இந்திய கத்தார் தொழில் கூட்டுறவை வளர்க்க சென்னையில்... தோஹா வங்கி...
கத்தார் நாட்டை தலைமையகமாக கொண்டு இயங்கும் தோஹா வங்கி இந்தியாவில் மும்பை மற்றும் கொச்சியில் 3 கிளைகளை கொண்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கியதால்
தோஹா வங்கியின் 3ஆவது கிளை சென்னையில் பிப்ரவரி 9 முதல்முன்னோட்டத் துவக்கமும் ஏப்ரல் முதல் முழு வேக இயக்கத்தையும்தொடர திட்டமிட்டது.
அதன்படி முன்னோட்ட துவக்க நாளன்று ஏற்பாடு செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தோஹா வங்கி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி டாக்டர். R. சீத்தாராமன் உலக பொருளாதார நிலை பற்றி உரையாற்றினார்.
அதில் சமீபத்திய
சர்வ தேச நிதியம் அறிவித்துள்ள பொருளாதார வளர்ச்சி குறித்த அறிவிப்பின்படி நடப்பாண்டு பொருளாதார வளர்ச்சி 2.3 சதவீதமாகவும்
அடுத்த ஆண்டில் (2019) 2.2 சதவீதமாக இருக்குமென்றும் வளர்ந்துவரும் வர்த்தக பொருளாதார வளர்ச்சி முறையே 4.9 மற்றும் 5 சதவீதமாக இருக்குமென்றும் மேற்கோள்காட்டினார்.
மேலும், ஜனவரியில் நடந்த அமெரிக்க வங்கி (ஃபெட்) கூட்ட ஆய்வை மேற்கோள்காட்டி கடந்த ஆண்டு பொருட்களின் பணவீக்கம் உயர்வு மும்மடங்கு அதிகரித்ததையும் அதனால் மூலதனச் சந்தை பாதித்ததையும் மீறி பத்திர வருவாய் எழுச்சி பெற்றதையும் கூறினார்..மேலும் இந்திய மற்றும் தமிழக பொருளாதார நிலை குறித்து டாக்டர் R. சீத்தாராமன் கூறுகையில்..
நடப்பாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.4 சதவீதமாக உயருமென்றும் கடந்த ஆண்டில் உயர் மதிப்பிலான பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. அறிமுகம் ஆகிய காரணத்தால் பொருளாதார வளர்ச்சியில் தற்காலிக பாதிப்பு என்றும்கூறியவர், நடப்பாண்டு மத்திய பட்ஜெட் கிராமப் புறவளர்ச்சி, சுகாதாரம், கல்வி, சமூக பாதுகாப்பு, எல்லை பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதால் நிதிப் பற்றாக்குறையை பொறுத்த மட்டில் நடப்பாண்டில் 3.5 சதவீதமாக இருக்குமென்றும் இதேநேரத்தில் அடுத்த ஆண்டு அது- 3.3 சதவீதமாக அது குறையும் என்றும் கூறினார்.
தோஹா பேங்க் சென்னை கிளையை திறந்து வைக்கும் சீத்தாராமன் குடும்பத்தினர் |
தோஹா வங்கி குறித்து கூறுகையில்.. கடந்த ஆண்டில் அதன் கடன் வளர்ச்சி 8 சதவீதமாக உயர்ந்துள்ளதென்றும் வைப்பு தொகை (டெபாசிட்) 13 சதவீதம் வளர்ச்சிஅடைந்து உள்ளதையும் கூறினார். மேலும்கத்தார் வங்கியானது அரசு, ரியல்எஸ்டேட் மற்றும் சமூக சேவை துறைகளில் வளர்ச்சிக்கு நிதி வழங்குவதையும் கூறியவர்
கத்தார் நாட்டில் உணவு உற்பத்தி நிறுவனங்களின் வளர்ச்சியில் பல உள்ளூர் நிறுவனங்கள் துணை நிற்பதையும் சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை கத்தார் வரவேற்பதையும்கூறினார்..
சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு |
இதுமட்டுமின்றி 80 நாடுகளுக்கு விசா நடைமுறையில் உள்ள சிக்கல்களை நீக்கியதையும் 2018 ஆம் ஆண்டு கத்தார் அரசு பட்ஜெட்டில் சுகாதாரம் மற்றும் கல்வி மற்றும் போக்குவரத்துக்கு 83.5 பில்லியன் கத்தார் ரியால் ஒதுக்கீடு செய்யப்பட்டதையும் தெரிவித்தார்
இது மொத்த செலவினத்தில் 41 சதவீதம் ஆகுமென்றும் அதேபோல் போக்குவரத்து மற்றும் கட்டுமானத்திற்கு பட்ஜெட்டில் 42 பில்லியன் கத்தார் ரியால் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது, இது நாட்டின் மொத்த செலவினத்தில் 21 சதவீதம் ஆகும் என்றும் கூறிய டாக்டர். R. சீத்தாராமன் கத்தார், இந்தியா இடையேயான இருதரப்பு உறவுகள் மற்றும் கத்தார், குவைத் ஆகிய நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவுகள் குறித்தும் பேசினார். அதில் சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா- வளைகுடா நாடுகள் இடையே வர்த்தகம் 100 பில்லியன் டாலர் வர்த்தகத்தை தொட்டுள்ளதுஎன்றார்.
மேலும் கடந்த 2016 – 17 ஆம் ஆண்டுகளில் இந்தியா கத்தார் இடையே மட்டும் 8 பில்லியன் டாலர் வர்த்தகம் நடந்துள்ளதையும் இந்தியாவிற்கு கத்தார் நாட்டில் இருந்து பெட்ரோ கெமிக்கல்ஸ், கந்தகம் (சல்பர்), உரங்கள் மற்றும் இரும்பு பைரிட்டுகள் ஆகியன முதன்மையாக ஏற்றுமதி செய்யப்பட்டதையும்
இதே போல் கத்தார் நாடு இந்தியாவில் இருந்து ஆபரணங்கள், கைவினை பொருட்கள், பருத்தி, போக்குவரத்து உபகரணங்கள் மற்றும் இயந்திர உதிரி பாகங்களை இறக்குமதி செய்ததையும் கூறினார்
மேலும் தமிழ்நாடு தொழில்துறையில் இந்தியாவின் 3வது மாநிலமாகவும் கனரக உற்பத்தியில் உலகின் 10வது இடத்தில் இருப்பதையும் தெரிவித்தார்.
இதேநேரத்தில் குவைத், கத்தார் இடையே நூறு பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான வர்த்தகம் நடத்தையையும் இந்திய கத்தார் அளவில் 8 பில்லியன் மேல் நடந்துள்ளதையும் குறிப்பிட்ட டாக்டர் R. சீத்தாராமன் அந்த வகையில் சென்னையில் துவங்கப்பட்டுள்ள இந்த தோஹா வங்கியின் கிளை இந்திய கத்தார் இடையேயான வர்த்தகத்தை மேலும் அதிகரிக்க துணை நிற்கும் என்றார்.
மேலும் தமிழ்நாடு பலவிததொழில் வளர்ச்சிக்கு ஏற்ற மாநிலமாக இருப்பதால் தோஹா வங்கி இங்குள்ள சிறு, குறு மற்றும் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்குவதோடு அவற்றின் ஏற்றுமதி வர்த்தகத்திற்கும் உறுதுணையாக இருக்குப்பதோடு வளைகுடா நாடுகளில் தொழில் துவங்க வழி வகை செய்யுமென்றும் புதிதாக தொழில் முனைவோர் மற்றும் சிறுவணிகர்களின் தொழில் வளர்ச்சிக்கும் பாலமாக செயல்படும் என்றும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக