மொத்தப் பக்கக்காட்சிகள்

ஐசிஐசிஐ பேங்க், நடப்பு கணக்கு ஆரம்பிக்க இந்தியாவின் முதல் டிஜிட்டல் விண்ணப்ப வசதி அறிமுகம்


ஐசிஐசிஐ பேங்க், நடப்பு கணக்கு ஆரம்பிக்க இந்தியாவின் முதல் டிஜிட்டல் விண்ணப்ப வசதி அறிமுகம்;சில மணி நேரங்களில் கணக்கு செயல்படுகிறது

·       டேப்லெட்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் மூலம் பல்வேறு வகையான நடப்பு கணக்குகளை ஆரம்பிக்க இந்தியாவில் முதல் வங்கியாக ஐசிஐசிஐ பேங்க், செயல்முறையை அறிமுகப்படுத்தி உள்ளது.
·       'உங்கள் வாடிக்கையாளர்களை அறிந்து கொள்ளுங்கள்' ஆவணங்களை நிகழ் நேர சரிபார்ப்புக்காக APIகள்   பயன்படுத்தப்படுகிறது.

மும்பை: ஐசிஐசிஐ பேங்க், ஒருங்கிணைக்கப்பட்ட சொத்துகள் அடிப்படையில் இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கியாக உள்ளது. இந்த வங்கி டேப்லெட்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் (tablets and smartphones) மூலம் பல்வேறு வகையான நடப்பு கணக்குகளை ஆரம்பிக்க உதவும் டிஜிட்டல் விண்ணப்ப வசதியை (digital application facility) அறிமுகம் செய்துள்ளது. சுய தொழில் செய்யும் தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு சில மணி நேரங்களில் நடப்பு கணக்குகளை ஆரம்பிக்க வங்கி அதிகாரிகள் உதவுகிறார்கள். பொதுவாக, இந்த மாதிரி நடப்பு கணக்குகளை ஆரம்பிக்க சராசரியாக சில தினங்கள் எடுத்துக் கொள்ளும்.

இந்தத் தனிப்பட்ட டிஜிட்டல் கணக்கு ஆரம்பிப்பதற்கான விண்ணப்ப பணிகளை, வங்கி அதிகாரிகள் வாடிக்கையாளர்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் டிஜிட்டல் முறையில் மேற்கொள்கிறார்கள். 'உங்கள் வாடிக்கையாளர்களை அறிந்து கொள்ளுங்கள்' (KYC) ஆவணங்கள்,  நிகழ் நேர சரிபார்ப்பு (real-time) மூலம் மேற்கொள்ளப்படுகிறது. அதுவும் இது வாடிக்கையாளரின் இடத்திலேயே அவர்களுக்கு வசதியான நேரத்திலும் பாதுகாப்பான முறையிலும்ம் மேற்கொள்ளப்படுகிறது.  

இதன் மூலம், இப்போது வாடிக்கையாளர்கள்  நீளமான காகித வேலைகள் ஏற்படுத்தும் தொந்தரவு இல்லாமல், வங்கி நடப்பு கணக்கை வேகமாகவும் சுலபமாகவும் சந்தோஷமாக ஆரம்பிக்க முடியும். அதாவது, வாடிக்கையாளர்களின் புகைப்படங்கள்,  கேஒய்சி ஆவணங்களின் நகல்கள் போன்றவை இல்லாமல் வங்கி நடப்பு கணக்கை ஆரம்பிக்க முடிகிறது. 

இந்தியாவில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் நடைமுறை மூலம், பல்வேறு வகையான நடப்பு கணக்குகளை அதாவது, தனியுரிமை, தனியார் மற்றும் பொது வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட  கூட்டு நிறுவனங்களுக்கான நடப்பு கணக்குகளை சில மணி நேரங்களில் ஆரம்பிக்க உதவுகிறது. 

இந்த டிஜிட்டல் நடைமுறை, ஆப்டிகல் கேரக்டர் அங்கீகாரம் (Optical Character Recognition - OCR) போன்ற தொழில்நுட்பம் மூலம் அமல்படுத்தப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பம், ஆவணங்களில் எழுதப்பட்டுள்ள எழுத்துகளை அங்கீகரித்து டிஜிட்டல் நடைமுறையை தடையில்லாமல் விரைந்து முடிக்கவும் மிகச் சரியாக மேற்கொள்ளவும் உதவுகிறது. இதில், புதுமையான 'அப்ளிகேஷன் புரோக்கிராம்  இன்டர்பேஸ்' (Application Programme Interface -API) பயன்படுத்தப்பட்டு, 'உங்கள் வாடிக்கையாளர்களை அறிந்து கொள்ளுங்கள்' (KYC) ஆவணங்கள், நிகழ் நேர சரிபார்ப்பு (real-time) மேற்கொள்ளப்படுகிறது. தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் சார்ந்த விவரங்கள் பொதுவில் கிடைக்கும் அரசு தகவல்கள் உதாரணமாக நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரீஸ் லிமிடெட் (National Securities Depository Limited NSDL), ஆதார் (Aadhaar) மற்றும் ஏற்றுமதி இறக்குமதி எண் (Import Export Code - IEC) உள்ளிட்டவை மூலம் உறுதிபடுத்தப்படுகிறது. இந்தப் புதுமையான அம்சங்கள் அனைத்தும், வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப சில மணி நேரங்களில் நடப்பு கணக்கை ஆரம்பிக்க உதவுகிறது.

இந்தப் புதுமையான தீர்வை, ஐசிஐசிஐ பேங்க்-ன் சொந்த புதுமை மையம் (innovation centre) மூலம் வங்கியால் வளர்க்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.

இந்த முன் முயற்சி பற்றி பேசிய ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திருமதி. சாந்தா கோச்சார் (Ms. Chanda Kochhar, MD & CEO, ICICI Bank) ஐசிஐசிஐ வங்கி, எப்போதும் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளுக்கான தொழில்நுட்ப  முன்னோடியாக திகழ்கிறது மற்றும் அதன் வாடிக்கையாளர்களுக்கு உலக தரமான வங்கி அனுபவத்தை வழங்குகிறது. இதற்கு ஏற்ப, டிஜிட்டல் முறையில் நடப்பு கணக்கை ஆரம்பிக்கும் நாட்டின் முதல் செயல்முறையை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். 

இந்தத் தனித்துவமான முறை ஒரு 'புதிய சகாப்தம்' ஆகும்.  ஒரு சில மணி நேரங்களில் நடப்பு கணக்குகளை ஆரம்பித்து விட முடிகிறது. இதற்கு  முன் இந்த வேலை முடிய சில தினங்கள் ஆனது. அந்த வகையில் இது ஒரு சாதனையான முன்னேற்றமாகும். வணிகர்கள் மற்றும் நிறுவனங்கள் ஒரு வங்கிக் கூட்டாளரை தேர்வு செய்யும் போது, வணிகம் செய்வது எளிதானது (‘ease of doing business’) என்பது ஒரு முக்கிய அளவுகோலாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த முயற்சியில், வங்கியியல் வசதிகளை வேகமாக வழங்குவதற்காக, நாங்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறோம். இந்தத் திசை எங்கள் நடப்புக் கணக்கு மற்றும் வியாபார வங்கியியல் வளர்ச்சியான இதர வங்கிகளை விட வேகமாக வளர உதவுமென நம்புகிறோம், இதன் மூலம் எங்களின் சந்தைப் பங்களிப்பு அதிகரிக்கும்"

இந்த வசதியின் சில நன்மைகள்:

·       வேகமாக கணக்கு ஆரம்பித்தல்: நடப்புகணக்குகள் இப்போது சில மணி நேரத்தில் ஆரம்பிக்கப்படும். இது விரைவாக தங்கள் வணிக நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு தொடக்க நிறுவனங்கள் (startups) போன்றவர்களுக்குஉதவுகிறது

·       காகித ஆவணங்கள் குறைப்பு: வாடிக்கையாளர்கள் வங்கிக் கிளைக்குச் செல்ல வேண்டியதில்லை. வாடிக்கையாளர்கள் காகித வேலைகள் குறிப்பாக, புகைப்படங்கள்,  கேஒய்சி ஆவணங்களின் நகல்கள் போன்றவை இல்லாமல் வங்கி நடப்பு கணக்கை ஆரம்பிக்க முடிகிறது. கூடுதலாக, இது  வங்கி உள் இணைப்பு விவரங்களை பூர்த்தி செய்வதற்கான தேவையை  நீக்குகிறது.                                                                                                                                                             
·       துல்லியம் அதிகரிக்கிறது: கேஓய்சி ஆவணங்கள், பொதுவில் கிடைக்கும் அரசு தகவல்கள் துல்லியமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனால், போலியான விவரங்கள் தடுக்கப்படுகிறது.

* காகித பயன்பாடு குறைப்பு:  நல்ல சுற்றுச்சூழலை உருவாக்குவதற்கான ஐசிஐசிஐ வங்கியின் உறுதி மொழியை நிறைவேற்றும் விதமாக இந்த டிஜிட்டல் தொழில்நுட்பம் அமைந்துள்ளதால், காகிதப் பயன்பாடு வாடிக்கையாளருக்கும் வங்கிக்கும் பெருமளவு குறைந்துள்ளது.

டிஜிட்டல் வடிவத்தில் அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்பட்டவுடன், கணக்கு தொடக்க வடிவத்தின் சுருக்கம் மற்றும்மிக முக்கியமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பிரிண்ட் எடுக்கப்பட்டு வாடிக்கையாளரால் ஒரு முறை அங்கீகார கையொப்பமிடப்பட வேண்டும்.

ஐசிஐசிஐ வங்கி, வணிக வங்கி பிரிவில் டிஜிட்டல் சேவைகளை வழங்க வங்கியால் மேற்கொள்ளப்பட்ட முன் முயற்சிகளின் ஓர் அங்கமாக நெருக்கமாக நடப்புக் கணக்குகளைத் தொடங்குவதற்கான டிஜிட்டல் வசதி வந்துள்ளது.

இதில் குறு, சிறு நடுத்தர நிறுவனங்களான (MSME) நாட்டின் முதல் ஆன்லைன் சேனஒ மற்றும் உடனடி ஓவர் டிராஃப்ட் வசதியை கொண்டு வந்ததது அடங்கும். மேலும், வங்கிக் கணக்கு மற்றும் வங்கி சேவைகள் டிஜிட்டல் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.


 For updates, visit  www.icicibank.com, follow us on www.twitter.com/ICICIBank


About ICICI Bank:

ICICI Bank Ltd (NYSE:IBN) is India’s largest private sector bank by consolidated assets. The Bank’s consolidated total assets stood at US$ 165 billion at December 31, 2017. ICICI Bank's subsidiaries include India's leading private sector insurance, asset management and securities brokerage companies, and among the country’s largest private equity firms. It is present across 17 countries, including India.’

For media queries, write to:corporate.communications@icicibank.com    
 
Except for the historical information contained herein, statements in this release, which contain words or phrases such as 'will', 'would', etc., and similar expressions or variations of such expressions may constitute 'forward looking statements'. These forward-looking statements involve a number of risks, uncertainties and other factors that could cause actual results to differ materially from those suggested by the forward-looking statements. These risks and uncertainties include, but are not limited to our ability to obtain statutory and regulatory approvals and to successfully implement our strategy, future levels of non-performing loans, our growth and expansion in business, the adequacy of our allowance for credit losses, technological implementation and changes, the actual growth in demand for banking products and services, investment income, cash flow projections, our exposure to market risks as well as other risks detailed in the reports filed by us with the United States Securities and Exchange Commission. ICICI Bank undertakes no obligation to update forward-looking statements to reflect events or circumstances after the date thereof. All reference to interest rates, penalties and other terms and conditions for any products and services described herein are correct as of the date of the release of this document and are subject to change without notice. The information in this document reflects prevailing conditions and our views as of this date, all of which is expressed without any responsibility on our part and is subject to change. In preparing this document, we have relied upon and assumed, without independent verification, the accuracy and completeness of all information available from public sources. ICICI Bank and the "I man" logo are the trademarks and property of ICICI Bank. Any reference to the time of delivery or other service levels is only indicative and should not be construed to refer to any commitment by us. The information contained in this document is directed to and for the use of the addressee only and is for the purpose of general circulation only.


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund   மதுரை பெண்களே ஜெயி...