மொத்தப் பக்கக்காட்சிகள்

சாம்சங் கேலக்ஸி எஸ் 9 - உலகின் சிறந்த ஸ்மார்ட்போன் – கன்ஸ்யூமர் ரிப்போர்ட்ஸ்

சாம்சங் கேலக்ஸி எஸ் 9 - உலகின் சிறந்த 

ஸ்மார்ட்போன்கன்ஸ்யூமர் ரிப்போர்ட்ஸ்   

சாம்சங்-ன் சமீபத்திய வெளியீடுகளான கேலக்ஸி எஸ்9 மற்றும்  கேலக்ஸி எஸ்9+ (Galaxy S9 and S9+) ஸ்மார்ட்போன்கள் அண்மைக் கால,  கன்ஸ்யூமர் ரிப்போர்ட்ஸ் (Consumer Reports) படி முன்னணி இரண்டு இடங்களை பிடித்திருக்கின்றன. கன்ஸ்யூமர் ரிப்போர்ட்ஸ் என்பது தனிப்பட்ட, லாப நோக்கம் இல்லாத அமைப்பாகும். அது சந்தையில் உண்மை, வெளிப்படைதன்மை, நியாய நிலைபோன்றவற்றை அலசி ஆராய்ந்து நுகர்வோர் குறித்த விவரங்களை வெளியிடுகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்9, கேலக்ஸி எஸ்9+, இரண்டும் ஒட்டு மொத்தமாக தனித் தனியே 81 புள்ளிகளை பெற்றுள்ளன.

சாம்சங் கேலக்ஸி எஸ்9, அதன் சிறப்பான செயல்பாடு, அதிக நாள்கள் உழைக்கும் திறன், மிகச் சிறப்பான ஒலி-ஒளி தரம் (performance, durability, superior audio-visual quality) மற்றும் ஒப்பிட முடியாத இதர சிறப்பு அம்சங்கள் மூலம் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. இதற்கு அடுத்தஇடத்தை சாம்சங் கேலக்ஸி எஸ்9+   பிடித்திருக்கிறது. கன்ஸ்யூமர் ரிப்போர்ட்ஸ்படி, ஆயுள் சோதனையில் (durability test), 100 தடவை கீழே போடப்பட்டதில், சிறிய சிராய்ப்புகள், கீறல்கள்தான் ஏற்பட்டன. கேலக்ஸி எஸ்9+, 50 தடவைகள் கீழே போட்டு பரிசோதிக்கப்பட்டதில்பிரச்சினை எதுவும் இல்லை.  

''இந்தப் புதியஸ்மார்ட்போன்கள், மேம்படுத்தப்பட்டபாதுகாப்பு அம்சங்கள்,  மெதுவாக இயக்ககூடியசிறந்த வீடியோ, தனிப்பட்ட டிஜிட்டல் இமேஜ் ஆக மாற்றக்கூடிய திறன் கொண்டகேமிரா போன்றவற்றை கொண்டுள்ளன. நீண்ட நாள்கள் உழைக்கும் அதிக ஆயுள், வேகமான செயலாக்கம் போன்றவை இதர போட்டி தயாரிப்புகளை பின்னுக்கு தள்ளிவிட்டு, சாம்சங் கேலக்ஸி எஸ்9, கேலக்ஸி எஸ்9+ முன்னணியில் இருக்கின்றன"  என கன்ஸ்யூமர்ரிப்போர்ட்ஸ்-ல் சொல்லப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்8, எஸ்8 ஆக்டிவ் மற்றும் எஸ்8+ (Galaxy S8, S8 Active and S8+) போன்றவை சிறந்த ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் 3வது, 4வது மற்றும்5வது இடங்களை பிடித்துள்ளன.

சாம்சங், ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களின் வாடிக்கையாளர்களால் மிகவும்விரும்பப்பட்டு இந்தியாவில் முதல் இடத்தில் இருக்கிறது. பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் பிரிவில் (ரூ.30,000க்கு மேல்), சாம்சங் 50 சதவிகிதத்துக்கும் மேல் சந்தைப் பங்களிப்பை கொண்டுள்ளது. இந்தியாவில் கேலக்ஸி எஸ்9 விலை ரூ. 57,900 ஆகவும், கேலக்ஸி எஸ்9+ விலை ரூ. 64,,900 ஆகவும் உள்ளன.

ஆதாரம்: கன்ஸ்யூமர் ரிப்போர்ட்ஸ் (Consumer Reports) யாரையும் சார்ந்தில்லாத தனிப்பட்ட மற்றும் லாப நோக்கம் இல்லாத உறுப்பு அமைப்பாகும். அது சந்தையில் உண்மை, வெளிப்படைதன்மை, நியாயநிலை போன்றவற்றை அலசி ஆராய்ந்து நுகர்வோர் குறித்த விவரங்களை வெளியிட்டு வருகிறது. சர்வதேச அளவில், நுகர்வோர் நடத்தைகள் குறித்த வெளிப்படையான மற்றும் நடுநிலையான முடிவுகளை வெளியிடும் சிறந்த ஒரு அமைப்பாக அனைவராலும் பார்க்கப்படுகிறது.

About Samsung Electronics Co., Ltd.

Samsung inspires the world and shapes the future with transformative ideas and technologies. The company is redefining the worlds of TVs, smartphones, wearable devices, tablets, digital appliances, network systems and memory, system LSI, foundry and LED solutions. For latest news on Samsung India, please visit Samsung India Newsroom at http://news.samsung.com/in. For Hindi, log on to Samsung Newsroom Bharat at https://news.samsung.com/bharat. You can also follow us on Twitter @SamsungNewsIN


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund   மதுரை பெண்களே ஜெயி...