மொத்தப் பக்கக்காட்சிகள்

பிளாக்செயின்கள சங்கிலி கட்டமைப்புகள் சமூதாயத்தில் என்ன தாக்கத்தை கொண்டு வரும்?


பிளாக்செயின்கள் (சங்கிலி கட்டமைப்புகள்) சமூதாயத்தில் என்ன தாக்கத்தை கொண்டு வரும்?

How blockchains can bring about social impact

by யெஸ் பேங்க் (YES BANK) 

சமீபத்திய அறிக்கை ஒன்றில், உலக பொருளாதார மன்றம் (World Economic Forum), பிளாக்செயின் என்கிற சங்கிலி கட்டமைப்பு தொழில்நுட்பத்தை (blockchain technolog), 'மெகா-போக்கு' (mega-trend) என வரையறை செய்துள்ளது. இது, அடுத்த பத்தாண்டுகளில் சமுதாயம் மற்றும் பொருளாதாரத்தை வடிவமைக்கும்.

சந்தை ஆராய்ச்சி நிறுவனமான, கிராண்ட் வியூ ரிச்சர்ச் (Grand View Research), வரும் 2024 ஆம்ஆண்டில்  பிளாக்செயின் தொழில்நுட்பத்திற்கான உலகளாவிய சந்தை அளவு $7.74 பில்லியன் டாலர் என்று மதிப்பிட்டுள்ளது. சுவிஸ் நிதி நிறுவனமான யூபிஎஸ் (UBS), பிளாக்செயின் தொழில்நுட்பம் 2027 ஆம்ஆண்டுக்குள், ஆண்டுக்கு உலக அளவில் 300 பில்லியன் டாலர்கள் முதல் $ 400 பில்லியன் டாலர்கள் பொருளாதார மதிப்பை  அதிகமாக சேர்க்கும் என குறிப்பிட்டுள்ளது. பல்வேறு தொழிற்துறைகளின் தொழில்நுட்பத்தின் சிக்கலானவைகள் பிளாக்செயின் மூலம் தொழில்நுட்பத்தில் தீர்த்து வைப்பதால், இந்தத் தொழில்நுட்பத்தில் உலகளாவிய முதலீடுகள் அதிகரித்து வருகின்றன.

இணையாக, சர்வதேச நிறுவனங்கள், அரசாங்கங்கள், ஊக்கப்படுத்தும்  மற்றும் முடுக்கி விடும் நிறுவனங்கள், அதே போல் தனியார் நிறுவனங்கள் மற்றும் லாப நோக்கம் அல்லாத நிறுவனங்கள் போன்றவை, இந்த பிளாக்செயின் தொழில்நுட்பம் நேர்மறை சமுதாய தாக்கத்தை எப்படி ஏற்படுத்து என்பதை பல்வேறு வழிகளில் கண்டுபிடித்து வருகின்றன.

முதலாவதாக,நம்பகமான நிரந்தர பதிவுகள் உருவாக்கப்பட வேண்டும். அடையாள நிர்வாகத்தைக் கவனியுங்கள். உலக வங்கியின்படி, ஒரு பில்லியன் (100 கோடி) மக்களை இன்று எந்த நாட்டு அரசாங்கமும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. இதன் அர்த்தம்,  குடிமக்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் சேவைகளை அவர்கள் அனுபவிக்க முடியாது என்பதாகும்.

மைக்ரோசாப்ட் மற்றும் அக்செஞ்சர் நிறுவனங்கள் இந்தச் சிக்கலுக்கு தீர்வு காண்கின்றன. அதற்கு அவை, ஐக்கிய நாடுகள் சபையால் (United Nations)ஊக்குவிக்கப்பட்ட ஒரு தனியார் - பொது கூட்டாண்மை (private-public partnership) கட்டமைப்பான அடையாளம் 2020 (Identity 2020) என்பதன் கீழ் தீர்வு காண்கின்றன. 

இந்த இரண்டு நிறுவனங்களும், பயோமெட்ரிக் புள்ளிவிவரங்களை (biometric data) செயல்படுத்தும் ஒரு கருவியை உருவாக்கியுள்ளன. அவை, பிளாக்செயின்-ல்  பதிவு செய்வதன் மூலம் நிரந்தர மற்றும் உலகளாவிய அடையாளத்தை  உருவாக்குகின்றன.

பிற பயன்பாடுகள் என்று பார்த்தால், நம்பகமான நிரந்தர பதிவுகள் நில ஒழுங்குமுறை (land regulation) போன்ற துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். நில உரிமைகள் மற்றும் நில உடைமைகள் குறித்த பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கத்தோடு இந்தியாவில், தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச அரசாங்கங்கள், நில உரிமையை பதிவு செய்யும் விதமாக முன்னோடி திட்டத்தை கொண்டு வந்து, அதனை பிளாக்செயினில் பதிவு செய்து வருகின்றன.

இரண்டாவதாக, சர்வதேச உதவி வழங்கப்படும்வழிமுறையை மாற்றுவதாகும். இயற்கைபேரழிவு அல்லது உள்நாட்டுயுத்தம் காரணமாக அரசாங்கம், அதன்மக்களுக்கு அவசியமான சேவைகளைவழங்க முடியாவிட்டால்,  சர்வதேச  நிதி மூலம்பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிவாரணம்வழங்குவதை ஊக்கப்படுத்துகிறது.


இந்த உன்னத நோக்கம் இருந்த போதிலும், வெளிநாட்டு உதவிகள் பெரும்பாலும் நிதிக் கசிவுகள், அதிக செலவு மற்றும் நிதி எவ்வாறு செலவழிக்கப்படுகின்றன என்பதற்கான வெளிப்படைத்தன்மை ஆகியவை சமுதாயத்தின் ஆய்வுக்கு அடிக்கடி உட்படுத்தப்படுகின்றன. பிளாக்செயின் தொழில்நுட்பம், மிகவும் தேவையான வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்பாடுகளை எளிதாக்குகிறது.

ஜோர்டானில் உள்ள ஓர் அகதிகள் முகாமில், தொடக்க நிறுவனம் ஒன்று, உலக உணவு திட்டம் மூலம் வழங்கப்பட்ட உணவு பொருட்களை, பிளாக்செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிரிய நாட்டு அகதிகளுக்கு விநியோகித்துள்ளது. நிகழ் நேரத்தில் (real time), இந்தத் தொழில்நுட்பம் உதவித் திட்டத்தின் செலவுகளைக் கண்காணிக்கும், நன்கொடையாளர்களுக்கு தங்கள் பணத்தை எவ்வாறு செலவழித்தார்கள் என்பதை தெரிவிக்க்கும் மற்றும் சரியான பயனாளிகளுக்கு உணவு விநியோகம் வழங்கப்பட்டதை உறுதிப்படுத்தும். இதே தீர்வு பாகிஸ்தானில் மற்றொரு முகாமில் பயன்படுத்தப்படுகிறது. ஆண்டு இறுதிக்குள் 1,00,000 பயனாளிகளுக்கு உதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிளாக்செயின் தொழில்நுட்பம்,  திட்டத்தின் செயல்திறனை அதிகரிக்கிறது மற்றும் சர்வதேச உதவி நிறுவனத்தின் நற்பெயரை மேம்படுத்துகிறது,  நன்கொடையாளர்களுக்கு வெளிப்படைத் தன்மை தெரிவிக்கப்படுகிறது.

மூன்றாவதாக, உண்மையிலேயே உலக அளவில் நிதிச் சேவை வசதி அனைவருக்கும் கிடைக்கும் நிலை. வங்கிச் சேவையை பெறாத ஏராளமானவர்களுக்கு நிதிச் சேவையை நுண்நிதி (Microfinance) நிறுவனங்கள், அற்புதமான கருவி மூலம் அளித்து வருவது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், உலக வங்கி புள்ளி விவரப்படி, அதிக வட்டிவிகிதம் மற்றும் கடன் விநியோகம் மற்றும் கடன்களை திருப்பிச் செலுத்துதல் ஆகியவற்றுடன் தொடர்புடைய செயல்பாட்டு செலவுகள்,  அடையாளம் மற்றும் கடன் அபாயத்தை மதிப்பிடுவதற்கான சிக்கலான நடைமுறைகள்  போன்றவற்றால் 200 கோடிக்கும் மேலான மக்களுக்கு நிதிச் சேவை கிடைக்கவில்லை.  

பிளாக்செயின் தொழில்நுட்பம், தனிப்பட்ட நபர்களின் புள்ளி விவரங்கள் சரிபார்ப்பு, கடன் வாங்கும் தகுதியை கண்டறிய உதவக் கூடும்.  எனவே, வங்கி கணக்கை ஆரம்பித்து, அதனை வேகமாக, எளிதாக மற்றும் செலவு குறைவாக இயக்க முடியும்.

கூடுதலாக, பிளாக்செயின் தொழில்நுட்பம் மூலம் புதிய வணிக மாதிரிகளை, நுண் பணப் பரிமாற்றங்களை குறைந்த செலவு, குறைவான நேரத்தில் அளிக்க முடியும். மேலும் காப்பீடு, கடன்கள், சேமிப்புகள் மற்றும் முதலீடுகள் சார்ந்த சேவைகள், புதிய நிதித் திட்டங்களை உருவாக்குவதிலும் பிளாக்செயின் தொழில்நுட்பம் உதவக்கூடும்.
இந்தியாவில், பிளாக்செயின்கள் மீது அரசாங்கம் மற்றும் தனியார் துறையினரால் ஆர்வம், அக்கறை காட்டப்படுகின்றன. பொதுத் துறை நிறுவனமான நிதி ஆயோக் (Niti Aayog) சமீபத்தில் இந்தியா ஸ்டேக்கை (IndiaStack) இணைக்கும் இந்தியாவின் சங்கிலி (IndiaChain) கட்டமைப்பை, பிளாக்செயின் ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு மற்றும் ஆதாரை பயன்படுத்தி உருவாக்கும் என்று அறிவித்துள்ளது.  இந்த அறிவிப்பு, பெரும்பாலான மிகவும் முன்னேறிய நாடுகளை போல் இந்தியாவும் செல்ல வழி வகுக்கும் என்பதால் மனதார  வரவேற்கப்படுகிறது. உதாரணமாக, எஸ்தோனியா பிளாக்செயின் உள்கட்டமைப்பில் அதிக நன்மைகளை உருவாகி உள்ளது. மேலும், அதன் மூலம் பொதுச் சேவைகளை நாட்டு மக்களுக்கு அளித்து வருகிறது.

தனியார் துறையில், இந்திய மற்றும் சர்வதேச வங்கிகள் ஒன்றிணைந்து பேங்க்செயின் கூட்டமைப்பு மூலம் பிளாக்செயின் சார்ந்த தீர்வுகளை அமல்படுத்தி வருகின்றன.   இந்தக் கூட்டமைப்பு, 'உங்கள் வாடிக்கையாளரை அறிந்துக் கொள்ளுங்கள்' (KYC) அடையாளம், ஒப்பந்த மேலாண்மை, கடன் ஒருங்கிணைப்பு மற்றும் வங்கிகளுக்கு இடையே பணப் பரிமாற்றம் போன்றவற்றிற்கான பயன்பாட்டு நிகழ்வுகளை உருவாக்க கவனம் செலுத்தி வருகிறது.

உலகளாவிய தீர்வுகளை அடையாளம் காண, பணம் அனுப்புதல் துறை (remittances sector) போன்றவற்றில் இந்தியச் சந்தையானது தனித்துவமான வாய்ப்புகளை வழங்குகிறது. உலகிலேயே தனிநபர் பணப் பரிமாற்றங்களை மிகப் பெரிய அளவில் பெறும் நாடாக இந்தியா உள்ளது. யெஸ் பேங்க் (YES BANK)-ல் பிளாக்செயின் தொழில்நுட்பம் மூலம் நாங்கள் சர்வதேச பண பரிமாற்றங்களை வேகமாக, பாதுகாப்பாக மற்றும் அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் விதமாக  மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். 
இந்த இலக்கை அடைய, நாங்கள் அமெரிக்காவை சேர்ந்த ரிப்பிள் (Ripple) நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளோம். இதன் மூலம், பிளாக்செயின் தொழில்நுட்பம் மூலம் எல்லைக் கடந்த பண பரிமாற்றம் நிகழ் நேரத்தில் மேம்படும். இந்த பிளாக்செயின்கள், பாரம்பரிய வணிக மாதிரிகளில் பெரிய அளவிலான மாற்றத்தை கொண்டு வரும் மற்றும் மேலும் சமூதாயத்தில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும்.

இந்தியாசெயின் போன்றவை மூலம் இந்திய அரசு முற்போக்கான முன் முயற்சிகளை எடுத்துள்ளது. மேலும், D.I.C.E. (வடிவமைப்பு, கண்டுபிடிப்பு மற்றும் படைப்பாற்றல் தலைமையிலான தொழில்முனைவு) மூலம்  தனித்துவமான குணாதிசயங்களை  பெரிதாக்குவதற்கான வாய்ப்பு, வேகமான வளர்ச்சி, வளர்ந்து வரும் பொருளாதாரம், அதன் மகத்தான .டி. திறமை, மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் சாத்தியம் ஆகியவை மூலம் வரும் பத்தாண்டு காலத்தில் இந்தியா நிலையான பொருளாதார வளர்ச்சி அடையும்.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அனைத்து நிதித் தேவைகளுக்கும் ஏற்ற மியூச்சுவல் ஃபண்டுகள் Mutual Fund

நாணயம் விகடன் & மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து `இலக்கு அடிப்படையிலான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு' என்ற நிகழ்ச்சியை வேலூரில...