மொத்தப் பக்கக்காட்சிகள்

பேங்க்பஜார், 2018-19 -ல் 40 கோடி பார்வையாளர்கள்

Bank Bazaar பேங்க்பஜார்,  2018-19 -ல் 40 கோடி பார்வையாளர்கள்

வளர்ச்சிக்கு ஆதரவாக 800 பேரை புதிதாக வேலைக்கு எடுக்க திட்டம்.
 
60சதவிகிதம் பேர் சென்னை பணிக்கு எடுக்கப்படுகிறார்கள்
தொழில்நுட்பம் மற்றும்  தயாரிப்பு களங்களுக்கு (technology and product domains) ஆட்கள் எடுக்கப்படுகிறார்கள்.

ஏப்ரல் 26, 2018: இந்தியாவின் முன்னணி நிதி சந்தை இணைய தளமான பேங்க்பஜார்.காம் (BankBazaar.com), கடந்த நிதியாண்டின் இறுதி காலாண்டில் (2017-18 கடைசி காலாண்டு),  9 கோடி (90 மில்லியன்) பார்வையாளர்களை பதிவு செய்தது. அது, 2018-19 -ல் 40 கோடி பார்வையாளர்களை எதிர்பார்க்கிறது. இந்த நிறுவனம், புதிதாக 800 பேரை பல நகரங்களில் பணிபுரியும் படியாக நடப்பு நிதி ஆண்டில் வேலைக்கு எடுக்கிறது.

பேங்க்பஜார், கடந்த சில ஆண்டுகளில் 20 மடங்கு வளர்ச்சியை கண்டுகள்லது. இந்த நிறுவனம், நிதிச் சார்ந்த தொழில்துறையில் (fintech industry) அடுத்தக் கட்ட வளர்ச்சியில் தன்னை நன்றாக நிலை நிறுத்தி உள்ளது.  .

அதில் ஜெட்டி, துணை - நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி, பேங்க்பஜார் (Adhil Shetty, Co-founder and CEO, BankBazaar), கூறும் போது, ''இந்தியா ஒரு காகிதமற்ற பொருளாதார நாடாக வளர்ந்து வருகிறது. இந்த இலக்கை நோக்கி பேங்க்பஜார் கணிசமாக பங்களித்து வருகிறது. புதிய தலைமைமுறை நிதி திட்டங்களை பயன்படுத்த நுகர்வோர்கள் தயாராகி இருக்கிறார்கள். 2017-18ம் நிதி ஆண்டில் நாங்கள் பல்வேறு பிரிவுகளில் 100 சதவிகிதத்துக்கு மேல் வளர்ச்சி கண்டுள்ளோம். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப, பேங்க்பஜாரின் வணிகம் மற்றும் வருமானமும் கூடவே அதிகரித்து வருகிறது. 2018-19 ம் நிதி ஆண்டு எங்களுக்கு சிறந்த பலன் அளிக்கும் ஆண்டாக இருப்பதோடு, நிதிச் சேவைகள் துறையில் முன்னணி நிறுவனமாக நிலைநிறுத்துவோம் என நம்புகிறோம்..”

பேங்க்பஜார், வாடிக்கையாளர்களுக்கும் இடையூறு இல்லாத தொடர்ந்த சேவையை ஒருங்கிணைந்து அளிக்க அதன் பொறியியல் தகுதியை அதிகரிக்க குறிக்கோள் நிர்ணயித்துள்ளது. இதனை நிறைவேற்ற புதிதாக பணியாளர்கள் தேர்வு செய்யும் போது, இந்தப் பணிகளை நிறைவேற்றக் கூடியவர்களுக்கு தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்.

பெரும்பாலும் தொழில்நுட்பம் மற்றும்  தயாரிப்பு களங்களுக்கு (technology and product domains)  பணியாளர்கள் எடுக்கப்படுகிறார்கள். 60% பணியாளர்கள் சென்னை பிரிவுக்காக பணிக்கு எடுக்கப்படுகிறார்கள். மேலும், பெங்களூருக்கு கணிசமான எண்ணிக்கையில் புதிய பணியாளர்கள் எடுக்கப்பட இருக்கிறார்கள்.

“புதிய  பணியாளர்கள், காகிதத்துக்கு வேலையில்லா புதிய தொழில்நுட்பங்கள் மூலம் பணிபுரிவார்கள். மேலும், நிதித் திட்டங்களை எளிதில் வாங்கும், வாடிக்கையாளர்களுக்கு சுலபமான முறை நடைமுறைப்படுத்தப்படும்" என்று கூடுதலாக அதில் தெரிவித்தார்.

இந்தியாவில் உள்ள 85-க்கும் மேற்பட்ட பெரிய பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகள், வங்கிச் சாரா நிதிச் சேவை நிறுவனங்கள் (NBFCs) மற்றும் காப்பீடு நிறுவனங்களின் பல்வேறு நிதித் திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு பேங்க்பஜார் (BankBazaar)அளித்து வருகிறது.

 கடந்த காலாண்டில் (டிசம்பர் - பிப்ரவரி), இதன் இணையதளத்தை 9 கோடி பேர் பார்வையிட்டுள்ளனர்.  இந்த நிறுவனம், அமேசான்.காம், எக்ஸ்பிரியன், ஃபிடிலிட்டி குரோத் பார்ட்னர்ஸ், மவுஸ் குரோத் பார்ட்னர்ஸ், செக்கோயா கேப்பிட்டல் மற்றும் வால்டென் இன்டர்நேஷனல் (Amazon.com, Experian, Fidelity Growth Partners, Mousse Partners, Sequoia Capital and Walden International)போன்ற நிறுவனங்களிடமிருந்து 110 மில்லியன் அமெரிக்க டாலரை (USD 110M) நிதியாக திரட்டி உள்ளது.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

உடனடி கடன் = வாழ்நாள் முழுவதும் தொல்லை? Instant Loan

உடனடி கடன் = வாழ்நாள் முழுவதும் தொல்லை? எந்த ஒரு ஆவணமோ அல்லது கிரெடிட் சரிபார்த்தல் இல்லாமல் பெறும் கடன்கள் உங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத...