மொத்தப் பக்கக்காட்சிகள்

ஸ்டாண்டர்டு சார்ட்டர்ட் பேங்க், சில்லறை டிஜிட்டல் வங்கி சேவை தொடக்கம், அனுஷ்கா ஷர்மா அறிமுகப்படுத்தினார்

ஸ்டாண்டர்டு சார்ட்டர்ட் பேங்க், சில்லறை டிஜிட்டல் வங்கி சேவை தொடக்கம், அனுஷ்கா ஷர்மா  அறிமுகப்படுத்தினார்.




சென்னை, ஏப்ரல் 27 , 2018 - Standard Chartered Bank (ஸ்டாண்டர்டு சார்ட்டர்ட் பேங்க்)  இன்று அதன் சில்லறை டிஜிட்டல் வங்கி (retail digital banking)  முன் முயற்சிகளை எடுத்துள்ளது. அதன்படி, இடைஞ்சல் / தடை எதுவும் இல்லாமல் தொடர்ந்து அனைத்து விதமான வங்கிச் சேவைகளையும் டிஜிட்டல் மூலம் பெற நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது, வங்கி கணக்கு தொடங்குவது முதல் ரிலேஷன்சிப் மேனேஜர்களை தொடர்பு கொள்வது வரை அனைத்து விஷயங்களும் டிஜிட்டல் வழியே நடக்கப் போகிறது. இந்த வங்கி  உடனடி டிஜிட்டல் வங்கி கணக்கு ஆரம்பிக்கும் வசதியை (instant digital account opening capability) இன்று தொடங்கி உள்ளது. இதன்படி, ஆதார் விவரங்களை பயன்படுத்தி ஆன்லைன் அல்லது மொபைல் இன்டர்ஃபேஸ் மூலம் உடனடியாக சேமிப்பு கணக்கை வாடிக்கையாளர்கள் ஆரம்பிக்க முடியும்.

டிஜிட்டல் வங்கிச் சேவையை தொடங்கி வைத்த ஸ்டாண்டர்டு சார்ட்டர்ட் பேங்க், வாடிக்கையாளர்கள் இப்போது மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை இந்த டிஜிட்டல் வங்கிச் சேவை மூலம் செய்ய முடியும் என அறிவித்துள்ளது. மேலும், யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (UPI) மற்றும் பாரத் குஆர் மூலம் பணம் செலுத்தும் வசதியை கொண்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. கூடுதலாக, வாடிக்கையாளர்கள் தங்கள் சேவை கோரிக்கைகளுக்கு ஆன்லைனில் சாட் (chat) செய்ய முடியும்.  முன்னுரிமை மற்றும் பிரீமியம் வங்கி வாடிக்கையாளர்கள் (Priority and Premium Banking clients) ரிலேஷன்சிப் மேனேஜர்களுடன்  வீடியோ கான்பரன்சிங் மூலம் மிகவும் விரைவாக ஆலோசனை அல்லது தீர்வுகளை பெறலாம்

வங்கியியல் சேவைகள், டிஜிட்டல் தளங்கள் மூலம் அதிக மாற்றத்தை பெற்றுள்ளது. இதன் மூலம் வங்கி அதிகாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இடையே தொடர்பு வேகமெடுத்துள்ளது.
 நுகர்வோர்கள், குறிப்பாக மில்லினியன்கள் (millennials) வங்கி சேவைகளை ஸ்மார்ட் டிஜிட்டல் தளங்களில் வேகமாகவும், தடையில்லாமலும் எதிர்பார்க்கிறார்கள். இந்த டிஜிட்டல் வங்கிச் சேவை அறிமுகம், இளைஞர்கள் மற்றும் பணக்கார வாடிக்கையாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். பணிபுரியும் இளைஞர்களை வங்கிச் சேவைக்குள் கொண்டு வர அனுஷ்கா சர்மாவை வர்த்தக தூதராக (brand ambassador) இந்த வங்கி கொண்டு வந்துள்ளது.  அனுஷ்கா, இந்தியாவின் சிறந்த நடிகைகளில் ஒருவர்

இதற்கான விழாவில் ஜெய்ர்ன் தருவாலா, தலைமை நிர்வாக அதிகாரி, இந்தியா, ஸ்டான்டர்ட் சார்ட்டர்ட் பேங்க், (Zarin Daruwala, CEO, India, Standard Chartered Bank) “இளைய இந்தியாவில் தொழில்நுட்பத்தை துரிதமாக ஏற்றுக் கொண்டு அங்கீகரிக்கும் விதமாக சில்லறை வங்கிச் சேவையில் டிஜிட்டலை புகுத்தி உள்ளோம். இதன் மூலம், தடையில்லா வங்கிச் சேவையை அளிப்பதோடு, இவை அனைத்தையும் வாடிக்கையாளர்களை மையமாக கொன்டு செயல்படுகிறோம். இன்று இந்தப் பயணத்தின் முக்கிய மைல்கல் ஆகும். வங்கி கணக்கு ஹொடங்குவதில் டிஜிட்டல் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளோம். அனுஷ்கா பிராண்ட் அம்பாசிடராக இருப்பது மூலம் இளம் வயதினர் அதிகம் பேர் டிஜிட்டல் வசதிக்கு முன்னுரிமை கொடுப்பார்கள்” என்றார்.

 அனுஷ்கா சர்மா கூறும் போது, “ ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் பேங்க் உடன் நான் பங்கெடுத்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவில் 160 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கும் ஒரு பாரம்பரியம் மிக்க வங்கியாக திகழும் அதேநேரத்தில் சம காலத்தில் மிகவும் முனைப்புடன் செயல்படும் ஓரு வங்கியாக உள்ளது.  ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் தொடர்ச்சியான டிஜிட்டல் புதுமையாக்க ஆற்றலுடன் நான் மிகவும் நம்பிக்கை மற்றும் உறுதியுடன் பிராண்ட் அம்பாசிடராக இணைந்தேன்." என்றார்.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அனைத்து நிதித் தேவைகளுக்கும் ஏற்ற மியூச்சுவல் ஃபண்டுகள் Mutual Fund

நாணயம் விகடன் & மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து `இலக்கு அடிப்படையிலான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு' என்ற நிகழ்ச்சியை வேலூரில...