பணம் என்னடா பணம் பணம்...
குணம் தானடா நிரந்தரம்...
பணம் என்னடா பணம் பணம்
குணம் தானடா நிரந்தரம்
பணம் என்னடா பணம் பணம்
குணம் தானடா நிரந்தரம்
என்னிடத்தில் இல்லாததா
நல்ல விலை பேசாததா
அத்தனையும் பெற்றேனடா
தத்துவத்தை கற்றேனடா
இரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்
பணம் பணம் பணம் ஆ...
பணம் என்னடா பணம் பணம்
குணம் தானடா நிரந்தரம்
சொந்தமில்லை பந்தமில்லை ஏறி மிதிக்கும்
தோள் மீது ஏறி நின்று காதை கடிக்கும்
பல கோடி சேர்த்தாலும் மேலும் நினைக்கும்
படுபாவி என்கின்ற பேரை கொடுக்கும்
பணத்தாலே நல்ல உள்ளம் பேயானது
குணத்தாலே அது மீண்டும் தாயானது
பொன்னுலகில் நீராடினேன்
கண்ணிழந்து கொண்டாடினேன்
மன்னனுக்கும் மேலாகினேன்
தன்னந்தனி ஆளாகினேன்
இரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்
பணம் பணம் பணம் ஆ...
பணம் என்னடா பணம் பணம்
குணம் தானடா நிரந்தரம்
காசு என்ற சொல்லின் பொருள் குற்றம் என்பது
காசு வர ஓடி விடும் சுற்றம் என்பது
நாணயம் என்றால் அதன் பேர் நேர்மை என்பது
நல்லவர்க்கு காசு பணம் தேவையற்றது
பகவானின் மணியோசை கேட்கின்றது
பணம் என்னும் பேராசை மறைகின்றது
நல்ல புத்தி யார் தந்தது...
பிள்ளையிடம் தான் வந்தது...
எந்த நிலை வந்தால் என்ன
நல்ல வழி நான் செல்வது
இரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்
பணம் பணம் பணம் ஆ...
பணம் என்னடா பணம் பணம்
குணம் தானடா நிரந்தரம்
படம்: அந்தமான் காதலி
நடிகர்கள்: சிவாஜி கனேசன், தேங்காய் சீனிவாசன், செந்தாமரை, சந்தர மோகன், சுஜாதா, கவிதா, மனோரமா*
இசை: M.S.V
வரிகள்: கண்ணதாசன்*
பாடகர்: T.M.S
வருடம் : 26.01.1978
இயக்கம்: முக்தா V.சீனிவாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக