மொத்தப் பக்கக்காட்சிகள்

செபி அதிரடி : பிஏசிஎல் மோசடி பணம் முழுமையாக கிடைக்குமா?


செபி அதிரடி: பிஏசிஎல் மோசடி பணம் முழுமையாக கிடைக்குமா?


பிஏசிஎல் நிறுவனத்தின் சொத்துகளில் ஒருபகுதியை விற்றதன்மூலம் கிடைத்த தொகையிலிருந்து அதன் முதலீட்டாளர்களுக்கு முதல் தவணையாக அதிகபட்சமாக ரூ.2,500 வரை வழங்கவுள்ளதாக செபி அமைப்பு அறிவித்துள்ளது. 

குறைந்த தொகைக்கு வீட்டு  மனை வழங்குவதாக அறிவித்து மக்களிடம் நிதி திரட்டிய நிறுவனம்  பிஏசிஎல். 

இந்தியா முழுவதும் தனது கிளைகளைப்பரப்பி, 15 ஆண்டுகளாக, சுமார்  5.8 கோடி மக்களிடம், ரூ.49,100 கோடி பணத்தைவசூலித்தது இந்த நிறுவனம். இந்த உறுதிமொழியை நம்பி பணம் போட்டவர்களில்பலருக்கு மனை கிடைக்கவில்லை. ஆனால், இவர்களின் முதலீட்டுப் பணத்தை வைத்துநிறுவனத்தின் உரிமையாளர் பாங்கோ, சுமார் 1.83 லட்சம் ஏக்கர் நிலங்களை தன்வசப்படுத்தினார்.

முதலீட்டுக்கேற்ப மனையை வழங்கவில்லை என்பதை அறிந்த முதலீட்டாளர்கள் , ஆங்காங்கேஒருங்கிணைந்து, மனை  அல்லது முதலீட்டை உறுதியளித்தபடி திரும்பத்தரும்படி போராடத் தொடங்கினார்கள். 

இறுதியாக, அந்த நிறுவனத்தின் மோசடிகளைத் தடுக்கும்விதமாக, நிறுவனத்தையே மூடும்படி செபி உத்தரவிட்டது. சொந்த வீட்டுக் கனவுகளோடு, தங்களது சேமிப்பையெல்லாம் மாதத் தவணையாகக் கட்டிவந்தவர்களுக்கு இந்த உத்தரவு பேரதிர்ச்சியாக அமைந்தது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையோர், குறைந்த வருமானம் ஈட்டும்  அடித்தட்டு மக்களாவார்கள். 

பிஏசிஎல்  நிறுவனத்தை மூடியதோடுநின்றுவிடாமல், 2016 ம் ஆண்டு, பிப்ரவரி 6 ஆம் தேதி உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியபடி, செபி அமைப்பானது, ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்தது. அந்தக் கமிட்டியானது, பாதிக்கப்பட்டவர்களின்  குறைகளைக் கேட்டதோடு, இன்னொரு பக்கம், அந்நிறுவனத்தின் சொத்துகளை அடையாளம் கண்டு, மதிப்பீடு செய்து, விற்பனை  செய்வதில் தீவிரமாக களமிறங்கியது.
 
இதன் அடுத்த கட்டமாக, தங்களது எதிர்காலமே கானல் நீராகிய வேதனையில் உழன்ற முதலீட்டாளர்களுக்கு சிறிய ஆறுதல் தரும்விதமாக, கடந்த செவ்வாய்கிழமை (02.01.2018)  செபி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பிஏசிஎல் முதலீட்டாளர்களுக்கு முதல் தவணையாக அதிகபட்சம் ரூ.2,500 ரூபாயை வழங்க செபி முடிவெடுத்துள்ளது. 

இந்தத் தொகையைப் பெறுவதற்கு முதலீட்டாளர்கள் சமர்ப்பிக்க வேண்டிய விவரங்கள் குறித்து விளக்கமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி,

1.  பிஏசிஎல் சான்றிதழின்படி முதலீட்டாளரின் பெயர்

2. முதலீட்டாளரின் மொபைல் எண் 

3. பிஏசிஎல் முதலீட்டுத் திட்டத்தில் முதலீட்டாளரின் பதிவு எண்

4. பிஏசிஎல் சான்றிதழின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் 

5. முதலீட்டாளரின் ஆதார் மற்றும் பான் எண்.

6. முதலீட்டாளரின் வங்கி கணக்கு எண் மற்றும் ஐஎஃப்எஸ்சி குறியீடு. 

6. முதலீட்டாளருக்கு பிஏசிஎல்  சார்பில் மனை ஒதுக்கப்பட்டுள்ளதா என்ற விவரம்

7. பான் எண்/ ஆதார் எண், மற்றும் சமீபத்திய மூன்று பணப் பரிவர்த்தனைகளைக் காட்டும் வங்கிக் கணக்கின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல். (நகலில் முதலீட்டாளரின் பெயர், முகவரி, வங்கி கணக்கு எண் மற்றும் ஐஎஃப்எஸ்சி குறியீட்டை தெளிவாகக் காட்ட வேண்டும். மேலும் அந்த நகலை விண்ணப்பதாரர்கள் உறுதி செய்ய வேண்டும்.) போன்றவற்றை குறிப்பிட்டு, விண்ணப்பத்தை குறுஞ்செய்தியாக 562632 என்ற எண்ணுக்கு அனுப்பலாம். அல்லது http://sebicommitteepaclrefund.com/  இணையதளத்தில் விண்ணப்பத்தை அப்லோட் செய்யலாம். 

பிஏசிஎல் நிறுவனத்தில் தங்களது முதலீடு (அசல்) 2,500 ரூபாய் அல்லதுஅதற்கு கீழ் உள்ள வாடிக்கையாளர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
 
முதலீட்டாளர்கள் தங்களது விண்ணப்பத்தின் மீதான நடவடிக்கை குறித்து தெரிந்துகொள்ள 044-3957 1985 என்ற எண்ணைத்தொடர்புகொள்ளலாம். விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி பிப்ரவரி 28, 2018 ஆகும். பணத்தை திரும்பப்பெறும் விண்ணப்பத்தை எப்படி நிரப்பதுஎன்பதற்கான செயல்முறையை விளக்கும் டெமோ வீடியோ http://sebicommitteepaclrefund.com/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. 


நன்றி: நாணயம் விகடன் இணைய தளம் 


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தரம் மற்றும் பாதுகாப்பிற்காக நீங்கள் செல்ல வேண்டிய செயலி BIS

தரம் மற்றும் பாதுகாப்பிற்காக நீங்கள் செல்ல வேண்டிய செயலி 8 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்கள் மற்றும் வளர்ச்சி. நீங்கள் பதிவிறக்கம் செய்...