* கட்டணங்கள்
நுழைவுக் கட்டணம்
பொதுவாக எந்த மியூச்சுவல் ஃபண்ட்க்கும் இப்போது இந்தியாவில் இல்லை.
வெளியேறும் கட்டணம் :
சில இண்டெக்ஸ் ஃபண்டுகளில் இல்லை; சில ஃபண்டுகளில் உள்ளது.
முதலீடு செய்யும் ஃபண்டின் வெளியேறும் கட்டணத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.
* செலவு விகிதம்
பணியாளர் ஓய்வுக் கால நிதியானது (EPF) பங்குச் சந்தையில் இடிஎஃப்கள் மூலம் முதலீடு செய்யப்படுவதால், பல ஃபண்ட் நிறுவனங்கள் தங்களின் இண்டெக்ஸ் இடிஎஃப் நிர்வாகச் செலவு விகிதத்தை (Expense ratio) குறைத்துள்ளன.
பிற இண்டெக்ஸ் ஃபண்டுகளுடன் ஒப்பிடும்போது, உங்கள் ஃபண்டின் செலவு விகிதத்தை ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்.
சொக்கலிங்கம் பழனியப்பன், பிரகலா வெல்த்மேனேஜ்மென்ட் |
* டிராக்கிங் எரர்
டிராக்கிங் எரர் எந்த அளவு உள்ளது என்பதையும் கவனிப்பது அவசியம்.
சமீப காலங்களில் இ.டி.எஃப் ஃபண்ட்கள் மூலம் நிர்வகிக்கும் தொகை ஏற்றம் கண்டு வருகின்றன. ஆனால், இண்டெக்ஸ் ஃபண்டுகளில் நிர்வகிக்கப்படும் தொகை அந்த அளவு ஏறவில்லை.
இந்தியாவில் இண்டெக்ஸ் ஃபண்டுகள், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 குறியீடுகளை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து நிஃப்டி ஜூனியர், மிட்கேப், பிஎஸ்இ 100, சிஎன்எக்ஸ் 500 போன்ற பிற குறியீடுகளையும் அடிப்படையாகக் கொண்டு இண்டெக்ஸ் ஃபண்டுகள் செயல்பட்டு வருகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக