சென்னையில் ஜன. 20, 21 -2018
இன்டக்ரேட்டட் என்டர்பிரைசஸ் நட்ததும் நிதி, முதலீட்டு விழிப்பு உணர்வு கண்காட்சி & கருத்தரங்கம் – அனுமதி இலவசம்
சென்னையை சேர்ந்த, முதலீட்டு துறையில் 44 ஆண்டுகள் அனுபவம் கொண்ட இன்டகிரேடட் என்டர்பிரைசஸ் (இந்தியா) நிறுவனம், ஜனவரி 20 இன்று தேதி மற்றும் ஜனவரி 21 நாளை சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் நிதி, முதலீட்டு விழிப்பு உணர்வு கண்காட்சி & கருத்தரங்கம் ஒன்றை நடத்துகிறது.
வி.ஶ்ரீராம்
இன்டகிரேடட் என்டர்பிரைசஸ் (இந்தியா) நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி திரு. வி. ஶ்ரீராம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர், “எதில், ஏன், எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்கிற சந்தேகங்கள் முதலீட்டாளர்களின் மனதில் அதிகமாகவே இருக்கின்றன. இதற்குப் பதில் சொல்லும் விதமாகவே இந்த நிதி, முதலீட்டுக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை யை நடத்து கிறோம். வங்கி எஃப்.டி.க்கான வட்டி விகிதம் குறைந்து வரும் நிலையில், பணவீக்கத்தைவிட அதிக வருமானம் தரும் முதலீட்டு திட்டங்கள், வருமான வரியை மிச்சப்படுத்தும் முதலீடுகள் குறித்து இந்தக் கண்காட்சியில் தெளிவுப்படுத்திக்கொள்ள முடியும்.
இந்தியாவில் சுமார் 3-4 சதவிகிதம் பேரே நிதி சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். பலர், ஃபிக்ஸட் டெபாசிட், ரியல் எஸ்டேட், தங்கத்தில்தான் அதிகம் முதலீடு செய்கிறார்கள். இது குறித்து நிபுணர்கள் கலந்துகொள்ளும் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்.
பங்குச் சந்தையிலும், பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலும் நம்மவர்கள் ஓரளவுக்கு முதலீடு செய்தாலும், அதனால் பெரிய பயன் அடைய முடியாததற்குக் காரணம், முதலீட்டு இலக்கை அடைவதற்குள் அந்தப் பங்குகளையும், மியூச்சுவல் ஃபண்ட் களையும் விற்றுவிடுவதுதான்.
இந்தக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை மிக எளிதாக அனைவருக்கும் புரியும்படி சுவாரஸ்யமாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். இந்த நிகழ்ச்சிக்கு வருபவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பல நிகழ்வுகள் நடைபெற உள்ளன. சிறுவர்களுக்கான முதலீட்டு விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. 2018 ஜனவரி 20 மற்றும் 21 ம் தேதி இரண்டு நாளும் முதலீட்டாளர்களுக்குத் திருவிழாவாக அமையும்’’ என்றார்.
இன்டகிரேடட் என்டர்பிரைசஸ் (இந்தியா) நிறுவனத்தின் துணை தலைவர் எஸ். செல்வகுமார் , ''இந்த நிதி, முதலீட்டு விழிப்பு உணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் சுமார் 25 நிறுவனங்கள் அரங்குகள் அமைத்திருக்கின்றன. இந்த ஸ்டால்கள் மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, இன்ஷூரன்ஸ், நிதி ஆலோசனை குறித்ததாக உள்ளன. மேலும் ரிசர்வ் வங்கி, செபி போன்ற நெறிப்படுத்தும் அமைப்புகளும் இடம் பெறுகின்றன. இரண்டு தினங்களில் மொத்தம் 10,000 பேர் இந்தக் கண்காட்சிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.
இந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்குக்கு நாணயம் விகடன் வார இதழ், பிரின்ட் மீடியா பார்டனராக உள்ளது.
பத்திரிகையாளர் சந்திப்பின் போது, டீம் அண்ட் டிரேட் எக்ஸ்போஸ் நிறுவனத்தின் சிஇஓ ஜெய் கோபாலன், நாணயம் விகடன் முதன்மை பொறுப்பாசிரியர் சி.சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்தக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் கலந்து கொள்ள அனுமதி இலவசம்.