற கடன் உதவி ( Rural Finance), வீட்டு வசதிக் கடன் மற்றும் மொத்தக் கடன் (Housing Finance and Wholesale Finance), கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
  • 2017-18 ஆம் ஆண்டில் எல்டிஎஃப்ஹெச் வழங்கி கடன்கள் 68% மற்றும் சொத்து 28% அதிகரித்துள்ளது. அனைத்து பொருட்களிலும் லாபம் அதிகரித்திருப்பது, டிஜிட்டல் மற்றும் புள்ளி விவர பகுப்பாய்வு பயன்பாடு, சிறப்பான இடர்பாடு மேலாண்மை (risk management) போன்றவற்றால் இந்த வளர்ச்சி சாத்தியமாகி உள்ளது.



முக்கிய கவனம் செலுத்தும் வணிகம்




வழங்கப்பட்ட கடன் வளர்ச்சி




மொத்த கடன்




















FY18 vs FY17




FY18 vs FY17




































கிராமப் புற கடன் உதவி
97%


64%
















வீட்டு வசதிக் கடன் உதவி
56%


51%
















மொத்தக் கடன் உதவி
65%


13%




























மொத்தம்




68%




28%






















எல்டிஎஃப்ஹெச் அதன் முதலீடு மற்றும் செல்வ மேலாண்மை வணிகத்தில்(Investment & Wealth Management businesses) சிறப்பான வளர்ச்சி கண்டுள்ளது. 2017-18 ஆம் நிதி ஆண்டின் நான்காம் காலாண்டில் முதலீட்டு மேலாண்மை வணிகத்தில் நிர்வகிக்கப்படும் சராசரி சொத்து மதிப்பு (Average Assets under Management -AAUM) ரூ.65,932 கோடியாக அதிகரித்துள்ளது. இது 2016-17 ஆம் நிதி ஆண்டின் நான்காம் காலாண்டில் ரூ.39,300 கோடியாக இருந்த்து. இது 68% வளர்ச்சியாகும். செல்வ மேலாண்மை வணிகத்தில் சராசரி சொத்து சேவை மதிப்பு (Average Assets under Service - AAUS)ரூ.18,346கோடியாக அதிகரித்துள்ளது. இது 2016-17 ஆம் நிதி ஆண்டின் நான்காம் காலாண்டில் ரூ.13,623கோடியாக இருந்த்து. இது 35 சதவிகித வளர்ச்சியாகும்.


  • சொத்தின் தரத்தில் மேம்பாடு: எல்டிஎஃப்ஹெச், 2017-18 ம் நிதி ஆண்டில் முதல் காலாண்டிலிருந்து மொத்த வாராக் கடனை (GNPA) 90 நாள்களுக்குள் வசூலிக்க தொடங்கி இருக்கிறது. எல்டிஎஃப்ஹெச், வாராக் கடனை தீவரமாக கண்காணித்து அதனை முன் கூட்டியே எச்சரிக்கையாக தடுப்பது, மொத்த வாராக் கடனை தொடர்ந்து கவனித்து அதனைக் குறைப்பது, வாராக் கடன் வசூலில் தொடர்ந்து தீவிர கவனம் போன்றவற்றின் மூலம் எல்டிஎஃப்ஹெச்-ன் சொத்து தரம் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், வாராக் கடனுக்கான ஒதுக்கீட்டு விகிதத்தை (provision coverage ratio) 2018, மார்ச் 31-ல் 52.51% ஆக அதிகரித்துள்ளது. இது 2017, மார்ச் 31-ல் 31% ஆக இருந்தது. இதன் மூலம் அதன் ஐந்தொகை (balance sheet) மூலம் வலிமையானது.
r.



(ரூ. கோடி)

Q4FY18




Q3FY18




Q4FY17*




















































மொத்த வாராக் கடன்
3,884


3,969


4,519
















நிகர வாராக் கடன்
1,845


2,020


3,118
















மொத்த வாராக் கடன் %
4.80%


5.49%


7.11%
















நிகர வாராக் கடன் %
2.34%


2.87%


5.02%
















வாராக் கடனுக்கான ஒதுக்கீட்டு விகிதம் %
52.51%


49.11%


31.00%
























    • Restated to 90 DPD recognition of NPA

  • செலவு, வருமான விகிதம் மேம்பாடு : எல்டிஎஃப்ஹெச்ன் செலவு, வருமான விகிதம் (Cost to Income ratio) 2017-18 ம் நிதி ஆண்டில் 23.16% ஆக மேம்பட்டுள்ளது. இது 2017-18 ம் நிதி ஆண்டில் 26.18% ஆக இருந்தது. திறன் மற்றும் லாப அதிகரிப்பால் இது சாத்தியமாகி உள்ளது.

நிர்வாக இயக்குநரின் கருத்து:

நிதி நிலை முடிவுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து எல்டிஎஃப்ஹெச்-ன் நிர்வாக இயக்குநர் & முதன்மை செயல் அதிகாரி திரு. தினாநாத் துபாசி (Mr. Dinanath Dubhashi, Managing Director & CEO, LTFH) கூறும் போதுஎங்களின் அனைத்து தயாரிப்புகளிலும், இதர நிறுவனங்களை விட தொடர்ந்து மேம்பாட்டை சந்தித்து வருகிறோம். மேலும், எங்களின் தயாரிப்புகள் அனைத்தின் விற்பனையையும் அதிகரிக்க கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். அமோக வளர்ச்சி, கட்டண வருமானத்தில் கூடுதல் கவனம், உற்பத்தி திறன் அதிகரிப்பு மற்றும் சொத்தின் தரம் சிறப்பாக மேம்பட்டிருக்கிறது. இந்தக் காரணங்கள் மற்றும் 2017-18 ம் நிதி ஆண்டில் புதிதாக ரூ. 3,000 பங்கு மூலதனம் போடப்பட்டிருப்பது மூலம், பங்கு மூலதனம் மீதான வருமானம் 15.03% கொடுக்க முடிந்திருக்கிறது.

About L&T Finance Holdings:

LTFH is a financial holding company offering a focused range of financial products and services across rural, housing and wholesale finance sectors, as well as mutual fund products and wealth management services, through its wholly-owned subsidiaries, viz., L&T Finance Ltd., L&T Housing Finance Ltd., L&T Infrastructure Finance Company Ltd., L&T Investment Management Ltd. and L&T Capital Markets Ltd. LTFH is registered with RBI as a CIC-ND-SI. LTFH is promoted by Larsen & Toubro Ltd. (L&T), one of the leading companies in India, with interests in engineering, construction, electrical & electronics manufacturing & services, IT and financial services.


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அனைத்து நிதித் தேவைகளுக்கும் ஏற்ற மியூச்சுவல் ஃபண்டுகள் Mutual Fund

நாணயம் விகடன் & மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து `இலக்கு அடிப்படையிலான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு' என்ற நிகழ்ச்சியை வேலூரில...