மொத்தப் பக்கக்காட்சிகள்

சாம்சங் இந்தியா - கேலக்ஸி ஜே2 2018, சாம்சங் மால் அம்சத்துடன் அறிமுகம்..!

சாம்சங் இந்தியா - கேலக்ஸி ஜே2 2018, சாம்சங் மால் அம்சத்துடன் அறிமுகம்..!

சாம்சங் -ன் சிறப்பாக விற்பனையாகும் ஜே மாடல்களில் புதிதாக கேலக்ஸி ஜே2 2018 அறிமுகம்.

கேலக்ஸி ஜே2 2018 உடன்  ஆன்லைன் ஷாப்பிங்-ல் சாதனை படைத்துள்ள  சாம்சங் மால் லோடு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி, ஏப்ரல் 26, 2018 -  சாம்சங், இந்தியாவின் நம்பர் 1 மற்றும் மிகவும் நம்பமான நுகர்வோர் எலெக்ட்ரானிஸ் மற்றும் மொபைல் போன்கள் பிராண்ட் ஆக உள்ளது. இந்த நிறுவனம், அதனை மேலும் வலிமையாக்க அதன் அதிகம் விற்பனையாகும், கேலக்ஸி ஜே வரிசை போன்களில் புதிதாக கேலக்ஸி ஜே2 2018 (Galaxy J2 2018) -ஐ அறிமுகம் செய்துள்ளது. புதிய கேலக்ஸி ஜே2 2018 உடன் ஆன்லைன் ஷாப்பிங்-ல் புரட்சி செய்துள்ள சாம்சங் மால் (Samsung Mall), லோட் செய்யப்பட்டுள்ளது. இந்த சாம்சங் மால் என்பது புதிய ஆன்லைன் புதுமையான சேவையாகும். இதில், ஒருவருக்கு விரும்பமான பொருளின் படத்தை கிளிக் செய்வது மேலும் இ-காமர்ஸ் பிளாட்பாரம்களில் அந்தப் பொருளை வாங்க முடியும்.

கேலக்ஸி J2 2018, குவால்காம் ஸ்னாப் செயலி மற்றும் 16 ஜிபி உள் நினைவகம், 2 ஜிபி ரேம் மூலம் இயக்கப்படுகிறது. தானாக செயல்திறனை மேம்படுத்துகிற ஒரு மேம்பட்ட சாதன பராமரிப்பு (Device Maintenance) வசதியை இந்த போன் கொண்டுள்ளது.

கேலக்ஸி J2 2018 ஆனது, சாம்சங்-ன் புதுமையான நினைவக சேமிப்பு அம்சத்துடன், (innovative memory-saving feature) சமூக ஊடக பயன்பாடுகளின் விவரங்களை  வெளிப்புற மெமரி கார்டுக்கு  (external memory card) தானாகவே அனுப்பும். கேலக்ஸி J2 2018  ஆனது, 5.0 சூப்பர் அமோலெட் (AMOLED) டிஸ்ப்ளே மற்றும் 2,600 mAh பேட்டரி கொண்டுள்ளது.  8 மெகாபிக்சல் பின்புற கேமிரா மற்றும் 5 மெகாபிக்சல் முன்புற கேமிராவை கொண்டுள்ளது. இந்த இரு கேமிராக்களும் LED ஃப்ளாஷ் வசதியை கொண்டுள்ளன. இதனால்,  கேலக்ஸி J2 2018 எந்த ஒளி நிலையிலும் சரியான நல்ல படங்களை எடுக்கும் திறணை கொண்டுள்ளது.

சாம்சங் மால், ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய புதுமையான  செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் சமீபத்திய  இந்தியாவுக்கான உருவாக்கம் ஆகும்.

அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

 காட்சி தேடல் (Visual Search)-  எந்தவொரு பொருளுக்கும் ஒரு படத்தை கிளிக் செய்தால்,  சாம்சங் மால், பிரபலமான ஆன்லைன் ஷாப்பிங் தளங்களிலிருந்து இதே போன்ற பொருட்களின் முடிவுகளை காட்டுகிறது.  நுகர்வோர்கள், தேடல் மேற்கொள்ள போன் கேலரியில் உள்ள படத்தை பயன்படுத்தலாம். இந்த ஆற்றல்மிக்க அம்சம், எந்திர அடிப்படையில் கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றைப் பயன்படுத்தி முடிவுகளை  கொடுக்கும்.
ஒரே இடத்தில் பல பொருட்கள் (One-stop Shop) - சாம்சங் மால் தானாகவே  அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில்  தேடி, விலைகளை ஒப்பீட்டு எளிதாக  வாங்கும் வேலையை செய்கிறது.

எளிமைப்படுத்தப்படுத்தப்பட்ட ஆன்லைன் ஷாப்பிங்:
 பயனானர்கள், பல்வேறு ஆன்லைன் இணைய தளங்கள் வாங்கும் பொருட்கள் அனைத்தையும் ஒரே கார்ட்-க்கு (single cart) கொண்டு வந்து சேர்க்க  முடியும். இது, எளிமைப்படுத்தப்படுத்தப்பட்ட ஆன்லைன் ஷாப்பிங் ஆக இருக்கும்.

“கேலக்ஸி  ஜே2 2018,  எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் அர்த்தமுள்ள கண்டுபிடிப்புகளை  அர்ப்பணித்து வருகிறோம் என்பதை  சாம்சங் நிரூபித்துள்ளது. இந்த போனுக்காக  இந்திய இளைஞர்களிடையே இரண்டு போக்குகள் மீது கவனம் செலுத்தினோம். அவை,  ஆன்லைன் ஷாப்பிங் வளர்ச்சி மற்றும் சமூக ஊடக தளங்களில் அதிக பயன்பாடு.சாம்சங் மால், வாடிக்கையாளர்கள் காட்சி தேடல் மூலம் ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதை செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி  புரட்சிகரமாக மாற்றி அமைத்துள்ளது.  தீவிரமாக சமூக ஊடகங்களை பயன்படுத்துபவர்களுக்கு உதவும் விதமாக சமூக ஊடக பயன்பாடுகளின் விவரங்களை  வெளிப்புற மெமரி கார்டுக்கு  தானாகவே அனுப்பும். இதனால், ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் அனுபவம் மேம்படுகிறது" என்று சாம்சங் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் (மொபைல் வணிகம்) சுமித் வாலியா தெரிவித்தார்.

கேலக்ஸி ஜே2 2018 விலை ரூ.  8,190. தங்கம், கருப்பு மற்றும்  இளஞ்சிவப்பு (Gold, Black and Pink)  ஆகிய வர்ணங்களில் ஏப்ரல் 27 முதல் விற்பனைக்கு கிடைக்கும்.

கூடுதலாக, “இந்தியாவின் ஒரே அனைத்து 4ஜி நெட் ஒர்க் அளிக்கும் ஜியோ நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு சாம்சங் கேலக்ஸி ஜே2 2018க்கு உடனடி ரொக்க தள்ளுபடி ரூ.2,750 அளிக்கப்படுகிறது. இது மை ஜியோ (MyJio) கணக்கு மூலம் ரூ. 198 அல்லது ரூ. 299 ரீசார்ச் செய்யும் போது கிடைக்கும். அவர்களுக்கு அடுத்த பத்து ரிசார்ச்களுக்கு, 10 ஜிபி, 4ஜி டேட்டா கிடைக்கும். இதன் மூலம் தடை இல்லாமல் கிரிக்கெட், இசை அல்லது வீடியோக்களை கேட்டு மகிழ முடியும்"

சாம்சங் கேலக்ஸி ஜே2 2018 - விவரக்குறிப்புகள்

செயலி (Processor)  : குவால்காம் ஸ்னாப்டிராகன் குவாட்-கோர் செயலி     
காட்சி (Display)    5” க்யூஹெச்டி சூப்பர் AMOLED டிஸ்பிளே     
கேமிரா:   8 மெகாபிக்சல் பின்புற கேமிரா + 5 மெகாபிக்சல் முன்புற கேமிரா மற்றும்  LED ஃபிளாஷ்     
வீடியோ ரெக்கார்டர்:  FHD (1920 x 1080) | @30fps
வீடியோ  பிளேயர்:  MP4,M4V,3GP,3G2,WMV,ASF,AVI,FLV,MKV,WEBM     
இணைப்பு (Connectivity)    USB 2.0     
 புளுடூத் :  v4.2     
 வை -ஃபை : 802.11 b/g/n 2.4GHz     
 சென்சார்:  Accelerometer, Proximity Sensor     
நினைவகம் : 2GB RAM + 16GB  உள் நினைவகம், 256GB வரை விரிவுப்படுத்தலாம் 
அளவு (Dimension)    143.8mm x 72.3mm x 8.4mm     
பேட்டரி :  2,600 mAh 




Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

உடனடி கடன் = வாழ்நாள் முழுவதும் தொல்லை? Instant Loan

உடனடி கடன் = வாழ்நாள் முழுவதும் தொல்லை? எந்த ஒரு ஆவணமோ அல்லது கிரெடிட் சரிபார்த்தல் இல்லாமல் பெறும் கடன்கள் உங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத...