மொத்தப் பக்கக்காட்சிகள்

சென்னையில் ஸ்ரீராம் -ன் 75 வது ஆட்டோமால்

சென்னையில்  ஸ்ரீராம் -ன் 75 வது ஆட்டோமால்  

ஶ்ரீராம் ஆட்டோமால், அதன் 75வது ஆட்டோமால் -ஐதமிழ்நாட்டின்சென்னையில்2018, ஏப்ரல் 18 ம்தேதி தொடங்கி உள்ளது. பயன்படுத்தப்பட்டவாகனங்கள்மற்றும்உபகரணங்களுக்கானதேவையைஈடுகட்டஇது தொடங்கப்பட்டுள்ளது.

        தெற்கு மண்டலத்தில் 31 வது ஆட்டோமால்& இந்தியாவில் 75 வதுஆட்டோமால்
        250க்கும் மேற்பட்ட பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் கருவிகள், உபகரணங்கள்  பரிமாற்றத்துக்கு தயாராக இருந்தன.
        250 வாகனங்களில் 150 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுவிட்டன.

         500க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வருகை

ஏப்ரல் 18, 2018. ஶ்ரீராம் ஆட்டோமால்  இந்தியா லிமிடெட் (Shriram Automall India Limited - SAMIL), இந்தியாவின் மிகப் பெரிய நேரடி மற்றும் ஆன்லைன்  சேவை (Physical & Online Service) அளிக்கும் நிறுவனம். இது பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் உபகரணங்கள், கருவிகள் பரிமாற்றத்துக்கான  75வது  ஆட்டோமால் வசதியை  (Automall Facility) அறிமுகப்படுத்தி உள்ளது.  

இந்த ஆட்டோமால் தெற்கு மண்டலத்தில் 31 வது  & தமிழ்நாட்டில் 8 வது ஆட்டோமால் ஆகும். நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டத்தின்படி இந்தப் புதிய ஆட்டோமால் தொடங்கப்பட்டுள்ளது. 10 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் ஆட்டோமல் கோதியம்பாக்கம் கிராமம், பூந்தமல்லி - திருவள்ளூர்  ஹை ரோடு,, சென்னை, தமிழ்நாடு, பின்கோடு – 600 124 ல் அமைந்துள்ளது.
பிரமாண்ட திறப்பு விழா கொண்டாட்டத்தின் போது,, சென்னை ஆட்டோமாலில்  நேரடி ஏலம் நடைபெற்றது. 250+ க்கும் மேற்பட்ட வாகனங்கள் மற்றும் கருவிகள், மாதிரி உபகரணங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏலம் விட வசதியாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.


மெகா ஏல நிகழ்வில்  பங்கேற்க, 500 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள பகுதிகளிலிருந்து வந்திருந்தனர். ஒரேநாளில் 150க்கும் மேற்பட்ட பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டன.

இந்தியாவின் ஒவ்வொரு குறிப்பிடத்தக்க நகரமும் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் மிகப்பெரிய பரிமாற்ற தளமாக நாங்கள் இருக்க இலக்கு நிர்ணயித்திருக்கிறோம். சென்னையில் 75வது ஆட்டோமால்- தொடங்கி இருப்பது மூலம் எங்களின் வாடிக்கையாளர்களை நெருங்கி சென்று சேவை அளிக்க தொடங்கி இருக்கிறோம். மேலும், இந்தப் புதிய ஆட்டோமால் மூலம் வாடிக்கையாளர்களின் இல்லம் சென்று எங்களின் நிபுணர்கள் சேவை அளிப்பார்கள். சென்னையிலும் அருகிலுள்ள மண்டலங்களிலும் பல வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய நாங்கள் விரும்புகிறோம் என்றார் திரு. சமீர் மல்ஹோத்ரா, தலைமை செயல் அதிகாரி ஸ்ரீராம் ஆட்டோமால்   (Mr. Sameer Malhotra, CEO, Shriram Automall)

ஸ்ரீராம் ஆட்டோமல் நாட்டில் நேரடியாக மிகப்பெரிய சேவை வழங்கும் நிறுவனமாக உள்ளது.

தென்னிந்தியா, ஶ்ரீராம் மால்களுக்கு தொடர்ந்து ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை வழங்கி  உள்ளது, எனவே இப்போது கார் வர்த்தத்துக்காக (CarTrade) தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் 75 வது ஆட்டோமால் - திறந்து வைப்பதன் மூலம், ஶ்ரீராம் ஆட்டோமால் இந்தியா மற்றும் கார் வர்த்தகம் மூலம் வசதியான சிக்கல் இல்லா இலவச ஒப்பந்தங்கள், சிறந்த வாடிக்கையாளர் சேவை, அணுகு முறையில் கவனம் செலுத்துகிறது. தென்னிந்தியாவின் பெரிய கலாச்சாரம், பொருளாதாரம் மற்றும் கல்வி மையங்களில் சென்னை ஒன்றாக இருக்கிறது. இங்கு பயணிகள் கார், வணிக கார்களுக்கு அதிக தேவை இருக்கிறது. மேலும், வாடிக்கையாளரின் இடத்துக்கே சென்று அவரை அழைத்து பயணிக்க வைக்கும் சேவைக்கும் அதிக தேவை இருக்கிறது.  இந்தத்  தேவையை பல்வேறு மாதிரி திட்டங்களின் மூலம் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளோம்." என்றார், திரு வினய் சாங்ஹி, நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி, CarTrade.com  (Mr. Vinay Sanghi, Founder and CEO, CarTrade.com)
தேசிய நெடுஞ்சாலையின் கீழ் வரும் தங்க நாற்கரச் சாலை (Golden Quadrilateral system of National Highways) மூலம் சென்னை இந்திய நகரங்களுடன் இணைக்கப்பட்டிருப்பது சிறப்பாகும். மேலும், சென்னை நகரம் நான்கு முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்துதான் ஶ்ரீராம் ஆட்டோமால் இந்தியா நிறுவனம், வணிக உத்தியாக சென்னையில் 75வது ஆட்டோமால்- அமைக்க முடிவு செய்தது. எனவே, பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் உபகரணங்கள், புதுமையான முறையில் சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்கப்படும்.

நிறுவன சமூக அக்கறையின் (CSR) ஒரு பகுதியாக ஶ்ரீராம் ஆட்டொமால், ஶ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் கம்பெனியுடன் இணைந்து தகுதி உள்ள 10 மாணவர்களுக்கு ஊக்கத் தொகை (scholarship) வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, சென்னை ஆட்டோமாலை பார்வையிடும் வாடிக்கையாளர்களுக்கு பொது மருத்துவ பரிசோதனை, ரத்த அழுத்தம் (பிபி), நீரிழிவு, எடை  உள்ளிட்ட  இலவச மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஆட்டோமாலில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியும் நடந்தது. ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் கம்பெனி (STFC) மூலம் எளிதாக நிதி உதவி அளிக்கப்பட்டது. மதிப்பீடு / ஆய்வு சேவைகள். அட்ராய்ட் இன்ஸ்பெக்ஷன் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் (Adroit Inspection Services Pvt. Ltd)  மூலம்  வழங்கப்பட்டது

ஶ்ரீராம் ஆட்டோமால்  இந்தியா லிமிடெட் (SAMIL) புதுமையான ஏலத் தளங்களாக, நேரடி ஏலம், ஆன்லைன் ஏலம் (CarTradeExchange.com), தனியார் ஒப்பந்தம், MySAMIL மொபைல் அப்ளிகேஷன் மற்றும் ஒன் ஸ்டாப் கிளாசிஃபைட்  ஆகியவை அடங்கும்.
காஞ்சிபுரம். திருப்பதி, வேலூர், கணிபாக்கம், நெல்லூர், சென்னை, புதுச்சேரி, திருவள்ளூர், திருவண்ணாமலையை சேர்ந்த வாடிக்கையாளர்கள், இந்தப் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் உபகரணங்களுக்கான ஆட்டோமாலை பயன்படுத்திக் கொள்ளலாம்.

தமிழ்நாடு மண்டலத்தில் உள்ள ஆட்டோமால்கள் பட்டியல் :

ஆட்டோமால்கள் தமிநாடு மண்டலம்
சென்னை
திருநெல்வேலி
திருச்சி
மதுரை
கோயம்புத்தூர்
ஓசூர்
சேலம்

சென்னை ஆட்டோமால் தொடர்பு முகவரி: 
ஶ்ரீராம் ஆட்டோமால் சென்னை, கோதியம்பாக்கம் கிராமம், பூந்தமல்லி - திருவள்ளூர் நெடுஞ்சாலை, சென்னை, தமிழ்நாடு, பின்கோடு 600 124. தொடர்புக்கு - +91.770806626

About Shriram Automall

Shriram Automall India Limited (SAMIL), an ISO 9001:2015 certified company and is India’s first-ever service provider to offer a well-organized and transparent platform for the exchange of pre-owned commercial vehicles, passenger vehicles, construction & industrial equipment, tractors & agricultural equipment, three wheelers and two wheelers. SAMIL is a part of Shriram Transport Finance Company Ltd (stfc.in), India’s largest Small Business Finance Company (SBFC) and MXC Solutions India Pvt. Ltd which runs both CarTrade.com and CarWale.com, India's leading online auto marketplace. Every month, SAMIL conducts over 1000 events through its well-structured physical and online platforms making it India’s Largest Offline and Online Vehicles Transaction Platform. The company provides online vehicle transaction services through CarTradeExchange.com and vehicle inspection facility through its 100% subsidiary Adroit Inspection Services Pvt. Ltd. SAMIL has been confronted with over 20 nationally recognized awards and in a brief span of seven years SAMIL has acquired over 7,50,000+ unique bidders by conducting over 50,000+ bidding events at 150+ bidding locations.
For more information, please contact:
Ms. Jyoti Jain (NH-Marketing of SAMIL)
SHRIRAM AUTOMALL INDIA LIMITED
2nd Floor, Best Sky Tower,
Netaji Subhash Place, Pitampura, Delhi-110034
Tel: 011-41414444, Fax: 011-42414444
Website: www.samil.in


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund   மதுரை பெண்களே ஜெயி...