இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் சேர்ந்துள்ளமொத்த இழப்புகளுக்கு, பங்கு பிரீமியத் தொகையை ஈடு செய்தல்..!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பங்கு பிரீமியத் தொகை கணக்கில் (Share Premium Account), 31.03.2017 நிலவரப்படி ரூ. 7650.06 கோடிஉள்ளது. வங்கியின் சேர்ந்துள்ள மொத்த இழப்பு(Accumulated Losses) 31.03.2017 நிலவரப்படி ரூ. 6978.94 கோடியாகஉள்ளது. வங்கியின் நிதி நிலைப்பாட்டின் உண்மையான மற்றும் நேர்மையான பார்வையின் அடிப்படையில் இந்த சேர்ந்துள்ள மொத்த இழப்பை, பங்கு பிரீமியத் தொகையில் ஈடுகட்ட வங்கி திட்டமிட்டுள்ளது. இதற்கு தேவையான ஒப்புதல்கள் பெறப்பட்டுள்ளன. நல்லதொரு நிர்வாகத்தின் நடைமுறையாக (good governance practice) பங்குதாரர்களின் (Shareholders) ஒப்புதலை பெறும் நோக்கத்திற்காக 30.01.2018 அன்று சிறப்பு பொதுக் கூட்டத்தை (Extraordinary General Meeting) வங்கி நடத்த இருக்கிறது.
இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் :
• வங்கி விதிமுறைச் சட்டம் 1949- ன் பிரிவு 17 (2), ஒதுக்கீட்டு தொகை அல்லது பங்கு பிரீமியம் கணக்கிலிருந்து(Reserve Fund or Share Premium Account) எந்தவொரு தொகையையும் வங்கி பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கிறது.
• பங்கு பிரீமியம் கணக்கின் தொகையை சேர்ந்துள்ள மொத்த இழப்புகளுக்கு ஈடுகட்ட திட்டமிட்டிருக்கும் நடவடிக்கை, ஐந்தொகை (Balance Sheet) சமநிலை நடவடிக்கை ஆகும்.
** பங்குகளின் புத்தக மதிப்பு (Book Value of Shares) மாறாமல் அப்படியே இருக்கும்.
** நிகர சொத்து மதிப்பு மாறாமல் அப்படியே இருக்கும்.
** வங்கியின் பங்கு மூலதன கட்டமைப்பு (Equity Capital Structure) மற்றும் பங்குதாரர் முறை (Shareholding Pattern) மாறாமல் அப்படியே இருக்கும். மற்றும் வங்கியின் அளிக்கப்பட்ட பங்கு மூலதனத்தில் (paid-up share capital) குறைப்பு இல்லாமல் இருக்கும். -
** பங்கு மூலதன தன்னிறைவு விகிதங்கள் (Capital adequacy ratios) பாதிக்கப்படாது.
• பங்குதாரர்களின் உரிமைகள் பாதிக்கப்படாது.
• வங்கி அதன் உண்மையான நிதி நிலையை தெரிவிப்பதால், இதன் மூலம் பங்குதாரர்கள் வசம் இருக்கும் பங்குகள் நல்ல வருமானத்தை தருவதோடு, அதன் மதிப்பும் அதிகரிக்கும். மற்றும் பொருந்தக்கூடிய விதிமுறைகளின்படி, குறிப்பிட்ட கால வரம்புக்குள் வங்கியின் பங்குதாரர்களின் நன்மைக்கான வாய்ப்பை ஆய்வு செய்ய வங்கிக்கு உதவுகிறது.
• இந்தத் திட்டம், சிறுபான்மை பங்குதாரர்கள் அல்லது பெரும்பான்மை பங்குதாரர்களின் நலனுக்கு எதிராக இருக்காது. இந்த முன்மொழிவு பங்குதாரர்கள் மீது எந்தவொரு பொறுப்பையும்(Liability) சுமத்தாது. அவர்களுக்கு கிடைக்க வேண்டிய எந்த நன்மைகளையும் தடுக்காது.
• இந்தத் திட்டத்தின் மூலம் வங்கிக்கு எந்த நிதிச் செலவினமும்/ நிதி பொறுப்பும் இல்லை.
• இது வங்கியின் வழக்கமான நடவடிக்கைகளை பாதிக்காது. அல்லது அதன் கடமைகளை நிறைவேற்ற அல்லது அதன் கடன்களை அடைக்கும் திறனைக் கொண்டுள்ளது.
• பங்கு பிரீமியம் கணக்கின் குறைப்பு, வங்கியின் கடனாளிகள் / பங்குதாரர்களிடம் எந்தவொரு எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்தாது. வங்கியின் நிதியியல் நிலைப்பாட்டின் உண்மையான மற்றும் நேர்மையான பார்வையை முன்வைப்பதில், இந்தத் திட்டம் உதவும் என்பதால் அவர்கள் பொதுவாக பயனடைவார்கள். இந்தத் திட்டம் வங்கி மீண்டும் லாப பாதைக்கு (Turnaround) வர உதவும். இது வங்கியின் பங்கு முதலீட்டாளர்களுக்கு லாபகரமாக அமையும்.
இந்தத் திட்டம், எங்களின் சேர்ந்துள்ள மொத்த இழப்பை குறைக்க உதவும். மேலும், குறிப்பிட்ட காலத்துக்குள் வங்கியின் நிதி நிலையை நல்ல நிலைக்கு கொண்டு வரும் திட்டம் மற்றும் வங்கியை மீண்டும் லாப பாதைக்கு கொண்டு வரும் திட்டங்களுக்கு உதவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக